தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 27, 2008

இந்து முண்ணனி அலுவலக குண்டு வெடிப்பு : முஸ்தபா ரஷாதி அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டது1

Filed under: முஸ்தபா, ரஷாதி — முஸ்லிம் @ 9:30 பிப
முஸ்தபா ரஷாதியை குண்டு கட்டி அனுப்பியது யார் என்று அறிவதற்கு இங்கு சொடுக்கி வாசிக்கவும்.
.
இந்து முன்னனி அலுவலக் குண்டு வெடிப்பு வழக்கு
தற்கொலைப்படை தீவிரவாதி அடையாளம் தெரிந்தது
உடல் அரசு சார்பில் புதைப்பு

சென்னை மே 27,

இந்து முன்னனி அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்த வழக்கில் தற்கொலைப்படை தீவிரவாதியின் உடல் 12 ஆண்டுகளுக்கு பிறகு அரசு சார்பில் புதைக்கப்பட்டது.

சென்னை சிந்தாகிரிபுட்டையில் இந்து முன்னனி அலுவலக்ம் உள்ளது அந்த அலுவலகத்தி்ல் 1995ம் ஆன்டு ஏப்ரல் 14ம் தேதி தற்கொலைப்படையாக வந்த ஒருவர் குண்டு வைத்து தகர்த்தார். அதில் இந்து முண்ணி பிரமுகர் பைபிள் சன்முகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். தற்கொலைப்படையாக வந்தவர் உடல் சிதறி இறந்தார்.

தற்கொலைப் படையாக வந்தவரின் கை, கால், மற்றும் முகத்தின் ஒரு பகுதி மட்டுமே அடையாளம் தெரியுமு் வகையில் இருந்தது. உடல் முழுவதும் கருகி விட்டது. அதை வைத்து இறந்தவர் யார் என்று விசாரித்தனர்.

அப்போது மேலப்பாளையத்தை சோந்த குட்டியப்பா (எ) காஜா நிஜாமுத்தீன் என்பவர்தான் தற்கொலைப்படையாக வந்தவர் என்று முடிவு செய்து அவரின் பெற்றோரிடம் விசாரித்தனர் ஆனால் அவாக்ளோ இது என் மகன் இல்லை என்று கூறி விட்டனர். ஆனால் போலிசார் இறந்தவரின் ரத்தம், சதை ஆகியவற்றை ஐதராபாத்தில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க அனுப்பினர். அவரது பெற்றோரின் உடலிலும் இருந்து ரத்தத்தை எடுத்து அனுப்பினர் பின் பரிசோதனையில் இறந்தது காஜா நிஜாமுத்தீன்தான் என்று அறிக்கை அளிக்கப்பட்டது ஆனால் அந்த உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர். அதனால் அந்த உடல் அரசு பொது மருத்துவமனையிலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் இறந்ததாக கூறப்பட்ட நிஜாமுத்தீன் சேத்துப்பட்டு ஆர்.எஸ்எஸ் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரபபை ஏற்படுத்தியது. இந்நிலையில் இறந்தது கன்னியாகுமரியை சோந்த முஸ்தபா ரஷாதி என்று தெரியவந்தது. மீண்டும் டி.என்.ஏ பரிசோதனைக்கு ஐதராபாத்தில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இறந்தது முஸ்தபா ரஷாதி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவரது உடலை பெற்றோர் வாங்கவில்லை அதனால் அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நன்றி : தமிழ் முரசு 27-05-2008

இந்து முன்னணி குண்டு வெடிப்பு :பலியான நபரின் உடல் அடக்கம்

சென்னை :பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலியான நபரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி தலைமை அலுவலகம் உள்ளது. கடந்த 95ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடித்தது. இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் அலுவலகத்தில் இல்லாததால் தப்பினார்.

கிறிஸ்தவ மதத்தில் இருந்து, இந்து மதத்திற்கு மாறியவர் “பைபிள்’ பாண்டியன். இந்து முன்னணி அமைப்பின் பேச்சாளராக இருந்து வந்தார். அலுவலகத்தில் இருந்த பாண்டியன் பலியானார். அவருடன் பலியான மற்றொருவர் உடல் அடையாளம் தெரியாத நிலையில் உருக்குலைந்து காணப்பட்டது. அந்த நபர் உடலில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தவர் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.சென்னை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். புலன் விசாரணைக்காக அவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,யில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு(எஸ்.ஐ.டி.,) மாற்றப்பட்டது. உருக்குலைந்த நபர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அந்த உடல் அரசு பொது மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.குண்டு வெடிப்பு வழக்கை எஸ்.பி., மகேஸ்வரி, கூடுதல் எஸ்.பி., ராமகிருஷ்ணன் விசாரித்து வருகின்றனர். அழுகிய நிலையில் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் இருந்த உடலை நேற்று முன்தினம் இரவு வழக்கின் விசாரணை அதிகாரிகள், முறைப்படி கடிதம் கொடுத்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் இருந்து பெற்றனர்.கேட்பாரற்ற நிலையில் 13 ஆண்டுகளாக சவக் கிடங்கில் இருந்த உடல், வழக்கு விசாரணைக்கு தேவையில்லை என்ற நிலையில் அதனை போலீசார் நேற்று முன்தினம் அடக்கம் செய்தனர்.

நன்றி : தினமலர்

Advertisements

1 பின்னூட்டம் »

  1. ஓ அதனால்தான் ததஜ போராட்டம் நடத்தவில்லையோ? சின்ன பிரச்சினையைகூட பூதாகரமாக தம்பட்டமடிக்கும் ததஜ, 12 ஆண்டுகளாக ஒரு முஸ்லிமின் உடல் புதைக்கப்படாமல் இருந்தது தெரிந்தும் மௌனம் சாதித்ததற்கு காரணம் இதுதானா? சமுதாயத்தில் எங்கு தீங்கு நடந்தாலும் நாங்கள் சும்மா பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று சொல்லும் ததஜ இந்த விசயத்திற்கு பொண்டாட்டி, பிள்ளைகள், வப்பாட்டிகளோடு வீதிக்கு வராதது ஏன்? விருப்பு வெறுப்பில்லாத சமுதாய இயக்கம் என்பதை மாற்றி தன்னலமியக்கம், சுய நல இயக்கம் என்று சொல்லிக்கொள்ளட்டும்

    பின்னூட்டம் by Anonymous — மே 29, 2008 @ 5:44 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: