தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 10, 2007

"கைதியின் கதை" – குறும்படம் (VIDEO)

Filed under: ஆளுர் ஷா நவாஸ், கைதியின் கதை, மதனி, மதானி — முஸ்லிம் @ 7:05 முப

“கைதியின் கதை”
மதானி மற்றும் முஸ்லிம் சிறைவாசிகள் பற்றிய ஆவணப்படம்
45 நிமிடங்கள்
இயக்கம் : ஆளுர் ஷா நவாஸ்
தயாரிப்பு : மீடியா ஸ்டெப்ஸ், சென்னை

படத்தை காண்பதற்கு அல்லது டவுன்லோட் செய்வதற்கு
தமிழ் முஸ்லிம் மீடியா

கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரத்தில் தனி இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம் சமூகம் போராடிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் இருண்ட சிறையறைகளில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை இந்திய தேசம் தந்து கொண்டிருக்கிறது.

இந்திய முஸ்லிம்களின் சமூக பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்துள்ள நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையிலான குழுவின் அறிக்கைப்படி 10.6 சதவிகித முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட மஹாராஸ்ட்டிராவில் சிறையில் வாடும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 40.6 சதவிகிதமாகும். குஜராத்தில் 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே முஸ்லிம்கள் உள்ளனர் ஆனால் சிறைக்கைதிகளின் எண்ணிக்கையோ 25 சதவிகிதத்திற்கும் மேல். காஷ்மிருக்கு அடுத்ததாக முஸ்லிம் மக்கள் தொகையை அதிகமாக கொண்ட அஸ்ஸாமிலும் இதே நிலைதான். தமிழகத்தில் சறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 9.6 சதவிகிதம் முஸ்லிம்களாக உள்ளனர். அதிர்ச்சிகரமான இந்த ஆய்வு முடிவைப் பார்க்கும் போது முஸ்லிம்களின் மக்கள் தொகையை விட அவர்களுக்கு அதிக பங்கு அளிகக்ப்பட்டுள்ள ஒரே இடம் சிறைச்சாலை மட்டுமே.

கோவை குண்டு வெடிப்பு மற்றும் அதற்கு முந்தைய பல்வேறு வழக்குகள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 200 க்கும் அதிகமான முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமை இந்திய ஜனநாயகத்தின் உயாந்த கோட்பாடுகளை கேள்விக்குறியாக்கி வருகின்றது.

கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துன் நாஸர் மதானி உட்பட 200 க்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் வெறும் விசாரனைக் கைதிகளாகவே கடந்த 9 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாத, இனி ஒருபூதும் சிறு குற்றம் கூட செய்யத் திராணியற்ற, மனபலமும், உடல் வலிமையும் குன்றிய மதானி உள்ளிட்ட இந்திய குடிமகன்கள் விடை தெரியாமல் சிறையில் வாடி வருகின்றனர். இந்தியா முழுவதும் தேடி அலைந்தாலும் இது போன்ற ஒரு விசித்திர வழக்கை காண இயலாது.

கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி பற்றி தமிழ்ச் சமூகத்தில் ஒரு தவறான புறிதல் படிந்துள்ளது. அதைக் களையும் வகையில் இந்த ஆவணப்படம் சில உண்மைகளை பதிவு செய்துள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சி கேரளாவில் மக்கள் செல்வாக்குடன் செயல்படும், தேர்தலில் பங்கேற்கும் கட்சியாகும். அது வன்முறையை நோக்கமாக கொண்ட கட்சியல்ல, மேலும் மதானி இது நாள் வரையில் எந்த வழக்கிலும் தன்டனைக்குள்ளானவர் அல்ல என்பதும் குறிப்பிடத் தக்கது. சமுதாயத் தலைவராகவும் அரசியல் வல்லுநராகவும் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த மதானி, இன்று வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையேயான இறுதிப் போராட்டத்தில் தன்னை இழந்து கொண்டிருக்கிறார்.

அரசியல் பின்புலம் கொண்ட மதானிக்கே இந்த நிலை என்றால், தமிழகத்து கொடுஞ்சிறைகளில் குற்றம் நிரூபிக்கப்படாமல்ட நெடுங்காலமாக வாடிக் கொண்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்களின் நிலையை என்னவென்பது?

மனித நேயம் மற்றும் சமூக நீதியின் தொட்டிலான தமிழகத்தில் இத்தகைய கொடுமைகள் அரங்கேறுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. மனித உரிமைத் தத்துவத்தை தீயிலிட்டு பொசுக்குகின்ற இத்தகைய வன் செயல்களு்கு முடிவு வேண்டும்.

கண்ணீரில் கரையும் முஸ்லிம் சிறைவாசிகளின் அவல வாழ்க்கைக்கு விடிவு வேண்டும்.

அத்தகைய விடிவை நோக்கிய களப்போராட்டத்தின் கருத்தியல் கருவியாக இந்த ஆவணப்படம் இணைந்து கொள்கின்றது.

படத்தை காண்பதற்கு அல்லது டவுன்லோட் செய்வதற்கு

தமிழ் முஸ்லிம் மீடியா
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம், மதானி, இந்திய முஸ்லிம்கள்

ஏப்ரல் 7, 2007

அதிர்வுகளை ஏற்ப்படுத்திய mediastepsன் ஆவணப்பட வெளியீடு


விழா புகைப்படக் காட்சிகளைக் காண இங்கு சொடுக்கவும்

விரைவில் “கைதியின் கதை” தமிழ் முஸ்லிம் மீடியாவில்

கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மதானியின் அரசியல் பிரவேசம் முதல் தற்போதைய சிறை வாழ்க்கை வரை சித்தரிக்கும் ஆளுர் ஷா நவாஸின் “கைதியின் கதை” ஆவணப் படம் வெளியீட்டு விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் கடந்த 01-04-2007 அன்று நடைபெற்றது.

இந்த ஆவணத் திரைப்பட வெளியீட்டு விழவிற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னுற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி தலைமை வகித்தார். பேராசிரியர் . அ. மார்க்ஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திரு. திருமாவளவன், இயக்குனர் அமீர், நிழல் திரைப்பட இயக்கத்தின் தலைவர் பா.திருநாவுக்கரசு, ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ன குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்புறையாற்றினர்.

ஆவனப் படத்தின் சிறப்பு பிரதிகளை ஏ.வி.எம். ஜாபர் தீன், ராஜகிரி தாவூத் பாஷா, வெஸ்ட் ஆஸயா ரிஃபாயி, தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது தமுமுக மாநலத் துணைச் செளலாளர் ஹாருன் ரஷீது, கலைமாமணி எஸ்எம்.உமர், பறையர் பேரவையின் அமைப்பாளர் கிருஷ்ண பறைளனார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ஆவணப் பட உருவாக்கத்தில் துணை நின்றவர்களுக்கு நிகழச்சியில் சிறப்பு செய்யப்பட்டது.

தமுமுக பொதுச் செளலாளர் ஹைதர் அலி தனது தலைமையுரையில், சிறையில் இருக்கும முஸ்லிம்களின் நிலையையும், அவர்களின் குடும்பங்களின் நிலையையும் தனது ஆவணப் படத்தில் ஷா நவாஸ் தெளிவாக பதிவு செய்துள்ளார். சுதந்திர இந்தியாவில் வாழும் முஸ்லிம் நீதிமன்றங்களுக்கு சென்றதும் நீதி மன்றங்களின் கதவுகள் மூடிக்கொள்கின்றன.ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்டவர்களின் குரல்களை நீதிமன்றங்கள் கேட்பதற்கு தயாராக இல்லை.

குற்றம் ஏதும் நிரூபிக்கப்படாமல் விசரனைக்கைதியாய் ஒருவர் ஐந்தான்டுகள்ட சிறையில் இருந்தால் அவரைப் பிணையில் விடுவிக்கலாம் என்று சட்டம் சொல்கின்றது. ஆனால் அவர் ஒரு முஸ்லிமாய் இருந்தால் அந்த சட்டம் அவருக்கு மறுக்கப்படுகின்றது. சிறையில் இருப்பதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல!

இந்தியாவில் வாழும் ஏறக்குறைய 90% பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவாக்ள் எல்லாம் ஐஐடீ, ஐஐஎம் போன்ற கல்லூரிகளில் படிக்க தகுதியில்லாதவர்களாம், நாட்டில் 3% இருப்பவர்களே அந்தக் கல்லூரிகளில் நிறைந்து காணப்படுகின்றனர். இந்த நாட்டின் பார்ப்பனர்களின் ஆதிக்கம் குறைந்து விட்டதாக சிலர் கூறுகின்றனர் ஆனால் டெல்லியில் இருக்கும் நர்ளுமன்றக் குடியிருப்புக்களை போய்ப் பாருங்கள் அங்கே இருக்கும் பெயர்ப்பலகைகைளில் அவர்களின் பெயர்களே நிரம்பி வழிகின்றன்.

இது ஒரு கைதியின் கதை அல்ல, ஒரு போராளியின் வீர வரலாறு.

முஸ்லிம்களுடன் பிறப்படுத்தப்பட்ட ஒடக்கப்பட்ட மக்களும் ஓரணியில் கைகோர்த்து தங்களின் உரிமைகளுக்காக போராட வேண்டிய அவசியத்தை புறிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் முஸ்லிம்கள் பிற்ப்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஓடுக்கப்பட்டவர்களால் சிறைச்சாலைகள் நிரம்பி வழியும் எனவும் ஆட்சியாளர்களின் அனுகுமுறை முஸ்லிம்களுக்கு எதிராய இருக்கிறது என்பதையும் தனது உரையில் செ.ஹைதர் அலி அவர்கள் பதிவு செய்தார்கள்.


பேராசிரியர். அ. மார்க்ஸ் பேசும்போது, நான் மறிந்த மட்டிலும் குஜராத் கலவரங்களை மையமாக வைத்து இது வரை 8 ஆவணப்படங்கள் வந்துள்ளன. அந்த வகையில் முழு நீள வாத்தக திரைப்படமாக “பர்சானியா” எனும் திரைப்படம் வெளிவந்திருப்பதை இந்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும். “குரு” போன்ற கார்ப்ரேட் கலாச்சாரத்தை நியாயப்படுத்தும் படங்களுக்கு மத்தியில் இவ்வாறு சமகால வரலாற்றை வைத்து படங்கள் வருவது ஆறுதலான விஷயம்.

மதானி சிறையிலடைக்கப்பட்டு நேற்றுடன் (31.03.2007) 9 ஆன்டுகளாகிவிட்டன். இப்படத்தில் மதானிக்கு நிகழந்த அநீதிகளை பலரும் பல்வேறு கோணங்களில் பதிவு செய்துள்ளனர்.

நியாயமாக பார்த்தால் இந்த ஆவணப்படத்தை பாரதி கிருஷ்ன குமார் போனற்வர்கள் தான் எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் மதானியும் ஷாநவாசும் முஸ்லிம்கள். அதனால்தான் அவரைப்பற்றி இந்த படத்தை இயக்கியிருக்கின்றார் என்று கூறுவார்கள்.

நோன்பு நேரங்களில் இப்தார் விருந்தில் தொப்பிகளை அணிந்து கொண்டு கலந்து கொண்டு பேசுவது ஒன்றும் பெரிதல்ல இந்த ஆடசி முஸ்லிம்களின் ஆதரவில் ஆடசியில் வந்த கட்சி.

கலைஞர் ஏன் கோவை சிறைவாசிகளை விடுதலை செய்ய பயப்படுகினற்ார்? எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யும் என்பதாலா? அதே சமயம் தனது குடும்ப முன்னேற்றத்தை பற்றி எதிர்க கட்சிகள் என்ன விமர்சனம் செய்தாலும் எதிர் கொள்கிறார். அவரால் மதானி பற்றி தவறான புறிதல்களை நீக்க தமிழகம் முழுவதும்இயக்கங்களை நடத்தி ஆதரவு திரட்டி நியாயங்களை எடுத்துக் கூறி செயல்படுத்த முடியாதா?

சச்சார் கமிசனின் அறி்க்கையை கண்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். முஸ்லிம்கள் கல்வி, பொருளாதார, வேலை வாயப்புக்களில் பினதங்கியிருப்பது புதிய விஷயமா என்ன? இருபதான்டுகளுக்கு முன்னரே கோபால் சிங் ஆணையம் இதையெல்லாம் படம் பிடித்து காட்டியது. சச்சார் கமிசனின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த போகின்றார்களா இல்லையா என்பதுதான் இன்று நம் முன் நிற்கும் கேள்வி. என பேரா. மார்க்ஸ் அரசினை கேளவிக் கணைகளால் துளைத்தெடுத்தார்.

நிழல் திரைப்பட இயக்குனர் பா. திருநாவுக்கரசு பேசுகையில், சிறையில் அடைக்கப் பட்டபூது 112 கிலோ எடையிருந்த மதானி தற்போது 44 கிலோவாக குறைந்திரக்கிறார் என்பதைக் கண்டோம். உலகம் முழுவதும் இது போன்ற போராளிகள் சிறையில் வறுத்தெடுக்கப்படுகின்றனர்.


அபு ஜமால், கருப்பு இளைஞரான இவர் “மூவ்” என்ற கருஞ்சிறுத்தை அமைப்பில் கருப்பினத்தவர்களின் விடுதலைக்காக போராடியதால் தனது இருபத்தஜ ஐந்து வயதில் அமெரிக்க ஃபிலடெல்பிய சிறையில் அடைக்கப்பட்டார் இன்று அவருக்கு வயது 50. பெரு நாட்டை சேர்ந்த அபிமேல் குஷ்மான், துருக்கியைச் சேர்ந்த அப்துல்லா உஸ்மான் போன்ற போராளிகளும் பல்லான்டுகளாக தங்களது கொள்கையை விட்டுக் கொடுக்காமல் சிறையில் வாடுகினற்னர் இவர்களைப் பற்றியெல்லாம் ஆவேணப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் ஷா நவாஸ் இந்தப் படங்களையெல்லாம் பார்க்காமலேயே அதன் இயல்புகளை தனது படத்தில் பதிவு செய்துள்ளார். என கூறினார்.

ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ன குமார் பேசுகையில், நாமெல்லாம் இப்போது கைதியன் கதை ஆவணப் படத்தை பார்த்தோம் படம் முடியும்போது வழக்கத்திற்கு மாறாக கைதட்டல் குறைவாக இருந்தது. இதன் காரணம் கைதட்ட தகுதியல்லாத படம் என்று பொருளில்லை நம்மதாள் கைதட்ட கூட முடியாத அளவில் சிந்திக்கத்தக்க வகையில் ஷாநவாஸ் இந்த படத்தை இய்ககியிருக்கிறார். என்னால் இரண்டு மூன்று தினங்களுக்கு உறங்க இயலாது.

இதில் ஒரு தாயார் கூறுகின்றார், எனது மகள் 1 வயது இருக்கும் போது எனது கணவர் சிறைக் குபோனர் இப்போது 9 வருடம் ஆகின்றது இன்னும் 2 வருடங்களில் எனது மகள் பெரிய மனுஷி ஆஈகிவிடுவாள் என கதுறுகிறார். எனக்கும் இரண்டு மகள்கள் உள்ளார்கள். பென் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு அதன் வலி தெறியும்.

இந்துத்துவ சக்திகள் ஆட்சியில் இருந்தபோது தான் அட்டுழியங்கள் நடைபெற்றதாக நிணைத்து விடாதீர்கள். அது ஆட்சியில் இல்லாவிட்டாலும் தனது போரப்பற்களை காட்டும். பேரா. மார்க்ஸ் சொன்னது போல் இநடத படத்தை நான் தான் இயக்கியிருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் ஒரு அநியாயம் நம் கண் முன்னே நடைபெறும்போது அதை கைகளால் தடுக்க வேண்டும், முடியவில்லை என்றால் நாவால் தடுக்க வேண்டும், அதுவும் முடியவில்லை என்றால் மனதால் அதனை வெறுத்து ஒதுங்க வேண்டும் எனவே மதானி போன்றவர்களுக்கு நிகழந்து கொண்டிருக்கும் அநீதிகளை இன்று சமூகம் மெளனியாகவே பார்த்து கொண்டிருக்கின்றது.


இந்த ஆவணப்படத்தில் திடீரென்று சங்கராச்சாரியார் வருகின்றாரே என்று நிமிர்ந்து உட்கார்ந்தேன். சங்கராச்சாரியார் இது வரை கைது செய்யப்படடதாக நான் நினைக்கவில்லை. நீங்கள் பார்த்து இரப்பீர்கள் சங்கராச்சாரியார் ஒரு கம்பை வைத்துக்க கொண்டு முன்னால் செல்வார் காவலர்கள் எல்லோரும் பவ்யமாக பின்னால் வருகின்றார்கள். யார் யாரை கைது செய்து கொண்டு போகின்றார் என்பதே தெறியவில்லை. நல்லவேலை சங்கராச்சாரியார் குற்றப் பத்திரிகையை சமஸ்கிருதத்தில் கேட்கவில்லை கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பார்கள்.

இந்த ஆவணப் படத்திற்கு “தைதியின் கதை” என்று ஷா நவாஸ் பெயர் வைத்திருக்கிறார் அனால் ஒரு போராளியின் வீர வரலாறு என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும்.

நோன்பு கஞ்சி குடித்து விட்டு குரூப் போட்டோவிற்கு போஸ் கொடுப்பவர்கள் முஸ்லிம்களின் நன்பர்கள் என்று நிங்கள் கருதி விடாதீர்கள் . மதானியின் கைதில் கேரள முஸ்லிம் இயக்கங்களின் பங்கு இரக்கினற்து என்பதை என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நன்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பதை நீங்கள் கண்டு கொள்ளுங்கள். என்று கூறினார்.

திரைப்பட இயக்குனர் அமீர் பேசுகையில் , நான் இந்த ஆவணப் படத்தை பார்க்கவில்லை, பார்க்கவில்லை என்றால் என்ன நான் பாகிஸ்த்தானில் இருந்து வந்தவனா என்ன? சமீபத்தில் கோவை சென்றிருந்தபோது சிறையில் வாடும் ஒரு சகோரனின் குடும்பத்தை சந்தித்தேன். அவாக்ள் கூறினார்கள், சிறையில் இருந்து அவர்களை வெளியேற்றுங்கள் அல்லது எங்களையும் கொண்டு போய் சிறையில் அடையுங்கள் என்றார்கள்.

ரவுடி ஒருவனை ஒருத்ிதி காதலிக்கிறாள், ஆனால் அவன் அவளைக் காதலிக்க வில்லை. கடைசியில் அவன் காதலித்தானா? இல்லையா? என்று நான் படம் எடுத்து கொண்டிருக்கின்றேன். சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளது அதையெல்லாம் விடுத்து இதையெல்லாம் நாம் சொல்லிக்கிட:டு இரக்கிறோமே என்று வெட்கமாக உள்ளது. நான் செய்ய வேண்டிய வேலையை சகோதரன் ஷா நவாஸ் செய்திரக்கிறான்.

இன்று இந்த ஆவணப் படத்தை பார்த்து விட்டு எழும்பிய ஒலி இந்த அரங்கிற்குள் மட்டுமே முடங்கி விடக்கூடாது. வாருங்கள் நாமெல்லாம் திரண்டு சிறைமுன்னே நின்று அவர்களின் விடுதலைக்காக குரல் எழுப்புவோம் என அழைப்பு விடுத்தார்.

இறுதியாக விழாவில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செளலாளர் திருமாவளவன் அவர்கள், நம்மிடையே இந்த ஆவணப்படம் ஒரு அதிர்வலையை ஏற்ப்படுத்தியதோடு அல்லாமல் வன்கொடுமையை சித்தரிக்கும் ஒரு ஆவணமாகவும் இரக்கின்றது.

நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்குவதும், உற்பத்தி செய்வதும் அரசுதான். பயங்கரவாதத்தில் மிகப்பெரிய பயங்கரவாதமட் அரச பயங்கரவாதம் தான். இந்துத்துவம் என்றைக்கும் ஆடசியல் இருந்து கொண்டுதான் உள்ளது. ஆட்சியாளர்களின் பின்னணியிலும், அடித்தளமும் இந்துத்துவம்தான் இருக்கிறது. அதனால்தான் முஸ்லிம்களும் தலித்துகளும் ஒடுக்கப்படுகின்றார்கள்.

இந்துத்துவம் தலித்துகள் மத்தியிலும் பரவியிருக்கினற்து என்பதும் உண்மை. நாம் அந்துத்துவத்திற்கு எதிராக மாற்று அரசியல் சக்தியை கட்டமைக்க வேண்டும். அரசியல் சக்தியால் மட்டும்தான் அரச பயங்கரவாதத்தை தடுக்க முடியும் அல்லது தவிர்க்க முடியும்.

நாம் அரசியல் சக்திகளாக எழுச்சி பெற்ற பொழுதுதான் எதிரிகளும், துரோகிகளும் ஒலித்துக் கட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். அரசியல் சக்திகளாக எழுச்சி பெறுவதுதான் எல்லாவித அடக்குமுறைகளுக்கும் முடிவு கட்டும். இதற்கு தலித்துகளும் முஸ்லிம்களும் ஒன்று சேர வேண்டும். மதானியின் விடுதலைக்கு நாம் மனு போடத் தேவையில்லை. நமது அரசியல் எழுச்சி வரலாற்றுத் தேவையாக இன்று நம் முன் நிற்கின்றது என்றார்.

இந்நிகழச்சியில் ” கைதியன் கதை” ஆவணப் படம் திரையிடப்பட்டது. திரையிடலின் போது படத்தை பார்த்தவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்ததை பார்க்க முடிந்தது. அந்த கண்ணீரே இந்த ஆவணப் பட வெற்றியை பரை சாற்றியது.

விழா புகைப்படக் காட்சிகளைக் காண இங்கு சொடுக்கவும்

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.