தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 25, 2008

"நாங்கள் பயங்கரவாத்தை ஆதரிப்பதில்லை" – MNP தலைவர் ஜின்னா அறிக்கை

Filed under: MNP — முஸ்லிம் @ 10:25 முப
தமிழகத்தில் முஸ்லிம்கள் சுதந்திர தின அணிவகுப்பு நடத்துவது குற்றமா?
மனித நீதிப் பாசறை மாநிலத் தலைவர் கேள்வி

இன்றைய (25.05.2008) தினமலர் நாளிதழில் 2ம் பக்கம் “”தமிழகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி” பின்னணி குறித்து போலீசார் விசாரனை” என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி குறித்தும், தொடர்நது தினமலர் நாளிதழ் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்ச் செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கி வருவது குறித்தும் கண்டனம் தெறிவித்து மனித நீதிப் பாசறையின் மாநிலத் தலைவர் திரு முகம்மது அலி ஜின்னா அவர்கள் அறிக்கை ஒன்ற வெளியிட்டுள்ளார்கள் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திரு. முகம்மது அலி ஜின்னா அவர்கள்

25.05.2008 அன்று தங்கள் தினமலர் நாளிதழில் 2ம் பக்கம் “”தமிழகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி” பின்னணி குறித்து போலீசார் விசாரனை” என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டதாகவும் முஸ்லிம் விரோதப் போக்குடனும் அமைந்துள்ளது மனித நீதிப் பாசறைக்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது.மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் தேசிய இயக்கமான “”பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா” சார்பாக எதிர்வரும் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அணிவகுப்பு நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்தில் மட்டுமல்ல; பாப்புலர் ஃபிμண்ட் ஆஃப் இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக்கும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இந்த சுதந்திμதின அணிவகுப்பு நடக்கவிருக்கின்றது.தமிழகத்தில் அதற்கான அணிவகுப்பு பயிற்சி மற்றும் ஒத்திகைகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றோம். ஆனால் அது போலீஸுக்கு இணையான அணிவகுப்பு பயிற்சி அல்ல.மேலும் தமிழக வீதிகள் முழுவதும் இந்த சுதந்திμதிக் அணிவகுப்பு சுவர் விளம்பμம் செய்து வருகின்றோம். காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இது குறித்து அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளோம்.இந்நிலையில் தங்கள் நாளிதழில் எங்கள் அமைப்பின் சுதந்திμதின அணிவகுப்பு பயிற்சி குறித்தும் எங்கள் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் தவறாகவும், அவதூறாகவும் உண்øமக்குப் புறம்பாகவும் எழுதியிருப்பது பத்திரிகை தர்மத்திற்கு எதிரானதாகும். அதுமட்டுமின்றி முஸ்லிம்களின் சுதந்திர உணர்வை களங்கப்படுத்தும் செயலாகும்.

நமது தேசத்தின் சுதந்திரம் என்பது இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடிப் பெற்ற சுதந்திμம். 1757ம் ஆண்டு வங்காளத்தில் சிராஜ் உத் தவ்லா முதல் 1947ம் ஆண்டு வரை இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்தி இருக்கிறார்கள் முஸ்லிம்கள். 1947ம் ஆண்டு நமது தேசம் விடுதலையடைந்தபோது இருந்த முஸ்லிம்களின் ஜனத் தொகையைவிட 2 மடங்கு முஸ்லிம்கள் இந்த சுதந்திர போரில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்திருக்கின்றார்கள்.

சுதந்திரமடைந்த 60 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை வரலாற்றின் வீர வடுக்களிலிருந்து முஸ்லிம்கள் அந்நியப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றார்கள். போராடிப்பெற்ற சுதந்திμத்தில் முஸ்லிம்களின் உரிமையைப் பறைசாற்றும் விதமாகவும், இந்துக்களுடன் இணைந்து போராடிய ஒற்றுமையை நிலைநிறுத்தும் முகமாகவும் இந்த சுதந்திர தின அணிவகுப்பு நடக்கவிருக்கின்றது. நாங்கள் எப்பொழுதும் வெளிப்படையான அமைப்பு தான். எங்களிடம் எந்த திரைமறைவுமில்லை. பயங்கரவாதத்தை நாங்கள் ஆதரிப்பதும் இல்லை. மேலும் ஆள்கடத்தல், ஆயுதம் பதுக்கல் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டதாக எங்கள் இயக்கத்தினர் மீது கடலூர் போலீசில் சில ஆண்டுகளுக்கு முன் வழக்குப் பதிவாகியுள்ளதாக தாங்கள் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் பொய்யானதாகும்.

நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் நடத்தும் அணிவகுப்பை பயங்கμவாதக் கண்கொண்டு பார்க்காத உளவுத்துறையினர், மனித நீதிப் பாசறையின் அணிவகுப்பு ஒத்திகையை சீர்குலைக்க இதுபோன்ற தவறான செய்திகளை பத்திரிகைகளுக்கு வழங்குவது அவர்களுடைய துவேஷ சிந்தனையைத் தெளிவாகக் காட்டுகின்றது. இதுபோன்று சட்ட ஒழுங்கையும், சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் விதமாகவும், பாரபட்சமாக துவேஷ சிந்தனையுடனும் செயல்பட்டு வரும் காவல்துறை மற்றும் உளவுத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை இனங்கண்டு அவர்களைக் களையெடுக்க வேண்டுமென தமிழக அμணிச மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கின்றது. “”இந்தியாவில் முஸ்லிமாக வாழ்வது தண்டனைக்குரிய குற்றமா? என்று கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. பிருந்தா கரத் அவர்கள் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வியை மனித நீதிப்பாசறை இன்று மக்கள் மன்றத்தில் கேட்கின்றது. என்று மனித நீதிப் பாசறை சார்பாக அதன் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

2 பின்னூட்டங்கள் »

  1. பார்ப்பனிய ஊடகங்களுக்கு எப்பொழுதும் யாரையாவது குற்றம் சொல்லிக்கொன்டே இருக்கவேன்டும். அமைதியாக இருந்துவரும் தமிழகத்தில் தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்து கலவரத்தை ஏற்படுத்த முயன்று தோல்வியடைந்ததை சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாத பார்ப்பனியம் முஸ்லிம் இளைஞர்களையும் அவர்களில் தேசப்பற்றையும் தீவிரவாதமாக சித்தரிக்க ஆரம்பித்துவிட்டது.

    ஒரு நடுநிலையான நாளிதழ் தமிழகத்தில் இல்லையென்பது இங்கு அனைவருக்கும் தெரியும். பார்ப்பனியத்துக்கோ எத்தனை ஊடகங்கள். இதுபோன்ற செய்திகளை செளியிடும் சமயத்தில் இவர்கள் மீது மான நஷ்ட வழக்கு போட வேன்டும். ஒரு நடுநிலையான ஊடகத்தை ஏற்படுத்த முஸ்லிம்கள் மட்டுமல்ல கிறித்துவர்கள், கம்யூனிஸ்டுகள், என அனைவரும் சேர்ந்து ஒரு நடுநிலை ஊடகங்ளை ஏற்படுத்த வேன்டும். இல்லையெனில் இந்த பார்ப்பனிய ஊடகங்களின் ஆதிக்கத்திலிருந்து யாரையும் காப்பாற்ற முடியாது.

    பின்னூட்டம் by Savukkadi — மே 25, 2008 @ 11:22 முப

  2. இஸ்லாமியர்கள் அனைவரும் தேசப்பற்று அற்றவர்கள் என்றும், வந்தே மாதரம் பாட மறுக்கும் தேச துரோகிகள் என்றும் விஷக்கருத்துக்களை பரப்பிக்கொண்டிருக்கும் மதவெறியர்களின் வாய்க்கு ‘ஆப்பு‘ அடிக்கும் விதமாக ‘மனித நீதி பாசறையின்’ – அணிவகுப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    இஸ்லாமியர் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு ‘வாய்க்கரிசி போட்டு வயிறு வளர்க்கும் ‘தின மல(ர்)த்தை’ – தின மனியும் பின்பற்றுவது வருந்ததக்கது. அவதூறு பரப்பும் ‘தினமனிக்கு’ – ‘சாவு மணி’ அடிக்க வாசகர்களால்தான் முடியும்..

    பின்னூட்டம் by பிறைநதிபுரத்தான் — மே 27, 2008 @ 9:56 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: