தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 9, 2008

ஒரு லட்சம் சம்பளமா… ? – தமுமுக ஹைதர் அலி பேட்டி

Filed under: hyder ali, TMMK, Wakf Board — முஸ்லிம் @ 6:31 பிப
ஒரு லட்சம் சம்பளமா…

தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் செ. ஹைதர் அலி் தமிழன் தொலைக்காட்சியில் அளித்த சிறப்பு பேட்டியிலிருந்து…

-முத்துப்பேட்டை மாலிக்

திரு.ஹைதர் அலி அவர்கள்

கேள்வி : தமிழகத்தில் திறமையான ஏராளமான முஸ்லிம் வழக்கறிஞர்கள் இருக்கையில் அவர்களை பணியில் அமர்த்தாமல் நீங்கள் தலைமை வகிக் கின்ற வகஃபு வாரியத்திற்கு லட்சுமி நாராயணன் என்பவரை நியமித்து உள்ளீர்கள். இது எப்படி சரியாகும்? தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முஸ்லிம்களுக்காக தனி இட ஒதுக்கீடு முழு அளவில் பெறவேண் டும் என்று போராடி கொண்டிருக்கும் போது முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமனம் செய்தது சரிதானா?

பதில்: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் தமிழகத்தில் முஸ்லிம்களில் ஏராளமான திறமையான வழக்கறிஞர்கள் இருக்கும் போது வக்பு வாரியத்தில் ஒரு இந்து சகோதரனை லட்சுமி நாராயணன் என் கிற வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளீர்கள் இது நியாயம் தானா? அதற்காக போராட்டம் நடத்த போவதாக கூட ஒரு பத்திரிக்கையின் மூலமாக கூட சொல்லி இருக்கிறார்கள்.

நான் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். ஹதீஸ்களை ஆய்வு நடத்துகிற போது ஹதீஸ் கலை வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் ஒரு ஹதீஸில் ஒரு அறிவிப்பா ளர் பொய்யராக இருந்தால், அல்லது அவர் பலகீனமாக இருந்தால் அல்லது ஞாபகமறதி உடையவராக இருந்தால், புத்தி சுவதீனம் இல்லாதவராக இருந்தால் அந்த ஹதீஸ்களை நாம் விடவேண்டும். அதற்கு ஒரு ஸஹீஹ் என்ற அந்தஸ்தை தரமுடியாது என்பது ஹதீஸ்களை நாம் பகுத்து பார்க்க வேண்டிய விஷயம். அந்த அடிப்படையில் நீங்கள் இதை பார்க்க வேண்டும். எல்லா விஷயங்க ளுமே குர்ஆன், ஹதீஸ் தான் நமக்கு வழிகாட்டி.

ஒரு விஷயத்தை தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்கிற ஒரு பொய்யன் சொல்கிற எல்லா குற்றச்சாட்டு களுக்கும் பதில் தர வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொய்யன் என்று எப்படி சொல்கிறீர்கள் ஆதாரம் இருக் கிறதா? என்றால் இருக்கிறது.

நான் பதவி ஏற்ற உடனேயே… தமுமுகவால் நடத்தி கொண்டு இருந்த உணர்வு என்கிற பத்திரிக்கை திருடி செல்லப்பட்டு அதை அபகரித்து வைத்து கொண்டு இருக்கிறார்கள் அதில் வக்பு வாரியத் தலைவருக்கு 1 லட்சம் சம்பளம் என்று எழுதினார்கள் 1 லட்சம் ரூபாய் சம்பளம் என்று எழுதியபிறகு அவர்கள் இயக்கத்தில் இருக்கக்கூடிய ஜாகிர் உசேன் என்கிற சகோதரன் அவரிடத்தி லேயே (பி.ஜே) என்ன அண்ணன் 1 லட்சம் சம்பளம் என்று எழுதி இருக்கின்றீர்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே. உங்களுக்கு யாரோ தவறான தகவல் தந்துள்ளார்கள் என்று அவர் கூறிய உடன் அவர் என்ன செய்திருக்க வேண்டும். அப்படியா? என்று மறுப்பு போட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அவரி(ஜாகிர் உசேன்)டத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் மானியம் அது இது என்று எல்லா அலவன்ஸ் என்று அது ஒரு லட்சம் வரும் அப்படி என்னன்ன வருகிறது என்று நீங்களும் ஒரு பட்டியல் எடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

வக்ஃபு வாரியத்தில் இருந்து வக்பு வாரியத் தலைவருக்கு சம்பளம் தரப் படுகிறதா? என்றால் இல்லை. அந்த புத்திசாலிகளுக்கு இது தெரியாது போலிருக்கிறது. தெரிந்தாலும் பொய் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பொய்யை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற முனைப் புடன் செயல்பட்டு கொண்டு இருப் பவர்களுக்கு இது பற்றி பிரச்சனை இல்லை.
வாகனத் திற்கு டீசல் தரப்ப டும், அதுவும் எப்படி தரப்படு கிறது? ஒரு நாளைக்கு 12 லிட்டர் டீசல், வீட்டு தொலைபேசிக்கு, எனது கைபேசிக்கு கட்டணம் இவைதான் தரப்படுகின்றன. இவைகள் தான் வாரியத் தலைவருக்கு தரப்படுகின்ற மானியங்கள், சலுகைகள்.

சில மாதங்களுக்கு முன்பு டி.என்.பி.சி. தமிழ்நாடு தேர்வாணையத்தில் ஒருவரை நியமனம் செய்தார்கள். அப்படி நியமனம் செய்தவுடன் உடனடியாக ஒரு கூக்குரல் பாருங்கள் இடஒதுக்கீடு என்று சொல்லி ”இடஒதுக்கீடும் இல்லாமல் போய்விட்டது. இப்ப இதில் கூட ஒருவர் கூட முஸ்லிம் இல்லை” என்று கூச்சலிட்டார்கள். உடனடியாக செய்திவருகிறது, நாம் பத்திரிக்கையில் எழுதுகிறோம். முதலில் யாஸ்மீன் அஹமது இருந்தார். அவர் போன பிறகு காசி விஸ்வநாதனை தலைவராக கொண்டு அமைக்கும் போது ஜின்னா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று நாம் பத்திரிக்கையில் எழுதிய பின்னர் அடுத்த வாரம் (களவாடிய) பத்திரிக்கையில் எழுதுகிறார்கள், தப்பு மனிதனுக்கு வராமல் இருக்குமா தவறாக வந்து விட்டது. இதை பத்திரிக்கையில் பெரிதாக எழுதுகிறார்கள். என்று கூச்சலிட்டார்கள்.

நாம் ஏன் இதற்கு கூட பதில் எழுதினோம் என்றால் முதலில் ஒரு தவறு நடந்து இருக்கிறது. வக்பு வாரியத் தலைவருக்கு 1 லட்சம் சம்பளம் என்று சொன்னயோக்கியனே, புத்திசாலியே அதுக்கு இன்னும் ஏன் நீ பதில் சொல்ல வில்லை?

சில நண்பர்கள் என்னிடத்தில் கேட்கிறார்கள். என்ன அவர் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை? என்று கேட்கிறார்கள். அவர்களிடத்தில் நான் சொல்வதெல்லாம் நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது என்ன வழிமுறையை எடுத்து கொண்டேனோ அதே போன்று தான் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு பொய்யன் தொடர்ந்து பொய் சொல்லி கொண்டு இருந் தால் நாம் பதில் சொல்லி கொண்டு இருக்க முடியாது.

லட்சுமி நாராயணனை நீங்கள் நியமித்தது உண்மையா? பொய்யா? என்றால் உண்மையில் நியமித்து உள்ளோம். ஏன் நியமித் தோம்? முன்பெல்லாம் ஒருவர் கூட இந்து இல்லை. இவர்கள் வந்து நியமித்து விட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு இவர்கள் வைக்கிறார்கள் ஒன்றும் தெரியாமல் மக்களை மூடர்கள் என்று நினைத்து கொண்டு பிதற்றுகின்றார்கள். இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் சில நேரங்களில் சில உண்மைகளை சொல்லித்தான் ஆகவேண்டும்.

புதிதாக வழக்கறிஞர்களை நியமிக் கும் பொழுது அவர்களுடைய தன்மை அறிந்து நியமனம் செய்கிறோம். பழைய ஆட்களில் யாரெல்லாம் தவறான நபர்கள் என்று தெரிகிறதோ, சாட்சிரீதி யாக யார் இருந்தாலும் நீக்கி விடுகி றோம். லட்சுமி நாராயணனை நாம் எப்படி நியமனம் செய்கிறோம் என்றால், வக்ஃபு வாரியத்திற்கு விசாரணைக்கு வரும் போது அவருடைய வாதத் திறமை விவாதத்தினுடைய தன்மை களை முழுமையாக கிரகித்து கொண்டு தான் நியமித்தோம். பரங்கிபேட்டையில் உள்ள ஒரு சொத்து வழக்கு கீழ் நீதிமன்றத்தில் நமக்கு பாதகமாக தீர்ப்பு வந்து, அந்த சொத்து அவர்களுடையது என்று தீர்ப்பு வந்து விட்டது. உடனே வக்ஃபு வாரியத்தின் வழக்கறிஞர் ஜின்னா அவர்களை, இடைக்கால தடைவாங்க சொன்னோம். தடை வாங்கி விட்டு என்னிடத்தில் சொன்னார், ”அண்ணன், நான் என்கின்ற முறையில் இடைகால தடை வாங்கி விட்டேன். ஆனால் வழக்கு பலகீனமாக இருக்கிறது என்றார். உடனே சம்பந்தப்பட்ட வக்ஃபுக்குரியவரை கூப்பிட்டு நாங்கள் சொன்னோம். தாங்கள் ஏதாவது வழக்கறிஞர் வைக்க வேண்டுமானால் லட்சுமி நாராயணனை வையுங்கள் என்று கூறினோம்.

லட்சுமி நாராயணன் எனக்கு பழக்கமெல்லாம் கிடையாது. லட்சுமி நாராயணன் வாரியத்திற்கு வந்து இரண்டு முறை வாதம் புரிந்து உள்ளார். அப்ப தான் லட்சுமி நாராயணன் பற்றிய செய்திகளை சேகரிக்கிறோம். லட்சுமி நாராயணன், பாட்டன், தாத்தா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அவர் குடும்பமே வழக்கறிஞர்கள் ஆவர். தாத்தா வக்ஃபு வாரியத்தில் வழக்கறி ஞராக இருந்துள்ளார் இந்திய துணைக் கண்டத்தில் முதன்மையாக உள்ளார். பெங்களூர் சட்டக் கல்லூரியில் தான் படித்துள்ளார். அது மட்டுமல்ல கோல்டு மெடலிஸ்ட்.

ஒரு முறை ஒரு சிறிய வழக்கு, அந்த வழக்குக்காக வாதிட வருகிறார். அந்த ஒரு வழக்கு ஒரே தன்மையுடைய இரு வழக்கு, இரு தரப்பினர்கள் வருகிறார்கள். ஒரு தரப்பினர் வழக்கு விசாரிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்து விடுகிறோம்.

லட்சுமி நாராயணன் மற்றொரு வழக்குக்காக வருகிறார். ஒன்றரை மணி நேரம் அதற்காக வாதிட்டார். 1920, 1950, 1970 பல்வேறு பட்ட கல்கத்தா நீதி மன்றத்தில் சொல்லப்பட்ட வக்ஃபு சட்டங் கள் திருவாரூரில் நடந்த வழக்குகள் மதுரையில் நடந்த வழக்குகளை தன்னு டைய விரல் நுனியில் வைத்து கொண்டு அதற்குரிய நகல்களை எடுத்துத் தந்து வாதிட்டார். நான் மட்டும் அல்ல அங்கு இருக்கக் கூடிய வாரிய உறுப்பினர்கள் அனைவரும் அவருடைய வாதத்திற மையை பாராட்டினார்கள். இது மாதிரி யான வழக்கறிஞர்கள் நமக்கு வேண்டும் என்று கூறினார்கள். அதன் அடிப்படை யில் தான் அவரிடத்தில் நாம் ஒரு ஆளை அனுப்பி ”நீங்கள் வருவீர்களா?” என்று கேட்டோம்.

