தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 5, 2008

இட ஒதுக்கீடு பித்தலாட்டமும், முஸ்லிம்களின் ஏமாற்றமும்!

Filed under: இட ஒதுக்கீடு, reservation — முஸ்லிம் @ 11:36 முப
கருணாநிதி (அன்கோ) வின் இட ஒதுக்கீடு பித்தலாட்டமும், முஸ்லிம்களின் ஏமாற்றமும்!

30.05.2008 அன்று மீண்டும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்து இருக்கிறார். முன்பு அறிவித்த இட ஒதுக்கீட்டின் அர்த்தம் என்ன? முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆய்வு செய்ய 9 பேர் அடங்கிய ஜனார்த்தன கமிட்டியில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லாதது கருணாநிதியின் சாதனை. கமிட்டியில் கூட இட ஒதுக்கீடு வழங்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் கலைஞர் 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அம்பாசமுத்திர கமிட்டி அறிக்கையை தூசு தட்டி முஸ்லிம்கள் ஓட்டுக்களை அறுவடை செய்ய அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது தான் சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு.

6 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கமிட்டியை தள்ளுபடி செய்து, இன்றைய முஸ்லிம்களின் மக்கள் தொகை, கல்வி, பொருளாதாரம், இட ஒதுக்கீடு நிலையை ஆய்வு செய்து வழங்க வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் 4 சதவீதம் முறையாக அங்கு கொடுக்கப்பட்டது. (கவனத்தில் கொள்க) 2 லட்சத்து 81 ஆயிரம் பணி இடங்கள் நிரப்பப்பட்டதாக டாக்டர் கலைஞரின் அரசு விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. அதில் சிறுபான்மையினருக்கு 3.5 சதவீதம் என்றால் தலா கிருஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் 10,500 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். கிடைத்திருப்பதோ 0.5 சதவீதம் கூட இல்லை. மேலும் சில உயர் பணியிடங்களுக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிப்பதற்கு கூட தகுதி இல்லாத நிலை உருவாகி விட்டது.

சிறுபான்மையினர் பாதுகாவலர், சமூக நீதி காத்தவர் என்று ஏற்றி போற்றி பாடப்படும் கருணாநிதியோ அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கு என்று சாக்கு போக்கு சொல்கிறார். சட்ட மன்றத்தில் சிறுபான்மை சமூகத்தினர் இட ஒதுக்கீட்டில் குளறுபடிகள் இருக்கிறது என்று இரட்டை நாக்கை சுழற்றினார். அரசு அதிகாரிகளோ! கிருஸ்துவர்கள் 14வது இடத்திலும், முஸ்லிம்கள் 28வது இடத்திலும் (ரோஸ்ட்டர்) சுழற்சி முறையில் இருக்கிறார்கள், அரசு ஆணைப்படி தமிழக அரசின் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு முழுமையாக கிடைக்க வாய்ப்பு இல்லை. பல ஆண்டுகள் நீங்கள் பொருத்து இருக்க வேண்டும் என்கின்றனர். அப்படி பொறுத்திருந்தால் வயது வரம்பு கடந்து பணிக்கு சேரும் தகுதியை நம் சமுதாய இளைஞர்கள் இழந்து விடுவார்கள். இந்த இட ஒதுக்கீட்டால் எந்த நம்மையும் இல்லாமல் போய்விட்டது. முன்பு 3.2 சதவீத இட ஒதுக்கீட்டில் எந்த குளறுபடிம், சட்ட சிக்கலும் இல்லாமல் முஸ்லிம்கள் சில இடங்களைப் பெற்றார்கள். அந்த நிலை இன்று கருணாநிதி அரசால் தட்டிப் பறிக்கப்பட்டு விட்டது.

அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியும், அன்பழகனும், நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இட ஒதுக்கீடு குளறுபடிகள் சரி செய்யப்படும் என்றனர். சரி செய்யப்படாத நிலையில் சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்தது. ஒரு தலைமுறையே பாதிக்கின்ற மிகப் பெரும் கொடுமை 3.5 சதவீத உள் இட ஒதுக்கீடு. எங்களின் விகிதாச்சார அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், சட்ட சிக்கல்கள், குளறுபடிகள் நீக்கப்பட வேண்டும் என்று பல்வேறு கிருஸ்த்துவ, இஸ்லாமிய அமைப்புகளும், இந்திய தேசிய மக்கள் கட்சியும் 30.05.2008 அன்று சென்னையில் மிகப்பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

அவசர அவசரமாக கருணாநிதி (அன்கோ) கூடி தமிழக அரசின் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு முறையாக மீண்டும் அமல்படுத்தப்படும் என்றனர். இன்று 3 லட்சம் பணி இடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. முஸ்லிம்களுக்கு அதில் ஒன்றும் இல்லாமல் போய் விட்டது. இனி முறையாக அமல்படுத்த கலைஞர் அன்கோ ஆணை பிறப்பித்து இருக்கிறது. குதிரை போன பிறகு லாடத்தை தேடும் நிலையில் அரசு ஈடுபட்டு இருக்கிறது. நன்றி பாராட்டி விழா நடத்தியவர்கள், ரகசியமாகச் சென்று துண்டு போட்டு சிறை நிரப்பு போராட்டத்தின் வெற்றி என வெற்று அறிக்கை விட்டவர்கள் இட ஒதுக்கீட்டு துரோகத்தை வரலாற்று சாதனை என்று கூனி குறுகி கூன்பிறையாய் கொக்கரித்தவர்கள், சுனாமியை விட பயங்கரமான ஒரு தலைமுறையையே பாதிக்கும் துரோகத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள். இதயத்தை இரும்பாகப் பெற்றவர்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். இளைஞர்களே! சிந்தியுங்கள்!!.

தவிட்டைத் தங்கம் என்று சொன்னால் பாராட்டுவதா? குப்பையை குண்டு மல்லி என்று சொன்னால் குதித்து ஆடுவதா? அறிவைத் தொலைத்து விட்டு அறுப்பதற்கு ஆடுகள் என்று தலையை நீட்டுவதா?? மார்க்கத்தையும், அரசியலையும் குழப்பி சுயநலத்திற்கு சமுதாயத்தை அடகு வைக்கும் தலைவர்களை (மன்னிக்கவும்) தலைவலிகளை, ஆம்! சமுதாய ஏஜென்டுகளை, கடல் செத்த மீன்களை ஒதுக்கி விடுவது போன்று அவர்களை ஒதுக்கி விட்டு அரசியலில் இந்திய தேசிய மக்கள் கட்சியில் ஒற்றுமையை உறுதிப்படுத்தி நம் இட ஒதுக்கீட்டை நாமே தீர்மானிக்க இணைவீர், இன்றே தொடர்பு கொள்வீர்.

இவண்,
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)

தமிழ்நாடு செல் : 9943802111, 9344510369

WWW.IDMK.ORG

ஜனவரி 28, 2008

தமிழக பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை குறைவு

Filed under: இட ஒதுக்கீடு, reservation — முஸ்லிம் @ 7:09 முப

ஆரம்ப பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை குறைவு: தமிழகத்திற்கு நான்காமிடம்

புதுடில்லி: இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13 சதவீதம் இருந்தும், ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் 9.39 சதவீதம் மட்டுமே முஸ்லிம் மதத்தினராக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படும் முஸ்லிம்கள் வெறும் 7.52 சதவீதம் பேர் மட்டுமே. பள்ளிகளில் முஸ்லிம்கள் சேர்க்கப்படுவது குறித்து தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலைகழகம், முதல் முறையாக நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் உ.பி., பீகார், மேற்கு வங்கம், கேரளா, போன்ற மாநிலங்களில், இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இம்மாநிலங்களில், முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கும் பள்ளிகளில் அவர்களின் சேர்க்கைக்கும், பெரியளவில் வித்தியாசம் உள்ளது. அசாம், காஷ்மீர், ஆந்திராவில் நிலைமை சற்று தேவலை.

சில மாநிலங்களில், இதர பிற்படுத்தப்பட்ட இனத்தவரில் முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டு இருப்பதால், இந்த புள்ளி விவரங்களில், சற்று தவறு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சில பள்ளிகளில் முஸ்லிம்கள் இனம் பிரித்து சேர்க்கப்படுவது இல்லை. அடுத்த ஆண்டு ஆய்வின் போது, இது தொடர்பான துல்லியமான புள்ளி விவரங்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஆய்வின் படி, காஷ்மீரில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை 66.97 சதவீதம். நடுநிலை வகுப்புகளில், முஸ்லிம் மாணவர் சேர்க்கை 60.50 சதவீதம். அசாமில், முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசிப்பதால், அங்கும் மாணவர் சேர்க்கை 30.92 சதவீதமாக உள்ளது. ஆந்திராவில் ஆரம்பப் பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை 9.17 சதவீதம். நடுநிலைப் பள்ளிகளில் இது 9.11 சதவீதமாக உள்ளது.

மேற்கு வங்கத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 25 சதவீதமாக இருந்த போதிலும், ஆரம்பப்பள்ளிகளில், முஸ்லிம் மாணவர் சேர்க்கை 27.92 சதவீதமாக உள்ளது. கேரளாவில், முஸ்லிம் மக்கள் தொகை 24.7 சதவீதம், ஆனால், முஸ்லிம் மாணவர் சேர்க்கையில் ஆரம்பப்பள்ளியில் 10.13 சதவீதமும், நடுநிலைப்பள்ளிகளில் 9.59 சதவீதமாகவும் உள்ளது. இந்த ஆய்வில், முந்தைய ஆண்டுகளை விட ஆதி திராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர்களின் மாணவர் சேர்க்கை பெரியளவில் வித்தியாசப்படவில்லை. பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை, ஆரம்பக்கல்வி மற்றும் நடுநிலைக் கல்வி வகுப்புகளில், தேர்ச்சி சதவீதம் ஆகியவற்றின் அடிப்படையில், கல்வி மேம்பாட்டு புள்ளி கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், கேரளாவே தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. புதுச்சேரி மாநிலம் இரண்டு புள்ளிகள் பின்தங்கினாலும், இரண்டாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த டில்லி, மேலும் ஓரிடம் தாண்டி, மூன்றாவது இடத்துக்கு வந்துவிட்டது.

கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆந்திரா நான்கு இடங்கள் பின்தங்கி, எட்டாவது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கர்நாடகாவும் கூட ஆறாவது இடத்தில் இருந்து எட்டாவது இடத்துக்கு பின்தங்கி உள்ளது.

நன்றி : தினமலர்

தமிழக முஸ்லிம் இயக்கங்கள் உடனடி கள நடவடிக்கையில் இரங்கி, ஊர் தோறும் முஸ்லிம் மாணவர்களை பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

நவம்பர் 26, 2007

சத்தமின்றி படைக்கப்பட்ட வரலாறு – TMMK நன்றி அறிவிப்பு மாநாடு

Filed under: இட ஒதுக்கீடு, தமுமுக, நன்றி அறிவிப்பு — முஸ்லிம் @ 9:32 பிப

மேடையில் கலைஞருடன் தமிழ் முஸ்லிம் தலைவர்கள்

(இதைப் பார்த்து விட்டு சிவப்பு விளக்கு கணவில் இருக்கும் சிலருக்கு துர்க்கம் வரவில்லையாம்)

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடைக்காக எடுக்கப்பட்ட சிறப்பு புகைப்படங்கள்

PHOTO GALLERY (PART-01)

PHOTO GALLERY (PART-02)

கடந்த 24.11.2007 அன்று இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியமைக்காக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு தமிழக இஸ்லாமிய மக்களின் சார்பாக நன்றி அறிவிப்பு மாநாட்டை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வகையில் நடத்தி காட்டியது.

சகோ. சஃபியுல்லா மற்றும் அப்பாஸ் அலி

தமிழகத்தில் பலர் சிந்திகக் திறனற்றவர்களாக பத்து லட்சம் கூடியது என்று கூறி சமுதாயத்தை அடகு வைத்ததோடு மட்டுமல்லாமல் அன்று கலைஞர் வெளியிட்ட அரசானையையும் கின்டல் செய்து இட ஒதுக்கீடு எல்லாம் கிடைக்காது என்று கேலி பேசினார்கள், ஆனால் இட ஒதுக்கீடு கிடைத்தவுடன் இன்று அது தன்னால் தான் கிடைத்தது என்று சின்னப் பிள்ளையாட்டம் கைப்பிள்ளை விளையாட்டு விளையான்டு கொண்டுள்ளார்கள். ஆனால் உண்மையில் பேரதிகமான தமிழ் முஸ்லிம் மக்களை அழைத்து வந்து சென்னை மாநகரை மக்கள் வெள்ளத்தில் மூழ்கடித்திருந்தார்கள் த.மு.மு.க வினர்.

சவுதி அரேபியா கிழக்கு மன்டல நிர்வாகி பொறியாளர் சஃபியுல்லா கலைஞருக்கு பரிசளிக்கிறார்

வின் டி.வி யில் கிசுபுள்ளாவின் பேச்சை நேற்று இரவு கேட்டபோது ஒரே சிரிப்பானி சிரிப்பானியா வந்தது. இட ஒதுக்கீடு தங்களால் தான் வந்தது என்றெல்லாம் கிச்சு கிச்சு மூட்டினார். இந்த அண்டப் புழுகையும் பார்த்து மூழை கழுவிடப்பட்டு வின் டி.வி பார்த்து இஸ்லாத்து வந்து கொண்டிருக்கும் கூட்டம் புல்லரித்து போனது தனிக் கதை.

சகோ. சஃபியுல்லா மேடையில்

சகோ. கோவை தங்கப்பா

த.மு.மு.க வெற்றிகரமாக நடத்திய இந்த கூட்டத்திற்கு தமிழகமெங்கும் இருந்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். கோவையில் இருந்து ஒரு ரயிலை 7 லட்சம் ரூபாய் கொடுத்து வாடகைக்கு பிடித்து ஆயிரக்கணக்கில் வந்து வரலாறு படைத்தனர் கோவை மாவட்ட த.மு.மு.க வினர்.

கோவையில் இருந்து தனி ரயிலில் வந்து வரலாறு படைத்த கூட்டம்

ஒக்ரோபர் 23, 2007

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இன்னும் கேள்விக்குறியே – கலைஞர்

Filed under: இட ஒதுக்கீடு, reservation — முஸ்லிம் @ 3:40 முப
சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் முழுமையான கட்டத்தை தாண்டிவிடவில்லை :சொல்கிறார் முதல்வர்

சென்னை : “சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு சட்டம் இன்னும் முழுமையான கட்டத்தை தாண்டி விடவில்லை. சுப்ரீம் கோர்ட் வரை என்ன ஆகும் என்ற கேள்விக்குறி இருப்பதை மறந்துவிட முடியாது’ என்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏழு சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் கருணாநிதி சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் பேசியனார்.

முதல்வர் பேசியதாவது: நெடுநாள் எதிர்பார்ப்பில் இருந்து பெரிய பரிசை பெற்ற மகிழ்ச்சியில் கட்சித் தலைவர்கள் இங்கு பேசினர். நன்றியை எதிர்பார்த்து இந்த நிலையை எடுக்கவில்லை. சிறுபான்மையினரின் உரிமையை நிலைநாட்ட எடுத்த முயற்சிக்கு ஜனநாயக ஒப்புதலை தற்போது பெற்றுள்ளோம். எதிர்ப்பில்லாமல் எந்த நல்ல காரியமும் நடைபெறவில்லை என்பது வரலாறு. 50, 60 ஆண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த போது இந்த சமூக நீதிக்கான வித்து ஊன்றப்பட்டது. புறக்கணிக்கப்பட்ட மக்கள், படிப்பறிவு தேவையில்லை என்று மிரட்டப்பட்ட மக்கள் சார்பாக எழுந்த குரல் வலுவாகி, நடேசனார், நாயர் போன்றவர்களின் போர் முழக்கங்கள் காரணமாக எழுந்த உணர்ச்சிகளின் விளைவு தான் தற்போது சட்டசபையில் பூத்துக் குலுங்கி பூரிப்பு கொள்ளச் செய்துள்ளது. இடையில் எத்தனையோ சோதனைகள், வேதனைகளை சந்திக்க நேரிட்டது. இன்னும் அந்த கட்டத்தில் இருந்து முழுமையாக தாண்டி விடவில்லை. சுப்ரீம் கோர்ட் வரை நமது உரிமை என்ன ஆகும் என்ற கேள்விக்குறி இருப்பதை மறந்து விட முடியாது. எனவே, இந்த சட்டம் இன்னும் முழுமை பெற்று விடவில்லை. சிறுபான்மையினரின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறி விடவில்லை. இன்னும் நிறைவேற்ற முன்வரவில்லை என்ற சலிப்புகள் நாட்டில் உள்ளன. நம்மால் முடிந்ததை செய்வோம் என்பதற்காக துணிந்து இந்த அரசு, சட்டமசோதாவை தற்போது கொண்டு வந்துள்ளது.

சட்டசபையின் வரலாற்றில் இது ஒரு பொன் நாள்: சமூக நீதிக்கான வரலாற்றில் புரட்சிகரமான நாள். இந்த சமுதாயம் எழுந்து நடமாட முடியுமா?, அப்படியே முயற்சித்து அடியெடுத்து வைத்தாலும் ஆயிரம் தடைகள், குறுக்கீடுகள் வந்து இந்த சமூகம் அடிமைப்பட்டு கிடந்தது. அவர்களது உணர்வுகளை தட்டி எழுப்பிய தலைவர்கள் தற்போது கல்லறைகளில் உள்ளனர். அந்த தலைவர்களின் கல்லறை உள்ள திக்கு நோக்கி நன்றி தெரிவிப்போம். இந்த பயனை அடைய நீந்தி வந்த காட்டாறுகள் எவ்வளவு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். விளைந்த நெல்லை களத்தில் காண உழுதவனுக்கு உழைத்தவனுக்கு ஆசை இருக்கும். அவர்களது பிரதிநிதிகளாக நாம் இருப்பதால் தான் கஷ்டம் தெரிகிறது. இதற்காக சிந்திய வியர்வை, கொட்டிய ரத்தம் சாதாரணமானதல்ல. இந்த வெற்றியை நீதிமன்றங்கள், வீதிமன்றங்களில் எடுத்துச் சொன்னதால் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். வருங்காலத்தில் வருவோர் எதுவும் செய்வதற்கு விட்டு வைக்காமல் நானே செய்து வருவதாக பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். இன்னும் செய்வதற்கு ஏராளமாக உள்ளது. சிலையை செதுக்கி, தயாரித்து, அதை பீடத்தில் வைத்து விட்டாலும் சிற்பி கடைசியாக அந்த சிலையின் கண்ணை திறப்பது தான் முக்கியமானது. இன்னும் தமிழகத்தில் அந்த கண் திறக்கப்படவில்லை. சிலை முழுமை பெற நாம் அனைவரும் பாடுபட்டு உழைப்போம். சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட சபதம் ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

நன்றிங்க.

செப்ரெம்பர் 13, 2007

முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தமிழக அரசு ஆணை வெளியிடு

Filed under: இட ஒதுக்கீடு — முஸ்லிம் @ 7:38 பிப
முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தமிழக அரசு ஆணை வெளியிடு

Source: http://www.tn.gov.in/pressrelease/pr130907/pr130907_579.pdf

செய்தி வெளியீடு எண்-
579 நாள்-13.9.2007
செய்தி வெளியீடு

பேரறிஞர் அண்ணா அவர்களின் 99ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசு முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு தமிழக அரசு அவசரச் சட்டம் முதலமைச்சர் கலைஞர் அறிவிப்பு தமிழகத்தில் வாழும் சிறுபான்மைச் சமுதாய மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் தி.மு.க. அரசு எப்பொழுதும் கனிவும், கரிசனமும் கொண்டுள்ளது என்பது அச்சமுதாய மக்கள் அனைவரும் அறிந்ததாகும்.

2006ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கேற்ப, 13.5.2006 அன்று இந்த அரசு அமைந்தவுடனேயே, 24.5.2006 அன்று ஆளுநர் அவர்களின் முதல் உரையில், ” சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த இஸ்லாமியர் மற்றும்
கிறித்தவர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு
ஏற்படுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் ” என்றும்; 2006-2007ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ” சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறித்தவர்களுக்குக் கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் தனியாக இடஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி வருவதுடன்; தமிழகத்திலும் அவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்திட தேவைப்படும் உறுதியான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் ” என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதன் முதல்கட்டமாக – நீதியரசர் திரு.ஜனார்த்தனம் அவர்களைத் தலைவராகக் கொண்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் – இப்பொருள் பற்றி விரிவாக விசாரணையும், ஆய்வும் செய்து உரிய பரிந்துரையை வழங்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. திரு ஜெ.அ. அம்பாசங்கர் அவர்களைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கையில் காணப்படும் இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை; கிறித்தவர்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை; முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரையை ஏற்று, பேரறிஞர் அண்ணா அவர்களின் 99ஆம்
ஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கான

30 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கிறித்தவர்களுக்கு 3.5 சதவீதமும் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் 15.9.2007 முதல் தனி இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறதென முதலமைச்சர் கலைஞர் அறிவித்துள்ளார்.
வெளியீடு-இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.

Source: http://www.tn.%20gov.in/pressrele%20ase/pr130907/%20pr130907_%20579.pdf

தமிழக முதல்வருக்கு இதயம் கனிந்த நன்றி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வெயிடும் அறிக்கை
தமிழகச் சிறுபான்மை சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டை அக்கும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பித்துள்ள தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்குத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக எங்கள் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். புனித ரமலான் நோன்பு தொடங்கும் தருவாயில் இந்தத் தித்திப்பான அறிவிப்பை வெüயிட்ட முதல்வர் நீடூழி வாழ்ந்து தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் முன்னேற நல்லாட்சி தரவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட
1995 முதல் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரி வந்துள்ளது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 1999ம் ஆண்டு ஜுலை 4 அன்று சென்னை கடற்கரையில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தியது.
2004 மார்ச் 4 அன்று தஞ்சாவூரில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி சாதனைப் படைத்த மாபெரும் பேரணியை நடத்தியது.
2006ல் சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. கலைஞர் தலைமையிலான அரசு தான் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கும் என்பதை நன்கு உணர்ந்து திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்துத் தமுமுக தொண்டர்கள் கடுமையான தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கலைஞர் தலைமையிலான அரசு நாட்டிற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகின்றது. முஸ்லிம்களுக்கு அத்த வாக்குறுதியையும் நிறைவேற்றிக் கலைஞர் இந்தியா அரசியல் வரலாற்றில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இந்தியாவிற்கே முதல்வர் என்பதை பறைசாற்றியுள்ளார்.
சுதந்திரப் பெற்ற இந்தியாவின் கனிகள் முஸ்லிம் சமுதாயத்தை சென்றடையவில்லை என்று சச்சார் குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக முதல்வரின் தனி இடஒதுக்கீடு அறிவிப்புத் தமிழக முஸ்லிம்கள் அந்தக்கனிகளைச் சுவைக்கும் வாய்ப்பைத் தந்துள்ளது. எங்கள் நீண்ட காலக் கனவை நனவாக்கிய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் உள்üட்ட திமுக முன்னோடிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டிற்காகக் குரல் கொடுத்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சிகன் தலைவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்குக் கொண்ட அனைத்து சமுதாய நெஞ்சங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்)
தலைவர்

முஸ்லிம்-கிறிஸ்தவர்கள் இடஒதுக்கீட்டுக்கு அவசர சட்டம்

Filed under: இட ஒதுக்கீடு — முஸ்லிம் @ 10:24 முப

முஸ்லிம்-கிறிஸ்தவர்கள் இடஒதுக்கீட்டுக்கு அவசர சட்டம்- கருணாநிதி அறிவிப்பு

சென்னை, செப். 13-

தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வாழும் சிறுபான்மைச் சமுதாய மக்களின் நலன்களைப்பாதுகாப்பதில் தி.மு.க. அரசு எப்பொழுதும் கனிவும், கரிசனமும் கொண்டுள்ளது என் பது அச்சமுதாய மக்கள் அனைவரும் அறிந்த தாகும்.

2006 ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில், சிறு பான்மை இனத்தைச் சேர்ந்த வர்களுக்கு தனி இட ஒதுக் கீடு வழங்க வகை செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கேற்ப, 13.5.2006 அன்று இந்த அரசு அமைந்தவு டனேயே, 24.5.2006 அன்று கவர்னரின் முதல் உரையில், “சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப் புகளில் இட ஒதுக்கீடு ஏற்படுத்து வதற்குத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்” என்றும்.

2006-2007 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், “சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் தனியாக இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி வருவதுடன், தமிழகத்திலும் அவர்களுக்கு இட ஒதுக் கீட்டுக்கு வழி வகுத்திட தேவைப்படும் உறுதியான நட வடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்” என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதன் முதல் கட்டமாக-நீதியரசர் ஜனார்த் தனனை தலைவராகக் கொண்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்திடம்-இப்பொருள் பற்றி விரிவாக விசாரணையும், ஆய்வும் செய்து உரிய பரிந்துரையை வழங்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அம்பாசங்கரை தலைவ ராகக் கொண்டு அமைக்கப் பட்ட தமிழ்நாடு 2-வது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கையில் காணப்படும் இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்களை அடிப் படையாகக் கொண்டு முஸ்லிம் களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்க லாம் என்று தமிழ்நாடு பிற் படுத்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்குப்பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரையை ஏற்று, பேரறிஞர் அண்ணா வின் 99 ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப் பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கிறிஸ்தவர் களுக்கு 3.5 சதவீதமும் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் 15.9.2007 முதல் தனி இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறதென முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : மாலைமலர்

3.5 சதவீதம் ஏற்புடையதா? இல்லை ஏமாற்று வேலையா? பொறுத்திருந்து பார்ப்போம்.

செப்ரெம்பர் 5, 2007

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு விரைவில் – முதல்வர் முடிவு

Filed under: இட ஒதுக்கீடு, முஸ்லிம்கள் — முஸ்லிம் @ 4:08 பிப


தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகித தனி இடஒதுக்கீட்டை விரைவில் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகின்றது. கடந்த செப்டம்பர் 2ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் தேர்தலில் வாக்கüத்தது போல் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அüக்க வேண்டும். இல்லையெனில் இடஒதுக்கீடு பெறும்வரை தொடர்ச்சியான தடையை மீறும் போராட்டங்களை நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சியின் நீதியின் குரல் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் சி.ஆர்.பாஸ்கரன் தேர்தலில் வாக்கüக்கப்பட்ட இடஒதுக்கீடு வழங்க தாமதமாவதற்கு என்ன காரணம் என்ற நிகழ்ச்சியில் பங்குகொண்ட தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விடம் கேட்க,

”இந்தப் பிரச்சனையில் தமிழக அரசிடம் மனஉறுதி இல்லை. ஆனால் எங்களை இளிச்சவாயர்கள் என்று அரசு நினைத்தால் அவர்கள் ஏமாந்து போவார்கள்” என்று எச்சரித்துவிட்டு ”பாபநாசம் பொதுக் குழு தீர்மானத்தை உறுதியுடன் நடைமுறைப்படுத்தப் போகிறோம்” என்றும் கூறினார்.

குமுதம் ரிப்போர்ட்டர் இதழிலும் தமுமுக தலைவர் இதனை உறுதியாக எடுத்துரைத்தார். முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு பெறுவதற்காக எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு தமுமுக தயார் என்பதை இந்த நிகழ்வுகள் அரசுக்கு உணர்த்தின.

குமுதம் ரிப்போர்ட்டர் பக்கம்-01

குமுதம் ரிப்போர்ட்டர் பக்கம்-02

இதன் விளைவாக கடந்த ஞாயிறு அன்று தமிழக முதல்வர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் சட்ட அமைச்சர் துரைமுருகன், அரசு தலைமை வழக்குறைஞர் விடுதலை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம், பிற்படுத்தப்பட்டோர் துறைச் செயலளார் வாசுதேவன், சட்டத்துறைச் செயலாளர் தீனதயாளன், உள்துறைச் செயலாளர் மாலதி ஆகியோர் பங்குகொண்டனர். இக்கூட்டத்தில் மேலும் தாமதப்படுத்தாமல் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கும் அரசாணையைத் தயாரிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டதாகத் தெரிய வருகின்றது.

நன்றி : தமுமுக இணையத்தளம்

பின் குறிப்பு : ஏற்கனவே மக்கள் டிவியில் தறுதலையின் நிர்வாகி ஒரு வர் போன்பூட்டு செருப்படி வாங்கிய மாதிரி விரைவில் ததஜவின் தன்மானத்தலைவன் கிரிமினல் பி.ஜே என்னை மலேசியாவில் கைது செய்ததால்தான் இட ஒதுக்கீடு கிடைத்தது என்றோ அல்லது 1 கோடி ரூபாய் கொடுத்து தமிம்அன்சாரி இட ஒதுக்கீட்டை வாங்கி விட்டார் என்றோ அறிக்கை விடலாம் அதை விளக்கி விளக்க பொதுக்கூட்டங்களும் நடத்தலாம்.கேக்குறவன் கேனயனா இருந்தா கேப்பையில நெய் என்ன தேனே வடியுதுன்னு கத வடுவாய்ங்கடோய்…..

கேள்விப்பட்டது : தமிழகத்திலோ இந்தியாவிலோ பெருகி வரும் கூலிப்படையினரால் வண்முறை மழிந்து விட்டனவாம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் போட்டுத்தள்ளிருவான்களாம் அந்த அளவிற்கு நமது நாட்டில் மனிதநேயம் சிதைந்துவிட்டதாக பத்திரிகைகளில் பேச்சு. இந்த நிலையில் முதலமைச்சர் கணவில் உலாவரும் தமிழகத்தின் தலைசிறந்த தறுதலை ஒன்ற தன்னை மலேசியாவில் கைது செய்வதற்கு ஒரு கோடி லஞ்சம் கொடுத்தார்கள் என்று தனது மூலை கழுவி விடப்பட்ட தொண்டர்களிடம் புலம்புவதாக கேள்வி.தறுதலைக்கும் தறுதலையின் தொண்டர்களுக்கம், ஒரு லட்சம் கொடுத்தால் உள்ளுரிலேயே சோழிய முடிப்பதற்கு ஆள் இருக்கும்போது எந்த கிறுக்கனாவது 2 நாளைக்கு ஒருத்தன கைது செய்வதற்கு ஒரு கோடி செலவு செய்வானுங்களா? மூலை உள்ளவனுக்கு விளங்கும் இல்லாதவன்லாம் விரைவில் தறுதலைக்காக தீக்குழிச்சாலும் குழிப்பாய்ங்க…

ஜூன் 12, 2007

கலைஞரின் கவனத்திற்கு….

Filed under: இட ஒதுக்கீடு, இந்திய தேசிய மக்கள் , IDMK — முஸ்லிம் @ 8:36 முப

முத்தமிழ் அறிஞர், தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் கவனத்திற்கு!

தாங்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் நிறைவு உரையின் போது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கேரளாவிலும், ஆந்திராவிலும் தருவார்களேயானால் நாமும் தரத் தயார் என்று பேசியது எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கும், எல்லோருக்கும் எல்லாம் இருக்கும் இடம் நோக்கிச் செல்ல என்ற புரட்சிக்கவியின் பாடலுக்கும் எதிரான கருத்து.


தமிழக முஸ்லிம்கள் தங்களை முதல்வராக்க வாக்குகளை அளித்திருக்கிறார்கள். தமிழக முஸ்லிம்கள் கேரள முதல்வருக்கோ, ஆந்திர முதல்வருக்கோ வாக்களிக்க வில்லை.


பெரியார் பாசறையில் படைக்கலனாய் மிளிர்ந்த நீங்கள் பொறுப்பான முதல்வர் பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பொறுப்பை தட்டிக் கழிப்பது முஸ்லிம்களாகிய எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அரசியல்வாதிகளுக்கு இரண்டு முகம் என்கிற கூற்று நினைவுக்கு வருகிறது.

நாங்கள் இந்தியக் குடிமக்கள், இனத்தால் திராவிடர்கள், மொழியால் தமிழர்கள், வழியால் முஸ்லிம்கள், நாங்கள் தமிழக அரசுக்கு வரி கொடுக்கிறோம், உலக அளவில் அண்ணியச் செலாவணியை ஈட்டித் தருகிறோம், தேர்தல் வாக்குறுதிகள் மீறப்படுவதற்கு மட்டுமே என்ற தங்களின் நிலையை மாற்றி முஸ்லிம் தலைவர்கள் ஏமாறலாம், முஸ்லிம்கள் ஏமாறத் தயாராக இல்லை, காரணம் நெருக்கடிகள் எங்களை நெறிபட வைத்திருக்கிறது.

டாக்டர் கலைஞர் அவர்களே! தமிழக அரசின் வாய்மை வென்றிட, வாக்களித்த எங்களுக்கு மரபுகளை மீறாமல் உரிய சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவன்
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தமிழ்நாடு.

ஜூன் 9, 2007

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு – நீதிபதிகளுடன் முதல்வர் ஆலோசனை

Filed under: இட ஒதுக்கீடு, தமிழக அரசு, முஸ்லிம்கள் — முஸ்லிம் @ 12:40 பிப


முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு: முதல்வர் ஆலோசனை

புதுதில்லி, ஜூன் 9: தமிழகத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் மு.கருணாநிதி.

மூன்று தினங்களுக்கு முன்பு முதல்வரின் இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், இடையூறுகள் இல்லாமல் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவருவது குறித்த பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன.

சில தினங்களுக்கு முன்பு, சிறுபான்மையினர் விழா ஒன்றில் பேசிய முதல்வர், ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு இருப்பதாகக் கூறப்படுவது உண்மையானால், தமிழகத்திலும் அவசர சட்டம் மூலம் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டுவரலாம் என்று தெரிவித்தார்.

அவசரச் சட்டம் எப்போது? அதன்படி, அவசரச் சட்டம் தொடர்பாக தமிழக அரசு பல புள்ளி விவரங்களைச் சேகரித்து, சட்டத்தை வடிவமைப்பதற்கான ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த அவசரச் சட்டத்துக்கு எந்த நேரத்திலும், இறுதி வடிவம் கொடுத்து அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ராஜஸ்தான் மற்றும் அண்டை மாநிலங்களில் குஜ்ஜர் இனத்தவர் தங்களை பழங்குடியினராக அறிவிக்குமாறு போராட்டம் நடத்தியதால், சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டு விஷயத்தில் தமிழக அரசு அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே இறுதி முடிவு எடுக்க உள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.

தற்போது, தமிழகத்தில் 69 சத இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படுகிறது. அதில், மிகவும் பிற்பட்ட சமூகத்தினருக்கு 30 சதம், பிற்பட்ட சமூகத்தினருக்கு 20 சதம் வழங்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு, மிகவும் பிற்பட்ட சமூகத்தினரின் 30 சதவீதத்தில் இருந்து 6 சதமும், கிறிஸ்தவர் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு, பிற்பட்ட வகுப்பினரின் 20 சதவீதத்தில் இருந்து 2 சதமும் எடுத்து, தனி இட ஒதுக்கீடு வழங்க முடியுமா என தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது.

இதுதொடர்பாக, பல்வேறு சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு ஆலோசித்திருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், மிகவும் பிற்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டில் 6 சதத்தை தியாகம் செய்ய பாட்டாளி மக்கள் கட்சி ஒப்புக்கொள்ளுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

எனவே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இப் பிரச்னை குறித்து விவாதிக்கலாமா என்று அரசு பரிசீலித்து வருகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தனி இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றலாமா என்றும் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது

இதற்கிடையில், குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்ய வரும் தமிழக முதல்வர், அடுத்த வாரம் தில்லியில் மூன்று நாள் தங்கியிருப்பார். அப்போது இந்த தனி இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

முதல்வரின் தில்லிப் பயணத்துக்குப் பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி : தினமணி

குறிப்பு : நேற்று கூட தமுமுக வின் மாநில பொதுச்செயலாளர் எஸ். ஹைதர் அலி அவர்கள் நெல்லையில் இட ஒதுக்கீட்டை வலியுருத்தி முஸ்லிம்களுக்கு உடணடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பேட்டியளித்தார்கள்.

எப்படியாவது கலைஞரின் இந்த ஆட்சிக் காலத்தக்குள் தனது வாக்குறுதியை நிறைவேற்றி முஸ்லிம்களின் கனவை மெய்ப்பிப்பாரா பார்ப்போம்.

சமயத்திற்கு பொருந்தி போவது போல் அருளடியான் என்பவர் ஒரு கட்டுரைக்கான தொடுப்பினை இன்று காலை எமக்கு அனுப்பியிருந்தார் அதையும் இங்கு பதிகின்றேன். வேறு வழியில்லையென்றால் முஸ்லிம்கள் இவரின் இந்த கருத்தையும் பரிசீலிக்கலாம். விடுதலை சிறுத்தை அண்ணன் திருமா வளவன் கூட முஸ்லிம்களுக்கு ஆதரவாகத்தான் உள்ளார்.ஏன் தலித்துகளும், கிருத்தவர்களும், முஸ்லிம்களும் சேர்ந்து ஒரு அணி அமைத்தால் என்ன? முஸ்லிம் அமைப்புகள் சிந்திக்குமா?

இந்த ஆட்சிக்குள் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லையென்றால் ஒவ்வொரு முறையும் முஸ்லிம் வாக்கு வங்கிகளை துரோகிகளுக்கு எந்த நன்மையுமின்றி திசை மாற்றுவதை விட்டு தமுமுக போன்ற அமைப்பகள் நேரடி அரசியலில் இரங்கி முஸ்லிம்களுக்கு குறிப்பிட்ட அளவு தொகுதிகளை பெறுவதும்தான் ஒரே வழி!! அதற்கு எடுத்துக் காட்டு உ.பி அரசியல். – முகவைத்தமிழன்

புதிய தமிழகத்தை ஆதரிப்போம்!!

வரும் மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் புதிய தமிழகம் வேட்பாளருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். தி.மு.க தன் வாக்குறுதிப்படி முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் நாள் தோறும் வாக்குறுதி கொடுத்து முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார். பா.ஜ.கவுக்கு எதிரணி என்ற அடிப்படையில் தான் நாம் தி.மு.கவுக்கு அதரவளித்தோமே தவிர தி.மு.கவுக்கான நம் ஆதரவு நிரந்தரமானதல்ல. மதுரையிலும், கரூரிலும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட திமுகவினருக்கு உரிய பாடம் கற்பிப்போம். இத்தேர்தலில், தி.மு.க ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளரை டெபாஸிட் இழக்கச் செய்வோம். மக்களவைத் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகே ஜெயலலிதா தன் மக்கள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற்றார் என்பதை நினைவில் வையுங்கள். சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஒரு நல்ல எதிர்கட்சியாகச் செயல்படவில்லை. மாறாக ஆளுங்கட்சிக்குப் போட்டியாக காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜால்ரா தட்டுகிறார்கள். இந்த ஒரு காரணத்துக்காகவே நாம் காங்கிரஸுக்கு வாக்களிக்க கூடாது.

கோவை சிறைவாசிகளின் விடுதலையிலும் முதலமைச்சர் அக்கறை காட்டவில்லை. எதிர் கட்சித் தலைவியான, ஜெயலலிதா முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. கோவை சிறைவாசிகளின் விடுதலைக்கு எதிராக உள்ளார்.

பா.ஜ.கவைப் பற்றி நாம் எதுவும் பேசத்தேவையில்லை. விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் நாம் இறைவனிடம் பாதுகாப்பு தேட வேண்டியது தான். விஜயகாந்த்தின் தே.மு.தி.கவுக்கு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பற்றியும், கோவை சிறைவாசிகள் விடுதலை பற்றியும் என்ன நிலைப்பாடு என்பது நமக்குத் தெரியவில்லை. எனவே, நாம் 1. காங்கிரஸ் (தி.மு.க) 2. அ.இ.அ.தி.மு.க 3. பா.ஜ.க 4. தே.மு.தி.க ஆகிய கட்சிகளூக்கு வாக்களிக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்கும், கோவை சிறைவாசிகள் விடுதலைக்கும் ஆதரவளிக்கும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளருக்கு முஸ்லிம் அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.

நன்றி : அருளடியான்

மே 28, 2007

இட ஒதுக்கீடு – 1 வாரத்தில் அவசர சட்டம் – கலைஞர்

//சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 7-வது மாநாடு நிறைவு விழாவில் அவர், தற்போது அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக இது வழங்கப்படும் என்றார். (www.msn.com) // (இங்குதான் இடிக்கின்றது!! இது சாத்தியமா? 69 சதவிகித இட ஒதுக்கீடு எப்போது கிடைக்கும்? அதில் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு? மற்ற மாநிலங்களில் இவ்வாறு வழங்கப்பட்டால் அன்றிலிருந்து ஒரு வாரத்தில்தான் சட்டமா? சந்தேகங்களை யாராவது நிவர்த்தி செய்வார்களா?)

சென்னை:””கர்நாடாகாவிலும், கேரளாவிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடுவழங்க ஒரு வாரத்தில் அவசரச் சட்டம் கொண்டுவரப்படும்,” என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாவது மாநாடு நிறைவு விழா சென்னையில் நேற்று நடந்தது. கவிஞர் அப்துல்ரகுமான் தலைமையில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு உமறுப்புலவர் விருது வழங்கப்பட்டது. தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா விருதினை வழங்கினார். ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான்கான் ஒரு லட்சம் ரூபாய் பரிசினை கருணாநிதியிடம் வழங்கினார். சாகித்ய அகடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான், அப்துல் ரகுமான், மு.மேத்தா ஆகியோரையும், இஸ்லாமிய எழுத்தாளர்களையும் முதல்வர் கருணாநிதி பாராட்டினார்.

விழாவில் கலைஞருக்கு பட்டயம் வழங்கியபோது

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:எனக்கு வழங்கப்படும் பரிசை பொதுநல நோக்கோடு செலவிடுவது தான் நான் கடைபிடிக்கும் முறை. இங்கு எனக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பரிசை ஐந்தாக பிரிக்கப்பட்டு பொறியியல் கல்லுõரிகளில் படிக்கும் ஐந்து இஸ்லாமிய மாணவர்களுக்கு அவர்களது பொருளாதார நிலைக்கு ஏற்ப வழங்கப்படும்.

கர்நாடகாவிலும், கேரளாவிலும் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என
கோரிக்கை விடப்பட்டது. கர்நாடகாவிலும், கேரளாவிலும் இடஒதுக்கீடு இன்னமும் நடைமுறைக்கு வரமுடியாமல் சட்ட சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வந்தது. குறுக்குப் பாதையில் செல்லும் சிலர் தடுத்தி நிறுத்தியிருக்கிறார்கள் என கேள்விப்பட்டேன்.கர்நாடாகாவிலும், கேரளாவிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவசரச் சட்டம் கொண்டுவரப்படும். அதற்கான ஆணை ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும். ஆளுநரும் அதில் கையெழுத்திடுவார்.

சதாவதானி செங்குதம்பி பாவலர் பெயரில் தபால்தலை விரைவில் வெளியிடப்படும்.ஈராக்கில் உயிர்கொல்லி ஆயுதங்கள் இல்லை என நிரூபித்தால் தாக்குதல் நடத்தப்படாது என புஷ் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாததால் அங்கு பெரும் படுகொலை நடந்தது. சதாமை இழந்தோம். இஸ்லாமிய சமுதாயத்திற்கு என்றும் நாங்கள் தோழர்கள் தான்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான்கான் பேசுகையில், “”இந்தியாவில் 15 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் பொருளாதார அடிப்படையில், கல்வியில், சமூக ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். இஸ்லாமியம் ஒரு மதம் மட்டுமல்ல, அது ஒரு சமூக அமைப்பு. மத அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முஸ்லிம்களுக்கு குறிப்பாக கல்வியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,” என்றார். இஸ்லாம், முஸ்லிம்

நன்றி : தினமலர்

குறிப்பு : பேச்சோடு நின்றுவிடாமல் இதை செயல் வடிவாக்க தமிழக முஸ்லிம் அமைப்புக்களும் திமுக வோடு கூட்டணியில் உள்ள தமுமுக வும் கர்நாடகத்திலும் கேரளத்திலும் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு உள்ளது என்பதை நிறுபித்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து கலைஞர் கூறியதுபோல் ஒருவாரம் அல்ல ஒரு வருடத்திற்குள்ளாவது இந்த அவசர சட்டத்தை கொண்டு வர முயல்வார்களா? – முகவைத்தமிழன்

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.