தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 14, 2008

கடல் கடந்து ஒரு கண்ணீர் மடல்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 9:58 பிப

(இது சீத‌னக் கொடுமையால் க‌ற்பை இழ‌ந்து த‌விக்கும் ஏழைக் கும‌ரின் க‌ண்னீர் கடிதம்)

என் அன்பான‌ குடும்ப‌த்திற்கு..
அஸ்ஸ‌லாமுஅலைக்கும்(வ‌ர‌ஹ்)த‌ம்பி! உம்மா! நீங்க‌ள் எப்ப‌டி? நான் ந‌ல்ல‌ சுக‌ம்.
நீங்க‌லெல்லாம் சுக‌த்தோடு வாழ‌ நான் அல்லாஹ்விட‌ம் பிரார்த்திற்கின்றேன். நான் குவைத்திற்கு வந்து சுமார் எட்டு மாதங்களாகின்றது. என்னால் இங்கு வாழ‌ முடியாதுள்ள‌து. என்னை மிருக‌த்தை விட‌க் கேவல‌மாக‌வே ந‌டாத்துகின்றார்க‌ள். என‌து முத‌லாலி ஒரு காட்டு மிராண்டி. என்னை ப‌ல‌ முறை த‌காத‌ உற‌வுக்கு வ‌லுக்க‌ட்டாய‌மாக அழைத்து அனுப‌வித்துவிட்டான். ஒரு நாளைக்கு ப‌ல‌ பெண்க‌ளும் ஆண்க‌ளும் செய்யும் வேலைக‌ளை என‌க்கு ம‌ட்டும் த‌ருகின்றார்க‌ள். நான் வேலைக்குச் சென்றிருக்கும் இட‌த்தில் வ‌ய‌து போன‌ ஒரு பைத்திய‌ம் பிடித்த‌ ஒருவ‌ன் இருக்கின்றான். என‌து ஆடைக‌ளையும் பொருட்க‌ளையும் நான் க‌வ‌னிக்காம‌ல் இருந்தால் நெருப்பால் எரித்துவிடுகின்றான். ஒவ்வெரு நாளும் துன்ப‌த்தோடுதான் என‌து வாழ்வை இங்கு க‌ழிக்கின்றேன்.

உம்மா! ஏன் என்னை வெளிநாடு வெளிநாடு என்று அனுப்பி வைத்தீர்க‌ள்? இங்கு ந‌ர‌க‌த்தையே நான் காணுகின்றேன். உம்மா! ஊரில் இருக்கும்போது என‌க்குத் தொழுகை எப்போதும் த‌வ‌றுவதில்லை. உங்களுக்குத் தெரியும். ஆனால் நான் இங்கு ஒரு வ‌க்துக் கூட‌த் தொழ‌ என‌க்கு அனும‌தி இல்லை.

ஒரு நாள் உங்க‌ளோடும் த‌ம்பிமார்க‌ளோடும் பேசுவ‌த‌ற்கு அர‌பியின் வீட்டு போனை நான் அழுத்திய‌ போது என‌து எஜ‌மானி என்னைக் க‌ண்டுவிட்டாள். உட‌னே என‌க்குப் ப‌ய‌ங்க‌ர‌மாக‌ அடித்து விட்டு சிறிதாக‌ துவார‌முள்ள‌ ஒரு ரூமுக்குள் என்னைக் க‌ட்டி வைத்தாள். சுமார் ஒரு இர‌வும் இர‌ண்டு ப‌க‌ல்க‌ளும் அந்த‌ ரூமுக்குள் நான் எவ்வித‌ உண‌வோ குடிநீரோ இன்றித் த‌வித்துக் கிட‌ந்தேன்.அப்போது த‌ற்கொலையாவ‌து செய்து கொண்டால் என்ன‌ என்ற‌ சிந்த‌னைகூட‌ வ‌ந்த‌து. உம்மா! பிற‌கு உங்க‌ள‌து முக‌ங்க‌ள் என‌து ஞாப‌க‌த்திற்கு வ‌ந்த‌வுட‌ன் அதை நிறுத்திக்கொண்டேன்.

