தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 28, 2008

மண்ணறை எனும் படு குழியை நினைத்துப்பார்!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 2:57 பிப

கட்டை கட்டையாய்ஒட்டுத்துணியுடன்ஓயாது உலாவருகின்ற‌இளைஞர் சமுதாயமே! – ஒரு கணம்மண்ணறை எனும் படு குழியை நினைத்துப்பார்!

பாசமெனும் பள்ளியறைக்குள்நேசம் எனும் நெருக்கத்தினால்மானமென்றும் மரியாதை என்றும் மறக்கின்ற‌மாந்தர்களின் மண்ண‌றையை நினைத்துப்பார்!

நித்திரையின்றி நித்தம் நித்தம்நெருங்க முடியா சத்தம் சத்தம்வீடு எனும் தேட்டருக்குள் காட்டுகின்ற கட்டம் -அதுமண்ணறையை மறந்த பெண்களின் மச்சம்.

நாக‌ரீக‌ம் எனும் நாச‌த்தினால்நாள் தோறும் வ‌ரும் வேச‌த்தினால்காத‌ல் என்று கைகோர்த்து – இதும‌ண்ண‌றையை ம‌ற‌ந்த‌வ‌ர்க‌ளின் காத்திருப்பு.
மார்க்க‌த்தில் ம‌ந்தைக‌ளாக‌உல‌க‌த்தில் உத்த‌ம‌ராக‌உலா வருகின்ற‌ இளைஞ‌ர்க‌ளே!ம‌ண்ண‌றை எனும் ப‌டுகுழியை நினைத்துப்பார்!

ம‌துவுக்குள் மாட்டிதின‌ந்தோறும் அதில் மூழ்கிமுதுமை எனும் முதுகு உண‌ர்த்தினால் மார்க்க‌த்தை ம‌ற‌ந்த‌ம‌டைய‌ர்க‌ளின் ம‌ண்ண‌றையை நினைத்துப்பார்!

ஆடையில் ஆர‌றை குறைப்புஅதில் ஓரிரை ம‌றைவுபாரினில் பாழ‌டைந்த‌வ‌ர்க‌ளின் ந‌டிப்பு – இதும‌ண்ண‌றை எனும் ப‌டுகுழியை ம‌ற‌ந்த‌வ‌ர்க‌ளின் நினைப்பு!

இளைஞ‌ர் கூட்ட‌மே!இரும்புக்கோட்டையினுல் இருந்தாலும்இருப்பைக் காவுகொள்ளும் கொடூர‌ம் நிறைந்த‌ம‌ர‌ண‌த்தை ம‌ற‌ந்து வாழ்வின் அர்த்த‌த்தை இழந்துவிடாதே!

மரணத்தை நினைத்துப்பார்!

அன்புட‌ன்

எம்.எச்.ப‌ஸ்மிய்யா

அல்குர்ஆன் விரிவுரைக்கான‌ க‌ற்கை வ‌குப்பு மாண‌வி

லால்பேட்டை இனைய தளம்

நன்றி தாருல் அதர் அத்தஅவிய்யா

ஜூன் 27, 2008

லால்பேட்டையில் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மர்ஹும் G.M. பனாத்வாலா ஸாகிப் அவர்களுக்கு குர்ஆன் ஓதி ஹத்தம் செய்யப்பட்டது

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 6:37 பிப

லால்பேட்டை ஜூன் 27:
இன்று லால்பேட்டை ஜாமிஆ மஸ்ஜிதில் ஜும்ஆ பயானுக்கு பின் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மர்ஹும் G.M. பனாத்வாலா ஸாகிப் அவர்களுக்கு துஆ செய்யப்பட்டது. ஜாமிஆ மன்பவுல் அன்வார் துணை முதல்வர் மொளலவி ஹபிழ் A. அல்ஹாஜ் நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் மறைந்த தலைவரின் சேவையை நினவகூர்ந்து துஆ செய்தார்கள் இதில் ஆயிரக்கணக்கனோர் பங்கேற்று அண்னாரின் மஃபித்திற்க்காக துஆ செய்தார்கள்.

மெயின்ரோடு பள்ளிவாசலில் துஆ செய்யப்பட்டது….

லால்பேட்டை ஜூன் 27:
இன்று லால்பேட்டை மெயின்ரோடு பள்ளிவாசலில் அஸர் தொழுகைக்கு பின் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மர்ஹும் G.M. பனாத்வாலா ஸாகிப் அவர்களுக்கு குர்ஆன் ஓதி ஹத்தம் செய்யப்பட்டது. ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர் மொளலவி முப்தி, S.A. அப்துர் ரப் ஹஜ்ரத். ஜாமிஆ ம்ன்பவுல் அன்வார் துணை முதல்வர் மொளலவி ஹபிழ் அல்ஹாஜ், A. நூருல் அமீன் ஹஜ்ரத். பேராசிரியர் அப்துல் அலி ஹஜ்ரத். மவட்ட முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் S.A.அப்துல் கப்பார். நகர தலைவர் அல்ஹாஜ், K.A.முஹம்மது. செயலாளர் M.H.முஹம்மது ஆசிப். பொருலாளர்,A.M. ஜாபர். மாநில மாணவர் அணி அமைப்பாளர் A.S. அப்துல் ரஹ்மான். நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அப்துல் காதர். முஹம்மது பாருக். மஸ்ஊத் அஹ்மத். முஹம்மது தையூப். மர்ஜுக் அஹ்மத். மற்றும் ஜமத்தர்கள் கலந்துக்கொன்டு மறைந்த தலைவரின் சேவையை நினவு கூர்ந்து அண்னாரின் மஃபித்திற்க்காக துஆ செய்தார்கள்.

லால்பேட்டை இனைய தளம்

ஜூன் 25, 2008

G.M. பனாத்வாலா ஸாஹிப் வாழ்க்கைக் குறிப்பு

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 5:10 பிப

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர், முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் இன்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் நாளை காலை 7 மணியளவில் மும்பை சந்தன்பாய் கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யபடும்


அன்னாரது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:-
ஆசிரியர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில், ஹாஜி நூர் முஹம்மது அவர்களின் மகனாகப் பிறந்தார்.

மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம்., பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இக்காலகட்டத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களைச் சந்தித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சட்டமன்ற – பாராளுமன்ற பணிகள்:
மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.

இக்காலகட்டத்தில், மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம், பசுவதை சட்டம், வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது, அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி, அவற்றில் வெற்றியும் பெற்றார்.

இந்திய பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, 1971 முதல் 1991 வரையிலும், 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.

ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது, இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும், ஷரீஅத் பற்றிய தெளிவுரையும், பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (டீயயெவறயடய டீடைட) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும்.

பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபுhன்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல், அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை, அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்… முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்… வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தேசிய பாதுகாப்பு சட்டம், ஜாமிஆ மில்லியா, இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா, ராம்பூர் ரஜா நூலக மசோதா, மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா, வாரணாசி, பேர்ணாம்பட், ஜாம்ஷெட்பூர், முஜப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள், மத்திய – மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு, கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.

பாராட்டுகள்:
பெருந்தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபிற்கு சென்னை முஸ்லிம் அமைப்புகளால் ‘சிறந்த சமூக சேவகர்” தங்கப்பதக்க விருது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. பன்னாட்டு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் ‘விஜய் ஸ்ரீ விருது”, குட்ச் சக்தீ சார்பில் ‘சமாஜ்ரத்னா விருது”, சிறந்த பாராளுமன்றவாதிக்கான ‘மவ்லானா பஜ்ருல் ஹக் கைராபாதி” விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியா டுடே இதழில் – சிறந்த பாராளுமன்றவாதிகளில் பத்தில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். ‘பயானீர்” இதழில் தேர்ந்த பாராளுமன்றவாதிகளில் 12 நபர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஷரீஅத் சட்ட மசோதா மீது விவாதம் நடந்தபோது, தமிழக முஸ்லிம்களால் ‘முஜாஹிதேமில்லத்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

பொறுப்புகள்:
காயிதெமில்லத், பாபகி தங்கள், இப்றாஹீம் சுலைமான் சேட் ஆகியோருக்குப் பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக இதுகாலம் வரை பணியாற்றி வந்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அரசியல் கூட்டணியான மிலலி ஜம்ஹீரி மஹஜ், மஜ்லிஸே இத்திஹாதே முஸ்லிமீன், முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இன்று வரை பணியாற்றி வந்தார்.

அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு, இந்திய அரசின் பொன்விழாக் குழு, மஹாராஷ்டிரா தேசிய ஒருமைப்பாட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களின் உறுப்பினராகவும், மும்பை அமைதிக்கான நீதித்துறையின் நீதிபதியாகவும், முஸ்லிம் ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணைத் தலைவராகவும், அஞ்சுமனே இஸ்லாம் பொருளாதாரப் பள்ளியின் தலைவராகவும், கச்சி மேமன் ஜமாஅத் மாணவர் வட்டத்தின் தலைவராகவும் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் அறங்காவலராகவும் பணியாற்றி இருக்கிறார் – பணியாற்றியும் வருகிறார்.

வெளியீடுகள்:
‘மார்க்கமும் – அரசியலும்”, ‘சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக்” ஆகிய புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். கட்டுரைகள், பிரசுரங்கள் பல வெளியிட்டிருக்கிறார்.

பயணித்த நாடுகள்:
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு முறை உம்றா செய்திருக்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரோம், ஜெர்மனி, மால்டா, துருக்கி, சைப்ரஸ், ஆஸ்திரேலியா, நார்வே, பாகிஸ்தான், ஸவூதி அரபிய்யா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சமுதாயத்தின் பிரதிநிதியாக அவர் பயனித்திருக்கிறார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் மஹாராஷ்டிரா சட்டமன்றத்திலும், இந்திய பாராளுமன்றத்திலும் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10ஆம் Nதியன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

கடந்த ஜூன் 20,21 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே அவரது கடைசி நிகழ்ச்சியாயிற்று.

எல்லாம்வல்ல அல்லாஹ், மறைந்த முஜாஹிதெமில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபின் நற்பணிகளை கபூல் செய்து, அவர்களின் பிழைகளைப் பொறுத்து, உயர்வான சுவனத்தைத் தந்தருள்வானாக, ஆமீன்.

தாய்ச்சபையின் அனைத்து உறுப்பினர்களும் மர்ஹ_ம் அவர்களின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு தலைமை நிலையம் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

லால்பேட்டை இனைய தளம்

ஜூன் 24, 2008

அல்லாஹ் காப்பற்றுவானாக ஆமீன்…

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 10:17 பிப

IDMK கொள்கை விளக்கப் பாடல்கள் வெளியீடு – பிரமுகர்கள் பங்கேற்பு

Filed under: சி.டி, பாடல்கள், IDMK, songs — முஸ்லிம் @ 9:25 பிப
திரு. அப்துல் ரவூப் உரையாற்றுகிறார், மேடையில் தலைவர்கள்

அபுதாபி, ஜீன் 24, ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இன்று இந்திய தேசிய மக்கள் கட்சியின் கொள்கைப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா விமரிசையுடன் நடைபெற்றது.

அபுதாபியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக புரவலர் நோபள் மரைன்ஸ் நிறுவனத்தின் மேலான் இயக்குனர் மரியாதைக்குறிய சாகுல் ஹமீது அவர்களும், சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்திருந்த இணைய எழுத்தாளரும் பிரபல சமூக ஆர்வலருமான திரு முகவைத்தமிழன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

நிகழச்சியில் பிரபல மார்க்க அறிஞரும் அறிவு ஜீவியும், திருக் குர்ஆன் விரிவுரையாளரும், பன்னூல் ஆசிரியரும் ஆகிய திரு. காஞ்சி அப்துல் ரவூப் பாக்கவி அவர்கள் சிறப்புறையாற்றினார்கள்.

பின்னர் புரவலர் நோபள் மரைன்ஸ் நிறுவனத்தின் மேலான் இயக்குனர் மரியாதைக்குரிய சாகுல் ஹமீது அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் கொள்கை விளக்கப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடை வெளியிட பிரபல சமூக ஆர்வலருமான திரு முகவைத்தமிழன் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்கள்.

குறுந்தகடை திரு. சாகுல் ஹமீது வெளியிட திரு முகவைத் தமிழன் பெற்றுக் கொள்கிறார் அருகில் IDMK தலைவர் திரு. குத்பதீன் ஐபக், அமர்ந்திருப்பது திரு. காஞ்சி அப்துல் ரவூப் பாக்கவி அவர்கள்.

பின்னர் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்களும், பொதுச் செயளலர் திரு. வரிசைக் ககனி அவர்களும் உரையாற்றினார்கள்.இறுதியில் இந்திய தேசிய மக்கள்கட்சியின் சட்ட ஆலோசகர் திரு. இஜாஸ் பேக் அவர்களும்,இந்திய தேசிய மக்கள்கட்சியின் ஆலோசகர் திரு. அப்துல் ரவூப் அவர்களும், இயக்கத்தை சோந்த பொறுப்பாளர்கள் திரு. கார்த்திக், திரு. குமரி ஜேம்ஸ் அவர்களும் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்கு திரு. சி.எம் ஹீசைன் அவர்கள் தலைமையேற்றார்கள், திரு கமால் பாஷா நன்றியுரை வழங்கினார்கள். நிகழச்சிக்கான ஏறபாடுகளை இந்திய தேசிய மக்கள் கட்சியின் அபுதாபி கிளை செய்திருந்தது.

ஜூன் 23, 2008

தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வாதாடிய கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்கள் பெயரிலும் விருது வழங்க வேண்டும்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 9:24 பிப

தமிழக அரசு பல்வேறு தலைவர்கள் அறிஞர்கள் பெயரில் விருதுகள் வழங்குவது போல, கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்கள் பெயரிலும் விருது வழங்க தமிழக முதல்வர் கலைஞர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டில் வாழ்த்துரை வழங்கி அவர் பேசியதாவது- கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களால் தொடங்கப்பட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அறுபது ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக இயங்கி, இன்று அறுபதாம் ஆண்டு விழாவை மணிவிழா மாநாடு என பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதோடு, அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை எனக்கு வழங்கிய முஸ்லிம் லீகின் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அவர்ளுக்கும் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் முதலில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காயிதெமில்லத் அவர்கள் இஸ்லாமிய சமுதாயத்துக்கு மட்டும் தலைவராக இருக்கவில்லை.

ஒட்டுமொத்த தமிழக சமுதாயத்துக்கும் தலைவராக திகழ்ந்தார். தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வாதாடிய பெருமை அவரைச் சாரும்.

அப்படிப்பட்ட கண்ணியமிக்க தலைவரை கவுரவிக்கும் வகையில், நமது தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் காயிதெமில்லத் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி பேட்டை மாநகர் சாலைக்கு காயிதெ மில்லத் சாலை என பெயர் சூட்டியது போல,
அவர் மறைந்து அடக்கமாகியிருக்கும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைக்கு காயிதெமில்லத் நெடுஞ்சாலை என பெயர் சூட்டி கவுரவப்படுத்தியது போல,
மற்ற தலைவர்களின் அறிஞர்களின் பெயரில் வழங்குவது போல

கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களின் பெயரில் தமிழக அரசின் சார்பில் விருது ஒன்றினை வழங்க முதலமைச்சர் கலைஞர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.

மேலும் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியதுபோல, மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளிலும் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையிலான முயற்சிகளை முதலமைச்சர் கலைஞர் மேற்கொள்ளவேண்டுமெனவும், அதற்காக மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டு வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன். இவ்வாறு தொல். திருமாவளவன் பேசினார்.

லால்பேட்டை இனைய தளம்

ஜூன் 22, 2008

மவுலானாக்களுக்கெல்லாம் மவுலானா கலைஞர் கருனாநிதி

Filed under: முஸ்லிம் லீக், லீக் — முஸ்லிம் @ 6:46 பிப

தி.மு.கழகத்திற்கும் எங்களுக்கும் தொப்புள் கொடி உறவு
கலைஞரின் வழியில் அவருக்கு உற்ற துணையாக முஸ்லிம் சமுதாயம் என்றும் அணி வகுத்து நிற்கும்
இந்திய யூனியன் முஸ்லிம் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பேச்சு (நன்றி – முரசொலி – 20.01.2004 இதழில் வெளிவந்தது)

கலைஞரின் வழியில் அவருக்கு உற்ற துணையாக முஸ்லிம் சமுதாயம் என்றும் அணி வகுத்து நிற்கும். தி.மு.கழகத்திற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் உள்ள உறவு தாய்க்கும் பிள்ளைக்குமுள்ள தொப்புள் கொடி உறவாகும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பேசுகையில் குறிப்பிட்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழுவில் அக்கட்சியின் தமிழ் மாநிலத்தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பேசியதாவது:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர்கள் கலைஞர் தலைமையிலான மதநல்லிணக்க முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சேர்கிறது என்பதைத் தெரிவித்தோம். கலைஞர் அவர்களும் நம்மை அன்போடு சேர்த்துக் கொண்டார்கள்.

கலைஞருக்கு முழு ஆதரவு

தமிழ்நாட்டிலே வாழக்கூடிய முஸ்லிம் சமூகத்தினருக்கு அங்கீகரிக்கப்பட்ட, ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரே அரசியல் பேரியக்கமாக இருக்கக்கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கலைஞருக்கும் அவரது முற்போக்கு கூட்டணிக்கும் தன்னுடைய முழு ஆதரவையும் தந்து கலைஞருடைய தலைமையை ஏற்றுக் கொள்கிறது.

இந்த முடிவினை உங்களுக்கு தெரிவிப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகினைச் சேர்ந்த நாம், கலைஞர் அவர்களை புதிதாகப் பார்க்கக் கூடியவர்கள் அல்லர். நாம் அவர்களோடு இல்லாத நேரத்தில் கூட அவர்கள் அருகிலேதான் இருந்திருக்கிறோம்.

அவர்களிடமிருந்து நாம் தூரத்திலே சென்றிருந்தாலும் கூட அவர்களோடு நாம் இதயபூர்வமான உறவை தொடர்ந்தே வந்திருக்கிறோம்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு அவர்களுடைய ஸ்தானத்திலே இச்சமுதாயம் கலைஞர் அவர்களை அன்று முதல் இன்று வரை வைத்துப் போற்றி வருகிறது என்பதை இத்தருணத்திலே சொல்ல வேண்டியது என்னுடைய கடமை!

கலைஞரின் அற்புதமான உரை:

கலைஞர் அவர்களை விமர்சித்த காலம் எல்லாம் கூட உண்டு. அந்த சமயத்தில் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியிருந்தார். முரசொலியிலே அந்த உரை வெளியாகியிருந்தது. அந்த உரை ஒரு அற்புதமான உரை அதனைச் சொல்வது பல பேருக்கு அதிசயமாக் கூட இருக்கலாம். திருக்குரானிலே உள்ள 6,666 வசனங்களில் ஆண்டவனைப் பற்றிய வர்ணனை: ஒரு வசனம்:

இறைவன் வானம் பூமிக்கெல்லாம் ஒளிமயமாக இருக்கக்கூடியவன், ஒளியாய் இருக்கக்கூடியவன் – என்று ஒளியைப் பற்றி திருக்குரானிலே இறைவனை சம்பந்தப்படுத்தி வருகிற அந்த ஆயத்துக்கு வசனத்துக்கு நானும் எனது 50 ஆண்டு கால ஆராய்ச்சிpலே தமிழ்நாட்டிலே உள்ள வியாக்யான கர்த்தாக்கள், உலகளவிலே உள்ள திருக்குரானுடைய காமெண்டேட்டர்கள், மாபெரும் அறிஞர்களுடைய உரைகளையெல்லாம் படித்திருக்கிறேன். அந்த ஆராய்ச்சிpயிலே நான் 40 ஆண்டு காலமாக என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன்.

அந்த திருக்குரான் வசனத்திற்கு தமிpழிலே ஒரு அழகான இரத்தினச் சுருக்கமான விளக்கத்தை சொல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டிருந்த நேரத்திலேதான் கலைஞர் அவர்கள் தந்திருந்த அந்த உரையினை படித்து மெய்சிலிர்த்துப் போனேன்.

இது சாதாரண மனிதர் சொல்லக்கூடியது அல்ல. இது வலியுல்லாக்களும், ஆன்மீகச் செல்வங்களும், சொல்லக்கூடிய விளக்கம் என்று அவர்களுக்கே நான் எழுதினேன். இதை எப்படி நீங்கள் சொன்னீர்கள். எதைப் படித்துச் சொன்னீர்கள்? என்று கேட்ட போது சிரித்துக் கொண்டார்.

பட்டது சொன்னேன் என்றார். என்ன சொன்னார் தெரியுமா?

கற்பனைக்கு எட்டாத வெட்;ட வெளியிpலிருந்து தானே எழுந்து வெளிக் கிளம்பி வருகிற ஒளி வெள்ளம் என்று அதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்.

உங்களுடைய இந்த விளக்கம் : கலைஞர் அவர்களே உங்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. சரித்திரம் காணாத அளவிற்கு உங்களது பெயரும் புகழும் உயர்ந்திருக்கிறது.

உண்மையாகச் சொல்கிறேன், திருக்குரானில் இந்த வசனத்திற்கு யாரும் சொல்லாத அழகிய அர்த்தத்தை, அழகிய தெளிவுரையைச் சொன்ன உங்களை எங்களுடைய மவுலானாக்களுக்கெல்லாம் மவுலானவாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுடைய ஆன்மீக குருவாக நான் என்னைப் பொருத்தவரை ஒப்புக் கொள்கிறேன். ஆன்மீக ரீதியாக எனக்கு அறிவுரை கூறிய மிகப் பெரிய அறிஞராக நான் கலைஞரை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அந்த உணர்வில்தான் அவர்களோடு நாம் என்றும் பழகி வந்திருக்கிறோம். அவர்களைப் போற்றி வருகிறோம். அவர்களைப் பாராட்டி வருகிறோம்.


நாடித்துடிப்பை அறிந்தவர்

கலைஞர் அவர்கள் ஏதோ இன்று நேற்று இந்த சமுதாயத்Nhடு உறவு கொண்டவரல்லர். இந்த சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்து இந்த சமுதாயத்தினுடைய ஒவ்வொரு நாடித்துடிப்பையும் அறிந்தவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைப் பற்றி அணு அணுவாகப் புரிந்து கொண்டிருக்கிற மாமேதை அவர். நான் வெட்கப்படாமல் சொல்வேன், வெளிப்படையாகச் சொல்வேன் – திராவிட முன்னேற்றக் கழகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்த காலத்திலேதான் நாங்கள் மதிக்கப்பட்டிருக்கிறோம். எங்களுடைய உரிமைகள் தரப்பட்டிருக்கின்றன. எங்களுக்கு கண்ணியம் காக்கப்பட்டிருக்கிறது.

உங்களோடு இருந்த காலத்திலே எங்களுக்கு அருகிலே எம்.பி. என்ற பட்டம் போட முடிந்தது. உங்களோடு இருந்த காலத்திலே ராஜ்ய சபை உறுப்பினர்களாக நாங்கள் ஆக முடிந்தது. உங்களோடு இருந்த காலத்திலேதான் சட்டமன்றத்திலே எம்.எல்.ஏக்கள் என்ற அந்த பட்டங்கள் எல்லாம் எங்களால் போட முடிந்தது. உங்களோடு இருந்த காலத்திலே தான் முனிசிபாலிட்டியிலே மாநகராட்சிpயிலே தலைவர்களாக துணைத் தலைவர்களாக எங்களால் வர முடிந்தது.

இதற்கு என்ன காரணம் என்று சொன்னால் தி.மு.கழகத்திற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் உள்ள உறவு மற்ற கட்சிகளுக்கு இடையே உள்ள உறவு போன்றதல்ல. இது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள உறவைப் போன்றது.

இது தொப்புள்கொடி உறவு என்று சொல்வார்களே அப்பேர்ப்பட்ட உறவு. யாதும் ஊரே யாவரும் கேளீர், ஒன்றே குலம் ஒருவனே தேவன், பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்று தமிழ் நெறியை நீங்கள் (கலைஞர்) வரிவரியாக விளக்கி விவரித்து இந்த நாட்டு மக்களுக்கு போதனையாகச் செய்து கொண்டிருக்கிறீர்களே அந்த போதனையை தமிழ்நெறியை அந்தத் தமிழ்த் தத்துவங்களை உலகமெல்லாம் பரப்பிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய மார்க்கத்திலே பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த முஸ்லிம் சமுதாயம் தமிழ் நெறியின் தத்துவ மேதையாக தங்களை ஏற்றுக் கொண்டது மாத்திரமல்லாமல், இஸ்லாமிய நெறியின் போதகராக தங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதை இந்நேரத்தில் சொல்ல வேண்டியது எனது கடமை!

கலைஞரோடு இருப்பது பொற்காலம்

உங்களோடு இருந்தகாலம், எங்களுக்குப் பொற்காலம். உங்களோடு இல்லாத காலம் எங்களுக்கு கற்காலம். அந்த கற்காலம் சில காலம் ஆனால் உங்ளோடு இருக்கக்கூடிய அந்த பொற்காலம் மீண்டும் திரும்பி விட்டது என்று அன்றைக்கு சொன்னீர்களே, அந்த பொற்காலம் இன்று திரும்பி விட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும், தி.மு.க.விற்கும் உள்ள இந்த உறவு ஏதோ அரசியல் ரீதியான உறவல்ல. குடும்ப ரீதியான உறவல்ல. பண்பாட்டு ரீதியிலான உறவு. தத்துவ ரீதியான உறவு. இதய பூர்வமான உறவு. உணர்ச்சி பூர்வமான உறவு. உண்மையான உறவு. யாராலும் தவிர்க்க முடியாத அற்புதமான நிரந்திர உறவு என்பதை நான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அரசியலில் அவ்வப்போது சில விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டது உண்டு. ஆனால் இத்தகைய மாற்றங்கள் இனி ஒரு போதும் ஏற்படமுடியாது ஏற்படக்கூடாது என்பதை நான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அத்தகைய பழைய கால பண்பாட்டு உறவை நினைவிலே வைத்து உங்களுடைய நடவடிக்கை அத்தனையும் எங்கள் மீது இருக்கும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அந்த அன்பும் பாசமும் என்றும் தழைக்கும், நாளையும் தழைக்கும், நிரந்தரமாக தழைத்து நிற்கும்.

கலைஞருக்கு துணை நிற்போம்

இந்தச் சமுதாயம் உங்கள் பின்னே நின்று உங்களுக்கு ஒத்தாசையாக, நீங்கள் எடுக்கக்கூடிய எந்த முடிவாக, நீங்கள் செல்லக்கூடிய எந்த வழியாக இருந்தாலும், நீங்கள் ஆற்ற கூடிய பணி எதுவாக இருந்தாலும் அனைத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொறுத்தவரை மட்டுமல்ல, தமிழக முஸ்லிம் சமுதாயம் அனைத்தும்.. அதற்கு உறுதுணையாக நிற்போம், எங்களது அழைப்பை ஏற்று நீங்கள் சிறப்பாக வருகை தந்து எங்களுக்கு அறிவுரை கூற வந்திருப்பது கண்டு நாங்கள் மெத்தவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

எங்களது அகில இந்திய பொதுச்செயலாளர் அகமது அவர்கள் பல்வேறு பணிகளுக்கிடையிலும் நீங்கள் வருகிறீர்கள் என்று சொன்னவுடன் உடனே நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க வின் பார்வையில் அன்று கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்கள்

தி.மு.க வின் பார்வையில் இன்று கண்ணியமிழந்த முனீருல் மில்லத்??? அவர்கள்

அதிர்ச்சியடையாமல் முகவைத்தமிழனின் இந்த பதிவையும் பார்க்கவும்….

ஜூன் 19, 2008

சிங்கப்பூரில் இரத்த தான முகாம்

Filed under: சிங்கப்பூர், தமுமுக — முஸ்லிம் @ 6:48 முப

வரும் ஜீன் 22ம் தேதி சிங்கப்பூரில் உள்ள பென்கூலன் பள்ளிவாசலில் தமிழ்நாட முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சிங்கப்பூர் கிளை மாபெரும் இரத்த தான் முகாம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தள்ளது.

மனித நேயம் மிக்க இப்பணியில் பங்களிக்க விரும்புவோம் தங்கள் பெயர்களை பதிவு செய்வதற்கு 92282984 (சகோ. அக்பர் அலி) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு சிங்கப்பூர் தமுமுக கேட்டுக்கொள்கின்றது.

செய்தி : தமுமுக சிங்கப்பூர்

ஜூன் 17, 2008

முஸ்லிம்களை ஏமாளிகளாக்கும் கோமாளித் தலைவர்களை தெரிந்து கொள்ளுங்கள்

Filed under: IDMK, PJ VS IDMK — முஸ்லிம் @ 10:13 பிப
இவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!!முஸ்லிம்களை ஏமாளிகளாக்கும் கோமாளித் தலைவர்கள்!!

கொள்கை மனிதர்கள் விற்பனையாகுவதில்லை. ஆம், முட்டாள்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது. அறிவாளிகள் தாம் முஸ்லிம்களாக இருக்க முடியும். ஆடுகளாக, ஆம், மந்தைகளாக நாம் இருக்க முடியாது. …………

………அண்ணன் பி.ஜே.யும் தி.மு.க கூடாரத்தில் மூக்கை நுழைப்பது தன்னைப் பின்பற்றும் தொண்டர்களை ஏமாளியாக்கும் கோமாளித்தனம். பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி விட்டதால் கூட்டத்தைக் கூட்டுவதும், பொய்யைச் சொல்லி பையை நிரப்புவதும் கோடிகளுக்கு குப்புற விழுவதும் தன்னை நம்பி வந்த தொண்டர்களை முட்டாளாக்குவதும், இரட்டை நாக்கைச் சுழற்றுவதும் இவருக்கு கைவந்த கலை. அரசியலை புறக்கணித்த புஸ்வானங்களின் வான வேடிக்கை பட்டியல் இதோ,

வாழ்வுரிமை மாநாடு அ.இ.தி.மு.க ஆதரவு, தஞ்சைப் பேரணி தி.மு.க ஆதரவு, கும்பகோணம் மாநாடு அ.இ.தி.மு.க ஆதரவு, தஞ்சை வல்லம் மாநாடு தி.மு.க ஆதரவு. போலி நாடகம் நடத்திய அரசியல் துறவிகளின் போலி வேஷத்திற்கு பலியாகி விடாதீர்கள். பொய் சாக்கு சொல்லி விற்பனையாகும் சூழ்ச்சியில் விட்டிலாய் வீழ்ந்து விடாதீர்கள்.

உங்களை ஏமாற்றும் கோமாளிகளிடம் ஏமாறாதீர்கள். இவர்களை அடையாளம் கண்டு கொள்ளவும். Public Memory is not short, but very sharp என்பதை தெரிவியுங்கள். ……… CLICK HERE TO READ FULL ARTICLE

WWW.IDMK.ORG

ஜூன் 15, 2008

முகவை தமுமுக வின் கல்வி உதவி

Filed under: தமுமுக, முகவை, TMMK Ramnad — முஸ்லிம் @ 8:48 பிப
அல்லாஹ்வின் திருப்பெயரால்…

இராமநாதபுரத்தில் தமுமுக வின் கல்வி உதவி


இராமநாதபுரத்தில் நகர் தமுமுக வழங்கிய கல்வி உதவி நிகழ்சியில் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப தங்கவேலன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ரவி சந்திர ராமவன்னி மற்றும் இராமநாதபுர (மத்திய) மாவட்ட தமுமுக தலைவர் சலிமுல்லாஹ் கான் உட்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(இன்ஷாஅல்லாஹ்) கல்லாமை என்பதை இல்லாமையாக்குவோம்!

இரத்த தானம் செய்தீடுவீர்! மனித உயிர் காக்க உதவிடுவீர்!!

வரதட்சணைக் கொடுமைகளை ஒழிப்போம்! மஹர் கொடுத்து மணம் முடிப்போம்!!!

Older Posts »

Create a free website or blog at WordPress.com.