தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 15, 2007

மேலப்பாளையம் கொலைகள் – அல்-உம்மா அறிக்கை

Filed under: அல்-உம்மா, மேலப்பாளையம் கொலை — முஸ்லிம் @ 7:15 பிப

மேலப்பாளையம் கொலையில் சம்பந்தமில்லை

“அல்-உம்மா”

விபச்சாரம் செய்பவர்களுக்கு இஸ்லாமிய தண்டனை என்ற பெயரில் மேலப்பாளையத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலைகளுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென் அல்-உம்மா தலைவர் முகம்மது அன்சாரி அவர்கள் மறுப்பு தெறிவித்து அறிக்கை ஒன்றை பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ளார் அதன் நகல் ஒன்று நமக்கும் கிடைக்கப்பெற்றது அதில் கூறியிருப்பதாவது.

அல்-உம்மா அன்சாரி அவர்கள்

நீண்ட சிறைவாசத்தால் பல்வேறு மன உளைச்சல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகி நொந்து நூலாகிப்போய் தீர்ப்புக்காக காத்திருக்கும் இந்நிலையில் மேலும் வெந்த புன்னில் வேலை பாய்ச்சுவது போன்ற ஒரு கொடூர செயலை பத்திரிகை நிறுவனங்கள் செய்து வருகின்றது. அதாவது 7,8, 05-07 தேதிகளில் வந்நத நாளிதழ்களில் மேலப்பாளையத்தில் பென்னை கொலை செய்த அல்-உம்மா தீவிரவாதிகள் சரண்டர் என்ற செய்திகள் எங்களை மேன்மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியது.

முதலில் பத்திரிகை நன்பர்கள் ஒன்ற தெளிவாக புறிந்து கொள்ள வேண்டும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட அல்-உம்மா அமைப்பிற்கு உறுப்பினர்கள் என யாரும் வெளியில் கிடையாது.அல்-உம்மா உறுப்பினர்கள் எனக் கூறிக்கொள்பவர்களும் இவ்வமைப்பின் பெயரில் செயல்படுபவர்களும் யாரும் வெளியில் இல்லை. அல்-உம்மாவின் தலைவர், துனைத்தலைவர், செயலாளர், பொருளாலர் மற்றுமுள்ள அனைவருமே கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகாலமாக சிறையினுள் இருந்து வருகின்றார்கள் என்பதை கிழக்கில் சூரியன் உதிக்கும் என்ற தெளிவான விஷயத்தை போல் அனைவரும் அறிவீர்கள். நிலைமை இப்படி இருக்க தமிழகத்தில் எது நடந்தாலும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் அல்-உம்மாவை தெர்டர்பு படுத்தி தொடாந்து செய்திகள் வருவது நீண்ட சிறைவாசத்தை விட வேதனை தரக்கூடியதாக உள்ளது.

எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி இங்ஞனம் அல்-உம்மாவை தொடர்பு படுத்தி செய்திகள் வருவதை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம். ஆதாரமில்லாத இத்தகைய செய்திகள் பத்திரிகை தர்மத்திற்கு உகந்ததல்ல. அல்-உம்மா போன்ற அமைப்புகள் தற்போது சரியாக செயல்படுவதில்லை ஆகவே நாங்கள் தான் என மேலப்பாளையத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கூறியுள்ளார்கள். அதையும் மீறி பத்திரிகைகள் வஞ்சகமாக அல்-உம்மாவை குறிப்பிடுவது ஏனோ? பத்திரிகைகளின் இவ்விரோதப்போக்கை பாராபட்சமான பத்திரிகை தீவிரவாதம் என்று நாங்கள் கருதுகின்றோம்.

மேலப்பாளையத்தில் நடந்த கொலைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை சொல்லப்போனால் அத்தகைய சம்பவங்களை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம்.

இப்படிக்கு,
எம்.முகம்மது அன்சாரி
கோவை குண்டு வெடிப்பு கைதி
2638 விசாரனை சிறைவாசி
கோவை மத்திய சிறை

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.