நான் இவ்வ‌ள‌வு மிருக‌த்த‌ன‌மாக‌ நடாத்த‌ப்ப‌டுவ‌து உங்க‌ளுக்கெல்லாம் வேத‌னை அளிக்கும். ஆனால் என்னைப் போன்று மோச‌மாக‌ எத்த‌னையோ கும‌ருக‌ள் இங்கு அர‌பிக‌ளால் ந‌டாத்த‌ப்ப‌டுவ‌து உங்க‌ளுக்குத் தெரியாது.

உம்மா! என‌து கூட்டாளி பெள‌சியாவுக்கு போன‌ மாத‌ம் திருமண‌ம் ந‌ட‌ந்த‌தாக‌ இங்கு ஒரு ட்ரைவ‌ர் சொன்னார். அல்ஹ‌ம்துலில்லாஹ். என‌க்கு இப்போது வ‌ய‌து இருப‌த்தி எட்டு. நான் இங்கு வ‌ந்த‌தே என‌து திரும‌ண‌த்திற்கு வீடு க‌ட்ட‌த்தான். உங்களுக்குத் தெரியும்.

உம்மா! நான் ஒரு முடிவெடுத்துள்ளேன். என‌க்கு இனிமேல் திருமண‌ம் வேண்டாம். என‌க்கு நீங்க‌ள் எந்த‌ ஆம்பிளையையும் திரும‌ண‌ம் பேச‌ வேண்டாம். ம‌ரியாதையும் மார்க்க‌மும் உள்ள‌ யாராவ‌து முன் வ‌ந்து வீடு காணி கைக்கூலி இல்லாம‌ல் என்னை முடிக்க‌ வ‌ந்தால் அவ‌ரோடு வாழ‌ நான் விரும்புகின்றேன். இல்லாவிட்டால் நான் இப்ப‌டியே வாழ்ந்து கொள்கின்றேன்.

உம்மா! என‌து த‌ம்பிமார்க‌ளுக்கு திரும‌ண‌ம் செய்யும் போது யாரிட‌த்திலும் வீடோ சொத்துக்க‌ளோ வாங்காதீர்க‌ள். அக்கொடுமையை நான் அனுப‌வித்துக் கொண்டுதான் இத‌னைக் கூறுகின்றேன். அல்லாஹ்வின் அச்சமில்லாத கோழைகளே பெண்களிட‌த்தில் வீடு வாக‌ன‌ம் சொத்துக்க‌ளை வாங்குவார்க‌ள். நம்ம‌ட‌ த‌ம்பிமார்க‌ளை அவ்வாறான‌‌ ஆண்க‌ளாக‌ ஆக்கிவிடாதீர்கள்.

சீத‌ன‌க்கொடுமையால் இன்று முஸ்லிம் கும‌ருக‌ள் ப‌டும் க‌ஷ்ட‌ங்க‌ளை ஏன் உம்மா ந‌ம்ம‌ட‌ உல‌மாக்க‌ள் புரிகின்றார்க‌ளில்லை???

உம்மா! ந‌ம்ம‌ட‌ வாப்பா ம‌ர‌ணித்து சுமார் மூன்று வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்துவிட்ட‌ன‌. நாம் எங்கு வாழ்ந்தாலும் மான‌மும் ம‌ரியாதையும் தான் முக்கிய‌ம். இதை ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள்.

எல்லாவ‌ற்றிற்கும் அந்த‌ நாய‌ன் இந்த‌ சீத‌ன‌ம் வாங்கும் ஆண்க‌ளை சும்மா விட‌மாட்டான்.உம்மா! இம்ம‌ட‌லில் என‌து க‌ஷ்ட‌ங்க‌ளில் ஒரு ப‌குதியைத் தான் கூறியுள்ளேன். மிக‌ விரைவில் நான் நாடு திரும்புவ‌த‌ற்கு துஆச் செய்யுங்க‌ள்.
சீத‌ன‌த்தை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் ந‌ம‌து ஊரிலிருக்கும் ‘தாருல் அத‌ருக்கு’ க‌ட்டாய‌ம் ஞாயிற்றுக் கிழ‌மைக‌ளில் பெண்க‌ளுக்கான‌ பயானுக்கு போங்க‌ள். இம்ம‌ட‌லை முடிக்கின்றேன். வ‌ஸ்ஸ‌லாம்.
க‌ண்னீருட‌ன்…
ஷ‌ர்மிலா

(அன்பின் இளைஞ‌ர்க‌ளே! இது க‌ற்ப‌னைக் க‌டித‌ம‌ல்ல‌. பெய‌ர்க‌ளை ம‌ட்டும் மாற்றியுள்ளோம். ந‌ம‌து ஏழைக்கும‌ருக‌ள் வெளிநாடுக‌ளுக்குச் செல்வ‌தால் ப‌டும் அவ‌ஸ்தைக‌ள் தான் நீங்க‌ள் க‌ண்ட‌து. க‌ட‌ல் க‌ட‌ந்து க‌ற்பையும் இழ‌ந்து ந‌டுவீதியில் நிற்கும் இக்கும‌ருக‌ளுக்கு என்ன‌ தீர்வு???

வீடுவாங்கும் சீத‌ன‌க்கொடுமைதானே கார‌ண‌ம்? அல்லாஹ் ஹ‌ராமாக்கிய‌ இக்கொடுமையை செய்யும் அத்த‌னை இளைஞ‌ர்க‌ளும் அந்த‌ ம‌றுமைநாளில் அல்லாஹ்வின் முன்னால் நிச்ச‌ய‌ம் நிறுத்தப் படுவார்கள். சீத‌ன‌ம் எனும் இக்கொடுமையில் இருந்து அல்லாஹ் ந‌ம்ம‌னைவ‌ர்க‌ளையும் பாதுகாத்து அருள்வானாக!‌)

நன்றி : தாருல் அதர் அத்தஅவிய்யா
Advertisements

5 பின்னூட்டங்கள் »

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
  வன்மையாகவும், வலிமையாகவும் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம்.

  பின்னூட்டம் by தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் — ஜூன் 15, 2008 @ 6:47 முப

 2. Assalamu Alaikum {wa rah}
  sagodarargale inda kattu mirandithanamana,kewalamna,namwittu pengalai vibacharathil thalliwidum
  koduamaiyai seyyum inda weripiditha katterigalin urawugalai wettiwidawendum
  melum mudalai kanneer wadikkum tmmk mudalil waradatchanai wangum thirumanangalai thalaimai ettru nadathuwadai kaiwida wendum

  Akbar Basha {kallakurichi}
  SAIF-zone
  Sharjah
  Tawheed jamath

  பின்னூட்டம் by akbar — ஜூன் 15, 2008 @ 1:33 பிப

 3. டி.எம்.எம்.கே தலைமையேற்று நடத்துவது என்று சொல்வது பிறகு இருக்கட்டும். டி.என.டி.ஜே அமைப்பு ‘சொறிபந்தாவை’ முதலில் விடட்டும். தெரு வீதியில் வரதட்சனை வாங்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்வதும், எந்த நாக்கு வரதட்சனை வாங்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்ததோ அந்த நாக்கு தான் கொல்லைப்புறமாக வரதட்சனை பேரம் பேசுகிறது என்பதும் நாடறிந்த விசயம். பெண்களை கேவலப்படுத்துவதும் டி.என.டி.ஜே அமைப்பு தான் என்பதும் நாடறிந்த விசயம். இஸ்லாமியப் பெண்களை முதலில் கண்ணியப்படுத்துங்கள். நபிகள் நாயகம் காலத்தில் அவர்களின் தலைமையில் நடந்த பத்றுப் போரில் பெண்கள் கலந்துக்கொள்ள வில்லை என்று நான் பதிவு செய்தால் டி.என.டி.ஜே அமைப்பின் தொண்டர்கள் நம்ப மாட்டார்கள். எனவே நபிகள் நாயகம் காலத்தில் அவர்களின் தலைமையில் நடந்த பத்றுப் போரில் பெண்கள் கலந்துக்கொண்டார்களா? என்று டி.என.டி.ஜே அமைப்பின் தலைவர் திருவாளர் பி.ஸைனுல் ஆபிதீன் அவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். சொறி பந்தா வேண்டாம். தமிழகத்தில் டி.என.டி.ஜே அமைப்பின் தொண்டர்கள் தவிர மற்ற அனைத்து முஸ்லிம்களும் குர்ஆன் மற்றும் ஹதிஸை அப்படியே நம்பக்கூடியவர்களாக இருக்கிறார்கள். டி.என.டி.ஜே அமைப்பின் தொண்டர்கள் மாத்திரம் ததஜ தலைவர் திருவாளர் பி.ஸைனுல் ஆபிதீன் அவர்கள் சொன்னால் மட்டுமே குர்ஆன் மற்றும் ஹதிஸை நம்பக்கூடியவர்களாக இருக்கிறார்கள். குர்ஆன் மற்றும் ஹதிஸிற்கு விளக்கம் கொடுக்கும் தகுதி தனி நபருக்கு (பி.ஸைனுல் ஆபிதீன் அவர்களுக்கு) மாத்திரமே இருப்பதாக நம்பும் மாபெரும் தவறான மூடப்பழக்கத்தில் மூழ்கியிருப்பவர்கள் டி.என.டி.ஜே அமைப்பினர். இவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள் ‘தவ்ஹிதுவாதி’ என்று

  ‘கடல் கடந்து ஒரு கண்ணீர் மடல்’ என்ற இந்த மடலுக்கு நம் சமுதாயத்தில் இப்படி ஒரு இழி நிலை இருக்கிறதே என்று மனம் நொந்து இந்த ‘இழிநிலையை’ அழிப்பதற்குதான் ஒரு உண்மை முஸ்லிம் முனைவானே தவிர, ‘ததஜ’ வைப்போன்று அடுத்தவர்கள் மீது பழியைப்போட்டு இதன் மூலம் ஒரு விளம்பரம் தேடிக்கொள்ளமாட்டான். மார்க்கத்தில் ஊடுறுவியிருக்கின்ற எந்த விசயத்தை அடுத்தவர்கள் மீது, அடுத்த அமைப்பினர் மீது பழியைப்போடாமல் திருவாளர் பி.ஸைனுல் ஆபிதீன் அவர்கள் தலைமையில் இயங்கும் ‘ததஜ’ என்கிற அமைப்பு செய்திருக்கிறது? முடிந்தால் சொல்லுங்கள்? முடியுமா?

  அபுபக்கர் சித்திக்

  பின்னூட்டம் by Anonymous — ஜூன் 16, 2008 @ 8:43 முப

 4. சகோதரியின் கடிதத்தில் உள்ள பிரச்சினைக்கு – திர்வு காணும் விதமாக எந்த வித ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்காமல்- தான் சார்ந்துள்ள இயக்கங்களின் மீதுள்ள வெறி காரணமாக – ‘குழாயடி’ சண்டையில் ‘தொண்டரடிபொடிகள்’ கலந்து கொள்வது வருந்ததக்கது.

  இத்தகைய கீழ்த்தரமான வாக்கு வாதங்ககளால் – சகோதரி முன்வைத்த பிரச்சினையை – பின்னுக்கு தள்ளி – அது தொடர்பான ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கு ‘கஃபனிட்டு விட்டு’ இயக்கம் சார்பாக ‘விவாதத்தை’ திசை திருப்புவது பாதிக்கப்பட்ட சகோதரிக்கு எந்த வித பயனையும் அளிக்கப்போவதில்லை.

  குவைத்தில் வசிக்கும் த.மு.மு.க – த.த.ஜ சகோதரர்கள், அந்த சகோதரியின் பிரச்சினைக்கு – முற்றுபுள்ளி வைக்க உடனடியாக செய்யப்படவேண்டியது என்ன என்பது பற்றி எழுதினால் உதவியாக இருக்கும்.

  பின்னூட்டம் by பிறைநதிபுரத்தான் — ஜூன் 17, 2008 @ 8:48 முப

 5. dear brothers,
  we are talking that matter of dowry,this is very big problem of muslim religion, so, we are not studied the quran & Hathes.
  First doing studing quran, another one is no commands for another parties, but, the Tmmk people chnaging in muslim religion, this is for my request.
  denage girls life changing for that dowry problem, so muslims following the principle of Al-Quran.

  regards
  shajahan Sharjah

  பின்னூட்டம் by shajahan — ஜூன் 17, 2008 @ 11:18 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: