தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஒக்ரோபர் 5, 2007

துபாய் ஈமான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

Filed under: இஃப்தார், ஈமான், துபை — முஸ்லிம் @ 9:49 பிப
துபாய் ஈமான் நோன்பு திறப்பு சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய துணைத் தூதர்துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) அமைப்பு சார்பில் வருடந்தோறும் ரமலான் முழுவதும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அமீரகத்தில் தமிழக நோன்புக் கஞ்சியை வழங்கி வருவதே இதன் சிறப்பம்சம். தினந்தோறும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோன்புக்கஞ்சி தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு மிகு நிகழ்ச்சியை அறிந்த துபாய் இந்திய துணைத்தூதரகத்தின் கன்சல் ஜெனரல் திருமிகு வேணு ராஜாமணி தானும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆவலாய் இருப்பதை தெரிவித்தார்.

இதனையடுத்து ஈமான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு வியாழன் மாலை வருகை புரிந்த கன்சல் ஜெனரல் திருமிகு வேணு ராஜாமணி , கன்சல் திருமிகு பி.எஸ். முபாரக் ஆகியோரை ஈமான் அமைப்பின் கல்விக் குழுத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் தலைமையில் துணைத்தலைவர்கள் அல்ஹாஜ் அஹமது முகைதீன் , அல்ஹாஜ் அப்துல் கத்தீம் , அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் , பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி , பொருளாளர் மீரான் முஹைதீன் , கல்விக்குழுச் செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா , மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ் , விழாக்குழுச் செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் , ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் , ஜமாஅத ஒருங்கிணைப்பாளர் கீழை ஹமீது யாசின் , சுவாமிமலை முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

நோன்புக் கஞ்சியை அருந்தி மகிழ்ந்த கன்சல் ஜெனரல் தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் தினமும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோன்புக்கஞ்சியை தயாரித்து வழங்கும் குழுவினரைப் பாராட்டினார். ஈமான் அமைப்பு செய்து வரும் சமுதாயப் பணிகள் சிறப்புற வாழ்த்தினார்.

செய்தி : முதுவை ஹிதாயத்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.