தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 24, 2008

உலக நாடுகளை கவரும் "அல் ஜஸீரா" தொலைக்காட்சி

Filed under: அபூ ஆஃப்ரின், அல் ஜஸீரா — முஸ்லிம் @ 8:25 பிப
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

உலக நாடுகளை கவரும் “அல் ஜஸீரா” தொலைக்காட்சி
நிறுவன சேவைகள்

ஆதிக்கசக்திகள் ஊடகத்துறைக்குள் புகுந்து எந்தெந்த அளவில் பொய்களை புகுத்த வேண்டுமோ அந்தெந்த அளவில் பொய் செய்திகளை புகுத்தி மக்களிடம் உண்மைகளை மறைத்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இஸ்லாத்திற்கு ஏதிராக ஆதிக்கச்சக்திகள் பரப்பி விடும் பல பொய் செய்திகள் உலக மக்களிடம் எடுபடவில்லை. பொய்ப்பிரச்சாரங்கள், பொய் செய்திகள், நேர் ஏதிரான கருத்துக்களை மட்டுமே பரப்பி வரும் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் பல ஆதிக்கச்சக்திகள் சொல்லும் செய்திகளை மட்டுமே ஒளி ஒலிப்பரப்பி வருகின்றன.

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பாக, டோஹா கத்தார் நாட்டில் துவங்கப்பட்ட “அல்ஜஸீரா” தொலைக்காட்சி நிறுவனமானது மற்ற தொலைக்காட்சி நிறுவனத்திற்கு முன்னோடியாக விளக்குகிறது என்றால் மிகையாகாது. ஆரம்பத்தில் அரேபிய மொழியில் மட்டுமே துவங்கப்பட்ட இதன் செய்தி நிகழ்ச்சிகளானது அதிகமான மக்களை கவர்ந்து விட்டது.

ஈராக் ஆக்கிரப்புக்குப்பின் அந்நாட்டில் ஆதிக்கக்சக்திகள் என்ன கொடுமைகளை நடத்தின, ஆப்கானிஸ்தான் நாட்டில் எத்தகைய இன்னல்களை அங்குள்ள பொது மக்கள் அனுபவித்தனர். பாலஸ்தீன நாட்டின் உண்மை நிலை என்ன போன்ற தகவல்களை உடனுக்குடன் படம் பிடித்து உண்மையான தகவல்களை மக்களிடம் தரும் பணியினை செம்மையாக செய்து வருகிறது. ஆகையால் உலக மக்களின் நன் மதிப்பினை அல்ஜஸீரா தொலைக்காட்சியானது பெற்றுக்கொண்டு வருகிறது. அதனை பிடிக்காத ஆதிக்கச்சக்திகள் இந்நிறுவனத்திற்கு ஏதிராக பல எதிர்ப்புகளை காட்டியது. அந்த எதிர்ப்புக்கிடையே அல்ஜஸீராவின் வளாச்சியானது, மேன்மேலும் பரவி தற்போது ஆங்கில மொழியில் தன்னுடைய ஒலி ஒளிப்பரப்பினை அமெரிக்கா நாட்டில் துவங்கி விட்டது. BBC – British Broad Casting நிறுவனம் மற்றும் CNN – Net work போன்ற ஆதிக்கச்சக்திகளின் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்திகளை விட அல் ஜஸீராவின் செய்திகளை மக்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள் என்றால் மிகையாகாது.

மே 14.5.2008 புதன் கிழமையன்று, அமெரிக்க நாட்டில் அல் ஜஸீரா தொலைக்காட்சியின் சேவையானது துவங்கபட்டது. அதனுடைய ஆங்கில சேவையின் பொது இயக்குனர் டோனி புர்மன் (Tony Burman – Managing Director of Al Jazeera’s English languages service) அவர்கள் குறிப்பிடுகையில் (இவர் இதற்கு முன்பாக கனடா தகவல் மையத்தின் இயக்குராக பணி புரிந்து ஜீலை 2007 வேலையிலிருந்து நீக்கினார்) அமெரிக்காவில் DISH Net work மூலமாக , இந்நிகழ்ச்சிகளை காணலாம். மற்றும் 160 மில்லியன் இல்லங்களை தேடி அல் ஜஸீரா நிகழ்ச்சியானது செல்ல வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டார். அமெரிக்காவின் பல பகுதிகளிலும் மற்றும் வடக்கு அமெரிக்கா நாடுகளிலும் இதனுடைய ஒலி ஒளிப்பரப்பானது துவங்க பட உள்ளது. அத்துடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரான்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து போர்ச்சுகல் மற்றும் ஹங்கெரி நாடுகளிலும் சேவைகள் துவங்கப்பட உள்ளது.

ஆசிய நாடுகளில் ஒன்றான வியாட்நாம் நாட்டில் VTC என்ற நிறுவனத்துடன் இணைந்து தன்னுடைய ஆங்கில சேவையினை அங்கு செய்து வருகிறது. சிஙகப்பூர் நாட்டில் SINGTEL என்ற நிறுவனத்துடன் இணைந்து அங்கு சேவையினை செய்து வருகிறது. மற்றும் ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் அல் ஜஸீரா ஆங்கில சேவையானது துவங்கப்பட்டு விட்டது. அல் ஜஸீராவின் அலை வரிசையின் சேவையானது, பிஜி, மாலத்தீவு, மால்டா, நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் சேவையானது உள்ளது.

இணையத்தளம் வாயிலாக மக்களுக்கு உண்மையான செய்திகளை You Tube Video Clip – Sharing site மூலமாக வழங்குகிறது. முதல் ஆண்டு துவங்கத்திலேயே, 21 மில்லியன் மக்கள் இந்த இணையத்தளம் மூலமாக செய்திகளை பார்த்து இருக்கிறார்கள் என்ற தகவலை அல் ஜஸீரா செய்திக்குறிப்பானது கூறுகிறது.

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

மே 8, 2008

துபை – இந்தியன் இஸ்லாஹி சென்டரின் மார்க்க பணிகள்

Filed under: அபூ ஆஃப்ரின், இந்தியன் இஸ்லாஹி செ — முஸ்லிம் @ 9:27 பிப

வாசித்து விட்டீர்களா? மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதியின் புதிய கட்டுரை!!

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

துபை – இந்தியன் இஸ்லாஹி சென்டர் – வோர் அல் அன்ஸ்
(Indian Islahi Centre – IIC – Hor Al Anz – Branch) கிளையின்
மார்க்க பணிகள்

கேரளாவைச் சார்ந்த இஸ்லாமிய சகோதரர்களால் ஐக்கிய அமீரகத்தில் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட, இந்தியன் இஸ்லாஹி சென்டர் தற்போது அபுதாபி – முஸ்தபா, அல்அய்ன், டேரா துபாய், பர்துபாய் – கராமா, அல்ஷாப், ஷார்ஜா, அஜ்மான், தையித், புஜைரா, ராசல்கைமா போன்ற பகுதிகளில் கிளைகளாக துவங்கப்பட்டு மார்க்க பணிகளை எந்தவிதமான மொழி இன பாகுபாடு இல்லாமல் செம்மையாக செய்து வருகிறது.

டேரா துபாய் வோர் அல் அன்ஸ் (Hor Al Anz) பகுதியில் செயல்படும் இந்தியன் இஸ்லாஹி சென்டரானது மிகவும் அமைதியான முறையில் வாரந்தோறும் மார்க்க பணிகளையும், மார்க்க சொற்பொழிவுகளையும், மற்றும் இன்னும் பல சேவைகளைள செய்து வருகிறது.

“விசுவாசங்கொண்டோரே..! அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் உங்களை வாழவைப்பதன்பால் (அல்லாஹ்வின் தூதராகிய) அவர் உங்களை அழைத்தால் பதில் அளியுங்கள், நிச்சயமாக அல்லாஹ், மனிதனுக்கும் அவனுடைய இதயத்திற்கும் மத்தியில் சூழ்ந்து(செயலாற்றிக் கொண்டு) இருக்கிறான். (ஆகவே, மனிதன் எதையும் அல்லாஹ்வின் அருளின்றி செய்யும் ஆற்றல் பெற மாட்டான்) என்பதையும், நிச்சயமாக அவனின் பாலே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்”

திருக்குர்ஆன் 8 : 24

 ஒன்று முதல் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறார்களுக்கு தினமும் இஸ்லாமிய கல்வியினை போதிக்கிறது.

 அல்லாஹ்வின் நாட்டப்படி.. எல்லா செவ்வாய்கிழமைகளிலும் காலை 9 மணிக்கு பெண்களுக்கான வகுப்புகளும், இரவு 9 மணிக்கு ஆண்களுக்கான வகுப்புகளும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

 வாரந்தோறும் புதன் கிழமைகளில் 9 மணிக்கு அல்ஷாப் காலணி பிளாக் 113, பிளாட் நம்பர் 8 னில் மார்க்க பயான் மலையாள மொழியில் நடைபெற்று வருகிறது.

 எல்லா வியாழக்கிழமைகளிலும் அல்ஷாப் “சலப் ஸாலிஹியின்” பள்ளி வாசலில் இஷா தொழுகைக்குப்பின் மலையாளத்தில் பயான் நடைபெற்று வருகிறது.

 எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் பஜ்ர் தொழுகைக்கு பின் இந்தியன் இஸ்லாஹி சென்டரில் குர்ஆன் ஹதீஸ் வகுப்புகள் நடைபெறும். இடம் : அல்ஷாப் காலனி பிளாக் எண் 117 பிளாட் நம்பர் : 2

 இந்தியன் இஸ்லாஹி சென்டர் அனைத்து கிளைகளிலும் மற்றும் அங்குள்ள நூலகத்திலும் உலகளாவிய மார்க்க அறிஞர்கள் பேசிய ஒலி ஒளிப்பேழைகள் கிடைக்கும்.

 ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜீம்மா குத்பா பயான் “சலப் ஸாலிஹின்” பள்ளியில் மலையாள மொழியில் நடைபெறும். (அமீரக அரசின் அனுமதியுடன் அரபி அல்லாத மற்றைய மொழியில் ஜீம்மா குத்பா ஷார்ஜா ரோலாவில் உள்ள தமி்ழ் பள்ளியில், தமிழில் நடைபெற்று வருகிறது.. அல்லாஹ்வின் உதவியினை கொண்டு..)

 மாதத்தின் முதல் சனிக்கிழமையில் உருது பயான் நிகழ்ச்சியானது சகோதரர். சர்ருல் பசல் அல் மதனி அவர்களால் நடத்தப்படும்.

 துபை – அல்கூஸில் செயல்படும் அல் மனார் திருக்குர்ஆன் மையமானது இந்தியன் இஸ்லாஹி சென்டரின் ஒரு பிரிவாகும்.

 துபை மாகாணங்களில் மார்க்க பணியினை செய்வதற்கு அரசாங்க பதிவு பெற்ற மையமாக இது செயல்படுகிறது.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் மிக சிறப்பாக எந்த விதமான தொய்வு இல்லாமல், இந்தியன் இஸ்லாஹி சென்டர் தொடர்ந்து செய்துக்கொண்டு வருவதாக இந்தியன் இஸ்லாஹி சென்டர் – தமிழ் பிரிவினை சார்ந்த சகோதரர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்களின் மார்க்க பணிகள் இன்னும் மென்மையடைய நாம் அனைவரும் ஏக இறைவனிடம் பிராத்தனை செய்வோமாக..

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

INDIAN ISLAHI CENTRE TAMIL WING – HORAL ANZ BRANCH – DUBAI. TEL : 04 2689653, 050 6537140, 055 8295313.

இணையத்தள முகவரி :
http://www.islahiabudhabi.org/ , http://www.quraanonline.com/ , http://www.jumakhutuba.com/ .

மின்னஞ்சல் முகவரி : islahind@eim.ae

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

மே 7, 2008

மேற்குலகத்தில் இஸ்லாமிய கல்வி மேன்பாடு

Filed under: அபூ ஆஃப்ரின், கல்வி — முஸ்லிம் @ 8:15 பிப
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
மேற்குலகத்தில் இஸ்லாமிய கல்வி மேன்பாடு
முத்துப்பேட்டை – அபூ ஆஃப்ரின்

இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த கல்வியினை மேற்குலக மக்கள் விரும்பி ஆர்வமாக படித்து வருகின்றார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து நல் உதவிகளையும் பல இஸ்லாமிய நாடுகள் மிக அமைதியான முறையில் செய்து வருகின்றன என்பதனை காணும் போது இஸ்லாம் புனித மார்க்கம் என்பது மிகவும் உறுதியாகி விட்டது.

இஸ்லாமானது கல்விக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கிறது, அவற்றின் நிறைகள், பண்புகள், இன்றைய காலக்கட்டத்திற்கு கல்வியானது எவ்வளவு அவசியம் என்பதினை நாம் ஒவ்வொரு தெரிந்து வைத்துக்கொள்வது கட்டாயமாக இருக்கிறது. நம்முடைய சந்திதிகள் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியினை கற்று வர வேண்டும் என்பதினை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இஸ்லாம் என்றால் என்ன, அதன் அடிப்படைக்கொள்ளைகள் என்ன, இஸ்லாத்திற்கும் மற்ற மதத்திற்கு எத்தகைய தொடர்பு உள்ளது என்பதினை பற்றி பலவறாக மேற்குலகினர் ஆராய துவங்கி விட்டனர். தற்போது மற்ற மதங்களை விட இஸ்லாமிய மார்க்கம் பிற மதத்தினரின் மனங்களை கொள்ளை கொண்டு விட்டது. வாடிகன் தலைமையகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை என்னவென்றால், சமீப காலங்களில் இஸ்லாம் மார்க்கம் மிகவும் வேகமாக பரவி விட்டது. வருங்காலத்தில் யூத மற்றும் கிறிஸ்துவ மதங்கள் மண்ணுக்குள் புதைந்து விடுமோ.. என்று நாங்கள் பயம் படுகிறோம் என்றும் சொன்னது என்பதினை நாம் ஊடகத்துறைகள் வாயிலாக அறிந்து இருப்போம்.

மேற்குலகில் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த கல்வியினை மற்றவர்கள் கற்க வேண்டும் என்பற்காக, சவூதி அரேபியாவை சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல தன்னால் ஆன தொண்டுகளை செய்து வருகின்றன. அல்ஹம்து லில்லாஹ்..

சவூதி அரேபியா இளவரசர் அல் வாலித் பின் தலால் (Prince Al waleed bin Talal) என்பவர் துவங்கிய The Kingdom Foundation – Riyadh based charity) என்ற தொண்டு நிறுவனமானது இஸ்லாமிய கல்வியானது மேற்குலகில் பரவ வேண்டி இது வரை 100 மில்லியன் பவுண்டுகளை நிதியுதவியாக கொடுத்துள்ளது. அத்துடன், இங்கிலாந்தில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கும் (Harvard University) மற்றும் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்திற்கும் (Georgetown University) அவர் தன்னுடைய சொந்த பணம் பலவற்றினை இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்காக கொடுத்து உதவி உள்ளார்.

குறிப்பாக, பாரிஸ் நகரில் உள்ள லுவ்ரே அருட்காட்சியத்திற்கு (Louvre Museum in Paris) இஸ்லாம் பற்றிய தகவல்களை திரட்ட வேண்டி 10 மில்லியன் டாலர்களை கொடுத்து உள்ளார். மற்றும் கேம்பரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு, தன் பொறுப்பு ஏற்று நடத்தும் The Chairman of the Kindgom Holding Company (KHC) என்ற நிறுவனம் சார்பாக 8 மில்லியன் டாலர்களை இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்காக கொடுத்து உள்ளார்.

பிரிட்டனில் உள்ள 50த்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இதுவரை, இஸ்லாமிய கல்வி வளர்ச்சி நிதியாக 200 மில்லியன் பவுண்டுகளை பெற்றுக்கொண்டு உள்ளன என்று துபாயிலிருந்து வெளிவரும் கலீஸ் டைம்ஸ் என்ற தினப்பத்திரிகையானது தனது ஏப்ரல் 9, 2008 – 18 வது பக்கத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தது. நன்றி : (Khaleej Times – April 9 – 2008 Page No – 18)

கேம்பரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு, பேரரசார் கொடுத்த நிதியுதவினை பற்றி பிரிட்டன் தூதர் திரு. வில்லியம் பாடே (William Patey – British Ambassador) அவர்கள் கருத்து கூறுகையில், இந்த நிதியுதவி எங்களுக்கு கிடைத்தது கண்டு மிக்க மகிழ்ச்சி, இந்த நிதியுதவினை பேரரசர் அவர்கள் நல்ல எண்ணத்துடன் கொடுத்து உள்ளார். நாங்கள் அதனை கொண்டு நாங்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்காகவும், இஸ்லாமிய பண்பாடுகளை பல்கலைக்கழக மாணாக்கர்களிடம் வளர்க்க வேண்டி பயன் உள்ள முறையில் செலவு செய்வோம். இதன் மூலமாக பிரிட்டனுக்கும் சவூதி நாட்டிற்கும் உள்ள நட்பு உறவானது மீண்டும் வலுப்பெறும் என்றும், பிரிட்டன் இளவரசரான சார்லஸ் (Prince Charles) இஸ்லாமிய கல்வியானது ஐரோப்பாவில் பரவ வேண்டி தனிப்பட்ட முறையில் (Particular Interest) ஆர்வம் கொண்டு ஊக்குவிக்கிறார் என்கிறார்.

பிரிட்டனில் கேம்பரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மட்டுமின்றி, அங்குள்ள 15 த்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த கல்வியினையும் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் கலாச்சாரம் பண்பாடுகளை பற்றி மாணாக்கர்களுக்கு போதிக்கின்றன.

சென்ற வருடம் இளவரசர் அல்வாலித் அவர்கள் (Prince Al Waleed) மலேஷியா நாட்டில் செயல்படும் பன்னாட்டு இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு (International Islamic University of Malaysia – IIUM)
ஒரு மில்லியன் டாலர்களை அளித்து உள்ளார். மலேஷியா நாட்டில் இந்த பல்கலைக்கழகமானது 1983 ஆம் ஆண்டு செயல்பட்டு செம்மையாக வளர்ந்து வருகிறது. பல உலக நாடுகளின் நிதியுதவியுடன் இந்த பல்கலைக்கழகம் செயல்படுகிறது. குறிப்பாக, பங்களாதேஷ், எகிப்து, லிபியா, மாலத்தீவு, பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகள் தன்னால் ஈயன்ற நிதிகளை கொடுத்து வருகின்றன.

இந்த பல்கலைக்கழகத்தில் பல துறைகளை சார்ந்த கல்விகள் போதிக்கபடுகின்றன. தகவல் தொழில் நுட்பத்துறை (Information Technology), பொறியியல் துறை (Engineering), வேதி அறிவியல் (Chemical Science), கட்டுமானத்துறை (Architecture), பொருளாராதம் (Economics) போன்றத்துறைகளை பற்றிய பாடங்கள் நடத்தப்படுகின்றன. இஸ்லாமிய முதல்வர்களை (Islamic Principles) கொண்டு இந்த பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் 90 நாடுகளை சார்ந்த 18,000 மாணாக்கர்கள் கல்வி பயில்கின்றனர்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்து விட்டால் அவனுடைய செயல் முடிந்து விடுகிறது, ஆனால் மூன்று விதமான செயல்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன.

1. நீடித்த தர்மங்கள் (அதாவது மக்கள் காலங்காலமாக பயன் அனுபவித்து வரும் வகையிலான தருமங்கள்)
2. பயன் அளிக்கும் கல்வி
3. அவனுக்காகப் பிராத்தனை புரிந்து வரும் நல்ல பிள்ளைகள்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) ஆதாரம் : முஸ்லிம், மிஷ்காத்

மே 6, 2008

திருக்குர்ஆன் பார்வையில் சமுதாயம்-அபூ ஆஃப்ரின்

Filed under: அபூ ஆஃப்ரின், குர்ஆன், சமுதாயம் — முஸ்லிம் @ 10:21 பிப
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

திருக்குர்ஆன் பார்வையில் சமுதாயம்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).
அனைத்துப் புகழும் அகிலத்தாரின் இரட்சனாகிய அல்லாஹ்வுக்கே உரியது.
(அவன்) அளவற்ற அருளாளன், மிகக்கிருபையுடையவன்.
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி. (எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையவர்களின் வழி(யில்) நடத்துவாயாக!
(அது உன்) கோபத்திற்குள்ளானவர்கள-(ன யூதர்களின் வழிய)ல்ல, அன்றியும், வழிகேடர்கள(hன கிருஸ்துவர்களின் வழியும)ல்ல. திருக்குர்ஆன் 1 : 1 முதல் 7 வரை

எப்படியெல்லாம் வாழலாம் என்று இஸ்லாம் சொல்லவில்லை, இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாட்டுக்குள் மனித சமுதாயத்தினை உருவாக்கி அவனை மனிதமாக மாற்றும் மார்க்கம் தான் இஸ்லாம். இது தெரியாமல் இன்னும் பல நாடுகள் கலாச்சாரம் என்று சொல்லிக்கொண்டு நாகரீகத்திற்கு நாங்கள் வழி கொடுக்கிறோம் என்பதனை காரணம் காட்டி மக்களை அநாகரீகத்திற்கு கொண்டு செல்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அன்று, இருண்ட காலத்தில் அரபு உலகம்.. மனிதர்களை மனிதர்கள் அடிமைப்படுத்திய காலங்கள்.. அறியாமை தழைத்தோங்கிய காலங்கள்.. பெண்களுக்கு எந்த உரிமையையும் தராத காலங்கள்.. உலகம் என்னவென்றும், மனித உரிமைகள் என்னவென்றும் தெரியாமல் விட்டில் பூச்சிகளாய் இருந்த மக்கள்.. ஆம்.. அந்த நேரத்தில் மக்களை வெளித்திற்கு கொண்டு வர வேண்டும் அவர்களை நேர் வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கிற்காக பல சஹாபாக்கள், தாபீன்கள், தாபதாபீன்கள், மற்றும் சஹாபா பெண்மணிகள் முயற்சியினை மேற்கொண்டனர். அல்லாஹீதஆலா இப்பபூமிக்கு ஆதம்(நபி), இப்ராஹீம்(நபி), ஈஸா(நபி), தாவூத்(நபி), இல்யாஸ்(நபி), இஸ்மாயீல்(நபி), அல்யஸஉவ்(நபி), ஸீலைமான் (நபி), அய்யூப்(நபி), இஸ்ஹாக்(நபி), யஃகூப்(நபி), நூஹ்(நபி), யூஸீப்(நபி), மூஸா(நபி), ஹாரூன்(நபி), ஜக்கரியா(நபி), யஹ்யா(நபி), யூனுஸ்(நபி), லூத்(நபி), ஹீத்(நபி), ஸாலிஹ்(நபி), ஹுஐப்(நபி) போன்ற நபிமார்களை அனுப்பி அவரவர்களின் சமுதாயத்தின் மக்களை நேர் வழியினைப்படுத்துவதற்காக வேண்டி ஒவ்வொரு நபிமார்களும் ஒவ்வொரு வேதங்கள் ஒவ்வொரு காலக்கட்டங்களில் அருளப்பட்டு இருந்தது.

இவ்வுலகத்திற்கு இறுதி தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி 570 ம் அவர்கள் மக்கா நகரில் பிறந்தார்கள். அவர்கள் பிறந்த சமயத்திலும் மக்கள் அறியாமை என்ற இருளில் மூழ்கி இருந்தார்கள். அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து மலைப்பிரதேசங்களுக்கு ஆடு மேய்க்க செல்லும் போது, நபிகளாரின் வயது உடைய பல சிறார்கள் மதுக்கோப்பையும் கையுமாக இருப்பார்கள். மற்றும் வீணான காரியங்களில் வீண் விளையாட்டியிலும் ஈடுப்பட்டுக்கொண்டு காலத்தினையும் நேரத்தினையும் கழித்தார்கள். அவர்கள் சிறு பிராயத்தில் இருக்கும் போதே மக்களை நேர் வழிப்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டி, தனிமையில் பல முறை சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள்.

610 ம் வருடத்தில் ஹிரா குகையில் நபி அவர்களுக்கு வஹீ மூலமாக அருளப்பட்ட வேதமாக உள்ள திருமறை திருக்குர்ஆனானது உலக மக்கள் அனைவருக்கும் இறுதியான வேதமாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியதுமாகவும், மனித சமுதாயத்தினை நல்வழிப்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

(நபியே முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை – இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உண்மைப்படுத்தக்கூடியதாக (இது) இருக்க, உம்மீது அ(த்தகைய) வன் தான் இறக்கி வைத்தான், தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான். (திருக்குர்ஆன் 3:3 )

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருமறையானது, இஸ்லாம் மார்க்கத்திற்காக மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள அனைத்து மதத்திற்கும் அனைத்து சமுதாயத்திற்கும் அனைத்து சமூகத்திற்கும் ஒரு வழி காட்டியாக இருக்கிறது. அரசியல்துறையாக இருக்கட்டும், பொதுத்துறையாக இருக்கட்டும், பொருளாதாரத்துறையாக இருக்கட்டும், ஆட்சி அமைப்புகளாக இருக்கட்டும் மற்றும் இது போன்ற உள்ள மற்ற துறைகளாக இருக்கட்டும் அனைத்திற்கும் ஒரு வழிகாட்டியாக திண்ணமாக திருமறை இருக்கிறது. எக்காலத்திற்கும் பொறுத்தக்கூடிய ஒரு மறை உண்டு என்றால் அது திருமறை திருக்குர்ஆன் தான்.

மேலும் பயபக்தியுடைவர்களிடம், உங்கள் இரட்சகன் எதை இறக்கி வைத்தான் என்று கேட்கப்பட்டது, (அப்போது) அவர்கள், நன்மையையே (இறக்கி வைத்தான்) என்று கூறுவார்கள். இவ்வுலகில் அழகானவற்றைச் செய்தார்களே அத்தகையோருக்கு (இவ்வுலகிலும் அழகான) நன்மையுண்டு, (அவர்களுடைய) மறுமையின் வீடும் மிக்க மேலானதாக இருக்கும், இன்னும், பயபக்தியுடைவர்களின் வீடு திட்டமாக நல்லதாகி விட்டது. திருக்குர்ஆன் 16:30

நாம் உண்ணும் உணவு எப்படி இருக்க வேண்டும், உணவுப்பொருள் ஹாலாலனதா, அல்லது ஹராமானதா என்று சிந்தித்து உண்ணக்கூடியவர்கள் தாம் இஸ்லாமியர்கள். அதற்காக தான் ஒரு சில உணவுப்பொருட்களை இஸ்லாமிய மார்க்கம் ஹாராம் என்று தடையும் செய்து உள்ளது. ஆனால் மற்ற சமுதாயத்தினரிடம் அத்தகைய ஹாலால் ஹாராம் என்ற பாகுபாடு இல்லை. எதையும் சாப்பிடக்கூடியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஹாராமான உணவுப்பொருட்கள் தம்முடைய உடலுக்கு கேட்டினை உருவாக்கும் என்று தெரிந்தும் அவர்கள் அதனை சாப்பிடுகிறார்கள். திருக்குர்ஆனானது, தானாக செத்த பிராணிகளையும், பன்றியும் இறைச்சியையும் சாப்பிடக்கூடாது என்று சொல்கிறது.

உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள் திண்ணமாக இறைவன் வீண் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை என்று திருமறை சொல்கிறது. ஆனால் தற்போது நாம் பார்க்கும் இவ்வுலகில் எத்தனையோ உணவுப்பொருட்கள் வீணாக குப்பைகளுக்கு போய் விடுகிறது. பல ஏழை நாடுகளில் ஒரு வேளை சாப்பாடு கிடைக்காத எத்தனையோ மக்கள் இருக்கிறார்கள். திருமறையில் ஏழைகளுக்கு உணவளியுங்கள், ஜகாத் கொடுங்கள், ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் என்று பல இடங்களில் இஸ்லாமியர்களுக்காக மட்டுமல்ல அதனை படிக்கக்கூடிய அனைத்து தரப்பினருக்கும் சொல்கிறது.

உடையில் எடுத்துக்கொண்டாலும் அதிலும் ஒரு கட்டுப்பாடு.. பெண்கள் தன்னுடைய அழகினை மற்ற ஆண்களுக்கு காட்டக்கூடாது, அவர்களின் அலங்காரங்கள் அவர்களின் கணவனுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் சொல்கிறது. ஆகவே நல்லொழுக்கமுள்ள பெண்கள், அல்லாஹ்வுக்குப் பயந்து, தங்கள் கணவனுக்கு பணிந்து நடப்பவர்கள். கற்பு மற்றும் தங்கள் கணவனது உடைமைகள் ஆகிய மறைவானவற்றை, அல்லாஹ் பாதுகாக்கின்ற காரணத்தால் பேணிக்காத்துக் கொள்பவர்கள். ஆனால் இப்போது உள்ள சில நாகரீக நங்கைகள், உடுத்தும் உடைகள் எப்படி இருக்கிறது என்று சொல்லி தெரிவதில்லை.?..! இஸ்லாம் கூறியப்படி ஆடையினை நாம் ஒவ்வொருவரும் அணிந்து வந்தால் விபச்சாரங்கள் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. விபச்சாரம் என்பது ஒழுக்க ரீதியில் மிகவும் அபாயகரமான நோயாகும், விபச்சாரம் நம்மை வழி கேடுக்கும் என்பதால் தான் அதனுடைய எல்லாவிதமான வாயில்களையும் இஸ்லாம் தடை செய்கிறது. பால்வினை நோயானது 75 சதவீதம் தகாத உறவு மூலமாக தான் பரவுகிறது. மானக்கேடான செயல்களின் அருகே கூட செல்லாதீர்கள். அவை வெளிப்படையானவையாயினும் மறைவானவையாயினும் சரியே என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.

நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும். அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள். இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக்கிருபையுடைவனாக இருக்கின்றான். திருக்குர்ஆன் 33:59

காலையில் ஒரு குழந்தை படுக்கையை விட்டு எழுந்த உடன் என்ன சொல்லும்.. குட்மார்னிங் என்று சொல்லும்..அந்த குழந்தை ஒரு கிறிஸ்வ சமுதாய குழந்தையாக இருந்தால்.. நமஸ்காரம் என்று சொல்லும் அந்த குழந்தை ஒரு இந்து சமுதாய குழந்தையாக இருந்தால்.. குட்மார்னிங் சொல்வதாலும் மற்றும் நமஸ்காரம் சொல்வதாலும், சொல்லக்கூடிய குழந்தைக்கும் சரியே அதனை கேட்கக்கூடிய பெற்றோர்களுக்கும் சரியே கடுகு அளவு நன்மையோ ஏற்படுவதில்லை. ஆனால் அந்த குழந்தை ஒரு இஸ்லாமிய சமுதாய குழந்தையாக இருந்தால் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) என்று அழகாக சொல்லும்.. அதனை கேட்கும் பெற்றோர்களும் அந்தக்குழந்தையின் ஸலாத்திற்கு பதில் ஸலாம் சொல்வார்கள். அதன் மூலமாக அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் இருவருக்கும் உண்டாகும். அத்துடன் அந்த இல்லத்திலும் ஒரு பரக்கத்தும் ரஹ்மத்தும் கிடைக்கும்.

சின்னஞ் சிறு வயதானது, பெற்றோர்கள் எப்படி நடக்கிறார்களோ அதனை கடைப்பிடிக்கும் வயதாகும். ஆகையால் சிறார்களை இளம் பிராயத்திலிருந்தே இறைநெறியின் பக்கம் அழைத்து செல்லக்கூடிய பெற்றோர்களாய் நாம் இருக்க வேண்டும். சரியான கல்வியினை கொடுக்க வில்லை யென்றால் அவர்கள் தற்போது உள்ள நாகரீக உலகத்திற்கு அடிமைப்பட்டு போய் விடுவார்கள். நாம் அவர்களுக்கு உலகக் கல்வியினை கொடுத்தாலும் சரியே, மார்க்க கல்வியினை கொடுத்தாலும் சரியே சரியான கல்வியாகவும் கொடுக்க வேண்டும். பிள்ளைகளிடம் அன்பு செலுத்துங்கள். இருந்தாலும் அன்பினை அதிகமாக காட்டக்கூடாது. அன்பு எல்லை மீறி போகாமல் பெற்றோர்களாகிய நாம் அனைவரும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் பிள்ளைகள் ஏழு வயதுடையவர்களாய் இருக்கும் போது தொழுகையைக் கடைப்பிடிக்குமாறு அவர்களை ஏவுங்கள். பத்து வயதுடையவர்களாய் இருக்கும் போது தொழவில்லையெனில் அவர்களை அடியுங்கள். மேலும் அவர்களை தனித்தனி விரிப்புகளில் தூங்க வையுங்கள்.

அறிவிப்பாளர்: அம்ர் இப்னு ஷு ஐப் (ரலி)
ஆதாரம் : அபூதாவூத். மிஷ்காத்.

இப்போது உள்ள காலங்கள் நம்மை நல் வழியில் கொண்டு செல்வது என்பது கொஞ்சம் எளிதான காரியமல்ல. வெட்கக்கேடு, மானக்கேடு, தீயச்செயல், மற்றும் அதனின் தூண்டுதல் போன்றவற்றிற்கு அடிமைப்படாமல் நாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். நம்மை நாம் சீர்ப்படுத்திக்கொள்ள நம்மால் தான் முடியும். திருக்குர்ஆன் ஆராக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய கூறிய சமூகத்தில் நாமும் ஒரு அங்கமாக இருந்து செயல்பட்டால் நாம் அனைவரும் ஓரணியில் இருக்கலாம். ஒற்றுமையாக செயல் படலாம். அந்த ஒற்றுமையினை வல்ல அல்லாஹ் நமக்கு தந்து அருள் புரிய வேண்டும்.. ஆமீன்.. யாரபில்லாலமீன்..

முத்துப்பேட்டை. அபூ ஆஃப்ரின் – ஃபுஜைரா – அமீரகம்

மே 3, 2008

ஃபுஜைராவில் இஸ்லாமிய மார்க்க பயான்

Filed under: அபூ ஆஃப்ரின், மார்க்க பயான் — முஸ்லிம் @ 3:46 முப
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

ஃபுஜைராவில் இஸ்லாமிய எழுச்சி மையம்
நடத்திய மாதாந்திர மார்க்க பயான்

ஐக்கிய அமீரகத்தின் வட மாகாணங்களில் ஒன்றான ஃபுஜைராவில், மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமையன்று இஸ்லாமிய எழுச்சி மையம் (Islamic Awakening Centre (IAC – Fujairah) நடத்தும் மார்க்க பயான் நிகழ்ச்சியானது, 2.5.08 வெள்ளியன்று மஃரிப் முதல் இஷா வரை ஃபுஜைரா ஆயிஷா பள்ளி அருகில் உள்ள இஸ்லாஹி சென்டரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில், சகோதரர். திருச்சி. முஹம்மது அவர்கள் கிராஅத் ஓதினார், சிறப்புரையினை சகோதரர். வடக்கு மாங்குடி. முஹம்மது அஸ்வத் அவர்கள் “அநீதமிழைப்பவர்கள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அவதூறு, புறம் பேசுதல், குறை கூறுதல் போன்றவற்றினை நம் சமுதாய மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நல்லெண்ணங்களை மனதில் நிலை நிறுத்த வேண்டும் ஏனெனில் எண்ணங்களில் சில பாவமாகும், இணைவைப்போர் காபிர், நிராகரிப்போர் போன்றவர்களுக்கு இஸ்லாம் ஒரு சுமையாகத்தான் இருக்கும். அல்லாஹ்வின் சந்திப்பில் நம்பிக்கைக்கொண்டு நாம் எல்லோரும் நல்லவற்றை எண்ணுவோம் என்பது போன்ற பல கருத்துக்களை சகோதரர்களிடம் எடுத்துரைத்தார்.

மாதந்தோறும் நடைபெறும் இந்த அமர்வில், குர்ஆன் ஆயத்துகளிலிருந்து வினாக்கள் தரப்படும். சரியான விடையினை எழுதும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. சென்ற மாதத்திற்காக பரிசினை இலங்கையினை சார்ந்த சகோதரர். மக்பூல் அவர்களுக்கும், மற்றும் சகோதரி ஒருவருக்கும் வழங்கப்பட்டது. அதுபோல், இந்த மாதம் நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சூரா அல்மாயிதா 1 முதல் 50 வரை நிகழச்சியில் கேள்விகள் கலந்துக்கொண்டவர்களிடம் கொடுக்கப்பட்டது. சரியான விடையினை எழுதும் நபருக்கு அடுத்த மாத அமர்வில் பரிசுகள் வழங்கப்படும்.

பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டு இருந்ததால் ஃபுஜைராவில் உள்ள தமிழ் பேசக்கூடிய சகோதரிகள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். நிகழச்சியினை ஃபுஜைரா இஸ்லாமிய எழுச்சி மையத்தினை சார்ந்த சகோதரர்கள் மிகச்சிறப்பாக செய்து இருந்தனர்.

தகவல் : முத்துப்பேட்டை – அபூ ஆஃப்ரின்

ஏப்ரல் 29, 2008

மக்கா – மதீனா வரலாற்று சிறப்பு அறிய புதிய இணையத்தளம் அறிமுகம்

Filed under: அபூ ஆஃப்ரின், மக்கா, மதினா — முஸ்லிம் @ 8:56 பிப
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

மக்கா – மதீனா புனித இரு நகரங்களின் வரலாற்று சிறப்பு அறிய புதிய இணையத்தளம் அறிமுகம்
– சவூதி அரசாங்கம்

உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் மையமாக இருக்கும் புனித மக்கா நகரத்தினை பற்றியும் மற்றும் மதீனா நகரத்தினை பற்றியும் வரலாற்று சிறப்புகளையும், மற்றும் இரு புனித நகரங்களில் உள்ள கலை பண்பாடு, எல்லாவற்றிற்கும் முன்னோடியாக இருக்கும் அழகான கலாச்சாரத்தினை பற்றியும் உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் அறிந்துக்கொள்ளும் பொருட்டு சவூதி அரசாங்கம் புதியதொரு இணையத்தளம் ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. மாஷா அல்லாஹ் .. அதன் முகவரி

WWW.GPH.GOV.SA

இந்த இணையத்தளமானது புனித இரு நகரங்களை பற்றிய முழு விவரங்களையும், அங்கு நடந்த வரலாற்று நிகழ்வுகளையும், ஐங்கால நேரத்தில் அங்கு நடைபெறும் தொழுகை பற்றியும், தொழுகை நேரத்தினை பற்றியும், அங்கு மக்கள் எவ்வாறு தொழுகையினை நிறைவேற்றி வருகிறார்கள். மற்றும் ஏழைகளின் பெரு நாளாகிய வெள்ளிக்கிழமைகளில் அங்கு நடைபெறும் தொழுகையினை பற்றியும், தொழுகைக்கு முன் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகளையும் உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் நேரில் காணும் போது எப்படி உணர்வர்களோ அத்தகைய உணர்வுகளை இணையத்தில் காணும் போது உணரக்கூடிய அளவில் இருக்கும் என்று மக்கா – மதீனா தலைமையகம் அறிவித்து உள்ளது. குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் அமைந்த 45,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலி ஒளிப்பேழைகள் இந்த இணையத்தில் உள்ளன என்பதும் இதன் சிறப்பாகும்.

மக்கா மதீனா தலைமையகமானது தனது இரண்டாவது கட்ட மார்க்க பணியாக, மின்னனுவாக்க கல்வியினையும் (E. Education service) துவங்க உள்ளது. இதன் மூலமாக பல அரிய தகவல்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த இணைய சேவையானது தற்போது ஆங்கிலத்தில் உள்ளது பிற்பாடு மற்ற நாட்டு மொழிகளிலும் வெளியிடு செய்வதற்கான ஆயத்தப்பணிகள் நடந்துக்கொண்டு இருப்பதாக கூறுகிறது.

இந்த இணையத்தளத்தில், எவ்வாறு ஹஜ் மற்றும் உம்ரா செய்வது பற்றி அரேபிய மொழியிலும் உருது மொழியிலும் ஆங்கில மொழியிலும் உள்ளது. இந்த இணையத்தில், அரேபிய, உருது, இந்தோனிஷியா மொழியில் உள்ள குர்ஆன் வானொலி சேவையும் உள்ளது. தர்ஜீமா குர்ஆனும் இந்த இணையத்தில் உள்ளது உலக மக்கள் அவர்களுடைய தாய் மொழியில் அதனை கேட்கலாம். மற்றும் மின்னனுவாக்க நூலகம் (E. Library) என்ற பகுதியில் மக்கா மற்றும் மதீனாவின் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

நாங்கள் துவங்கிய இந்த இணையத்தியத்தின் சேவை எப்படி உள்ளது என்பதினை பற்றி மக்களிடம் கருத்துக்களை அறிய உள்ளோம் என்றும், இந்த இணையத்தின் மூலமாக இஸ்லாம் மற்ற மக்களிடம் இன்னும் பலவாறாக பரவ வாய்ப்புள்ளது என்று முதன்மையாளர் ஷாலே அல் ஹீசேன் (Saleh Al Hosain – Head of the Presidency) அவர்கள் கூறினார்கள். மேலும் அவர் குறிப்பிடுகையில், இந்த இணையமானது ஹஜ் மற்றும் உம்ரா பற்றி அறியாத மற்ற மதத்தினருக்கு அதனை பற்றி தெரிந்துக்கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமையும். அத்துடன் ஹஜ் மற்றும் உம்ரா எவ்வாறு செய்வது பற்றி இஸ்லாமியர்கள் இதன் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தில் கஃபாவின் மீது போர்த்தப்பட்டுள்ள கிஸ்வா என்ற துணியினை பற்றிய வரலாற்று சம்பவங்களும், இந்த துணியினை தயாரிக்கும் மக்காவில் உள்ள கிஸ்வா தொழிற்சாலையினை பற்றிய தகவல்களும் அடங்கி உள்ளன.

சவூதி அரேபியாவில் உள்ள சுற்றுலா தலைமையாகமானது, (The Supreme Commission for Tourism) ஐந்து வருட காலத்திற்குள் 6 புதிய அருட்காட்சியகத்தினை (Museum) சவூதி அரேபியாவின் பல மாகாணாங்களில் துவங்குவதற்கான பணிகளை செய்ய உள்ளது. மற்றும் 12 க்கும் மேற்பட்ட பழைய அருட்காட்சியகத்தினை புதுப்பிக்கவும் உள்ளது என்று சுற்றுலா தலைமையகத்தின் பொது செயலாளரான அரசர் சுல்தான் பின் சல்மான் (Prince Sultan bin Salman) அவர்கள் கூறினார்கள். ஒரு வருடத்திற்கு சவூதி அரேபியாவிற்கு புனித யாத்திரைக்கு செல்பவர்களின் எண்ணிக்கையானது 10 மில்லியானகும். இவர்கள் அனைவரும் புனித பூமியினை பற்றிய பல சிறப்புகளை பற்றி அறிந்து பயன் பெறும் வகையில் இந்த அருட்காட்சியகம் செயல்படும். புனித யாத்திரை வருவோருக்கு தேவையான அனைத்து செய்திகளும் ஒருங்கே அமையப் பெற்றதாக இருக்கும் இந்த அருட்காட்சியகம். அத்துடன் சவூதி அரேபியாவில் பல இடங்களில் சுற்றுலா கிராமங்களை உருவாக்கும் திட்டத்தினையும் அரசாங்கம் செய்ய உள்ளது.

நன்றி : Khaleej Times – Page – 16 – Dated April 24 and 27. 2008

தமிழாக்கம் : முத்துப்பேட்டை – அபூ ஆஃப்ரின்

ஏப்ரல் 26, 2008

அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் தொடுக்கும் சவால்கள்..

Filed under: அபூ ஆஃப்ரின், அமெரிக்கா, ஈரான், சவால் — முஸ்லிம் @ 9:55 பிப
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் தொடுக்கும் சவால்கள்..

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல்களுக்கு, பின் பல நாடுகளில் தன்னுடைய ஆதிக்கசக்திகளின் கோர தாண்டவத்தினை அமெரிக்கா செய்துக்கொண்டு இருக்கிறது. இதனால் பல பாதிப்புசேதங்களை பல நாடுகள் அடைந்துக்கொண்டு வருகின்றன. அத்துடன் உலக நாடுகளில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஏறிக்கொண்டு இருக்கிறது. இதற்கு எல்லாவற்றிகும் காரண காரிய இருப்பது அமெரிக்கா தான் என்பது உலகவியலாளர்களின் கருத்தாகும்.

மேற்கு ஆப்ரிக்காவில் மட்டுமின்றி பசி பட்டினி அதனால் ஏற்படும் துயர சம்பங்கள் அதிகம் பல நாடுகளில். குறிப்பாக பல தேசங்களில் அரிசி தட்டுப்பாடுக்கள் அதிகரித்து வி்ட்டன. வளைகுடா நாட்டிற்கு, இந்தியாவிலிந்து ஏற்றுமதியாகும் அரிசியினை இந்தியா அரசாங்கம் நிறுத்தி விட்டது. இதனால் வளைகுடா பகுதியில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. விலைவாசிகளும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஏறிவி்ட்டது. அத்தியாவசிய விலைகள் ஒரு பக்கம் ஏறிக்கொண்டே வருகிறது. மற்றொரு பக்கம் உலக சந்தைகளில் எரிபொருட்களின் விலைகளும் ஏறிவிட்டது.

இரட்டை கோபுர தாக்குதலில் 3,000 த்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டார்கள் என்று அமெரிக்கா சொல்லி இருந்தது. ஆனால் அந்த தாக்குதல்களில் இறந்து போனவர்கள் எந்த நாட்டை சார்ந்தவர்கள், எந்த இனத்தை சார்ந்தவர்கள், எந்த மொழியினை சார்ந்தவர்கள், இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை எத்தனை என்பது பற்றி அமெரிக்காவினால் வெளியிட முடியுமா..? சென்ற 23.9.2007 அன்று, நான் அமெரிக்கா வந்த போது தாக்குதலுக்குள்ளான இரட்டை கோபுரம் இருந்த பகுதியினை பார்வையிட ஏன்..? அமெரிக்கா அரசாங்கம் எனக்கு அனுமதி தரவில்லை. இருந்தாலும். அமெரிக்கா அதிபருக்கும் ஒரு அழைப்பினை ஈரான் அதிபர் விடுத்து இருந்தார். ஈரானின் உள்ள ஃபிர்தௌஸியா பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ள விழா ஒன்றில் உரை நிகழ்த்த தாங்கள் ஈரான் நாட்டிற்கு வர வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றினை முன்பு விடுத்து இருந்தார். ஆனால் இது நாள் அமெரிக்க அதிபர் ஈரான் நாட்டிற்கு செல்லவில்லை.

உலக நாடுகளில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும் அமெரிக்கா மட்டும் தான் காரணம் என்று என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும். தற்போது ஈரான் தன்னிறைவு பெற்ற நாடாக திகழ்கிறது. பொருளாதாரத்துறை, அரசியல் துறை, வாணிபத்துறை, இராணுவத்துறை என்று பல துறைகளிலும் நாங்கள் முன்னெறிக்கொண்டு வருகிறோம். ஆதிக்கசக்த்திகளை எதிர்த்து பேராடக்கூடிய மனப்பக்குவதில் ஈரான் நாடானது தயாராகி விட்டது என்று ஈரான் அதிபர் தைரியமாக கூறியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்..

ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் ஏற்பட்ட தோல்வியால் நாடு திரும்பிய 300,000 அமெரிக்க போர் வீரர்கள், அவர்களின் குடும்பத்தினரோடு நிம்மதியாக வாழ முடியவில்லை. ஆம்.. அவர்கள் மனக்கஷ்டம், மன அழுத்தம், மன வேதனை, மன பாரம் போன்ற நோய்களால் அவதிப்படுகிறார்கள். நாடு திரும்பிய போர் வீரர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, அவர்களின் மூளையானது பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் 320,000 போர் வீரர்களுக்கு Traumatic Brain என்ற மூளை நோயானது பரவி விட்டது. 18.5 சதவீத போர் வீரர்களுக்கு மன அழுத்தம் (Stress Disorder) போன்ற நோய்கள் இருப்பதாக கண்டு பிடிக்கபட்டுள்ளது. ஐந்தில் ஒரு போர் வீரர் என்ற விகிதாரம் படி நோய் வாய்ப்பட்டுள்ளனர் என்று அந்த ஆய்வானது கூறுகிறது. இதற்கு காரணம் யார்..?

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காஸா பகுதி, பாலஸ்தீனம், ஈராக் போன்ற நாடுகளில் ஒன்றும் தெரியாத அப்பாவி பொது மக்கள், சிறு குழந்தைகள் இறப்பதற்கு யார் காரணம்.. கணவனை இழந்த மனைவிமார்கள் எத்தனை பேர்..? மனைவியினை இழந்த கணவன் எத்தனை பேர்கள், குழந்தையினை இழந்த தாய்மார்கள். தாயினை இழந்த குழந்தைகள் எத்தனை பேர்கள்..? இது போல் சொல்லிக்கொண்டே போகலாம்.. இவைகள் அனைத்திற்கும் யார் காரணம்..?

போர் மூலம் ஒரு பக்கம் ஆபத்துக்கள் தினமும் வந்த கொண்டு இருக்கின்றன. ஆனால் இன்னொரு பக்கம் ஊடகத்துறைகளும் ஆதிக்கசக்திகளுக்கு அடிமையாகி விட்டது. டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளின் ஊடகத்துறைகளை தூண்டி விட்டு அதன் மூலம் வேடிக்கை பார்க்கிறது அமெரிக்கா. இஸ்லாம் ஒரு தீவிரவாதம் என்று மக்களிடம் சொல்லும் பொய் பிரச்சாரங்கள் எடுபட வில்லை. இஸ்லாம் ஒரு புனித மார்க்கம்.. ஒரு எளிய மார்க்கம் ..இனிய மார்க்கம் என்பது மட்டும் தான் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரிகிறது. அனைத்து மக்களின் நெஞ்சங்களிலும் இஸ்லாம் ஆழமாக பதிந்து விட்டது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் மக்களை சிந்திக்கக்கூடிய அளவிற்கு மாற்றி விட்டது. இஸ்லாம் அதி வேகமாக மக்களிடம் பரவுவதற்கு காரணமாக அமைந்து விட்டது அமெரிக்கா.

ஒரு மனிதன் இறைவனுக்கு மாறு செய்து கொண்டிருந்தம் கூட வெளியரங்கத்தில் செழிப்பும் அமைதியும் அவனை ஆரத்தழுவிக் கொள்கின்றன. ஆனால் உண்மையில் இது அல்லாஹ்விடமிருந்து அவனுக்கு அளிக்கப்படும் அவகாசம் ஆகும். அதன் பிறகு இறைத்தண்டனையின் கசையடிகள் விழக்கூடும். இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்வதில் கிடைக்கும் மகிழ்வும் அமைதியும் தான் உண்மையானவை ஆகும்..

தகவல் தொகுப்பு : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா செய்திகள்

Filed under: அபூ ஆஃப்ரின், இஜ்திமா, துபை — முஸ்லிம் @ 9:52 பிப
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா..

துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா நிகழ்ச்சியானது, 25.4.2008 வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா வரை டேரா துபையில் உள்ள இந்தியன் இஸ்லாஹி சென்டரில் இனிதாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக சகோதரர். அமீர் சுல்தான் அவர்கள் கிராஆத் ஓதினார். அதனை தொடர்ந்து சகோதரர். ஷிப்காத்துல்லாஹ் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் முதல் அமர்வின், சிறப்பு உரையினை சகோதரர். அப்துல் ஸலாம் மதனி (இயக்குனர் – அல் மனார் திருக்குர்ஆன் பயிற்சி மையம் – அல் கூஸ் – துபை) அவர்கள் நிகழ்த்தினார். அவரின் சிறப்பு உரையினை தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மெளலவி. நூருல் அமீன் அவர்கள் நிகழ்த்தினார்.

ம.ரிப் தொழுகை முடிந்தவுடன் இரண்டாவது அமர்வானது துவங்கியது. துபை இந்தியன் இஸ்லாஹி சென்டரில் பணியாற்றும் கேரளாவைச்சார்ந்த மெளலவி. ஷிஹாப் எடக்கர அவர்கள் உரை நிகழ்த்தும் போது, சத்திய மார்க்கத்தினை எடுத்துரைக்கும் பணியினை துபாயில் இருக்கும் அனைத்து மாநில இஸ்லாமிய சகோதரர்களும் தத்தம் பணியினை திறம் பட செய்ய வேண்டும். இந்த பணியில் ஏற்படும் சிரமங்களையும், கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு நாம் மேற்கொண்ட பணியில் தொய்வு இல்லாமல் செய்தால் மறுமையில் அல்லாஹ்விடத்தில் நமக்கு கூலி கிடைக்கும் என்பது போன்ற பல கருத்துக்களை, தமிழ் பேசக்கூடிய சகோதரர் புரிந்துக்கொள்ளும் விதத்தில் மலையாளம் கலந்த தமிழில் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே சென்ற அனைத்து சகோதரர்களின் உள்ளங்களிலும் ஒரு மாற்றத்தினை அல்லாஹ் நாடினால் ஏற்படுத்தக்கூடிய அளவில் இருந்தது அவருடைய உரைகள் கற்கள். அதனை தொடர்ந்து சகோதரர். நாஸர் அலி கான் அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஏகத்துவ கொள்கையில் பற்றுள்ள அனைத்து சகோதர உள்ளங்களும் எந்த விதமான கருத்து பரிமாற்றங்களும் இல்லாமல் கலந்துக்கொண்டதினை காணும் போது, இஸ்லாமிய சகோதரர்களிடையே ஒற்றுமையானது ஏற்படும் என்பது திண்ணம். அல்லாஹ்வின் திருப்பொருத்ததை நாடி நடை பெற்ற இந்த நிகழ்ச்சியினை இந்தியன் இஸ்லாஹி சென்டர் – தமிழ் பிரிவு – துபை மிகச் சிறப்பாக செய்து இருந்தது. தமி்ழ் இஸ்லாமிய நி்கழ்ச்சியினை கேட்பதற்கு கேரளாவை சார்ந்த பல சகோதரர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.