தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 22, 2008

குழப்பவாதிகளுக்கு காற்புள்ளி அல்ல! முற்றுப்புள்ளி வைப்பீர்!!

Filed under: அரசியல், IDMK — முஸ்லிம் @ 6:04 முப
இந்திய தேசிய மக்கள் கட்சியின் எழுச்சிமிகு கொள்கைப் பாடல்களை கேட்பதற்கு அல்லது டவன்லோட் செய்வதற்கு இங்கு சொடுக்கவும்.
www.idmk.org
‘குழப்பவாதிகளுக்கு காற்புள்ளி அல்ல! முற்றுப்புள்ளி வைப்பீர்!!

60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் கழிப்பறை கட்டியதில் தான் முஸ்லிம்கள் முன்னேறி இருக்கிறார்கள். தலித்களைவிட கல்வி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு போன்றவற்றில் மிக, மிக பின் தங்கி உள்ளனர். இதற்கு காரணம் தகுதியற்ற தலைமைத்தனம் என்ற பிரண்ட்லைன் கூற்றை மறந்துவிட முடியாது. முஸ்லிம் லீக்கை குறை சொல்லி உரிமை, உணர்வு என வார்த்தைகளில் உஷ்ணத்தை ஏற்றி ஆர்ப்பாட்டம், போராட்டம், என போலி வேஷம் போட்டு ஆரவாரத்தோடு புறப்பட்ட த.மு.மு.க விழலுக்கு இறைத்த நீராய் 60 ஆண்டு முஸ்லிம் லீக்கின் ஏமாற்றும் வேலையை கச்சிதமாய் செய்து இருக்கிறது. ஆம் 2 சீட்டுக்கு திராவிட கட்சிகளிடம் அடகு வைக்கும் சாதனையை வெற்றிகரமாய் நிகழ்த்தி இருக்கிறது. கோவை 19 உயிர்கள் பலி, கப்ருஸ்தான் இடிப்பு, பள்ளி உடைப்பு, மீரட், மண்டைக்காடு, கான்பூர், குஜராத், என சமூகத்தின் அவலங்களை காட்சி பொருளாய் கடை விரித்து, இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்துச் சென்றவர்கள்….

இன்று அரசியல் சூழ்ச்சிக்காரர்களின் சூது வலையில் சிக்கி, உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்து அரசியல் இல்லை, தேர்தல் ஆதரவு, புறக்கணிப்பு, அந்தர்பல்டி, இட ஒதுக்கீட்டு துரோகத்திற்கு பாராட்டு, அரசியல் ஹராம், ஈடுபட மாட்டோம் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மேடைதோறும் விளம்பிய காட்சி, நடிப்பதில் நடிகர்களை மிஞ்சிய மாட்சி, லட்சியத்தை மாற்றி, மாற்றி பேசுவதிலும் தன்னை நம்பி வரும் தொண்டர்களை முட்டாளாக்கி வைத்துக் கொள்வதில் அரசியல்வாதிகளை விஞ்சிய அரசியல் வியாதிகள் த.மு.மு.க என்றால் மிகையில்லை. இளைஞர்களே சிந்தியுங்கள்.

சமுதாயத்தை மேய்ப்பவர்கள் போல் காட்டிக் கொண்டு சமூகத்தை ஏய்த்தவர்கள், ஒற்றுமையை உடைத்து இமாலய சாதனையைச் செய்தவர்கள், மற்றவர்களின் பார்வைகளில் இஸ்லாமிய சமூகத்தை சர்க்கஸ் கோமாளிகளாக காட்சி அளிக்க வைத்தவர்கள். இவர்களின் குழப்பத்தின் உச்சகட்டத்தை கண்டு நம்மை ஏமாற்றும் அரசியல் கட்சிகளில் இளைஞர்கள் தஞ்சம் புக வேண்டிய நிலையை ஏற்படுத்தியவர்கள். இன்று எங்கே நம் த.மு.மு.க கூடாரம் கலைந்து விடுமோ! என அஞ்சி அற்புதமான வாய்ப்புகளை விட்டு விட்டு அரசியலைப் புறக்கணித்த துறவிகள், இந்திய தேசிய மக்கள் கட்சியை (ஐனுஆமு) ஆரம்பித்த பிறகு முன்னேற்றம் என சமுதாயத்தை பின்னேற்ற அரசியல் குழப்பத்தை மீண்டும் துவக்கி இருக்கின்றனர். தி.மு.க.விற்கே எங்கள் ஆதரவு என நஞ்சு வைக்கும் வஞ்சகர்களின் வாயில் கதவைத் தட்டி இருக்கிறார்கள். வாழ்க என சொல்ல இதயம் வலிக்கிறது. இளைஞர்களே சிந்தியுங்கள்.

இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுத்திட, சட்டம் இயற்றும் சபைகளில் சங்கமித்திட சமூகத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்பிட, நம்மைக் கருவருக்கும் அரசியல் கட்சிகளில் தஞ்சம் புகுந்து வஞ்சம் செய்யும் சமுதாயத் தலைவர்கள் (ளழசசல) துரோகிகளின் தூக்கு கயிற்றை அறுத்து எரிந்திட சமுதாயத்து எண்ணங்கள், உணர்வுகள், கனவுகள், இவற்றிற்கு வடிவம் கொடுத்திட கடந்த இரண்டு ஆண்டுகளாக களப்பணியாற்றி தலித், கிருஸ்துவ, முஸ்லிம்களை அரவணைத்துச் சென்றிட முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சியைத் துவக்கி சென்னையில் தலைமையகம் அமைத்து, தேர்தல் கமிஷன் அங்கீகாரத்திற்கான வேலையை முடித்து, துண்டு பிரசுரம், சி.டி.க்கள், கலந்துரையாடல், பொதுக்கூட்டம், கருத்து பரிமாற்றம், உலமாக்கள், அறிவு ஜீவிகள் சந்திப்பு, என சமூகத்தின் சிந்தனையைத் தூண்டி அரசியல் சார்பற்ற அமைப்புகளை எல்லாம் ஒன்றினைத்து எதிர்கால பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நம் அரசியல் பலத்தை காட்டிய களத்தில் நிற்கும்போது ஆம் கனிபறிக்க மரம் ஏறும் போது கருநாகம் காலைச் சுற்றுமாம்.

அதுபோன்று தேர்தல் வரும்போது எல்லாம் சில்லரைகளுக்காக குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி கொள்கையை கோடிக்கு விற்றவர்கள், வாய்ப்பைத் தவற விட்டு விட்டு, மீண்டும் சமூகத்தின் வாக்கு வலிமையை சிதைக்க அன்று மார்க்கத்தில் குழப்பம், இன்று அரசியலில் குழப்பம் செய்ய வருகின்றனர். இளைஞர்களே எச்சரிக்கை. ஜமாத்தார்களே, சமுதாயப் பெரியவர்களே, ஆலிம் பெருமக்களே, ஆன்றோர்களே, குழப்பவாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பீர். சாட்டையடியில் குழப்பவாதிகளின் கொட்டம் அடங்கட்டும். குள்ள நரி செயல்கள் ஒடுங்கட்டும். அதன்மூலம் நம் அரசியல் வலிமை பிறக்கட்டும், மற்றவர்கள் நம் அரசியல் வலிமையை உணரட்டும். நம் தனித் தன்மை தமிழ்த் தரணியில் சிறக்கட்டும், வருங்கால சந்ததிகள் நம்மைப் போற்றட்டும்.

குழப்பவாதிகளுக்கு காற்புள்ளி அல்ல முற்றுப்புள்ளி வைப்போம். வாரீர்! வாரீர்.

இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
50ஃ330இ திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை – 600 005
தமிழ்நாடு செல் : 994380211, 9344510369, 9786011679, 9443021050
Advertisements

3 பின்னூட்டங்கள் »

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.,

  அண்ணே……. ஐடிஎம்கே அண்ணே உங்க கோபத்துல அல்லாஹ் தண்ணிய ஊற்றுவானாக, வயிற்றெரிச்சலில் பாலை ஊற்றுவானாக, உங்களோட இணையதளத்தை தற்போது தான் பார்த்தேன். கட்டுரைகள் தான் 20 முறை ஏற்றியிருக்கின்றீர்களே தவிர மற்ற எல்லா லிங்குகளும் Under Construction ஆக தான் இருக்கின்றது. இணையத்தையே நீங்கள் இனிமேல் தான் முறைப்படுத்த வேண்டும். இதற்கிடையில் சமுதாயத்தை எங்கே முறைப்படுத்துவீர்கள். அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லையே. அதனால, தமுமுகவிற்கு பலத்தை குடுறா அல்லாவே, இஸ்லாமிய எதிரிகள இல்லாம ஆக்குடா அல்லாவே, சமூகத்துக்கள் மார்க்கத்தின் பெயரால் குழப்பம் செய்பவர்களை திருத்துடா அல்லாவே, தமுமுக சரியா செயல்படல திராவிட கட்சிகளிடம் எங்கே விலை போயிருவாங்கலோன்னு பயந்து அவசரப்பட்டு ஐடிஎம்கேவ ஆரம்பித்தது தவறுதான் அல்லாவே, இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் ஐடிஎம்கேவ கலைச்சிட்டு மமுகவோடு சேர்ந்து புதிய எழுச்சியுடன் கூடிய மலர்ச்சியை உருவாக்கனும்டா அல்லாவே, சமுதாயத்தின் பெரிய தலைகளுக்குள் இருக்கும் ஈகோ, பிரஸ்டீஜ், ஆணவம், திமிரு, நயவஞ்சகம், இன்னும் இதுபோன்று இறையும், மறையும் மறுக்கும் தீய குணங்களை இல்லாமல் ஆக்குடா அல்லவேன்னு துஆ செஞ்சிட்டு இருங்க. உங்கள் துஆ பரக்கத்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

  // இந்திய தேசிய மக்கள் கட்சியை ஆரம்பித்த பிறகு முன்னேற்றம் என சமுதாயத்தை பின்னேற்ற அரசியல் குழப்பத்தை மீண்டும் துவக்கி இருக்கின்றனர். //

  கண் முன்னே நடந்த வரலாற்றை இப்படி திருப்புகிறார்களே இவர்களா நாளைய சந்ததிக்கு இந்திய சுதந்திர தியாக வரலாற்றை கொடுப்பார்கள். 1995ல் இருந்து சமுதாயப்பணியில் களம் கண்ட தமுமுக 2004லில் அரசியல் களம் காண புதிய உத்வேகத்துடன் அன்றிலிருந்து சமுதாயத்தின் அனைத்து பிரிவினரையும் அரவணைத்து செல்ல துவங்கிவிட்டது. 2008 பிப்ரவரி மாதமே நிலையான அரசியல் கட்சி துவக்குவதற்காக செயற்குழு கூடி முடிவெடுக்கப்பட்டு பொது மக்களிடம் அது பற்றி கருத்துக்கணிப்பும் கேட்கப்பட்டது. http://www.tmmkonline.org/tml/others/108632.htm
  இதையெல்லாம் கூட அறியாமல் IDMK ஆரம்பித்த பிறகு தான் எல்லாம் என்று சொல்வது எவ்வளவு அப்பட்டமான பொய் என்பது சொல்லித்தெரியவில்லை. 06-04-2008 அன்று கட்சியை ஆரம்பித்துவிட்டு 22-09-2008ல் அடுத்தவர்களை விமர்சிக்க ஆரம்பித்து விட்டது. அந்தப்பக்கம் முஸ்லீம் லீக்கும் குய்யோ முறையோ என்று கூக்குரலிட ஆரம்பித்து விட்டது. அருமையான ஆலோசனை வழங்கி எங்களை அவ்வப்போது சீர்படுத்திக்கொண்டிருக்கும் இது போன்ற விமர்சனங்கள் வரவேற்கின்றோம். 15 ஆண்டு காலமாக சாதித்து விட்டு சாதனைகளங்களை கடந்து ஒரு வாழ்வுரிமை போராட்டத்திற்கு தயாராகின்ற நேரத்தில், இது வரை சமூகக்களத்தையே கண்டிராத, எந்தவித ஆர்ப்பாட்டம், போராட்டம், பிரச்சனைகளை எதிர்கொள்ளல், அதற்கு தீர்வுகளை காணுதல், நெருக்கடிகளை எதிர்கொள்ளல், சிறைக்கொட்டடிகளை சகித்தல் இப்படி எதையுமே கண்டிராத ஒரு அரசியல் கட்சி, சாடுவதை மட்டும் சமுதாயம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா. இருதியாக, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி சமுதாயத்திற்காக தாங்கள் ஏதேனும் செய்யவிரும்பினால் தமுமுகவுடன் இணைந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த சமுதாயத்திற்கு நன்மை செய்ய விரும்புகிறீர்களோ அதே சமுதாயத்திற்க்காகத்தான் தமுமுகவும் இதுவரை பல தியாகங்களை செய்து விட்டு அடுத்த கட்டத்திற்காக தயாராகிறது. இந்தப் பயணம் தொடங்குவதற்குள் வந்து சேர்ந்து விடுங்கள். இல்லையேல் யாருக்காகவும் இந்த பயணம் தடைபடாது. இன்ஷா அல்லாஹ்.

  இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்¢ அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் – 2:207 )
  வஸ்ஸலாம்
  http://q8tmmk.blogspot.com

  பின்னூட்டம் by தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் — ஜூலை 23, 2008 @ 9:08 முப

 2. அஸ்ஸலாமு அலைக்கும்,

  சிலருக்கு இந்திய தேசிய மக்கள் கட்சி வந்தது பேரிடியாக விழுந்து விட்டது. ஆகையால் புலம்புகிறார்கள். அண்ணாத்தை உளருகிறார். கல் குடித்த குரங்கு
  போல் கதருகிறார். அந்தோ பரிதாபம். அய்யோ பாவம் படித்த அறிவும் இல்லை பட்ட அறிவும் இல்லை. உளரியே உயிரை விட்டு விடுவார் போல் இருக்கிறது. அல்லாதான் இவரைப்போன்றவர்களுக்கு வழி காட்ட வேண்டும். எந்த சமுதாயம் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளவில்லையோ அந்த சமுதாயத்தை அல்லாஹ் மாற்றுவதில்லை.

  பின்னூட்டம் by ஹீஸைன் கனி — ஜூலை 23, 2008 @ 9:28 முப

 3. நண்பர் ஹுஸைன்கனி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்..,
  தெளிவான விளக்கத்தை புலம்பல் என்றால் உங்கள் புரிதலில் ஏதோ கோளாறு. துஆ செய்கின்றேன்.

  பின்னூட்டம் by தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் — ஜூலை 26, 2008 @ 6:00 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: