தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 16, 2008

ஹிஸ்புல்லாவின் நஸ்ருல்லாஹ் உங்களுக்கு சுதந்திரத்திற்கான வாக்குறுதி அளிக்கிறார் (Exclusive)

Filed under: hizbullah, lebenon, PLF, quntar, sameer, samir kuntar — முஸ்லிம் @ 10:33 பிப
ஹிஸ்புல்லாவின் நஸ்ருல்லாஹ் உங்களுக்கு சுதந்திரத்திற்கான வாக்குறுதி அளிக்கிறார்!!
இஸ்ரேலிய யூதர்களின் பிரதமர் ஓல்மர்ட் அவமானத்தை வாக்குறுதியளிக்கிறார்!!

Nasrullah Gurantees Freedom and Israel’s Olmert Guarantees Humiliation

மகிழ்ச்சியில் ஹிஸ்புல்லாஹ்வின் கொடியை அசைக்கும் ஹிஸபுல்லா

இதுதான் மத்தியகிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் எங்கும் அன்றைய தின முழக்கமாக இருந்தது. ஜீலை 16, 2008 அமெரிக்காவின் கள்ளக்குழந்தையான இஸ்ரேலுக்கும் தங்கள் மண்ணை மீட்க அற்பனிப்பு யுத்தங்களை நடத்திக் கொண்டிருக்கும் லெபனானின் போராளிகளான ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையேயான யுத்தம் முடிந்து சரியாக இரன்டு வருடங்களும் நான்கு நாட்களுமாகியிருந்தன. இன்றைய தினம் ஹிஸ்புல்லாக்களின் தலைவரான ஹஸன் நஸ்ருலு்லாஹ் அவர்கள் தன் மக்களுக்கு வாக்களித்திருந்தபடி தனது நாட்டின் இறுதி பனயக் கைதிகளாக யூத தீவிரவாத நாடான இஸ்ரேலிடம் பிடிபட்டு சித்திரவதைகளை அனுபவித்து கொண்டிருந்த ஐந்து குடிமக்களை மீட்டு வந்திருந்தார். ஆம், அதன் எதிரொளியாக மத்திய கிழக்கு நாடுகலெங்கும் மகிழச்சி கரைபுரன்டோடியது. லெபனான் தனது நாடு முழுவதும் இந்த மகிழச்சியை கொண்டாட பொது விடுமுறை அளித்திருந்தது.

ஹிஸ்புல்லாக்களின் கட்டளைக்கு பணிந்த யூத தீவிரவாத நாடான இஸ்ரேல் பல வருடங்களாக பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஐந்து லெபனானிய போராளிகளை இஸ்ரேல்-லெபனான் எல்லையில் “ரோஸ் ஹனிக்ரா எல்லை வாயில்” ஹிஸ்புல்லாக்களிடம் கையளித்தது. பின்னர் நகூரா என்ற கடற்கரையோர நகரத்தில் அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்த ஐந்து போராளிகளும் உலங்கு வானூர்தியில் ஏற்றப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் உலங்கு வானூர்திகள் துனைக்கு பரந்து வர லெபனானிய தலைநகரான பெய்ரூட் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

ஆச்சர்யம், அதிசயம், ஆம்!! இந்த வீரப் போராளிகளை வரவேற்க லெபனானின் தலைவாக்ள் மட்டுமின்றி உலக நாடுகிளன் தலைவர்களும், தூதுவர்களும் பெய்ரூட் விமானி நிலையத்தில் பல மனிநேரங்கள் காத்திருந்த காட்சியை தொடாச்சியாக அரபு தொலைக் காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. லெபனானின் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், அனைத்து அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், எதி்ர்க் கட்சித் தலைவர்கள், லெபனானில் இயங்கும் அனைத்து குழுக்களின் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள்,இஸ்லாமிய, கிருத்துவ, அனைத்து சமய தலைவர்கள், ஜெர்மனி, பிரான்ஸ்,ஈரான், என பல நாட்டுத் தலைவர்களும், தூதுவர்களும், இராஜ தந்திரிகளும் பெய்ரூட் விமான நிலையத்தின் வெட்ட வெளியில் இந்த வீரப் போராளிகளை வரவேற்க பல மணி நேரம் காத்து நின்ற காட்சி ஆச்சாயப்படத்தக்கதாக இருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் உலங்கு வானூர்திகள் புடைசூழ வீரப்போராளிகளின் வானூர்தி தரைதொட்ட தருனம் லெபனானின் தேசிய கீதம் முழங்கின நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் அந்த வீரப் போராளிகளுக்கு நெஞ்சை உயர்த்தி மறியாதை செய்து வரவேற்றதற்கு உலகம் சாட்சியானது. யாரைத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்றனரோ அந்த போராளிகளை முப்படை அணிவகுப்புடன் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், இமைச்சர்கள், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள், உலக துர்துவர்கள் என அனைவருமே திரன்டு வரவேற்றது அமெரிக்க, இஸ்ரேலிய தீவிரவாத அரச தலைவர்களுக்கு பல மாதங்களுக்கு துர்க்கத்தை கெடுக்கும் என்பது உண்மை.

இந்நிக்ழ்வில் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை நாயகனாக போற்றப்பட்டவர் சமீர் குந்த்தார் என்பவராவார். சரி யார் இந்த சமீர் குந்த்தார் என்று கேட்கின்றீர்களா? யூத இஸ்ரேலிய பயங்கரவாதிகாளால் தீவிரவாதி என்றும் லெபனானிய, பாலஸ்த்தீனிய மக்களால் போராளியாக போற்றப்படும் இந்த சமீர் குந்த்தார் என்பவர் லெபனான், பாலஸ்த்தீன், சிரியா போன்ற நாடுகிளல் வாழும் சில மக்களால் பின்பற்றப்படும் மதமான “துரூஸி” எனும் பரிவைச் சோந்தவர், லெனபானிய மலைப்பகுதி கிராமமான் “ஆபே” எனும் ஊரில் 1962 ம் வருடம் ஜீலை 20ம் நாள் பிறந்தார், அந்த கால கட்டத்தில் தான் அரபு இஸ்ரேலிய யுத்தங்கள் தீவிரமடைந்திருந்த காலம், இஸ்ரேலிய யூத இனவெறி அரசு பாலஸ்த்தீனிய, லெபனானிய மக்க கொன்று அவர்களின் நிலங்களை கையகப்படுத்தி கொண்டிருந்த காலம். அந்த கால கட்டத்தில் ஹிஸ்புல்லாவோ, ஹமாஸோ தோன்றியிராத காலகட்டம் அது. அன்றைய நாட்களில் தங்கள் நிலத்தையும் இழந்து, உயிர் உடமைகளையும் இழந்து அவமானப்படுத்தப்பட்டு சொந்த மன்னில் அகதிகளாக ஆகியிருந்த மக்களில் பலர் தங்கள் மண்ணின் விடுதலைக்காக ஒன்று சோந்து போராடத் துவங்கியிருந்த காலம்.

அமெரிக்க, பிரித்தானி உதவிகளுகடன் அரபு மக்களின் மீது தனது அடக்குமுறையை இஸ்ரேல் ஏவி விட்டிருந்த காலம் அது அப்போது அபு அப்பாஸ் என்பவர் “பாலஸ்த்தீன் விடுதலை முண்ணனி” (PLF) என்ற ஒரு போராளிக் குழுவொன்றை நிறுவி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இரானுவத்திற்கெதிராக கொரில்லாத் தாக்குதல்களை நடத்தி வந்தார். அந்த நேரத்தில் தனது இன அரபு மக்கள் படும் கஷட்டங்களை கண்ட இளைஞனான சமீர் கந்தார் தனது மிகச் சிறிய வயதில் அபு அப்பாஸ் அவர்களின் பாலஸ்த்தீன் விடுதலை முண்ணனியில் தன்னை இணைத்துக் கொண்டார். அத்துடன் நில்லாது அற்பனிப்புடன் பல இஸ்ரேலிய யூத ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான பல தாக்குதல்களிலும் பங்கெடுத்துள்ளார். 1970 ல் இருந்து 1980 கால கட்டங்களில் உலகின் பல பாகங்களில் அமெரிக்க, இஸ்ரேலிய நிலைகளின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி அமெரிக்க, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களை பாலஸ்த்தீன் விடுதலை முண்ணனி நிலை குலைய வைத்திருந்த காலம் அது.

தாக்குதலுக்கு தயாராக சமீர் கந்தார் குழு இடமிருந்து முதலாவதாக சமீர்

வீரியமிக்க இளைஞனாக இருந்த சமீர் குந்த்தர் அவர்களின் தலைமையில் யூத இன வெறியர்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த பாலஸ்த்தீனிய கடற்கரையோர நகரமான நகரியாவின் மீது ஒரு தாக்குதலை தொடுத்து அங்குள்ள யூதர்களை நிலைகுலையச் அங்கிருந்த விரட்ட் வேண்டிய முக்கிய தாக்குதலுக்கு பாலஸ்த்தீன் விடுதலை முண்ணனி தயாராகியது. சமீர் குந்த்தார் அவர்களுக்கு அந்த தாக்குதலை தலைமையேற்று நடத்த வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஏப்ரல் 22, 1979 “தாக்குதல் நஸர்” என்று பெயரிடப்பட்டிருந்த நகரியா மீட்பு நடவடிக்கையில் இறங்க சமீர் கந்த்தார் தலைமையில் நன்கு பயிற்சி பெற்றிருந்த பாலஸ்த்தீன் விடுதலை முண்ணனியின் நான்கு நபர்களை கொண்ட கொரில்லா போராளி குழுவொன்று கிளம்பியது. சமீர் குந்த்தார் தவிர அப்துல் மஜீத் அஸ்லன், அஹ்மத் அல் அப்ரஸ், முஹன்னா ஸாலிம் அல் முஅய்யத் என் மூன்று போராளிகளும் இடம் பெற்றிருந்தனர். லெபனானின் கடற்கரையோர நகரமான “டையர்” எனும் இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலேயே இருந்தது தாக்குதல் நடத்த வேண்டிய நகரியா என்ற பகுதி, நிலப் பரப்பு வழியாக ஊடுருவ இயலாது யூத பேரிணவாதிகள் கடுமையான கண்ணிவெடிகளை விதைத்து பாதுகாப்பை பலப்படுத்தியிருந்ததால், 55 குதிரை சக்தியுள்ள இழுவை இயந்திரம் பொறுத்தப்பட்ட ரப்பர் விரைவுப் படகில் மணிக்கு 88 கிலோ மீட்டர் வேகத்தில் நள்ளிரவின் அமைதியை கிழித்த வண்ணம் நகரியாவை நோக்கி பயனப்பட்டார்கள் இந்த கொரில்லாப் போராளிக் குழுவினர்.

நகரியாவின் கடற்கரையில் வந்திரங்கிய சமீர் குந்த்தாரின் போராளிக் குழுவினர் தங்களின் திட்டமிடப்பட்ட தாக்குதல் நடவடிக்கைக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம் திடீரென ஒரு யூத இணவெறி காவலன் ஒருவன் இவர்களை கண்டுவிட்டான் உடனே அவன் தனது சகாக்களை அழைக்க முற்ப்பட்டபோது போராளிக் குழுவினர் நடத்திய தாக்குதலில் அந்த யூத இணவெறிக் காவலன் கொல்லப்பட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டதும் உஷாரான இஸ்ரேலிய யூத இணவெறி இரானுவத்தினர் அவ்விடத்தில் வந்து குவிந்தனர் உடனே நிலைமையை உணாந்து தங்கள் திட்டத்தை மாற்றிக் கொண்ட போராளிக் குழுவினர் யூத இணவெறி இரானுவத்தினரோடு கடுமையான துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டவாறு முன்னேறினர். அப்போது நடந்த கடுமையான சண்டையில் சமீர் குந்தாரோடு வந்திருந்த போராளிகளான அப்துல் மஜீத் அஸ்லன், முஹன்னா ஸாலிம் அல் முஅய்யத் ஆகிய போராளிகள் வீரச் சாவை எய்தினர். அஹ்மத் அல் அப்ரஸ் மற்றும் சமீர் குந்த்தார் ஆகியோர் ஆயுதம் உள்ளவரை போராடினர் இறுதியில் எதிரிகளிடம் பிடிபட்டனர். இந்த வீரப் போராட்ட்த்தில் இவர்கள் இரு யூத இன வெறி காவலர்களை கொன்றனர். கடுமையான சண்டைக்கு மத்தியில் இந்த போராளிகள் அங்கிருந்த குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தாக்குதலை நடத்தினர் (இஸ்ரேலில் பொதுமக்கள் (சிவிலியன்) என்று யாரும் கிடையாது, இஸ்ரேலிய குடிமகன் ஒவ்வொருவனும் இரானுவ வீரனாவான், ஆயுதம் தரித்தே இருப்பார்கள் யூதர்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ளவும்) அப்போது ஒரு யூதக் குடும்பம் இந்த சண்டைக்கிடையில் மாட்டிக் கொண்டது. அங்கிருந்த யூதனை பணயக் கைதியாக பிடித்த சமீர் குந்த்தார் அவர்கள் தனது தாக்குதலை தொடாந்து நடத்திக் கொண்டே முன்னுறினார்.

இதற்கிடையில் தனது குழந்தையோடு துனி வைக்கும் அலமாறியில் ஒழிந்த அந்த யூதனின் மனைவி குழந்தை அழவே குழந்தையின் அழுகை ஒலி தன்னை போராளிகளிடம் காட்டிக் கொடுத்து விடும் என்று பயந்து தனது குழந்தையின் வாயையும் மூக்கையும் பொத்தி கொன்று விட்டாள். இதற்கிடையில் நடைபெற்ற சண்டையில் சிக்கி பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்த யூதனும் செத்து விட்டான். சமிர் குந்த்தார் அவர்களை யூத இரானுவம் கைது செய்தது. பின்னர் உலக நாடுகளின் பரிதாபத்தை பெறுவதற்காக வேண்டியும், பாலஸ்த்தீன் அரபு போராளிகளை உலக மக்கள் மத்தியில் பயங்கிரவாதிகளாக காட்டுவதற்காகவும், சமீர் கந்த்தார் பிடித்து வைத்திருந்த யூதனின் குழந்தையை மன்டையை சிதறடித்து கொன்ற யூதர்கள் அதை சமீர் கந்த்தார் தான் செய்ததாக் குற்றம் சாட்டினர். உலகெங்கும் பச்சிலம் குழந்தையை அரபு தீவிரவாதி மன்டையை சிதறடித்து கொன்றதாக பிரச்சாரம் செய்து அனுதாபம் ஈட்டினர் யூத பயங்கரவாதிகள். (பல ஆயிரம் பாலஸ்த்தீன் பச்சிலம் குழந்தைகளை தீவிரவாத இஸ்ரேலிய இரானுவம் கொன்று குவிப்பதை இன்றைய உலகம் வேக்கை பர்ர்க்கின்றது ஆனால் ஒரு யூதனோ அல்லது யூதக் குழந்தையோ தாக்குதலில் கொல்லப்பட்டால் உலகம் கதறுகின்றது தீவிரவாதம் என்று)

பாலஸத்தீன் ஃபத்தாஹ் போராளிக் குழு தலைவர் மர்வான் பர்கூத்தி உடன் சமீர்

யூதர்களால் பிடிக்கப்பட்ட போராளி சமீர் குந்தார் அவர்கள் மீது குழந்தையை மன்டையை சிதறடித்து கொன்றது என பல பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன ஆனால் அவை அனைத்தையும் இன்று வரை மறுத்தே வந்துள்ளார் சமீர் குந்த்தார் அவர்கள். முக்கியமாக குழந்தை படுகொலையை தான் செய்யவில்லை என மறுத்துள்ளார். ஆனால் ஆக்கிரமிப்பு சக்திகளான யூத தீவிரவாதிகளின் நீதி மன்றம் சமீர் குந்தார் அவர்களுக்கு 542 வருடங்’கள் சிறைத் தண்டனை விதித்து தீர்பளித்தது. தனது 17 வயதில் சிறை சென்ற சமீர் அன்றிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 27 வருடங்கள் யூதர்களின் சிறையில் வாடிய சமீர் குந்தார் அவர்கள் நீண்ட கால் அரபு சிறைவாசி என்ற பெயரினையும் பெற்றார். தனது சிறைவாசத்தின் போது சிறைவாசிகளின் நலனுக்காக போராடிய ஒரு இஸ்ரேலிய அரபு பென்னை மணந்தார் ஆனால் பின்னர் அந்த பென்னை விவாகரத்து செய்து விட்டார். இன்று அவரது வயது 46.

பாலஸ்த்தீன் சுதந்திர இயக்கத்தின் முக்கிய போராளியாக சமீர் கந்த்தார் இருந்தமையால் அவரை மீட்பதற்கு பல போராளிக் குழுக்களும் நடவடிக்கை எடுத்தன. சமீர் குந்தாரோடு பிடிபட்ட அஹ்மத் அல்அப்ராஸ் அவர்கள் 1985 ல் இஸ்ரேலால் செய்யப்பட்ட “ஜிப்ரீல் ஓப்பந்தம்” மூலம் விடுதலை செய்யப்பட்டார், ஆனால் சமீர் குந்தாரை விடுதலை செய் இஸ்ரேல் ஒவ்வொரு கட்டத்திலும் மறுத்தே வந்துள்ளது. 1985 ம் ஆன்டு சமீர் கந்தாரின் விடுதலை கோரி இஸ்ரேலிய அமெரிக்க பயணிகள் பயனம் செய்த கப்பல் ஒன்றை பாலஸத்தீன விடுதலை முண்ணனியினர் பிடித்தனர் பின்னர் சமீர் கந்தாரை விடுவிக்க இஸ்ரேல் மறுத்து விட்டதால் அதில் இருந்த முரன்டு பிடித்த ஒரு அமெரிக்க யூதனை கொன்று விட்டு கப்பலை எகிப்திடம் ஒப்படைத்து விட்டனர்.

பின்னர் நடந்த பல பணயக் கைதிகள் பறிமாற்றத்தின் போதும் சமிர் கந்தாரை விடுவிக்க மறுத்து விட்டது இஸ்ரேல். ஆனால ஹிஸ்புல்லா உதயமானதற்கு பிறகு ஹிஸ்புல்லாக்களின் தலைவரால் இஸ்ரேலிய சிறையில் வாடும் பாலஸ்த்தீன், லெபனான் விடுதலை போராளிகளுக்கு ஒரு வாக்குறுதி அளிகப்ப்பட்டது அது என்னவென்றால் இஸ்ரேல் சிறையில் வாடும் கடைசி லெபனானிய கைதியை மீட்கும் வரை ஹிஸ்புல்லா போராடும் என்பதே அது. அது போலவே பல பாலஸத்தீன லெபனானிய கைதிகளை மீட்டெடுத்துள்ளது ஹிஸ்புல்லா.

மே 26, 2006 ம் ஆண்டு ஹிஸ்புல்லா இஸ்ரேலிய யூத இனவெறி இரானுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்தி அவர்களில் 8 போரை கொன்றதோடு இருவரை காயங்களோடு பிடித்து சென்றது. அந்த இருவரை விடுதலை செய்ய வேண்டுமானால் சமீர் கந்தாரோடு கடைசியாக இஸ்ரேலிய சிறைகளில் மிச்சமிருக்கும் லெபனானிய போராளிகளையும் 50 வருடங்களுக்கும் மேறப்பட்ட யுத்தத்தில் இறந்து போன பாலஸத்தீன்,லெபனானிய, அரபு வீரர்களின் சடலங்களின் மிச்ச மீதிகளையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரியது, ஆனால் இஸ்ரேல் அதை மதிக்காமல் அமெரிக்காவின் பேச்சை கேட்டு யுத்தத்தை ஆரம்பித்து 1000 த்திற்கு மேற்ப்பட்ட லெபனானியர்களை கோழைத்தனமாக குடியிருப்புக்கள் மீது குண்டுகளை வீசி கொன்றதுடன் தனது முழு படை பலத்தையும் பயன்படுத்தியும் ஹிஸ்புல்லாக்களின் அதிரடித் தாக்குதலின் முன் ஒன்றும் செய்ய இயலாமல் நூற்றுக் கணக்கி்ல் தனது இரானுவ வீரர்களை இழந்து அவமானகரமான தோல்வியை சந்தித்தது.

பின்னர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமீர் கந்தார் உட்பட எஞ்சியிருந்த லெபனானிய போராளிகளை விடுவிக்கவும், 50 வருடங்களுக்கும் மேறப்பட்ட யுத்தத்தில் இறந்து போன பாலஸத்தீன்,லெபனானிய, அரபு வீரர்களின் சடலங்களின் மிச்ச மீதிகளையும் தங்களிடம் ஒப்படைக்கவும் ஒத்துக் கொண்டது. பேச்சுவார்ததை ஜெர்மனிய நாட்டின் நடுநிலைமை வகித்தது. இறுதியில் நேற்று வீரப் போராளிகள் சமீர் கந்தார் தலைமையில் சுதந்திரப் பறவைகளாக லெபனானிய மண்ணில் நுலைந்தனர்.

இநத மாவீரர்களைத்தான் லெபனானின் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், அனைத்து அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், எதி்ர்க் கட்சித் தலைவர்கள், லெபனானில் இயங்கும் அனைத்து குழுக்களின் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள்,இஸ்லாமிய, கிருத்துவ, அனைத்து சமய தலைவர்கள், ஜெர்மனி, பிரான்ஸ்,ஈரான், என பல நாட்டுத் தலைவர்களும், தூதுவர்களும், இராஜ தந்திரிகளும் பெய்ரூட் விமான நிலையத்தின் வெட்ட வெளியில் இந்த வீரப் போராளிகளை வரவேற்க பல மணி நேரம் காத்து நின்று வரவேற்றனர். இவர்களின் விடுதலையில் ஒட்டுமொத்த அரபுலகமும் திளைத்தது.

இரானுவ உடையில் சுதந்திரப் போராளிகளாக வலது புறம் முதலாவதாக சமீர் குந்தார்

பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் இரானுவ உடையில் வந்து பேசிய சமீர் கந்தார் உட்பட அனைத்து போராளிகளும், நாங்கள் பாலஸ்த்தீன் மண்ணில் யூத பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு லெபனானிய மண்ணிற்கு வந்துள்ளோம் ஆனால் பாலஸ்த்தீன மண்ணை மீட்பதே எங்கள் குறிக்கோளாகும் அது வரை எங்கள் போராட்டம் தெர்ரும் என்றனர். பின்னர் பேசிய ஹிஸ்புல்லர்களின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் அவர்கள் இஸ்ரேலிய சிறைகளில் வாடிய அரபு சிறைவாசிகளின் சுதந்திரத்திற்கு அவர்களை மீட்டெடுப்பதாக உறுதியளித்திருந்தோம் அதில் உறுதியாக நின்று அவாக்ளை மிடு்டெடுத்துள்ளோம், இன்னும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருந்து பாலஸ்த்தீன மண்ணையும், பாலஸ்த்தீனர்களையும், ஆக்கிரமிக்கப்பட்ட ஒவ்வொரு அரபு மண்ணையும் மீட்டெடுத்து அவர்களின் சுதந்திரத்திற்கு உறுதியிளத்தள்ளோம் அவர்களின் சுதந்திரம் உறுதியாக்கப்படுதம் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

ஹிஸ்புல்லாக்களின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாவுடன் சமீர் குந்தார்

பல வருடங்களாக எந்தவொரு அரபு அரசாங்கமோ, ஆட்சியாளர்களோ யுத்தத்தின் மூலமோ, பேச்சுவார்த்தைகளின் மூலமோ சாதிகக் இயலாத காரியத்தை பல முறை சாதித்து இறுதியாக இஸ்ரேலிய சிறைச்சாலையில் வாடிய கடைசி லெபனானிய போராளியையும் மீட்டெடுத்துள்ளனர் இன்னும் தங்கள் சக போராளிகளின் சடலங்கள் கூட யூத ஆக்கிரமிப்பு மண்ணில் இருக்கக் கூடாது என்று அவற்றையும் மீட்டெடுத்துள்ளனர் ஹிஸ்புல்லாஹ் போராளிகள். இன்னும் மீதியுள்ள போராளிகளின் சுதந்திரத்திற்கும் உறுதியளித்துள்ளனர். இந்த போராளிகளை வரவேற்க ஒட்டுமொத்த லெபனானே திரன்டு வீதிகளில் மக்கள் வெள்ளமாக நின்றது ஆச்சர்யமளிக்கின்றது.

இந்நிகழ்வுகளை கண்டு கழித்து தொலைக்காட்சியை மூடியபின்னும், மேடையில் ஓங்கி ஒலித்து சமீர் கந்தாரின் குரலும், ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ்வின் குரலும் இன்னும் எம் காதுகளில் ரீங்காரமிடுகின்றன!! ஆம்!! “இன்னும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருந்து பாலஸ்த்தீன மண்ணையும், பாலஸ்த்தீனர்களையும், ஆக்கிரமிக்கப்பட்ட ஒவ்வொரு அரபு மண்ணையும் மீட்டெடுத்து அவர்களின் சுதந்திரத்திற்கு உறுதியிளத்தள்ளோம் அவர்களின் சுதந்திரம் உறுதியாக்கப்படுதம் வரை எங்கள் போராட்டம் தொடரும், நாங்கள் தோற்க்கடிக்கப்பட்ட காலங்கள் மலையேறிவிட்டன…இனி வெற்றிகள் மட்டுமே எம்மை தொடரும்….” தொடரட்டும் இவர்களின் போராட்டம் இந்த மாவீரர்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றிபெற்று ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்த்தீனத்தின் கடைசி அங்குல நிலத்தையும் மீட்கும் வரை இறுதி யூதனை கப்பலேற்றி வந்த இடத்திற்கே திரும்ப அனுப்பும் வரை தொடரட்டும் இவர்களின் போராட்டம். இவர்களின் போராட்டத்தில் வெல்ல நாம் வாழத்துவோம், பிறார்த்திப்போம்!! வாழ்க பாலஸ்த்தீன சுதந்திர போராளிகள்!! வெல்லட்டும் பாலஸ்த்தீன் சுதந்திர போராட்டம்!!

நன்றி

முகவைத்தமிழன்

இந்த கட்டுரைக்கு எவ்வித காப்புரிமையும் இல்லை யாரும் பயன்படுத்தி கொள்ளலாம்.

Advertisements

3 பின்னூட்டங்கள் »

 1. தங்களின் கட்டுரையோடு தொடர்புடைய செய்திகளை எழுதியிருக்கிறேன்:

  ஹிஸ்புல்லா அமைப்பு தோற்றம்:

  ஷியா முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய இமாம் ஆயத்துல்லா கொமைனியின் ஆதரவாளர்களால், லெபனானில் ஊடுருவிய இஸ்ரேலிய எதிர்த்து போராட 1982 ல் துவங்கப்பட்டது ஹிஸ்புல்லாஹ் அமைப்பு. 1980 களின் இறுதியில் தெற்கு லெபனானிலிருந்து – இஸ்ரேல் படைகளை திருப்பி அழைத்துக்கொண்ட பிறகு ஹிஸ்புல்லாவின் வளர்ச்சி தீவிரமடைய ஆரம்பித்தது. இதன் வளர்ச்சிகு தேவையான பொருளாதார உதவிகளை ஈரான் மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே செய்து வருகின்றன. சுன்னி முஸ்லிம்களை கொண்ட அரபு நாடுகள் – இவர்களிடமிருந்து விலகியே நிற்கின்றன. இறை இல்லங்களின் பாதுகாவலனாக கூறிக்கொள்ளும் சவுதி அரேபியா ஹிஸ்புல்லாவை தனது எதிரியாகவே கருதுகிறது.

  ஹிஸ்புல்லாவின் சாதனையும் சவுதியின் வேதனையும்:

  தற்போதைய சுன்னி முஸ்லிம் தலைமியிலான லெபனான் அரசு – சவுதி அரேபியாவின் தாராளமான பண உதவியோடு மேற்கத்திய நாடுகளுக்கு கைக்கூலியாக செயல்பட்டு வருவதால் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் – அரசிற்கும் அடிகடி மோதல் ஏற்பட்டுவருகிறது. இதன் உச்சகட்டமாக கடந்த மே மாதம், 2008 ல் ஹிஸ்புல்லா படையினர் லெபனான் கட்டுப்பாட்டில் உள்ள பெய்ரூட் விமான நிலையத்தை கைப்பற்றி, சுன்னிப் பிரிவைச்சார்ந்த புயூச்சர் மூவ்மென்ட் அமைப்பினரின் சொத்துக்களுக்கு தீவைத்தனர். முன்னாள் பிரதமர் ரபீக் ஹரிரி க்குச் சொந்தமான தொலைக்காட்சி நிலையத்திற்கும் பத்திரிக்கை அலுவலகத்திற்கும் தீவைத்தனர். தனது பெட்ரோல் டாலர்களால் நடத்தப்படும் லெபனன் அரசின் இயலாமையை கண்ட சவுதி அரேபியா அதிர்ச்சியடைந்து அமெரிக்காவுடன் ஆலோசித்து கண்டனத்தை தெரிவித்தது.

  ஹிஸ்புல்லா அமைப்பின் வளர்ச்சி

  ஹிஸ்புல்லா அமைப்ப ஆரம்ப காலகட்டத்தில் தற்கொலை தாக்குதல், அய்ரோப்பிய சுற்றுலாப்பயனிகளை கடத்தல், கொரில்லா தாக்குதல் போன்ற வழிமுறைகளை கொண்டு இஸ்ரேலிய ஆக்ரமிப்பை எதிர்த்து வந்தாலும், இஸ்ரேலின் பலம் மற்றும் பலவீனமறிந்து தக்க பயிற்சிகளை மேற்கொண்டு – அதி நவீன ஆயுதங்களை கையாளுவதில் தேர்ச்சி பெற்று தங்களது தாக்குதல் முறைகளை மேம்படுத்திக் கொண்டனர், அறிவியல் தொழில் நுட்பங்களை பயின்று சொந்தமாக ஏவுகனை தயாரித்து இஸ்ரேலுக்குள் வீசி அமெரிக்காவை மூக்கில் விரல் வைக்க வைத்தனர். ஹிஸ்புல்லாவின் ஆயுதம் கையாளும், திறமை லெபனானின் இரானுவத்தை விட வலிமையும்-திறனும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஹிஸ்புல்லாவிடமிருந்து ஆயுதங்களை களைய அய்க்கிய நாடுகளின் ஒன்றியம் (United Nations) கொண்டுவந்த இரண்டு தீர்மானங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

  இஸ்ரேலை தாக்குவதை மட்டும் முழுநேரப்பணியாக கொள்ளாது -வறுமையில் உழுலும் லெபனான் மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை நிறைவேற்றுவதிலும்- பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் சமூக- பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி ஒரு மாபெரும் மக்கள் ஆதரவு பெற்ற இயக்கமாக தன்னை உருவாக்கிக்கொண்டது. ஹிஸ்புல்லாவின் ஒரு பிரிவு அரசியலில் ஈடுபட்டுள்ளதோடு தற்போதைய அரசில் அங்கமும் வகிக்கிறது. லெபனான் பாரளுமன்றத்தில் கொண்டுவரப்படும் தீர்மானங்களை நிர்ணயிக்கும் ‘ரத்து அதிகாரம்’ (VETO Power) பெற்று விளங்குகிறது. மக்களோடு தொடர்புகொள்ள தனக்கென சக்திவாய்ந்த ஊடகங்களை கொண்டுள்ளது.

  ஹிஸ்புல்லாவின் சாதனை

  2006 -ல் ஹிஸ்புல்லா – இஸ்ரேலிய படைகளுக்குள் நடந்த எல்லை தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய வீரர்களை பிடித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற போரில். இஸ்ரேலின் மாபெரும் தாக்குதலால் லெபனான் தரைமட்டமாகியது – இறுதியில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டது. போரில் லெபனான் தனது அடிப்படை கட்டமைப்புக்களை இழந்து – பொருளாதர சேதத்தை அடைந்தலும் ஹிஸ்புல்லா தானே வெற்றி பெற்றதாக பிரகடனம் செய்தது. இது அரபு நாடுகளால் புகழப்பட்டாலும் இஸ்ரேலை வீம்புக்காக போருக்கு அழைத்ததாக லெபனன் நாட்டு விமர்சகர்களால் கூறப்படுகிறது.

  ஹிஸ்புல்லாஹ் தன்னை இஸ்லாமிய அமைப்பு என்று அறிவித்து கொண்டாலும் – லெபனானில் வசிக்கும் பிறமதத்தவர்கள் மற்றும் சுன்னி முஸ்லிம்களின் மீதோ தனது ‘ஷியா’ கொள்கையை திணிக்காது என்று அறிவித்திருக்கிறது.

  ஹிஸ்புல்லாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாக சிரியாவும் ஈரானும் செயல்படுவதால்தான் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

  பிறைநதிபுரத்தான்

  ———————————————————————————————–
  Stand upright,
  Speak your thoughts,
  Declare the truth you have – that all may share,
  Be bold, proclaim it everywhere:
  They only live who dare

  பின்னூட்டம் by பிறைநதிபுரத்தான் — ஜூலை 18, 2008 @ 2:02 பிப

 2. ALLAHU AKBAR

  பின்னூட்டம் by Anonymous — ஜூலை 18, 2008 @ 9:44 பிப

 3. ALLAHU AKBAR

  பின்னூட்டம் by NAWAZ — ஜூலை 18, 2008 @ 9:45 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: