தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 6, 2008

காரிருளிலிருந்து பேரொளி நோக்கி – சகோதரத்துவ சமூக நீதிப்பேரவை

இறைவனின் திருப்பெயரால்

காரிருளிலிருந்து பேரொளி நோக்கி

சகோதரத்துவ சமூக நீதிப்பேரவை

அவர்கள், அவர்களுக்காக…. அவர்களாகவே நடத்தும் இறைப்பணி

அறிமுகம்:

தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாக மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டு வாழும் மக்கள் பல்லாயிரம் பேர். அதேபோல படைத்த இறைவனை மறந்து பல தெய்வக் கொள்கையைப் பின்பற்றி வழிதவறிப் போனவர்களோ ஏராளம். இவர்களுக்கு இஸ்லாம் என்னும் இறைநெறியை ஒரு விடுதலைச் செய்தியாக, அவர்களது வாழ்வின் ஈடேற்றத்துக்கான நேரிய வழியாக, எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை பிறந்தது. அப்படிப்பட்ட தூய நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அழைப்புப்பணிக்கான கூட்டமைப்பின் பெயர்தான் ‘சகோதரத்துவ சமூகநீதிப் பேரவை’. இஸ்லாத்தில் இணைந்தவர்கள் தங்கள் சமூகத்துக்காகத் தாங்களாகவே நடத்தும் அமைப்பே இது.

வழிமுறை:

இஸ்லாத்தை விரும்பி ஏற்ற பிரபலமான தலைவர்கள், அழைப்புப்பணியில் பல்லாண்டு அனுபவம் மிக்க தனிநபர்கள் மற்றும் நற்பணியில் ஆர்வமுடைய இஸ்லாமிய சிந்தனையாளர்கள் அனைவரும் இஸ்லாத்தைப் பிறருக்கு எத்திவைக்க வேண்டும் என்ற கொள்கையில் ஒன்றுபட்டனர். இந்த அமைப்பின் லட்சியமாக

‘பூமியில் எவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அவர்களை வாரிசுகளாக்கிப் பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடியிருந்தோம் (திருக்குர் ஆன் 28:5)’

என்ற திருமறை வசனத்தின்படி செயல்பட தயாராயினர். நபிகளார்(ஸல்) அவர்கள் காலத்தில் ஏதாவது கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தைத் தழுவினால், அவரை அக்கூட்டத்தினரிடம் அனுப்புவார்கள்; அவர்கள் மத்தியில் இஸ்லாமிய அழைப்புப்பணி செய்யப்பணிப்பார்கள். இந்த சுன்னாவின் – நபிவழியின் அடிப்படையில் அமைந்ததே இவ்விறைப்பணி.

பேரவைப் பணிகள்: ஒரு பார்வை

* ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களுக்கு, குழுவாகவும் தனியாகவும் செல்வது

* கிராம மக்களை ஒன்றுதிரட்டியோ அல்லது தனியாகவோ சந்திப்பது; அடிமைச் சங்கிலிகளைத் தகர்க்கும் இஸ்லாத்தின் விடுதலைச் செய்தியை விளக்குவது

* இஸ்லாத்தின் தூதைச் சமர்பிப்பது; இறையருளைப் பெற அழைப்பது

* தலித் சகோதரர்கள் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், திருமண நிகழ்ச்சிகள் இவற்றில் கலந்துகொண்டு உரையாற்றுவது

* இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களால் எழுதப்பட்ட புத்தகங்களை அறிமுகம் செய்வது

* நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான இப்தார் விருந்துகள் ஏற்பாடு செய்வது; முஸ்லிம் அல்லாதோரை கலந்துகொள்ளச் செய்வது; இஸ்லாத்தை எடுத்துரைப்பது.

பேரவையின் பொறுப்பிலுள்ள கிராமங்கள்:

மதுரை மாவட்டம்:

1. மேலக்கால்
2.எஸ். கீழப்பட்டி

தேனி மாவட்டம்:

1. உப்புக் கோட்டை
2.கோணாம்பட்டி
3.துரை ராஜபுரம்

திண்டுக்கல் மாவட்டம்:

பழைய வத்தலக்குண்டு

விருதுநகர் மாவட்டம்:

சின்ன செட்டிக் குறிச்சி

இராமநாதபுரம் மாவட்டம்:

1. பாலக்கரை
2.கண்ணாரேந்தல்
3.வன்னிக்குடி
4.மக்கா நகர்
5.குளத்தூர்

இந்த கிராமங்களில் செய்யும் பணிகள்:

* இமாம்களை நியமனம் செய்வது, சம்பளம் வழங்குவது

* குழந்தைகள் மதரஸா நடத்துவது

* மாலை நேர பயிற்சி வகுப்பு நடத்துவது

* ரமளான் நோன்பாளிகளுக்காக நோன்புக் கஞ்சி அளிப்பது

* நோன்பு திறப்பு நிகழ்ச்சியான இப்தார் விருந்துகளுக்கு ஏற்பாடு

* ஏழைகளுக்குப் புத்தாடை வழங்குவது

* ஏழைப்பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைப்பது

* நோட்டுப்புத்தகம் வழங்குவது

* I.T.I போன்ற தொழிற்கல்வி கற்க ஏற்பாடு செய்வது

* கத்னா செய்வது, அரசுப் பதிவேடுகளில் பெயர்மாற்றம் செய்வது

* இலவச மருத்துவம், மருந்து விநியோகம் செய்வது

அருளகம்:

இஸ்லாத்தை தழுவிய, பள்ளி – மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. இதற்காக அருளகம் என்றபெயரில் மாணவர் விடுதி உள்ளது. இங்கு உணவு,உடை,இருப்பிடம் இலவசமாக வழங்கப்படுகின்றன.

உங்கள் பங்களிப்பு இவைகளுக்காக…

1.பிரச்சாரப்பணிகளுக்கான செலவுகள்:

* நீட்டோலைகள்
* புத்தகங்கள்
* பொதுக்கூட்டங்கள், தேனீர் விருந்துகள்

2.புதிய கிராமங்கள் பராமரிப்புச் செலவுகள்:

* இமாம் சம்பளம்
* பள்ளிவாசல் பராமரிப்பு

3.மாணவர் விடுதி:

* உணவு, உடை, இருப்பிடம்
* கல்விச் செலவுகள்

4.கிராம மருத்துவ செவைகள்:

* இலவச மருத்துவ பரிசோதனை, மருந்து விநியோகம்

5.அலுவலகச் செலவுகள்

உங்களது கனிவான கவனத்திற்கு,

இப்பொழுது நமது விடுதியில் 170 மாணவ, மாணவிகள் படித்துவருகிறார்கள். அவர்களுக்கு புதிய கல்வி ஆண்டு (2008-2009) துவங்கிவிட்டதால் கல்விப்பணம், சீருடை, நோட்டு புத்தகம் கொடுக்கப்பட வேண்டும்.

170 X மாணவர்களுக்கான கல்விப்பணம் (ரூ1000) = ரூ1,70,000
170 X மாணவர்களுக்கான சீருடை 2செட் (ரூ 800) = ரூ1,36,000
170 X மாணவர்களுக்கான புத்தகம் (ரூ250) = ரூ 42,500
170 X மாணவர்களுக்கான 1மாத சாப்பாடு (ரூ750) = ரூ1,27,500

தேவைப்படுகின்ற மொத்தப் பணம் = ரூ4,76,000

ஏறக்குறைய 5 லட்சம் உடனே தேவைப்படுகிறது. ஆகவே இந்த இறைப்பணிகள் தொடரவும், மறுமையில் பேறு பெறவும் தங்கள் ஜகாத், ஸதகா மற்றும் நன்கொடைகள் போன்றவற்றை அனுப்பி, சமூதாய வளர்ச்சியில் பங்கு பெறுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்களது செக் மற்றும் டிராப்ட்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Mugavai Nala Arakattalai, A/C NO: 601601081351, I C I C I BANK, Madurai. (Or)
Forum for brotherhood and social Justice, A/c No: 489105155, INDIAN BANK.

அலுவலக முகவரி:
Forum for Brotherhood and Social Justice,
M2/10, Housing Unit, Near Railar Nagar
Madurai – 625 018. Phone: 0452-660167. Cell: 9444159347

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: