தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 1, 2008

இந்துத்துவா — பார்ப்பான் சுன்னத் செய்து கொண்டு, கையில் இசுமாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டு?

தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோர் இந்து மதத்தை நம்புகிறவர்கள்தான். அந்த மதத்தை தூக்கிப் பிடிப்பவர்கள்தான். ஆனால், அங்குதான் இந்து மதத்தின் கலாச்சார சின்னமாக கருதப்படுகின்ற இராமனை, எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தான் என்று கேட்க முடிகிறது.

இது வடநாட்டு பார்ப்பனர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது எப்பொழுதுமே ஒரு பிடிபடாத ஆச்சர்யம். இந்த ஆச்சர்யத்திற்கு காரணகர்த்தா அல்லது நாயகனின் பெயர்தான் தந்தை பெரியார்.

இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இந்துத்துவா எப்படி காலூன்றுவது. இதற்காக அவர்கள் கடைப்பிடிக்கின்ற உத்திகளில் ஒன்றுதான் கடந்த ஜனவரி மாதம் 24ந் தேதி தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில், மற்றும் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் இரவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது.சரி, குண்டு வைத்தது யார்?

சுலபமான பதில் இசுலாமியர்கள் என்பதுதான். இப்படித்தான் மக்கள் மனதில் பதிய வைக்கப் பட்டிருக்கிறது.

ஆனால், உண்மை என்ன? ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்தது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான்.

இந்த செய்தியை உள் வாங்கிக் கொள்ள வேண்டுமென்றால் 1948 ஜனவரி 30க்குச் சென்று திரும்ப வேண்டும்.

நாதுராம் கோட்சே என்ற மகாராஷ்டிரா சித்பவன் பார்ப்பான் சுன்னத் செய்து கொண்டு, கையில் இசுமாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக் கொன்றான். எதற்கு சுன்னத்? ஏன் பச்சை? பதில் மிகவும் எளிது.

இந்திய மக்களால் அதிகம். நேசிக்கப்பட்ட காந்தியை ஒரு இசுலாமியன் கொன்றான் என்ற வதந்தியைப் பரப்பி, அதன் மூலம் கலவரத்தை விதைத்து இசுலாமிய இனப் படுகொலையை அறுவடை செய்யலாம் என்பதுதான்.

சரி, இப்பொழுது கடந்த ஜனவரி மாதம் 24ந் தேதி நடந்த தென்காசி சம்பவத்திற்கு வருவோம். சம்பவம் நடந்த இடத்தில் புலனாய்வு அதிகாரிகள் முதலில் கைப்பற்றியது முசுலீம்களின் தொப்பிகள் சிலவற்றைத்தான்.

ஆனால், சங்கராச்சாரியை கைது செய்தது போல, தென்காசி சம்பவத்திலும் போலீசார் நேர்மையுடன் செயல்பட்டு இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த ரவி பாண்டியன், குமார், நாராயண சர்மா போன்றோரையும் இன்னும் சிலவரையும் கைது செய்தனர்.

அந்த வகையில் தமிழக அரசு சரியான நிலைப்பாடு எடுத்தது மிகவும் பாராட்டத்தகுந்தது.

குண்டு வெடித்தபோது அலறிய நாளிதழ்கள், குண்டு வைத்தது ஆர்.எஸ்.எஸ். காரர்தான் என்று தெரிந்ததும் பத்திரிகா தர்மம் பேசும் நாளேடுகள் அடக்கி வாசித்தன. இந்து நாளேடு கூட 18.2.2008 அன்று இந்த செய்தியை வெளியிட்டிருந்தது.

பிப்ரவரி 6, 2008இல் விடுதலையில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலக குண்டு வெடிப்பு குறித்து உளவுத் துறை விசாரணை செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஒரு முறை ஏற்படாதவண்ணம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும் 2002-ஆம் ஆண்டு, சதுமுகை என்னும் இடத்தில் விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், முனீஸ்வரன் சிலையை சிதைத்தும் இந்துத்துவாகாரர்கள் செய்த சதிச் செயலை தமிழர் தலைவர் ஞாபகப்படுத்தியிருந்தார்.

இதுமட்டுமா? முசுலீம்களின் வீட்டு முகவரியை குறித்து வைத்துக் கொண்டு, இந்துத்துவாவாதிகளால் கோர தாண்டவம் நடத்தப்பட்ட மும்பாய் கலவரம் ஆகட்டும், தொலைபேசி கையேட்டை கையில் வைத்துக் கொண்டு, காவல் துறை உதவியுடன் இந்துத்துவா பயங்கரவாதிகள் குஜராத்தில் நடத்திக் காட்டிய மனித நேயமற்ற படுகொலைகளும், இவை எல்லாம் எதைக்காட்டுகிறது என்றால், தென்காசி சம்பவத்தையோ, முத்துப்பேட்டை சம்பவத்தையோ எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதைத்தான்.

நடக்கப்போகும் மும்பை போன்ற, குஜராத் போன்ற கலவரங்களுக்கு கால் கோளாகத்தான் கருத வேண்டும். ஆக, கலவரங்களை விதைக்கவும், தூண்டவும், களத்தில் இறங்கி படுகொலைகளை நிகழ்த்தவும் மிகப்பெரிய நெட்வொர்க் ஒன்றை வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள் இயங்கி வருவதை இனிமேலாவது கவனத்தில் எடுத்துக் கொண்டு, இப்படிப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபடவேண்டும்.

அதற்கான அழுத்தத்தை மதசார்பற்ற அமைப்புகள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

தென்காசியில் நடந்த சம்பவத்தின் குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ்.காரரான குமார் பாண்டியனின் வாக்கு மூலம் நமது கருத்துக்கு மேலும் வளம் சேர்க்கிறது. தனது வீட்டில் 4 பேர் பலியான போதும், இந்துக்களிடம் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை. குண்டுவெடித்தத்தின் நோக்கமும் நிறைவேறவில்லை என்கிறார் கூறுகிறது.

இதுதான் அவர்கள் எதிர்பார்ப்பது. ஆனால், இது தமிழ்நாடு என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். பகுத்தறிவு பாதையில் இந்த மண் பண்பட்டு வெற்றி நடைபோட்டுக் கொண்டிருப்பதை இன்னமும் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதை எப்படியாவது மாற்றியமைத்திட வேண்டுமென்று தான் இந்துத்துவாதிகள் இப்படிப்பட்ட தொடர் நிகழ்வுகளை (குண்டுவெடிப்பு, கலவரங்கள்) நிகழ்த்தி வருகின்றனர்.

சில அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இரு சமுதாயங்களுக்கிடையே மத ஒற்றுமை என்பதைக் காட்டிலும் தங்களின் வாக்கு வங்கி சிதறக்கூடாது என்பதிலிலேயே குறிக்கோளாக இருந்து வருகின்றன.

அதே போல, இந்துத்துவாவாதிகளின் சித்தாந்தத்தின் இடுப்பை முறித்துப் போடுகின்ற வலிமையை, சுயமரியாதை இயக்கங்களுக்குப்பிறகு, பொதுவுடைமை இயக்கங்களுக்கு இருப்பதால் ஆர்.எஸ்.எஸ்.ன் பார்வை சமீப காலங்களில் பொதுவுடைமை இயக்கங்களின் அலுவலகங்களுக்கு குண்டு வைப்பதும், பொதுவுடைமை இயக்கங்களின் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் என்று தனது ஆக்டோபஸ் காரங்களை நீட்ட ஆரம்பிக்கிறது.

பந்தடிக்க துப்பில்லை என்பதால், நன்றாக ஆடுபவர்களின் கால்களைத் தாக்குவது என்ற போக்குதான் இது.

இதற்கு அத்தாட்சிதான் புதுடில்லியிலும், புனே உள்ளிட்ட இடங்களில் மார்க்ஸ்ட் அலுவலகங்கள் மீதும், தொண்டர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள்.

இவர்கள் நீட்டி முழக்குகின்ற இந்துத்துவா கொள்கையில் இராமன் பிறந்த இடமென சொல்லப்படுகின்ற உத்திர பிரதேசத்திலே பாபர் மசூதியை இடித்தும்கூட, இந்துத்துவா கொள்கையை நிலைநாட்ட முடியாமல் தனது கோர பற்களை தென்னகத்தில் காட்ட ஆரம்பித்துள்ளன.

இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட ஒரு இயக்கம் நடத்திய தென்காசி குண்டு வெடிப்பு நாளேடுகளால் புறக்கணிக்கப்பட்ட பிறகு, இதன் பின்னணியைப் பற்றி மக்களும், அரசுக்கும் தெரிவிக்க வேண்டிய கடமையை, அ.மார்க்ஸ், கோ. ககுமாரன், ரஜினிகாந்த் (வழக்குரைஞர்), உதயம் மனோகரன், சீனி சுல்தான், தமயந்தி, செங்கொடி, அப்துல் ரஹ்மான், ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட உண்மை அறியும் குழு சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து அதை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.

தென்காசி சம்பவத்தில் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த ரவி பாண்டியனுக்குச் சொந்தமான கேபிள் டி.வி. அலுவலகத்தில் வைத்து குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அமோனியம் நைட்ரேட், ஜெலட்டின் குச்சிகள் ஆகியவற்றுடன் 90 பேட்டரியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கக் கூடியதாக இவை தயாரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 குண்டுகள் தயாரிக்கப்பட்டு இரண்டிரண்டாக 7 செட் குண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடையநல்லூர் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிவா என்கிற சிவானந்தன் தேவையான அமோனியம் நைட்ரேட் கொண்டு வந்து தந்துள்ளார்.

இந்த சதித்திட்டத்தை சரியான வகையில் அடக்கி ஒடுக்காவிட்டால் தென்காசி இன்னொரு கோவை ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

அதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள சிறு நகரம் முத்துப்பேட்டை. சுமார் 10,000க்கும் மேற்பட்ட முசுலீம்கள் இவ்வூரில் வசிக்கின்றனர். பல காலமாக இருதரப்பினரும் ஒற்றுமையாக, பிரச்சனைகள் ஏதுமின்றி அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வந்துள்ளதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

எனினும் கடந்த 15 ஆண்டுகளாக, அதாவது வினாயகர் ஊர்வலம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அங்கே கலவரங்கள் நடைபெற்று வருகின்றன.

முத்துப்பேட்டை நகரத்திற்குள் நெருக்கடியான சந்துகளில் அமைந்துள்ள முசுலீம் வீடுகள், பள்ளிவாசல்கள் வழியாகவே வினாயகர் ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன.

நெருக்கமான முசுலீம் வீதிகளில் பட்டாசுகளைக் கொளுத்துதல், துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியை கட்டு இந்து நாடு இந்து நாடு, இந்து மக்கள் சொந்த நாடு -என்பது போன்ற முழக்கங்கள் இட்டுச் செல்லுதல், பள்ளி வாசல்களில் செருப்பு முதலானவற்றை வீசுதல். இவற்றின் விளைவாக முசுலிம் இளைஞர்கள் ஆத்திரப்பட்டு எதிர்வினையாற்றல், அதை ஒட்டி முசுலீம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுதல். இவை தொடர் கதையாகிவிட்டது.

இந்த நாடு இந்து நாடு, இந்து மக்கள் சொந்த நாடு – என்ற முழக்கம் தவிர, ராமர் கோயில் கட்டுவோம் – என்கிற முழக்கம் உட்பட மற்ற அனைத்தையும் அனுமதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

(ரிட் எண் 28996/2005) எனினும் தடுக்கப்பட்ட இந்த முழக்கம் உட்பட வழக்கமான இழிவான முழக்கங்களையும் ஊர்வலத்தினர் முழங்கியதோடு பட்டாசுகளையும் வெடித்துள்ளனர்.

இது மட்டுமா, முத்துப்பேட்டை காவல் நிலையத்தின் மீதே இந்துத்துவா சக்திகளால் குண்டு வீசப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையில் சர்வ கட்சியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகளும், காவல் துறையும் சேர்ந்து அமுக்க முனைவதையும், பிரச்சினையை பெரிதுபடுத்தினால் இந்துத்துவா சக்திகள் சமூக நல்லிணக்கத்தை கெடுப்பார்கள் என அரசியல் பிரமுகர்கள் சொல்லி தமது ஜாதிக்காரர்களான வன்முறையாளர்களை காக்க முனைவதையும்,

முசுலீம்கள் செய்ததாக செய்தியை பரப்பும் நோக்கில் இந்த குண்டு வீசப்பட்டிருப்பதையும் உண்மை அறியும் குழு கண்பிடித்திருக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இது போன்ற சம்பவங்களை ஊக்குவிப்பதற்கு காரணமாக அமைந்து வினாயகர் பொம்மை ஊர்வலம்தான். அது தடை செய்யப்பட வேண்டும்.

தேவையானால், நூற்றாண்டு பாரம்பரியமிக்க தமது தர்ஹா ஊர்வலங்களையும் கூட நிறுத்திக் கொள்வதற்கு முசுலீம்கள் தயாராக உள்ளதாக உண்மை அறியும் குழு அறிவித்திருக்கின்றனர்.

ஆகவே, இந்த தென்காசி, முத்துப்பேட்டை சம்பவங்கள் இன்னுமொரு மும்பை, குஜராத், கோவை கலவரப் பிரச்சினை விதம் என்பதை உணர்வைத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

அத்தகைய நிலையை எட்ட வேண்டிய மதசார்பற்ற அமைப்புகள் தகுந்த அழுத்தத்தையும், ஆதரவையும் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமானதும், அவசரமானதும் ஆகும்.
http://unmaionline.com/20080402/pa-08.html

ஜனவரி 3, 2008

வர்ணாசிரம கிரிமினல் இராமனும் ஹவாலா கிரிமினல் வேதாந்தியும்1

வர்ணாசிரம கிரிமினல் இராமன்!
ஹவாலா கிரிமினல் ராம்விலாஸ் வேதாந்தி!

“இராமனை இழிவுபடுத்தி இந்துக்களைப் புண்படுத்திய கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும், நாக்கை அறுக்க வேண்டும். அப்படிச் செய்பவருக்கு எடைக்கு எடை தங்கம் தரப்படும்” என்று பார்ப்பனத் தினவெடுத்துப் பேசிய வேதாந்தி என்ற சாமியார் யார்? “

“அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. யாரோ ஒருவர் பேசியதற்காக எங்களைத் தாக்குவது என்ன நியாயம்?” என்று இராம.கோபாலன், இல.கணேசன், ராஜா என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் முழுவதும் ஒரே குரலில் புளுகுகிறது. வேதாந்தி பேசியதை விட இந்தப் பித்தலாட்டம்தான் மிகப்பெரிய அயோக்கியத்தனம். இதற்காக இன்னொருமுறை இந்தக் கும்பல் முழுவதையும் நிற்க வைத்து உரிக்கவேண்டும்.

ராம் விலாஸ் வேதாந்தி. 1984 முதல் விசுவ இந்து பரிசத்தின் தலைமைக்குழுவான மார்க்க தர்ஷக் மண்டலின் (இந்துக்களுக்கு நன்னெறி காட்டும் குழு) உறுப்பினர்; 1990 முதல் ராம ஜன்மபூமி டிரஸ்ட் உறுப்பினர்; 1996, 98இல் உ.பி. மாநிலம் பிரதாப்கர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர். மத்திய அரசின் ரயில்வே குழு, நகர்ப்புற வளர்ச்சிக் குழு, சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர். இவை அனைத்துக்கும் மேலாக, முஸ்லிம்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கும் உமாபாரதி, ரிதம்பரா வகையைச் சேர்ந்த நட்சத்திரப் பேச்சாளர். சமீபத்திய உ.பி. சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்காகப் பிரச்சாரம் செய்த முன்னணிப் பேச்சாளர். எல்லாவற்றுக்கும் மேலாக, பாபர் மசூதி இடிப்பையும் மதக்கலவரத்தையும் தூண்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 11 பேரில் ஒருவர். இந்த வேதாந்தியைத்தான் “யாரோ, எவரோ; எங்களுக்குத் தெரியவே தெரியாது” என்கிறார்கள், இந்தப் பார்ப்பன யோக்கிய சிகாமணிகள்.

“இராமன் ஒரு கற்பனைப் பாத்திரம்” என்று கருணாநிதி சொன்னவுடனே குமுறி எழுந்த இந்த சாமியார், “உண்மையிலேயே ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட பக்தனாக இருக்கலாமோ, அதன் காரணமாகக் கோபத்தில் வரம்பு மீறிப் பேசியிருக்கக் கூடுமோ” என்று வாசகர்கள் யாரேனும் நினைத்துக் கொண்டிருந்தால், அது மடமை. இந்த வேதாந்தி ஒரு தொழில்முறைக் கிரிமினல்.

“பிள்ளைவரம் தருகிறேன், புதையல் எடுத்துத் தருகிறேன்” என்று கூறி பாமர மக்களையும் பெண்களையும் நாசமாக்கி, பிறகு மாட்டிக்கொண்டு தரும அடி வாங்கி உள்ளே போகும் “கீழ்சாதி” லோக்கல் சாமியார் அல்ல இந்த வேதாந்தி. மக்களின் மத நம்பிக்கையை மதவெறியாக மாற்றி, அந்த மதவெறியை டாலராக மாற்றிக் குவித்து வைத்திருக்கும் ஒரு சர்வதேசக் கிரிமினல். கையும் மெய்யுமாகப் பிடிபட்ட பிறகும், இன்னமும் கம்பி எண்ணாமல் வெளியில் இருந்து ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் அரசியல் செல்வாக்குள்ள கிரிமினல்.

மதத்தை வைத்து “பிசினெஸ்” நடத்தும் சாமியார்களை அம்பலப்படுத்துவதற்காக “கோப்ரா போஸ்ட்” என்ற இணையதளம் புலனாய்வு நடவடிக்கை ஒன்றில் இறங்கியது. அதில் சிக்கிய மூன்று சிகாமணிகளில் வேதாந்தியும் ஒருவன். முதலாளிகள் போல நடித்து வேதாந்தியை சந்தித்த இந்தச் செய்தியாளர்கள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க வேதாந்தியிடம் பேரம் பேசுகிறார்கள். ரகசியக் கேமராவில் பதிவு செய்யப்பட்ட இந்த பேரத்தை கடந்த மே 4ஆம் தேதியன்று ஒளிபரப்பியது, “ஐ.பி.என்7” தொலைக்காட்சி. ஒளிபரப்பான அந்த உரையாடலைக் கீழே தருகிறோம்.

வேதாந்தி: எனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும்?

நிருபர்கள்: நீங்கள் விரும்பியபடி…

வேதாந்தி: இல்லை, எனக்கு எவ்வளவு தருவீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும்; ஒருவேளை 5 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை நீங்கள் மாற்றுவதாக இருந்தால் எனக்கு எவ்வளவு கிடைக்கும்?

நிருபர்கள்: உங்களுக்கு 1.5 கோடி…

வேதாந்தி: இல்லை; 3 கோடியை வாங்கிக் கொண்டு எனக்கு 2 கோடியைக் கொடுங்கள்!

நிருபர்கள்: எங்களுக்கும் இலாபம் வேண்டாமா?

வேதாந்தி: சரி,சரி; எனக்கும் கமிஷன் வேண்டாமா? இப்படிக் கருப்புப் பணத்தை மாற்றுவதற்கு எனது ட்ரஸ்ட் பணத்தை பயன்படுத்துவதற்கு நான் யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. இருப்பினும் எனது ஆடிட்டரிடம் கலந்தாலோசிக்கிறேன். அயோத்தி வாருங்கள், எல்லாவற்றையும் முடித்து விடலாம்.

நிருபர்கள்: ராமஜன்மபூமி டிரஸ்ட்டுக்கு நீங்கள்தானே தலைவர்?

வேதாந்தி: ஆமாம், ஆனால் உங்கள் பணத்தை அதில் போட்டால் மீள எடுப்பது சிரமம். ஏனெனில் அது ஒரு சர்வதேச ட்ரஸ்ட். சி.பி.ஐ.யும், ஐ.பி.யும் (உளவுத் துறைகள்) அதன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள்.

நிருபர்கள்: ஆனால் உங்கள் ட்ரஸ்ட்டுக்கு எதுவும் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லையே?

வேதாந்தி: இல்லை, இந்த வேலைக்காகவே “மாத்ரி சேவா ட்ரஸ்ட்’ என்று ஒன்றைத் தனியாக உருவாக்கி வைத்திருக்கிறேன்.

(ஆதாரம்: watch the video: http://www.ibnlive.com/videos/39845/money-launderer-leads-ram-temple-trust.html )

இந்த உரையாடலை ஒளிபரப்பிய ஐ.பி.என். தொலைக்காட்சி, அதன் பிறகு இதே வேதாந்தியிடம் நேர்காணல் எடுக்கச் சென்றது. உடனே, “தேசவிரோத முசுலீம் தே….. மகன்கள்தான் எனக்கெதிராக இந்தச் சதியை நடத்தியிருக்கிறார்கள்” என்று வெறி கொண்டு கத்தினான், இந்தக் களவாணி. அதிர்ச்சியடைந்த அந்தச் செய்தியாளர், “நீங்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவதால் மேற்கொண்டு நேர்காணல் நடத்த முடியாது” என்று கூறி பேட்டியை நிறுத்திக் கொண்டார். இந்த விவகாரமும் அம்பலத்துக்கு வந்து சந்தி சிரித்தது. உ.பி சட்டமன்றத் தேர்தல் நடக்க இருந்த தருணத்தில் இந்த விவகாரம் சந்தி சிரித்த போதிலும், இந்தக் காவி உடைக் கிரிமினலைச் சங்கப் பரிவாரங்கள் கைவிடவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது.

இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது ராமர் சேது விவகாரத்தில் கருணாநிதிக்கு எதிராகக் கொட்டி முழக்கி வருபவருமான ரவிசங்கர் பிரசாத், ” உங்கள் தொலைக்காட்சியில் அடிபடும் பெயர்களுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் மிகவும் மதிப்பிற்குரியவர்கள். எனவே இந்த இரகசிய காமரா ஒளிபரப்பின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு ஐயமாக இருக்கிறது” என்றார். விசுவ இந்து பரிஷத்தின் துணைத் தலைவர் கிரிராஜ் கிஷோரோ, “இந்த இரகசிய கேமரா நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? இதில் ஏன் இந்துக்கள் மட்டும் குறி வைக்கப்படுகிறார்கள்?” என்று மடக்கினார். “கருணாநிதி இராமனை மட்டும் விமரிசிக்கிறாரே, மற்ற மதத்தினரை விமரிசிக்காதது ஏன்?” என்று இப்போது கேட்கிறார்கள் அல்லவா, அதே கேள்விதான் கிரிராஜ் கிஷோரின் கேள்வியும்.

“கேமரா ஒளிபரப்பு மேல் சந்தேகமாக இருக்கிறது; எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறாய்? இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டது” என்று கலர் கலராகக் கூச்சலிட்டது ஆர்.எஸ்.எஸ். பரிவாரம். “எங்கள் வேதாந்தி சொக்கத் தங்கம். அவர் முற்றும் துறந்த முனிவர். வேண்டுமானால் அவருடைய டிரஸ்டுகளையும் எங்களுடைய டிரஸ்டுகளையும் வருமான வரித்துறை ஆய்வு செய்து பார்க்கட்டும்” என்று ஒரு யோக்கியன் பேசவேண்டிய பேச்சை மட்டும் “அவாள்” பேசவே இல்லை.

“இராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான்?” என்ற கேள்வியைப் போலவே, “உங்கள் டிரஸ்டில் இத்தனை பணம் எப்படி வந்தது?” என்ற கேள்வியும் கூட இவர்களுடைய மத உணர்வைப் புண்படுத்துகிறது போலும்! ராம ஜன்ம பூமி, ராமர் பாலம் மட்டுமல்ல; ராம ஜன்ம பூமி டிரஸ்டில் உள்ள கறுப்புப் பணமும் கூட இந்துக்களின் மத நம்பிக்கை சார்ந்த விசயம் போலும்! இந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கினால், தலையை வெட்டுவார்கள், நாக்கை அறுப்பார்கள், அதை செய்து முடிப்பதற்கு எடைக்கு எடை தங்கமும் கொடுப்பார்கள் இந்தத் “துறவி”கள்!

வருமான வரித் துறையின் முன்னாள் ஆணையர் விஸ்வபந்து குப்தா இந்த உத்தம புத்திரர்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இந்த வேதாந்தி விவகாரத்தில் உடனே கிரிமினல் குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ராம ஜன்ம பூமி நிவாஸ், விசுவ இந்து பரிஷத் இரண்டும் மதரீதியான மாஃபியாக் குழுக்களாகும். அவர்கள் ஒரே முகவரியிலிருந்து சுமார் பத்து போலியான ட்ரஸ்ட்டுகளை நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஐம்பது வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது. இதற்கு வரி விலக்கும் பெறுகிறார்கள். ஆனால், எதற்கும் முறையான கணக்கு வழக்கு கிடையாது. இவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 10,000 முதல் 15,000 கோடி ரூபாய் வருகிறது என்று நாங்கள் கணக்கிட்டிருக்கிறோம்… மதவெறியைப் பரப்புவதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள்.”

வேதாந்தி ஒரு விதிவிலக்கல்ல. வேதத்துக்கு அந்தமில்லை என்று “அவாள்” சொல்வதைப்போல, சங்க பரிவாரம் முழுவதும் முடிவில்லாமல் நிறைந்திருக்கிறார்கள் வேதாந்திகள். இந்தக் காவி உடை மாஃபியா கும்பல் தன்னை ஒரு கட்சி என்று சொல்லிக் கொள்கிறது. கடத்தல், கஞ்சா, ஆயுதம் என்ற சரக்குகளைப் போல, இந்த மாஃபியா கும்பல் கையாளும் விற்பனைச் சரக்கு மதம்.

இந்த பேட்டியை வைத்தே வேதாந்தியைக் கைது செய்யலாம் என்கிறார், குப்தா. பொதுத்தொலைபேசியிலிருந்தும், மின்னஞ்சல் மூலமும் கொலை மிரட்டல் விடும் கிறுக்குப் பயல்களையெல்லாம் சிறப்புப் படை அமைத்துத் தேடிப் பிடிக்கிறது போலீசு. ஆனால், ஒரு முதலமைச்சரைக் “கொலை செய்” என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கும் வேதாந்தி மீது வழக்குப் பதிவு செய்யக்கூட அஞ்சுகிறது. குப்தா கூறுவது போல வேதாந்தியை உள்ளே தள்ளுவது இருக்கட்டும், மாத்ரி டிரஸ்ட்டில் ஒரு சோதனை நடத்துவதற்குக் கூட நிதியமைச்சகம் உத்தரவிடவில்லை என்பதே உண்மை.

“தேவதூஷணம் செய்பவனின் நாக்கை அறுக்க வேண்டுமென்று” பகவத் கீதை சொல்கிறதாம். நோட்டு மாற்றுபவனுக்கு கிருஷ்ண பரமாத்மா என்ன தண்டனை தரச் சொல்கிறார்? தெகல்காவின் கேமரா முன் லஞ்சம் வாங்கிப் பிடிபட்ட பங்காரு லட்சுமணனைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கியது பாரதிய ஜனதா. ஆனால், வேதாந்தி மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. அவர் விசுவ இந்து பரிசத்திலேயே இல்லையென்று கூசாமல் புளுகுகிறது. “சூத்திரன் திருடினால் சிரச்சேதம், பார்ப்பான் திருடினால் சிகைச் சேதம்” என்பதல்லவோ மனுநீதி!

செப்30 தேதியிட்ட ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் “நான் கருணாநிதிக்கெதிராகச் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை” என்று திமிராகப் பதிலளித்திருக்கிறான் வேதாந்தி. பா.ஜ.க.வினரோ, “அதான் வாபஸ் வாங்கிவிட்டாரே, அப்புறம் ஏன் அடிக்கிறீர்கள்?” என்று நியாயம் பேசுகிறார்கள்.
எந்தக் காலத்திலும் நல்ல பாம்பு நஞ்சை வாபஸ் வாங்கியதில்லை; வாங்கவும் முடியாது. அதை அரைகுறையாக அடித்துத் தப்ப விடுவதுதான் ஆபத்து!

நன்றி: புதிய ஜனநாயகம், அக்டோபர் 2007

நன்றி : இறைநேசன்

நவம்பர் 8, 2007

நரபலி நரேந்திரமோடி ஆட்சியை அகற்று! தூக்கிலிடு!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

நரபலி நரேந்திரமோடி ஆட்சியை அகற்று! தூக்கிலிடு!!

இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதலாய் இந்திய இஸ்லாமிய சமுதாயம் சந்தித்து வரும் பிரச்சனைகள் ஏராளம் ஏராளம்! கலவரங்களின் மூலம் கொல்லப்பட்ட உயிர்களையும், பொருட்களையும் கணக்கெடுக்க முடியாத அளவிற்கு இந்த சமுதாயம் இன்னல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்களும், அரசுத்துறைகளும் தான் இதற்கு பொறுப்பு என்பதை உறங்கிப்போன விசாரணை கமிஷன்களே சாட்சி.

இதே அடிப்படையில்தான் 2002 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தலைவிரித்தாடிய குஜராத் இனப்படுகொலை.பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டது.கர்ப்பிணிகள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள் உட்பட எந்த ஒரு முஸ்லிமும் தப்பவில்லை. 2 மாதங்கள் சட்டம்ஒழுங்கு சீர்கெட்டு இந்திய இறையாண்மையே சீரழிக்கப்பட்டது. பார்ப்பனீய சமுதாயத்தின் கைகளில் மொத்தமாக
சிறைபட்டு கிடக்கும் எல்லா மீடியாக்களும் கோத்ரா ரயில் எரிப்பிற்கான எதிர்வினைதான் என்ற பொய்யையே பரப்பியது.

ஆனால் அப்போது முதலே கோத்ரா ரயில் எரிப்பிற்கும் முஸ்லிம்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இந்த இனப்படுகொலை ஒரு திட்டமிட்ட சதியே என மனித நீதிப்பாசறை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை இயக்கங்களும், ஆர்வலர்களும் சொல்லியவண்ணம் இருந்தனர்.

இதுதான் உண்மை என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இதை நடத்தியவர்களின் வாய் வாக்குமூலங்களின் வழியே! தெஹல்கா பத்திரிகை நடத்திய ரகசிய விசாரணையின் மூலம் இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது. வீடியோ படங்களின் வழியே RSS, VHP, பஜ்ரங்தள் இந்துத்துவ பயங்கரவாதிகளின் கொடூர முகம் உலகமெங்கும் அகோரமாய் காட்சி அளிக்கிறது.

கூட்டம் கூட்டமாய் முஸ்லிம்களை கொலைசெய்ய உற்சாகமூட்டியதும், பொருளாதாரத்தை சூறையாட ஆலோசனை வழங்கியதும் நரேந்திரமோடியின் நேரடி உத்தரவுகளே! மேலும், முஸ்லிகளை கொலை செய்தவர்களையும், அவர்களை கற்பழித்தவர்களை பாராட்டி பாதுகாப்பும் அளித்ததும் இந்த நரேந்திர மோடியே தான்.

மட்டுமல்லாமல் மூன்று நாட்களுக்குள் எல்லாவற்றையும் முடித்துவிடுங்கள். அதற்கு பிறகு சட்டம் ஒழுங்கை நான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்று ஆலோசனையை வழங்கியது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆனாலும் மூன்று நாட்களுக்குள் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராமல் 2 மாதத்திற்கும் மேலாக இனப்படுகொலையை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரேந்திரமோடியின் உதவியுடன் தாங்கள் செய்த படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் பெருமையுடன் விவரிக்கும் காட்சிகளை காணும் யாருமே அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியாது.

தெஹல்கா ரகசியமாக படம் பிடித்த வீடியோ காட்சிகளில் ஒவ்வொருத்தரும் தாங்கள் செய்த செயல்களை விபரமாக எடுத்துச் சொல்லிடும்போது நடந்த அக்கிரமங்கள் அனைத்தும் நம் கண்முன்பாக வருகின்றன. இத்தகைய கொடூரங்கள் அனைத்தையும் அவர்கள் தங்களது வீர சாகசங்கள் போன்று விபரிப்பது அவர்கள் பயிற்றுவிக்கப்பட்ட சங்பரிவாரத்தின் கொலைமுகத்தை தெளிவாகவே காட்டுகிறது. ஆனால் இவை அனைத்தும் முதல்வர் நரேந்திர மோடியின் ஆமோதிப்பின் பேரில் நடந்ததுதான் அக்கிரமத்திலும் அக்கிரம்.

இந்த கொடியவன் நரேந்திரமோடி மனிதகுலத்திற்கே ஒரு அவமானம். அவன் முதல்வராய் இருப்பது என்பது இந்திய இறையாண்மை செத்துப்போனதையே நமக்கு அறிவிக்கிறது. மத்திய அரசு உடனே தெஹல்காவின் வீடியோக்களை பரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

உடனடியாக குஜராத் அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அங்கு அமுல்படுத்த வேண்டும். மேலும் இந்த கொடிய செயல்களை முன்னின்று நடத்தி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றொழித்த நரேந்திர மோடியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அவனை தூக்கிலிட வேண்டும். மனிதாபிமானம் இன்னும் மீதமிருக்கிறது என்பதை நிரூபிக்க இது ஒன்றுதான் தற்போதைய தீர்வாகும்.

வெளியீடு : தம்மாம் இந்தியா ஃபிரெடர்னிடி ஃபோரம்

நவம்பர் 4, 2007

பாரத் மாதா கி………. ஆதார வீடியோ!

பாரத் மாதா கி………. ஆதார வீடியோ!

ஒரு மாதாவை உதைத்துத் தள்ளிக் கொண்டே “பாரத் மாதா கி ஜே” வாம். பாருங்கள்.

இதனைத் திமிர் என்பதா? வெறி என்பதா? பயங்கரவாதச் செயல் என்பதா?

அடக் கூறுகெட்ட நாதாறிப்பயல்களே, சிந்திப்பதற்கான மூளை என்ற சாதனம் ஒரு கிராம் கூட உங்களுக்கு இல்லையா?

பெண்கள் இடுப்பு மேல் ஆடையணிய வந்தேறிப் பார்ப்பனப் பன்னாடைகளால் தடை விதிக்கப்பட்டிருந்த கேரள மண்ணில் இதுவும் நடக்கும்; இன்னமும் நடக்கும்.

நன்றி : இறை நேசன்

பின்குறிப்பு: என் இந்தத் தொடர் பதிவுக்குக் கொடுத்த, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் மனதில் ஆழப்பதிக்க வேண்டிய வார்த்தையான “பாரத் மாதா கி ஜே” என்ற சொல்லை தலைப்பில் கொடுத்ததை சகோதரர் ரத்னேஷ் அவர்கள் கடுமையாகக் கண்டித்துப் பதிவு போட்டுள்ளார். அவரின் உணர்வினை நான் மதிக்கின்றேன்.

ஆனால் அதே சமயம் கூர் தீட்டப்பட்ட வாள்கள் குறிவைத்துக் கொண்டிருக்கும் கழுத்துக்களைப் பொறுத்தவரை வெறும் வாயிலிருந்து உதிர்க்கும் இவ்வார்த்தைகளுக்கு எவ்வித மதிப்பும் இல்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சாதாரணத் தாயை மதிக்கத் தெரியாத அல்லது முடியாத இந்த நாய்கள் தான் நம் இந்தியத் தாயைப் பாதுகாக்கப்போகின்றனவா? யாரை ஏமாற்றுகின்றார்கள் இந்த இரத்தக்காட்டேறிகள். ஒரு வயதான மூதாட்டியைக் கூட(அட அதுவும் இவன்கள் பாதுகாக்கப்போகும் அதே ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தத் தாய்) விட்டு வைக்காத இந்தப் புல்லுருவிகள், பொறுக்கி நாய்கள், மிருகத்தை விடக் கேவலமானப் பிறப்புகள் இந்தியாவுக்குத் தேவையா?

//கவனம் ஈர்ப்பதற்காகவோ, பகையுண்ர்வின் வெளிப்பாடாகவோ நம்பிக்கைகளைத் தாண்டிய புனித உண்மைகளில் கை வைக்க வேண்டாம் என்று அப்படித் தலைப்பிட்ட நண்பருக்கு வேண்டுகோள் விடுப்பதுடன், தலைப்பிற்கான என் கடுமையான கண்டனங்களையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.//

நம்பிக்கைகளைத் தாண்டியப் புனித உண்மை என்பது பெற்றத் தாய்தான் என்பதும், வெறும் மண்ணல்ல என்பதுவுமே என் பதிவும் கூற வருகின்றது. அப்படிப்பட்ட புனிதத் தாய்மையையே மிதித்துக் குப்புற வீழ்த்தும் இந்த வெறி மிருகங்கள் கண்ட இடத்தில் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்பதும், இப்படிப்பட்ட ஜாட்டான்களுக்கு என் இந்தியத் தாய்க்கு ஜே போட எந்த அருகதையும் இல்லை என்பதையும் உணர்த்துவதுமே என் பதிவின் நோக்கம்.

அல்லாமல் தாங்கள் குறிப்பிடுவது போன்று, வெறும்//கவனம் ஈர்ப்பதற்காகவோ, பகையுண்ர்வின் வெளிப்பாடாகவோ// அல்ல என் பதிவுகள். ஒரு வந்தேறிப் பார்ப்பனப் பன்னாடைக்கும் எனக்கும் தனிப்பட்ட விதத்தில் என்னப் பகை. எனக்கு ஒருப் பகையும் இல்லை. ஒரே தாய் தந்தையிலிருந்து தான் இவ்வுலக மனிதர்கள் எல்லாம் விரவிப்பரவியுள்ளனர் என்பதில் வெறும் வார்த்தையளவில் இல்லாத முழு நம்பிக்கை வைத்துள்ள சமுதாயத்தில் உள்ள எனக்கு மேற்கண்ட இரத்தக்காட்டேறிகளுடன் தனிப்பட்ட விதத்தில் பகை வைத்துக் கொள்ள என்னப் பிரச்சனை உள்ளது?.

ஒன்றும் இல்லை – ஒன்றெ ஒன்றைத் தவிர.

சக மனிதர்களை குறைந்த பட்சம் மனிதர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இது மட்டுமே எனக்கும் இந்த இரத்த வெறிப்பிடித்த நாய்களுக்கும் இடையிலான பகையின் அடிப்படை. இந்த வெறி மிருகங்கள் அவ்விதம் சக மனிதர்களை மதிப்பது வரை அல்லது இங்கிருந்து அடித்து விரட்டப்படும் வரை(அது மற்றோர் இடத்துக்கு ஆனாலும் சரி! அல்லது ஒரேயடியாக ஆனாலும் சரி!) இப்பகைத் தொடரும்.

ஒன்றில் திருந்த வேண்டும்; அல்லது ஒரேயடியாக ஒழிய வேண்டும்.

அமைதிக்கு இலக்கணமான, சாத்வீக இந்தியாவில் இரத்த வல்லூறுகளுக்கு இடமில்லை!

நவம்பர் 1, 2007

வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் (PART-III)

நிராயுதபாணிகளான அப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்! – வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள்- 3

பகுதி-1, பகுதி-2

கோத்ராவிற்க்கப்புறம் குஜராத்தில் நடந்தது தற்செயல் அல்ல. ஏதோ கட்டுப்படுத்த முடியாத, திட்டமிடப்படாத சமூக வன்முறையுமில்லை. வேண்டுமென்றே ஒரு இன மக்களை அழிக்கப் போடப்பட்ட செயல் திட்டம். ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட படுகொலைகள்.

திட்டமிட்டபடி, தொலை நோக்குப்பார்வையுடன் நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற எந்த வித்தியாசமுமின்றி முஸ்லிம்கள் வாழும் பகுதிகள்
குறிவைக்கப்பட்டது. பெருமளவில் காவிக்கும்பல் ஒரே நோக்கத்தின்கீழ் ஒன்று சேர்ந்தது. எந்த வகையிலேனும் முஸ்லிம்களை கொல்லவேண்டும். குத்தி, கிழித்து முடமாக்கப்பட்டபின் உயிரோடோ, இல்லாமலோ.

இதில் பங்கெடுத்துக்கொண்ட காவிக் கும்பல்களில் சிலர் தெஹல்காவிடம், இஸ்லாம் எரியூட்டுவதை அனுமதிக்கவில்லை என்பதால் முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொல்வதிலேயே ஆனந்தமடைந்ததாக சொன்னார்கள்.

பெப்ருவரி 27 க்குப்பிறகு, மூன்று நாட்கள் குஜராத்தின் பிஜெபி அரசை இந்துத்வ காவிக்கும்பல் கையிலெடுத்துக்கொண்டு, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டதிற்க்கு இட்டுச்சென்றது. ஆர்எஸ்எஸ், விஹெச்பி, பஜ்ரங்தள், கிசான் சங்க், அகிலபாரதீய வித்யார்தி பரிஷத், பிஜெபி, கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட கொலைப்படை உருவாக்கப்பட்டது. மாநிலமெங்கும் பள்ளிவாசல்கள், தர்காக்கள் அழிக்கப்பட்டன. 73 முஸ்லிம் வழிபாட்டுத்தலங்கள் அஹமதாபாதில் மட்டும் தீக்கிரையாக்கப்பட்டது. சபர்கந்தாவில் 55 ம் வடோடராவில் 22ம் பின்னர் கொளுத்தப்பட்டது.

மஹாத்மாவின் பூமிக்கு நீங்கா களங்கத்தை ஏற்படுத்திய இந்த காவிக் கும்பல் அடியாட்கள் இரு வகைப்பட்டனர். திரைமறைவிலிருந்து சதித் திட்டம் தீட்டிய கட்சிநிர்வாகிகள் மற்றும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் நடத்திய காலாட்படை. சிலசமயம் தலைவர்களே காலாட்படையிலும் தைரியமாக பங்கெடுத்தார்கள்…

தெஹல்கா.காம்.

(தொடரும்)

நன்றி : கதிரவன் (வெல்லத் தமிழினி வெல்லும்)

ஒக்ரோபர் 30, 2007

வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் (PART-II)

நிராயுதபாணிகளான அப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்! – வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள்- 2

பகுதி – 1

இப்படி கோத்ரா நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிய பிறகு நரேந்திர மோடி சம்பவ இடத்திற்க்கு வருகிறார். அவருடைய பேச்சும் நடவடிக்கைகளும் முஸ்லிம்களின் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்துவதற்க்கு சங்க்பரிவாரங்களுக்கு பச்சைக்கொடி காட்டுகிறது.

அதே இரவு பிஜெபி சங்க்பரிவாரக் கும்பல் அஹமதாபத், வடோடரா மற்றும் கோத்ராவில் கூடி மாநிலம் முழுக்க முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த தீர்மானிக்கின்றன.

கொலைகாரர்களை சட்டத்திலிருந்து காப்பாற்றுவதற்க்காக நீண்டகால திட்டம் தீட்டப்படு வக்கீல்களுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் விவரிக்கப்படுகிறது. இந்த ஆலோசனைகளுக்கெல்லாம் சூத்திரதாரி மோடி தான் என்பது கொலைகாரக் கும்பலுக்கும் தெரியப்படுத்தப்படுகிறது.

ஆரம்பத்திலிருந்தே காவல்துறை காவிக்கும்பலுக்கு உதவி செய்ததோடு மட்டுமல்லாமல், அங்காங்கே அவர்களுடன் சேர்ந்தே அஹமதாபத் கமிஷனர் பண்டே தலைமையில் அக்கிரமங்களை கட்டவிழ்த்துவிட்டது. கமிஷனரே தன்னுடைய ஜூனியர் அதிகரிகள் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியுமாறு பார்த்துக்கொண்டார். கடமையை செய்ய முயன்ற அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தன.

வெடிகுண்டு, துப்பாக்கி, திரிசூலம் போன்ற ஆயுதங்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து சங்க் பரிவாரின் சானல்கள் வழியே காவிக்கும்பலால் கடத்திக்கொண்டுவரப்பட்டு வினியோகிப்பட்டன. தேவையான ஆயுதங்கள் தயரிக்கப்பட்டன. பஜ்ரங்தள், VHP போன்ற ‘தேசபக்தி’ மிகுந்த இயக்கங்களில்
ஏராளமான ஆயுதக்குவியல் எற்கனவே இருந்திருக்கிறது.

பிஜெபி மற்றும் சங்க் பரிவாரக் காவிக்கும்பலின் தலைவர்கள் இந்த இரத்தம் குடிக்கும் ஓநாய்களை அஹமதாபத், சபர்கந்தா, வடொடரா போன்ற இடங்களில் தலைமை தாங்கி வழிநடத்தினர். காவல் துறை இந்த வெறியாட்டத்திற்க்கு காவல்(?) நின்றது.

பிஜெபி எம்.எல்.ஏ மாயபென் கொட்னானி, விஹெச்பி யின் அதுல் வேத் இவர்கள் இருவரும் கலவரம் நடந்த நாட்களில் தினமும் கலவரப்பகுதிக்கு சென்று மேற்பார்வை(!) இட்டனர். இன்றுவரை இவர்கள் ஜெயிலின் வாசற்படியே மிதித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெருப்பு தான் இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆயுதமாக இருந்தது. எரிப்பதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது என்பதே முசஸ்லிம்களை எரித்துக்கொல்வதற்க்கு மிகுந்த ஆனந்தமாக இருந்தது.

பாபு பஜ்ரங்கி, 23 ரிவால்வர்கள் காவிக்கும்பலின் ஒரு பகுதியினரிடமிருந்து கைப்பற்றப் பட்டதாகவும், VHP யின் செக்ரெடரி ஜயதீப் பட்டேல் மற்றும் அப்போதைய அமைச்சர் கோர்தன் சடொபியா வையும் 11 முறை தொடர்பு கொண்டு கொல்லப் பட்டோரின் எண்ணிக்கையும் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

தெஹெல்காவின் கட்டுரை.

(தொடரும்)…

நன்றி : கதிரவன் (வெல்லத் தமிழினி வெல்லும்)

ஒக்ரோபர் 28, 2007

வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் (PART-I)

நிராயுதபாணிகளான அப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்! – வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் I

சுமார் ஐந்து ஆண்டு காலமாக நரேந்திர மோடியின் பிஜெபி அரசும் காவிக்கும்பலும், கோத்ராவில் நடந்த சபர்மதி எக்ஸ்ப்ரெஸ் துக்கத்தைத்தான், 2002 ல் குஜராத்தில் நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மீது ஏவி விடப்பட்ட கொடூரக் கொலை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் ஆகியவற்றிற்க்கு காரணமாக காட்டிக் கொண்டிருக்கிறது. தெஹெல்காவின் ஆறுமாத புலனாய்வில் இதன் பின்னணியில் உள்ள பொய்கள், அரசாங்கமே அடியாட்களுக்கு உத்தரவுகளும், லஞ்சமும் கொடுத்து நடத்திய கலவரத்தின் பின்னணி அம்பலமாகியுள்ளது.

இதோ, சுருக்கத்தில், நடந்ததாக கண்டறியப்பட்ட உண்மைகள்……

காவல் துறையின் வாதம் :

1. சில முஸ்லிம் அரசியல் வாதிகள் மற்றும் மத முக்கியஸ்தர்கள் சபர்மதி எக்ஸ்ப்ரெஸ்ஸின் எஸ்-6 பெட்டியை February 27, 2002 ல் சதிசெய்து கொளுத்தினார்கள். (கவனிக்க: எதேனும் ஒரு பெட்டியை அல்ல. குறிப்பாக எஸ்-6 பெட்டியை ).

2. முஹம்மது ஹுஸைன், அப்பொதைய கோத்ரா முனிசிபல் கவுன்சில் தலைவர், இரண்டு முஸ்லிம் முனிசிபல் உறுப்பினர்கள் ஆகியோர் இந்த ரயில் பெட்டியை எரிக்கும் குழுவில் இருந்து, எஸ்-6 பெட்டியை எரிக்க தூண்டினார்கள்.

3. போலீஸின் கூற்றுப்படி, எராளமான பெட்ரோல் எஸ்-6 ன் தளத்தில் ஊற்றி, பின் கொளுத்தப்பட்டது. இதற்க்காக 140 லிட்டர் பெட்ரோல் பெப்ருவரி 28ம் தியதி, கலாபாய் என்ற ஒரு முஸ்லிமுக்கு சொந்தமான பெட்ரோல் பம்பில் இருந்து வாங்கப்பட்டது. பின் 9 முஸ்லிம் கூலிதொதொழிலகளாலும், ஒரு ஹிந்து தொழிலாளியாலும் சபர்மதி எக்ஸ்ப்ரெஸ் நின்றுகொண்டிருந்த காபின் A க்கு கொண்டுவரப்பட்டது.

4. சபர்மதி எக்ஸ்ப்ரெஸ்ஸின் எஸ்-6 பெட்டியின் இணைப்பை மூன்று முஸ்லிம் தொழிலாளர்கள் துண்டித்ததால், ரயில் நிறுத்தப்பட்டது.

5. சில தொழிலாளிகள் 6 இன்ச் கனமுள்ள இரு பெட்டிகளையும் இணக்கும் தொடர்பை சாதாரண கத்தரிக்கோலால் வெட்டிய பிறகு எஸ்-6 க்குள் நுழைந்து பெட்டியின் தரையில் பெட்ரோலை ஊற்றினார்கள். கண்ணாடி உடைந்த ஜன்னல் வழியாகவும் பெட்ரோல் ஊற்றப்பட்டது.

மேற்சொன்ன காவல் துறையின் ‘தியரி’ க்கான சாட்சிகள் :

1. போலீஸ் பெரும்பாலும் சம்பவத்தை நேரில் பார்த்த 9 பிஜேபி உறுப்பினர்களின் சாட்சியையே முக்கியமாக எடுத்தொக்கொண்டிருக்கிறது. இவர்கள் 41 முஸ்லிம்களை அடையாளம் காட்டியிருக்கிறர்கள். (ஒரு பிஜெபி உறுப்பினர் திலீப் தேஸாதியா, பிறகு தன்னுடைய வாக்குமூலத்தை முழுவதுமாக வாபஸ் வாங்கிக்கொண்டார்.)

2. எஸ்-6 ல் பயணம் செய்த கர்சேவகர்களின் வாக்குமூலங்களும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

3. அங்கு ஏற்பட்ட புகையால் மயங்கிவிட்டதாகவும், என்ன நடந்தது என்றே காண இயலவில்லை என்றும் சொன்ன இரண்டு கரசேவர்கள், ஆறு மாதங்களுக்கு அப்புறம், தங்கள் நிலையை மாற்றி வெளியிலிருந்து எதோ திராவகம் தரையில் ஊற்றப்பட்டதை பார்த்ததாக சொன்னார்கள். இந்த வாக்குமூலம் தான் – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்க்கு 15 தினங்களுக்குமுன் சேர்க்கப்பட்டு – போலீஸ் தியரியின் திடீர் சக்தியாக மாற்றப்பட்டுள்ளது.

4. போரென்சிக் ரிபோர்டின்படி, ” 60 லிட்டர் பெட்ரோல் தென் திசையிலிருந்து பெட்டியின் தரையில் ஊற்றப்பட்டிருக்கலாம் ” என்பது.

5. ஒன்றரை மாதங்களுக்குப்பிறகு, ஒரு டீக் கடை காரர், அஜய் பாரியா என்ற ஒரு சாட்சியை போலீஸ் திடீரென்று கொண்டு வந்து நிறுத்தியது. இந்த அஜய் பாரியா, தன்னை 9 முஸ்லிம் தொழிலாளிகள் எஸ்-6 பெட்டியில் பெட்ரோலை ஊற்றி தீ வைக்குமாறு கட்டயப்படுத்தியதாக விளம்பினார்.

6. இரண்டு முஸ்லிம் தொழிலாளர்கள் கைது செய்த ஒரு வாரத்திற்க்கப்புறம், ட்ரயின் இணைப்பைத் தாங்கள் துண்டித்ததாக ஒப்புக்கொண்டார்கள். அப்புறம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துமூலமாக இதை வாபஸ் வாங்கிகொண்டார்கள்.

7. இதே போல் இன்னொரு முஸ்லிம் தொழிலாளி எஸ்-6 பெட்டியை கொளுத்திய கும்பலில் தானும் இருந்ததாக ஒப்புக்கொண்ட (?) வர், அப்புறம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துமூலமாக இதை வாபஸ் வாங்கிகொண்டார்.

8. சம்பவம் நடந்து 1 வருடம் கழித்து போலிஸ் இரண்டு இந்து சேல்ஸ்மேன்களை ஆஜர் படுத்தியது. பிரபாத்சிங் பட்டேல் மற்றும் ரஞ்சித்சிங் பட்டேல்.

இவர்கள் இருவர்தான், பெட்ரொல் பம்பிலிருந்து 140 லிட்டர் பெட்ரோலை விற்ற சேல்ஸ்மேன்கள். இவர்க்ளுள் ஒருவர், அன்றைய தினத்தில் அப்படி யாருக்கும்ம் பெட்ரோல் விற்கவில்லை என்று தெரிவித்தார்.

9. இன்னொரு போலிஸின் சாட்சி, சம்பவ இடத்தில் இருந்த மற்ற முஸ்லிம் தலைவர்களுடன் மவுலவி யாக்கூப் பஞ்சாபி என்பவரும் கொளுத்த தூண்டிவிட்டார் என்று சாட்சி சொன்னார். பின்பு பொலீஸ் பஞ்சாபியை கைது செய்து பின் விட்டுவிட்டது. காரணம் பஞ்சாபி அந்த நாட்களில் சவூதி அரேபியாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் என்பதே.

10. இன்னும் இதில் பங்கெடுத்துக் கொண்டதாகவும், கொளுத்தியதாகவும் ‘ஒப்புக்கொண்ட’ ஆறு முஸ்லிம் தொழிலாளிகள், பின்னர் தங்களுடைய வாக்கு மூலத்தை வாபஸ் வாங்கிகொண்டார்கள்.

இனி தெஹல்கா கண்டறிந்த கொடுமையான உண்மைகள்…

1. பிரபாத்சிங் பட்டேல் மற்றும் ரஞ்சித்சிங் பட்டேல் என்ற இரு பெட்ரோல் பம்ப் சேல்ஸ்மேன்களுக்கும், தலைமை விசாரணை அதிகாரியே லஞ்சம் கொடுத்து, இப்படிச் சொல்லவும், தவறான நபர்கலை அடையாலம் காட்டவும் பணித்தார். தெஹெல்க்காவின் கேமராவில் அந்த அதிகாரியே இதை ஒப்புக்கொண்டிருக்கிறார். 50,000 ரூபாய் இதற்க்காக் இலஞ்சமாக கொடுக்கப்பட்டது.

2. சம்பவத்தை நேரில் பார்த்ததாக சொல்லப்பட்ட 9 பிஜெபி நபர்க்ளும் அப்பொழுது அந்த இடத்திலேயே இருந்திருக்கவில்லை. தெஹெல்க்கா அவர்க்ளுள் இருவரை – Kakul Pathak and Murli Mulchandani – பேட்டி கண்டதில் தாங்கள் அந்த இடத்திலேயே இல்லை என்றும், தாங்கள் பெயெர் இருப்பது தாங்களுக்கே தெரியாது என்றும் கூறினர்.

3. பெட்டியின் இணைப்பை துண்டித்ததாக சொல்லப்பட்ட இரு முஸ்லிம் தொழிலாளிகளும் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், (பிறப்புறுப்பில் மின்சாரம் செலுத்தியது உட்பட ) தெஹெல்க்காவிடம் அனுமதித்தனர்.

4. பெட்ரோல் எப்படி எங்கிருந்து ஊற்றப்படு எப்படி எரிக்கப்பட்டது என்ற போலீஸின் கூற்றும், போரென்சிக் லாபின் கூற்றும் முற்றிலும் மாறுபடுகிறது.

இது இந்துத்வா நடத்திய கபட நாடகம் ( ஜெயராமன் சல்மா அயூப் நியாபகம் வருகிறதா..? ) வெளிச்சத்திற்ற்கு வந்தது மட்டும்…இனிதான் காவிக்கும்பலின் நரபலி வேட்டைவிழாவின் துவக்கம். கொலைகள், கற்பழிப்புகள், சிசுக்கொலைகள் நடத்திய விதம், பேட்டிகள், செய்முறைகள், உத்தரவுகள்….

மூலம் :

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107Conspirators.asp

(தொடரும்)

நன்றி : கதிரவன் (வெல்லத் தமிழினி வெல்லும்)

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.