வக்பு வாரிய வழக்கறிஞராக இருந்தால் என்ன கிடைக்கும்? வக்பு வாரிய வழக்கறிஞர் என்கிற தகுதி கிடைக்குமே தவிர… பணம் கிடைக்காது. ஒரு வழக்குக்கு அங்கு 15 ஆயிரம் 20 ஆயிரம் என்று வாங்குபவர். வாரியத்தில் நாம் எவ்வளவு கொடுப்போம் 400, 500 ரூபாய் தான் கொடுப்போம் அரசு என்ன நிர்ணயித்து இருக்கிறதோ அரசு என்ன கொடுக்கின்றதோ அதை தான் நாம் கொடுப்போம் அது கூட மிகவும் குறைவாக உள்ளது, அதி கரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம்.

இந்த புத்திசாலி (?) தமுமுகவில் இருந்து திருடி சென்ற சொத்துகளுக்காக வழக்கு போட்டாரே எந்த முஸ்லிம் வழக்கறிஞரை வைத்து போட்டார்? முஸ்லிம்களின் உயர்வுக்காக பாடுபடுகின்ற இயக்கம் என்று சொல்கிற ஒரு அமைப் பைச் சேர்ந்த நீ, ஒரு முஸ்லிம் வழக்கறி ஞரை அல்லவா வைத்திருக்க வேண்டும்?

அது மட்டும் அல்ல ஒரு சிறு சம்பவம் பின்னத்தூரில் ஜமாஅத், குடிகாரர்களை வைத்துக் கொண்டு சில பிரச்சனை செய்தார்கள் அப்போது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் அந்த புத்திசாலியிடத்தில் போய் ”என்ன செய்ய லாம்?” என்று கேட்க அதற்கு அவர் கூறியிருக்கிறார்.

”நீங்கள் இந்து வக்கீல் வைத்தால் மட்டும் பத்தாது; ஆர்.எஸ்.எஸ்.(மெண்டா லிட்டி) யுடையவனாக பார்த்து வை; அப்போது தான், ஒரு வெறியுடன் அழிக்க வேண்டுமென்று வேலை செய்வான்” என்று கூறியிருக்கிறார்.

இவர் தான் இஸ்லாத்திற்காக உழைக்க வந்தி ருக்க கூடிய ”நவீன மிர்ஸாகுலாம்” என்று கூறிக்கொள்கிறார். இப்படி கூறுகிறார்களே அவர் கூட நீங்கள் இருந்தீர்களே என்று கேட்கலாம். அவரோடு அந்த சம்பாசணை யில் இருந்தவர் சாட்சியாக அல்லாஹ் மீது ஆணையாக நான் சொல்கிறேன். நீ வைக்கிறவனை ஆர்.எஸ்.எஸ். காரனா பார்த்து வை அதுவும் வெறி புடிச்ச இந்துத் துவா காரனக பார்த்து வை அப்பத்தான் அவர்களை அழிக்க முடியுமா?

நாம் வந்த பிறகு இவர் ஒருவரை தான் நியமித்துள்ளோம் அதற்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்திலும் சரி மதுரையிலும் சரி மற்றபகுதிகளிலும் சரி அதிகமான வழக்கறிஞர் இருக்கிறார்கள். சென்னையில் ரமேஷ் என்பவர் திருநெல் வேலியில் சுப்பிரமணி, சகாயதாஸ், திருச்சியில் அருள் காந்தி, கண்ணன், மதுரையில் செந்தில், தஞ்சாவூரில் வைத்தியலிங்கம், வேலூரில் வீரராகவன், கடலூரில் பத்மநாதன், சக்கரபாணி, இராமநாதபுரத்தில் அற்புத ராஜ், வெங்கட் ராமன், கோபால் சாமி, கோயம்புத்தூரில் பிரபு, விஜய், சேலத்தில் ரங்கநாதன், ஜெகன் நாதன், காஞ்சிபுரத்தில் சக்கர பாணி செங்கல்பட்டு ஜெகன்நாதன் இவர்கள் எல்லாம் இருக்கின்ற முஸ்லிம் அல்லாத வழக்கறிஞர்கள், இப்போதும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கூடவே செய்தி தருகிறேன். இதற்கும் சேர்த்தே ஆர்ப்பாட்டம் செய்ய சொல்லுங்கள்.
இவர்கள் எல்லாம் நான் வந்து நியமித்தவர்கள் அல்லர் இதற்கு முன்பே போடப்பட்டது. நாம் சில வழக்கறிஞரை தேடிக் கண்டு பிடித்து கொண்டு வந்து வைத்திருப்பதற்கு ஒரு சில சிக்கலான வழக்குகளை பார்ப்பதற்காக வைத்திருக்கி றோம்.

புத்திசாலியே (?) நீ முற்றுகை, ஆர்ப்பாட்டம் பண்ணு மக்கள் உன்னை காரித்துப்புகிறார்கள். இவர் செய்யக்கூடிய குறிப்பாக… இந்த மாதிரியான விஷயங்களில் கூட பாக்கர் சில நேரங்களில் வக்பு பற்றியும் மற்றதை பற்றியும் காரசாரமாக பேசுகிறார் என்று என்னிடத்தில் சொல் கிறார்கள். சிரித்துக் கொள்வேன். என்ன அவர் உள்ளார்த்தமா என்பது எனக்குத் தெரியும். இருக்கக் கூடிய இடத்தில் தன்னுடைய எஜமானன் மெச்சி கொள்ள வேண்டும் என்பதற்காக சில விஷயங் களை செய்து அது மாதிரியான அங்கு நடக்கக்கூடிய பொம்மலாட்டம்.

பல இடங்களில் ”ஏய் அந்த ஆள் நல்லாதான் செய்கிறான். அந்த ஆளு வக்ஃபு வாரியத் தலைவரான பிறகு தான் வக்பு வாரியம் நல்லா இருக்கிறது” என்று பாக்கர் பல இடங்களில் சொல்வது சொல்லிக் கொண்டிருப்பது எனக்கு தெரியும். அவர் மேடையில் பேசுவதற்கும் அவர் உள்ள ரீதியாக இருப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. அவர் மனம் வெதும்பிக் கொண்டு வேதனை யோடு அந்த விஷயத்தை சொல்ல வேண்டும். ஏன் என்றால் சில விஷயங் கள் காப்பற்றப்பட வேண்டும். எனவே பாக்கர் சொல்வதை நீங்கள் (மக்கள்) எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஆனாலும் அவர் உள்ளத்திற்கு தெரியும் முன்பெல்லாம் நானும் அவரும் பேசி கொள்வோம். போன் செய்து பேசுவேன்; இன்றைக்கும் பெருநாள் வந்தால் வாழ்த்து செய்தி (எஸ்.எம்.எஸ்) அனுப்புவேன். முதலில் வருவார் இப்ப வருவதில்லை. நட்புரீதி யாக வேறு நானும் பாக்கரும் 38 நாள் ஒன்றாக சிறையில் இருந்திருக்கி றோம். ஒரே அறையில் இருந்தோம். என்னைப் பற்றி முழுமை யாக அவருக்கும் பாக்கரை பற்றி முழுமையாக எனக்கும் தெரியும். நபி(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் 3 நாள்கள் நீங்கள் பிரயாணித்தீர்கள் என்று சொன்னால் அவர்களை பற்றி தெரியும் 38 நாள் நாங்கள் ஒன்றாக இருந்திருக்கி றோம். பாக்கருன்னா யாருன்னு எனக்கு தெரியும். ஹைதர் யார் என்று பாக்கருக்கு தெரியும். எனக்கு என்ன வருத்தம் என்றால் தன்னுடைய உரத்த குரலில் பேசக் கூடியவர் பல நேரங்களில் நிர்வாக குரலில் நியாயமான விஷயங்களை பேசுவதில் ஒரு ஆளாக இருந்தவர் பழைய நண்பர் பாக்கர் இன்றைக்கு இல்லை என்கின்ற வருத்தம் இன்றைக் கும் உண்டு. மனிதருக்கு சில நேரங்களில் தேவைகள் அதிகமாகி விடுகிற நேரங்களில் இப்படியெல்லாம் தவறு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. நாம் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஒருவர் குற்றச்சாட்டுகள் வைப்பதி னால் அதற்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும் என்கின்ற நிலையில் நாம் இல்லை. நம்முடைய வேலைகள் அதிகம் என்னுடைய சுயவேலைகள் செய்வதில் கூட நான் முடங்கிக் கிடக்கின் றேன். சில விஷயங்களை முதன்மை செயலாளரிடம் ”இது ஏன் இப்படி உள்ளது பழையது இப்படி நடந்துள்ளதாமே” என்றால் ”என்ன சார் எனக்கு தெரிய வில்லை உங்களுக்கு செய்தி தெரிகிறது” என்று திகைக்கின்ற மதிரியாக தான் வைத்துள்ளோம். இன்றைக்கு வக்ஃபு வாரியத்தில் பழைய நிலை இல்லை. ஆள்கள் குறைவாக இருக்கிறார்கள். அதற்கு அரசிடம் அனுமதியை கேட்டு உள்ளோம். வேலை வாய்ப்பு அலுவலகத் தில் கேட்டு எட்டு மாதங்கள் ஆகிவிட் டன. பல நினைவூட்டு கடிதம் அனுப்பி விட்டோம். இன்னும் அவர்கள் அந்த பட்டியலை தரவில்லை. ஏன் என்றால் நாம் முஸ்லிம்கள் மட்டும் தான் வேண்டும் என்று கேட்டு உள்ளோம் வக்ஃபு வாரியத்தில் இது மாதிரியான பணிகளில் தான் பார்க்க முடியும். வக்ஃபு வாரியத்தில் இரண்டு முஸ்லிம் அல்லாதவர் இருக்கி றார்கள். ஒருவர் இறந்து விட்டார். சந்திரன் என்பவர் ஒருவர் இன்றும் இருக்கிறார். வந்த உடனே அவரை டிஸ்மிஸ் பண்ணி அனுப்பிவிட முடியுமா? அது மட்டும் அல்ல பணியில் இருக்கும் போது ஒருவர் இறந்து விட்டால். கருணை அடிப்படை யில் வேலை கொடுக்க வேண்டும். அதே போல் முஸ்லிம் ஒருவரும் பணியில் இருக்கும் போது இறந்துள்ளார். கருணை அடிப்படையில் அவருக்கு வேலை கொடுத்து உள்ளோம்.

நான் வந்த பிறகு கருணை அடிப் படையில் ஒரு இந்து பெண்ணுக்கும் வேலை கொடுத்து இருக்கிறேன். அதுக்கும் சேர்த்து போராட்டம் நடத்த நியாயம் அநியாயம் பார்க்க வேண்டாமா?

இனத்தின் பெயரால் அவருக்கு ஏன் அநியாயம் இழைத்தாய்? என்று கேட்டால் அல்லாஹ்விடத்தில் நான் அல்லவா பதில் சொல்ல வேண்டும். உனக்கு அது பற்றி ஒன்றும் கிடையாது. அல்லாஹ் வுடைய நம்பிக்கை இருக்கின்றவனா இல்லையா என்பது எங்களுக்கு தான் தெரியும் எங்களை பற்றி நீ நன்றாக பேசு, திட்டு; என்ன வேண்டும் என்றாலும் பேசு, எதை பற்றியும் நாம் கவலைப்பட போவதில்லை. நபி(ஸல்) அவர்கள் சொல் கிறார்கள் திட்டுகின்றவன் என்ன திட்டி னாலும் திட்டுபவனைத்தான் வந்து சேரும் என்று கூறி இருக்கிறார்கள். அதனால் புத்திசாலியே(?) எல்லாத்தையும் நீயே வாங்கிக்கட்டிக் கொள் பிரச்சனை இல்லை.

நன்றி : தமுமுக இணையத் தளம்

Advertisements

1 பின்னூட்டம் »

  1. தமுமுக வோடு இருந்தபோது PJ ‘மனம் திறந்த மடல்’ எழுதினாரே அது போல இப்போது ஒரு ‘மனம் திறந்த மடல்’ எழுதுவாரா? அவரின் நலவிரும்பிகள் ‘மனம் திறந்த மடல்’ எழுதச்சொல்லி வலியுறுத்துவார்களா? அப்படி எழுதினால் முன்னர் எழுதிய மடலோடு ஒத்துப்பார்க்க முடியும். பூனைக்கு (PJ க்கு) மணி கட்ட ததஜ தயாரா?

    பின்னூட்டம் by Anonymous — ஜூன் 14, 2008 @ 12:55 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: