தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 29, 2008

குண்டுவெடிப்புகளுக்கு மதச்சாயம் பூசாதீர் – MNP கண்டனம்

Filed under: MNP — முஸ்லிம் @ 11:42 முப

நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு மதச்சாயம் பூசக்கூடாது உண்மைக் குற்றவாளிகளை காவல்துறை இனம் காண வேண்டும் மனித நீதிப் பாசறை மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை

நெல்லை 29, ஜீலை 2008, குஜராத்திலும், பெங்களுருவிலும் நடந்த குண்டு வெடிப்புக்களை தொடர்ந்து அதற்கு மதச் சாயம் பூசப்பட்டு தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தை குறி வைத்து காவல்துறை தனது அத்துமீறலை நடத்தி வரும் வேலையில் இதனை கண்டித்து குண்டுவெடிப்புக்களுக்கு மதச் சாயம் பூசாமல் உண்மை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று இன்று நெல்லையில் மனித நீதிப் பாசறை அமைப்பின் சார்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் மாநில பொதுச்செயளாலர் யா.முஹைதீன் தெறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கடந்த சில நாட்களாக அஹமதாபாத், பெங்களூர் ஜார்கண்ட் ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நீதிப் பாசறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.

மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதமாகவும் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாகவும் நடைபெற்ற இந்தக் குண்டுவெடிப்பு சம்பங்களில் காவல்துறை உண்மையான குற்றவாளிகளை இனம் காண வேண்டும்.

நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு சங்பரிவார சக்திகள் மதச்சாயம் பூசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கி இவ்வாறு திசை திருப்பும் வேலை தொடர்ந்தால் சட்டத்தின் பிடியிலிருந்து உண்மைக் குற்றவாளிகள் தப்பி விடுவார்கள் என்பது பாமர மக்களுக்கும் புரியும்.

இதில் காவல்துறை நேர்மையாகவும் நடுநிலையாகவும் விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும்.

கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் 6ம்நாள் மஹாராஷ்டிர மாநிலம் நந்தித் என்ற இடத்தில் வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த பஜ்ரங்தள தீவிரவாதிகள் வெடித்துச் சிதறியதும், அச்சம்பவத்தில் பல பஜ்ரங்தள தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதும் காவல்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் அங்கு முஸ்லிம்கள் அணிவது போன்று தொப்பிகளும் போலி தாடிகளும் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து நடந்த மாலிகான் குண்டுவெடிப்பில் போலி தாடியோடு ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த 2008, ஜூன் மாதம் மஹாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள கத்காரி ரங்யாத்தன் தியேட்டரில் வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தது. இச்சம்பவத்தில் இந்து ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்திற்கு சில தினங்கள் முன்பாக தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலும், பஸ் நிலையத்திலும் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி பயங்கரவாதிகள், தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தவும் இந்துக்களை ஒருங்கிணைக்கவும் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தி முஸ்லிம்கள் மீது திருப்பி விட்டதையும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்திற்கு முன்பே பல மாதங்களாக குண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

இவற்றையெல்லாம் காவல்துறை கவனத்தில் கொண்டு தற்போது நடந்த குண்டு வெடிப்புகள் மற்றும் இதற்கு முன்பு நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகளின் விசாரணையை சரியான கோணத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

இன்று நெல்லையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மனித நீதிப் பாசறை மாநில பொதுச் செயலாளர் யா முஹைதீன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது எம்.என்.பி.யின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மதுமுபாரக், மாவட்டச் செயலாளர் மஹபூப் அன்சாரி ஆகியோர் உடனிருந்தனர்.

ஜூலை 28, 2008

தமுமுக இணையத் தளம் முக்கிய அறிவிப்பு

Filed under: தமுமுக — முஸ்லிம் @ 7:54 பிப
தமுமுக இணையத் தளம் முக்கிய அறிவிப்பு

சில தொழில் நுட்பக் காரணங்களால் தற்காலிகமாக நமது இணையத்தள முகவரிகளான

www.tmmkonline.orgwww.tmmk.in

 

இயங்கவில்லை.

ஆனால் பின்வரும் முகவரிகள் மூலம் நமது இணையத்தளத்தை நீங்கள் பார்க்கலாம்

www.tmmk.infowww.tmmkonline.netwww.tmmkonline.com

 

 

மேலே உள்ள செய்தி தமுமுக தலைவர் திரு. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து பெறப்பட்டது. சமுதாய மக்களின் தகவலுக்காக இங்கு பிரசுரிக்கப்படுகின்றது. –முகவைத்தமிழன்

 

புதுப்பிக்கப்பட்ட செய்தி : (29.07.2008 நேரம் இந்திய நேரம் மாலை 5.30)

தமுமுக தலைவர் திரு. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் மின்னஞ்சல் முகவரியான jawahir@tmmk.in சரியாக வேலை செய்வதாகவும் இனி அதிலேயே அவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் அதே போல் தமுமுக வின் www.tmmk.in என்ற இணைய முகவரியும் பிரச்சினைகள் நீங்கி சரியாக வேலை செய்வதாகவும் திரு ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மினஞ்சல் மூலம் தெறிவித்தள்ளார் என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

—– Original Message —–
From: jawahirullah
To: makkalurimai@gmail.com
Sent: Tuesday, July 29, 2008 3:09 PM
Subject: my email

Dear All,

My email id jawahir@tmmk.in is now working allright. You can communicate to me in this address. Also kindly note our website with url www.tmmk.in which was down has been set right. You can browse our website in this url. Kindly inform our friends.

jawahirullah

ஜூலை 27, 2008

அண்ணல் நபியவர்களி் இறுதி நாட்கள் (VIDEO) – மெளலவி ஹாமித் பக்ரி

Filed under: ஹாமித் பக்ரி, video — முஸ்லிம் @ 8:06 பிப

“அண்ணல் நபியவர்களி் இறுதி நாட்கள்

அஷ்ஷேய்க். ஹாமித் பக்ரி அவர்கள்

Al-Sheikh. Hamid Bakri

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். ஹாமித் பக்ரி அவர்கள்

தமிழ் முஸ்லிம் மீடியா

ஜூலை 26, 2008

IGC குவைத் நடத்தும் – "உணர்வாய் உன்னை" மற்றும் "அல்ஹம்துலில்லாஹ்" நிகழ்ச்சிகள்

Filed under: உணர்வாய் உன்னை, kuwait, kuwait igc, kuwait tamil muslims — முஸ்லிம் @ 10:55 முப
بسم الله الرحمن الرحيم

எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலைமையை தாமே மாற்றிக் கொள்ளாதவரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை (அல்குர்ஆன் 13:11)

தூய்மையடைந்தவன் திட்டமாக வெற்றி பெறுகிறான் (அல்குத்ஆன் 87:14)

குவைத் வரலாற்றில் முதல் முறையாக
(IGC) குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையம் நடத்தும்

இஸ்லாமிய வழியில்
உணர்வாய் உன்னை

ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்.

* நம் உள்ளத்தை தூய்மைப்படுத்தி ஈருலகிலும் வெற்றி பெறுதல்.
* கோபம், தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுதல்.
* அனைவரிடமுமட் அன்பை பேணுதல்.
* நாட்டிலும், வீட்டிலும் அமைதி மற்றும் சமாதானத்தை நிலைபெறச் செய்தல்.
* நம்மிடம் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்.
* எண்ணங்களை தூய்மைப்படுத்தி செயல்களை வளப்படுத்துதல்.
* கடந்த கால பாதிப்புகளில் இரந்து விடுபட்டு நிகழ்கால வாழ்வில் வெற்றிபெறுதல்.
* இறைவன் நம்மை படைத்த நோக்கத்தினை அறிதல்

அறிவின் எல்லை விரிய…ஈமானின் சுவையை உணர …இனிய தமிழில் எளிய நடையில்….திருமறை நிழலில் ….சம்பிக்கையூட்டும் ஒரு உன்னத பயிற்சி முகாம்!!

நாள் : 31-07-2008, வியாழக் கிழமை
நேரம் : மாலை 03.30 – 09.30
இடம் : ஜம்யிய்யத்து இஸ்லாஹி, ரவ்தா

அல்ஹம்துலில்லாஹ்
இஸ்லாமிய சிறப்பு ஒலி-ஒளி தொகுப்ப நிகழ்ச்சி
SPECIAL VISUAL PRESENTATION – ISLAMIC PERSPECTIVE

உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல)அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களுக்குள்ளெயேம் (பல) அத்தாட்சிகளும் இருக்கின்றன. (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா. (அல்குர்ஆன் 51:20, 21)

இத்திருமறை வசனங்களில் றகூறியுள்ள அத்தாட்சிகளை கன்ணாலும், கருத்தாலும் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் ஓர் அறிய காட்சித் தொகுப்பு நிகழச்சி.

நாள் : 01-08-2008, வெள்ளிக் கிழமை
நேரம் : மாலை 05.00 – 08.30
இடம் : ஜம்யிய்யத்து இஸ்லாஹி, ரவ்தா

தொடர்புக்கு : 3925612, 9619827, 6412875, 2470159

நிகழச்சிகளை தொகுத்து வழங்குபவர்
சகோ. ஜலாலுதீன், துபை

ஃபஹாஹீல், மங்காஃப், அபூஹலீஃபா, மஹ்கூலா மற்றும் சிட்டி பகுதிகளில் இருந்து வாகன வசதி செய்யப்பட்டள்ளது.

பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.

ஜூலை 25, 2008

அபுதாபியில் நடந்த IDMK நிகழ்ச்சியின் வீடியோக்கள்

Filed under: அபுதாபி, வீடியோ, IDMK, video — முஸ்லிம் @ 10:20 பிப
WWW.IDMK.ORG

கடந்த 24.06.2008 அன்று அபுதாபியில் உள்ள கேரளா அசோசியேசன் அரங்கத்தில் நடைபெற்ற இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலர் பங்கு கொண்டது ஞாபகம் இருக்கலாம். அந்ந நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிரபல மார்க்க அறிஞர் மெளலவி அப்துல் ரவூப் பாக்கவி அவர்கள் மிகச் சிறப்பான் உரை ஒன்ற ஆற்றினார்கள். மெளலவி அப்துல் ரவூப் பாக்கவி, இந்திய தேசிய மக்கள் கட்சியின் திரு. குத்புதீன் ஐபக், திரு. வருசைக் கனி ஆகியோர் ஆற்றிய உரையின் வீடீயோ தொகுப்பு இங்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை காணவோ, டவுன்லோட் செய்யவோ கீழே உள்ள சுட்டியில் சொடுக்கவும்.

அபுதாபியில் நடந்த IDMK நிகழ்ச்சியின் வீடியோக்கள்

திரு. வருசைக் கனி, திரு. அப்துல் ரவூப் பாக்கவி, திரு. குத்புதீன்

ஹைதர் அலி மீது நடவடிக்கை எடுக்க வலியுருத்தி மாணவ மாணவிகள் போராட்டம் Wakf Board College பூட்டப்பட்டது

Filed under: வக்ஃப் போர்ட் காலே, ஹைதர் அலி — முஸ்லிம் @ 6:02 முப
திரு. ஹைதர் அலி அவர்கள்
வக்பு போர்டு சேர்மன் மீது நடவடிக்கை கோரி வக்பு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மதுரை வக்போர்டு கல்லூரி மாணவர்கள் நேற்று கல்லூரி முதல்வரை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மதுரை கே.கே.நகரில் உள்ள வக்புவாரிய கல்லூரி முதல்வராக ஐ.இஸ்மாயில் இருந்து வருகிறார். இவர் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து கல்லூரியை சிறந்த முறையில் நிர்வகித்து மாணவர்களிடையே பாராட்டை பெற்றார். இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் முதல்வர் இஸ்மாயில் மீது பல்வேறு புகார்களை தெரிவித்தது. அவரை விருப்ப ஓய்வில் செல்லுமாறு வற்புறுத்தி வந்தது.

இருந்தபோதிலும் இஸ்மாயில் முதல்வர் பதவியில் நீடித்து வந்தார். இதற்கிடையில் முதல்வர் இஸ்மாயில் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது விருப்ப ஓய்வை ஏற்றுக்கொள்வதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் இஸ்மாயிலை பதவியில் இருந்து நீக்கக்கூடாது என்று வற்புறுத்தி வக்போர்டு கல்லூரி மாணவ_மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நேற்றுமுன்தினம் நூற்றுக்கணக்கான மாணவ_மாணவிகள் கே.கே.நகர் பகுதியில் நடுரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட வக்போர்டு கல்லூரி மாணவ_மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். கல்லூரிக்கு உள்ளேயே வகுப்புகளை புறக்கணித்தனர். அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு போலியான முகவரியை கொடுத்து செயலாளராக செயல்பட்டு வரும் அசனை உடனடியாக நீக்க வேண்டும். வக்போர்டு சேர்மன் ஹைதர் அலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லூரி முதல்வராக இஸ்மாயில் தொடர்ந்து நீடிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து மாணவ மாணவிகளும் நிறைவேற்றக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் கைவிடுமாறு கல்லூரி நிர்வாகம் செய்த சமரச முயற்சியை மாணவ_மாணவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனைத்தொடர்ந்து வக்போர்டு கல்லூரி காலவரையின்றி விடுமுறை விடப்பட்டது.

செய்திகள் : முதுவை ஹிதாயத்

ஜூலை 24, 2008

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும், பண்புகளும் – ரம்ஸான் பாரிஸ் (VIDEO)

Filed under: தமிழ் முஸ்லிம் பென், ramzan faris, video — முஸ்லிம் @ 9:32 முப

“அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும், பண்புகளும்

அஷ்ஷேய்க். ரம்ஸான் பாரிஸ் அவர்கள்

Al-Sheikh. Ramzan Faris

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். ரம்ஸான் பாரிஸ் அவர்கள்

தமிழ் முஸ்லிம் மீடியா

ஜூலை 23, 2008

IDMK புகைப்பட காட்சிகள் – (சி.டி வெளியீட்டு நிகழ்ச்சி துபாய்)

Filed under: துபாய், புகைப்படங்கள், IDMK, pictures — முஸ்லிம் @ 8:42 பிப

கடந்த 20.06.2008 அன்று துபாய் மன்டல இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட கட்சி உள்ளரங்க பொதுக்கூட்டம் மற்றும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா நடந்தது. இந்நிகழச்சியில் துபாய் மாகானத்தில் பல்வேறு பெரிய நிறுவனங்களில் பணிபுறியும் முக்கிய புள்ளிகளும், பொறியாளர்களும், அறிவு ஜீவீகளும் கலந்து கொண்டனர். நிகழச்சியின் புகைப்படத் தொகுப்பை கீழே சொடுக்கி காணவும்.

இந்திய தேசிய மக்கள் கட்சியின்
கொள்கை விளக்கப் பாடல்கள் குறுந்தகடு வெளியீட்டு விழா
புகைப்படக் காட்சிகள் – துபாய் மாகாணம்

சுதந்திரம்" என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை

Filed under: சுதந்திரம், IDMK, ilahi, Riyadh TMMK — முஸ்லிம் @ 9:43 முப
“சுதந்திரம்” என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை”

அன்புள்ள சகோதரர் திருச்சி அமானுல்லாஹ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ

நேற்று (22-07-2008) நீங்கள் அனுப்பிய ஈ மெயிலை பார்த்ததும் …..தவறாக புரிந்து கொள்ளக்கூடிய மனிதரிடமிருந்து வந்திருக்கிறதோ என்கின்ற எண்ணம்தான் உண்டானது. எழுத்தில் கோபம் தெரிகிறது, ஆனால் ஏன்? எதற்கு என்பதுதான் புரியவில்லை.

” உங்கள் கோபத்துல அல்லாஹ் தண்ணிய ஊற்றுவானான, வயிற்றெரிச்சலில் பாலை பாலை ஊற்றுவானாக” என்ற ஆரம்ப வார்த்தைகளே நீங்கள் எதையோ படித்துவிட்டு தவறாகப்புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அறிய முடிந்தது. “ஐடிஎம்கே” அண்ணே! என்றுவேறு எனக்கு அறிமுகமில்லாத ஒரு கட்சியின் உரிப்பினராகவே என்னை ஆக்கி விட்டீர்கள். இதுவரை எந்த அரசியல் கட்சியலும் இருந்ததில்லை, ஆனால் அரசியலை சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக எடுத்து படித்தவன்தான். அதுமட்டுமல்ல உலக அரசியலையும் ஓரளவு படித்ததிருக்கிறேன். காரணம் ஐரோப்பாவில் பல ஆண்டுகள் இருந்தவன், உலகிலுள்ள ஏராளமான பத்திரிகைகளை படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றவன். இன்னும் சொல்லப்போனால் இன்று இருக்கும் பல கட்சியின் தலைவர்களுக்கு அரசியல் பாடத்தையே கற்றுக் கொடுக்கக்கூடிய அளவுக்கு அல்லாஹ்வால் கல்வி ஞானத்தை கொடுக்கப் பெற்றவன்தான்.

தமுமுக வின் மீது எமக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. அதுபோன்று தௌஹீத் ஜமாஅத்தார்கள் மீதும் நல்ல அபிப்ராயம் உண்டு. பொதுவாக உலகிலுள்ள எந்த மனிதரையும் வெறுக்கச் கொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. இன்று உலகில் வாழும் அத்தனை பேருமே பெருமானார் ஸல்லல்லாஹ

{ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்துகள் தான் (அவர்கள் எந்த மதத்தை எந்த இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரியே!) என்பதை மனிதில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டீர்களானால் மற்றவர்கள் மீது எந்தவிதமான வெறுப்பும் வராது. அவர்கள் காஃபிராக இருந்தாலும் சரியே! ஏன் அவர்களும் அல்லாஹ்வின் படைப்புதானே!

ஆனால் இன்று என்ன நடக்கிறது. முஸ்லிம்களுக்குள்ளேயே போட்டி, பொறாமை, வெறுப்பு! இதைவிட கொடுமை வேரென்ன இருக்க முடியும்? என்ன காரணமாக இருக்க முடியும் என்று கொஞ்ச நேரம் அமைதியாக யோசித்துப் பாருங்கள். இஸ்லாத்தைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாத சமூகத்தினராக இன்றைய முஸ்லிம்கள் வாழ்வது முக்கிய காரணம்.

தமுமுக வில் சேருமாறு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். நன்றி. ஆனால் பலவிதமான மனிதர்களை படைத்துள்ள அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் பொருப்புகளை அளித்துள்ளான். தகுதிகளை வழங்கியுள்ளான். அவரவர்களின் வழியில் எது சிறந்தது என்பதை தேர்வு செய்து வாழும்போதுதான் அது அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். அதைவிடுத்து தமுமுக வில் நான் சேரும் பட்சத்தில் எனது கல்வி ஞானம் முதற்கொண்டு மற்ற செயல்பாடுகளும் அதன் தலைமைக்கு கட்டுப்பட வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.

“சுதந்திரம்” என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை. அதை எதற்காக ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு நான் இழக்க வேண்டும்? இன்றைய கட்சிகளையும், இயக்கங்களையும் மேலோட்டமாக பார்த்தாலே ஒரு விஷயம் தௌ்ளத் தெளிவாக புரியும்.

* ஜமாஅத்தே இஸ்லாமியா? மௌதூதி அவர்களின் கொள்கைதான் அவர்களுக்கு அஸ்திவாரம்.

* தௌஹீத் ஜமாஅத்தா? பி.ஜே. என்ன சொல்கிறாரோ அது மட்டும்தான் அவர்களுக்கு இஸ்லாம்.

* சுன்னத்துவல் ஜமாஅத்தா? நாங்கள் செல்வது மட்டும்தான் இஸ்லாம். நீங்களாக சிந்திக்க அனுமதி கிடையாது! (சிந்திக்க தூண்டுகின்ற மார்க்கத்தில் சிந்தனைக்கு 144 போடுகின்றவர்கள்.)

* தரீக்கா குரூப்பா? முஸ்லிம்களை முஷ்ரிகீன்களாக ஆக்கியே தீர்வது என்ற முடிவோடு இருப்பவர்கள்.

* தப்லீக் ஜமாஅத்தா? தொழுகை ஒன்றே போதும். வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் சரி 40 நாள் ஜமாஅத்துக்கு வா எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பவர்கள். அதுமட்டுமின்றி ஒருசில விஷயங்களை மட்டும் உள்வாங்கிக்கொண்டு பெரிய ஆலிம்களுக்கு இணையாக தங்களை நினைத்துக் கொள்பவர்கள்.

மேலே சொன்ன இவர்கள் எவரிடமும் நடுநிலைப்போக்கு இல்லை. அதன் காரணமாக எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களுக்கிடையே வெறுப்பு, போட்டி, பொறாமை அத்தனையும் கண்கூடாக இன்று சமுதாயத்தில் காணமுடிகிறது. இவ்வளவையும் மீறி ஒருசில இயக்கங்களால் நன்மை விளையத்தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

நீங்கள் தமுமுக வில் இருக்கிறீர்கள். அதில் இருப்பதன் வாயிலாக சமுதாயத்துக்கு நல்லது செய்யு முடியும் என்று நம்புகிறீர்கள். உங்கள் நிய்யத்தை அல்லாஹ் கபூல் செய்வானாக, ஆமீன். ஆனால் நடுநிலை போக்குடன் இருந்தால்தான் இம்மையிலும், முக்கியமாக மறுமையிலும் வெற்றயடைய முடியும் என்பது எனது கருத்தாக இருக்கிறது. (இந்த சமுதாயத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் நடுநிலை சமுதாயம் என்று குறிப்பிடுவதை நினைவில் கொள்ளுங்கள்) அதுமட்டுமின்றி எந்த இயக்கத்தில் சேர்ந்தாலும் தலைமைக்கு கட்டுப்படவேண்டிய கட்டாயத்தில் எனது சுதந்திரம்

பாதிக்கப்படலாம். தேவையா எனக்கு இது! அவரவர்கள் விரும்பிய இடத்தில் முழு மனத்தூய்மையோடு பணியாற்றினாலே எல்லா வெற்றியையம் அல்லாஹ் கொடுப்பான். வஆகிருதஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

எம்.ஏ.முஹம்மது அலீ

நன்றி : க.அ. முகம்மது பஸ்லுல் இலாஹி அவர்களின் வலைப்பதிவு

ஜூலை 22, 2008

பி.ஜே குர்ஆன், ஹதீஸை மட்டும்தான் சொல்கின்றாரா? – Taif சயீத் சவால்

Filed under: saeed, taif — முஸ்லிம் @ 10:26 முப
S.M. பாக்கருக்கு, பகிரங்க சவால்!

S.M. பாக்கர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்!

நீங்கள் பேசி வருவதாவது “எங்களிடம் தனிமனித வழிபாடு ஏதும் கிடையாது. குர்ஆன் ஹதீஸை மட்டும்தான் சகோதரர் பி.ஜே அவர்கள் சொல்கின்ற காரணத்தினால் அவர் சொல்வதை கேட்கின்றோம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றீர்கள். உங்களிடம் மீடியா இருப்பதால், இது பல இலட்சம் மக்களை இலகுவாக சென்றடைந்து கொண்டிருக்கிறது. அதை நம்பக்கூடியவர்களும் அதிக அளவில் இருக்கின்றனர்.

“சகோதரர் பி.ஜே குர்ஆன், ஹதீஸையும் சொல்லி வருகின்றார்” என்று சொல்வீர்கள் என்றால் அது உண்மையாக இருக்கும். ஏன் என்றால் சமீப காலங்களாக சகோதரர் பி.ஜே அவர்கள் குர்அன், ஹதீஸீக்கு மாற்றமாக பிரச்சாரங்கள் செய்து வருகிறார். நீங்கள் உண்மைக்கு மாற்றமாக சொல்லி மக்களுக்கு தவறான வழியைக்காட்டுகின்றீர்கள்! இதை பார்த்து கொண்டிருக்க முடியாது.

ஆகவே நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளராக இருந்தால், அதை நிரூபிக்க தயாரா? நீங்கள் கூறுவது தவறு என்று நான் நிரூபிக்க தயாராக இருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்.

தாங்கள் தவறாக (பி.ஜே குர்ஆன், ஹதீஸை மட்டும் தான் சொல்கின்றார் என்று) பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைப்பதை வாபஸ் வாங்குங்கள், இல்லையேல் இந்த பகிரஙடக சவாலை எதிர் கொள்ளுங்கள்.

இதற்கு எந்த ஒரு பதிலையும் தராமல் நீங்கள் அலட்சியம் செய்வதாக சொல்லி, திசைதிருப்ப முயற்ச்சித்தால், நீங்கள் பிரச்சாரம் செய்வது தவறானது என்பதற்கு அதுவே ஆதாரம்.

ஆகவே கீழ்கண்ட தலைப்பில் நீங்கள் விவாதிக்கத் தயாரா? என்று பகிரங்க அறைகூவல் விடுக்கின்றென்.

தலைப்பு :

“பி.ஜே அவர்கள், குர்ஆன், ஹதீஸை மட்டும்தான் சொல்கின்றாரா?”

முதலில் விவாதிக்க உங்கள் ஒப்புதல் வேண்டும். அதன் பின்பு எப்பொழுது? எங்கு என்பதை முடிவு செய்வோம். இன்ஷா அல்லாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

N. SAEED
Saudi Oger Ltd. P.O Box – 1250 – Al taif 41888, Saudi Arabia.
Mobile : +966502347599, E.Mail saeed_taif@yahoo.com

இவரின் பழைய கட்டுரைகள் :

ஜகாத் ஓர் ஆய்வு – பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-01)

.

ஜகாத் ஓர் ஆய்வு – பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-02)

.

ஜகாத் ஓர் ஆய்வு – பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-03)

Older Posts »

Create a free website or blog at WordPress.com.