தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

செப்ரெம்பர் 13, 2007

அஜ்மானில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி

Filed under: அஜ்மான், துபாய் — முஸ்லிம் @ 8:57 பிப

அஜ்மானில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி

அஜ்மான் இந்திய சங்கம், இப்னு சினா-ஆலியா மருத்துவ குழுமம் மற்றும் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகியவை இணைந்து 06.09.2007 வியாழன் மாலை அஜ்மான் இந்திய சங்க அரங்கில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் அப்துல் ஹாதி தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் மருத்துவ விழிப்புணர்வு நிக்ழ்ச்சியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார். டாக்டர் அப்துல் கபூர் வரவேற்றார். அஜ்மான் கல்ப் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் கீதா அசோக்ராஜ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

குழந்தை நலம் குறித்து டாக்டர் ஜேக்கப், இருதய நோய்கள் குறித்து டாக்டர் அபுபக்கர், மகப்பேறு குறித்து டாக்டர் நிர்மலா, பயண நேரத்தின் போது நாம் செய்துகொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து டாக்டர் ஷர்மா உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

உணர்வாய் உன்னை’ எனும் தன்னம்பிக்கை பயிற்சி மைய இயக்குநர் ஜலாலுதீன் மனித வாழ்வின் மகத்துவம் குறித்து நிழற்பட காட்சிகளுடனான உரை அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மு.ஆ. முஹம்மது இஸ்மாயில் நன்றி கூறினார். முஸ்லிம் முன்னேற்றக்கழக துணைத்தலைவர் ஹ¤சைன் பாஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தகவல் : முதுவை ஹிதாயத்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.