தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 7, 2008

"குவைத் டைம்ஸில்" மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

Filed under: இம்தாதி, குவைத் — முஸ்லிம் @ 1:04 பிப

மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் குவைத்தில் சுற்றுப்பயனம் மேற்க்கொண்டிருந்தபோது அந்நாட்டு பத்திரிகையான “குவைத் டைம்ஸ்” சில் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் செய்தி புகைப்படத்துடன் வந்திருந்தது. (நாள் 27/02/2008 Page 04)

பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்.

மே 3, 2008

பி.ஜே யோடு கைகோர்த்து பணி செய்ய காத்திருக்கின்றேன் – மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

Filed under: இம்தாதி, ததஜ, பி.ஜே, PJ, TNTJ — முஸ்லிம் @ 9:00 பிப

கண்டு விட்டீர்களா? மெளலவி ஜமால் மதனியின்…ததஜ வை விமர்சிப்பது ஏன்?

அல்லாஹ்வின் திருநாமத்தால்……..

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்’ 51:55, ‘எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினை இருக்கிறது’50:35.

அன்புச் சகோதரரே! பல சகோதரர்களின் உருவப்படங்களுடன் எனது உருவப் படத்தையும் இணைத்து நீங்கள் தொகுத்த ஒரு ஆக்கம் கண்டேன். அதைக் கண்டபோது அதைத் தொகுத்த நீங்கள் தவ்ஹீதில் அக்கறை உள்ளவர் என்பதும், அதே நேரம் நீங்கள் தமிழகத்தில் தவ்ஹீத் உருவான, உருவாகி வளர்ந்த வரலாறு தெரியாதவர் என்பதும் பளிச்சென தெரிந்து விட்டது. எனவே உங்களைப் போன்று தமிழகத்தில் தவ்ஹீத் உருவான வரலாறு தெரியாமலேயே செயல்படும் பல இளைஞர்கள் உண்மையைப் புரிந்து உரிய பலனைப் பெற வேண்டுமென்ற நன் நோக்கில் மேற் குறிப்பிட்டிருக்கும் இறைவாக்கிற்கொப்ப இதனை அறியத் தருகிறேன். யா அல்லாஹ்! சத்தியத்தை சத்தியமாகக் காட்டி அதனை பின் பற்றும் பாக்கியத்தையும் அசத் தியத்தை அசத்தியமாகக் காட்டி அதனை தவிர்ந்து கொள்ளும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

அன்புச் சகோதரரே! தமிழகத்தில் குர்ஆனும் ஹதீசும்தான் மார்க்கம் அவ்விரண்டிற்கும் மாற்றமானவை மார்க்கமற்றவை என்பதை நமது நாட்டில் துவங்கி பல இடையூறுகளை அனுபவித்து அல்லாஹ்வின் மா பெரும் அருளால் அது வளர ஆரம்பித்ததும் தமிழகத்தில் பல பகுதிகளில் பல்வேறு பெயர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல அமைப்பின் சகோதரர்கள் திருச்சியில் 1986 களில் கூடிய ஒருசமயத்தில் எல்லோர் உள் ளத்திலும் ஒரே பெயரில் நாம் இயங்கினால் நன்றாக இருக்குமே என்று எண்ணியபோது நிறுவப்பட்ட அமைப் புதான் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன், வல்ஹதீஸ்., அன்றைக்கு அந்த சிந்தனையைப் பரப்புவதில் அதிகப் பங்கு வகித்தவர்களில் முக்கியமாக இருந்த உங்களின் தலைவர் தான் அப்போதைக்கு முதலாவதாக தற் காலிகத் தலைவராக இருந்தார் அதன் பின்னர் கூடிய கூட்டத்தில் தான் உங்களின் தலைவரும் சேர்ந்து இவ்வமைப்பிற்கு தற்போது இருந்து வரும் கமாலுத்தீன் மதனி தலைவராக்கப்பட்டார்.

அன்று உருவாகப் பட்ட அமைப்பில் அங்கம் வகித்த நான் அன்றிலிருந்து இன்று வரை அல்லாஹ்வின் பேரருளால் அதே கொள்கையில் அதே தலைமையில் அதே அமைப்பில் இருந்து செயல்பட்டு வருகிறேன். அல்லாஹ் இதே நிலையில் என்னை இறுதி வரை வாழ வைத்து ஈமானுடன் உண்மை முஸ்லிமாக மரணிக்கச் செய்ய வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டுமிருக்கிறேன். ஒரே அமைப்பில் இருக்கிறேன் என்று சொல்வதால் உங்கள் தலைமையை கண்மூடித்தனமாக உங்களைப் போன்றவர்கள் பின்பற்றுவது போல என்று எண்ணி விடக்கூடாது. மாறாக, அல்ஹம்து லில்லாஹ் தலைமையில் காணுகின்ற குறைகளை அன்றும் இங்கு வரு வதற்கு சில தினங்களுக்கு முன்பும் கூட தயவுதாட்சண்யமின்றி சுட்டிக் காட்டித்தான் வந்திருக்கிறேன்., அல்ஹம்துலில்லாஹ் எங்களது தலைவர் உங்களின் தலைவர் போன்றில்லாமல் தவறை உணர்த்தப்பட்டால் உடனே மன்னிப்புக் கேட்கும் தலைவர். அச்சுபாவம் உங்களின் தலைவருக்கு இல்லாததால் தான் அமைப்பு அமைப்பாக தலைவர் தலைவராகத் தாவிச் சென்று இறுதியில்– நான் எந்த அமைப்பிலும் கேள் விப்படாத தலைவரை உதவித் தலைராக்கிவிட்டு–தானே தலைவராகிவிட்டார்.

உங்களின் தலைவர் பகிரங் கமாகக் கூறிய பொய்ச் செய்தியைச் சுட்டிக்காட்டியபோதும் கூட அதை ஏற்காதவர். மட்டுமின்றி நாங்கள் ஒரே தலைமையின் கீழிருந்த காலத்தில் நான் சுட்டக்காட்டிய அளவிற்கு உங்கள் தலைவர் சுட்டிக் காட்ட வில்லை –அவருக்கு தலைமையின் மூலம் இலாபமிருந்தது– மட்டுமின்றி தனது கருத்தைத்தான் தலைவர் செய்ய நிர்ப்பந்திப்பார்.

விஷயத்திற்கு வருவோம்;.

எனது படத்தைப் போட்டுவிட்டு எனது பெயரைக் குறிப்பிடாமல் …குராஃபாத் அமைப்புகளில் பைஅத் செய்து கொண்டதாகவும் ஏகத்துவத்தைக் கை கழுவி விட்டதாகவும் எழுதியிருந்ததைப் பார்த்ததும் உங்களின் மீது அனுதாபம்தான் எனக்கு ஏற்பட்டது. ஹைர்! அல்லாஹ்வே சாட்சி! அல்லாஹ்வே போது மானவன்! நீங்கள் கூறியதை சாட்சியோடு இன்னவரிடம் பைஅத் செய்துள்ளார், இன்ன இடத்தில் தவ்ஹீ துக்கு மாற்றமாக பேசியுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தால் நீங்கள் ஒரு தெளிவான தவ்ஹீத்வாதி என ஏற்றுக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு நம்மைச் சுற்றி என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது என்ற மதமதப்பில் உங்கள் தலைவர் போல பல செய்திகளை அடித்துவிட்டிருக்கிறீர்கள்.

நினைவுக்கு வந்த சிலவற்றைத் தருகிறேன், படியுங்கள் சிந்தியுங்கள், திருந்துங்கள், திருத்துங்கள்.நான் குறிப்பிட்டவற்றில் தவறு கண்டால் சுட்டிக் காட்டுங்கள், ஆதாரத்துடன் தவறை சுட்டிக்காட்டுபவருக்கு நன்றி கூறி திருத்திக் கொள்வேன். இவையெல்லாம் சுட்டிக் காட்டுவதன் நோக்கமே தவறு செய்தவர்கள், செய்ப வர்கள் திருந்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான். தவறெனத் தெரிந்ததும் திருந்துபவர், திருத்திக் கொள்பவர், திருத்த முயற்சி செய்பவர் ஆகிய அனைவரும் இறையன்பைப் பெறும் தகுதிக்குரியவர், தவறைத் திருத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்த நினைப்பவர் ஷைத்தானின் அடிமைகள். யா! அல்லாஹ் ஏகத்துவ வாதிகளை உன் அன்பைப் பெறத் தகுதியானவர்காக ஆக்கி அருள்வாயாக!.


நீங்கள் உங்களின் ஆக்கத்தில் கூறியிருக்கிற குற்றச்சாட்டுகள் உங்கள் தலைவரைத்தான் என்பதை நீங் களே நான் தருகின்ற ஆக்கங்கள் மூலம் புரிந்துகொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.

உங்களின் தலைவர் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சத்தியத்தைக் கூறுவதெற்கென்றே தமிழகத்தில் உருவாக்காப்பட்ட அமைப்பிலிருந்து தடம்புரண்டு வேறு அமைப்பில் பைஅத்துச் செய்து கொண்ட பின் அவரின் முரண்பாடுகளில் சில:

ஏகத்துவ மேடைகளில் (நான் ஏகத்துவ மேடை என்று குறிப்பிடுவது 1986 களில் தமிழகத்தில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உருவாகப்பட்ட அமைப்பு) தர்க்காவிற்கு செல்வது அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன், நிரந்தர நரகம், அப்படிச் செய்பவர் முஷ்ரிக், காஃபிர் இத்தகையவர்களிடம் சமரசம் செய்து கொள்வதற்கு இடமே இல்லை என்று அழுத்தம் திருத்தமாகப் பேசிய அதே நாக்கு, முஸ்லிம் என்ற பெயர் உள்ள எல்லோரும் வாருங்கள் நீங்கள் எந்தக் கொள்கையில் இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்காக குரல் கொடுப்ப தற்கே அமைப்பை உருவாக்கப்பட்டிருக்கிறது, இது தவ்ஹீதைக் கூறாது எனக் கூறி அந்த அமைப்பின் தலைவரிடம் பெயருக்கு பைஅத் செய்து அமைப்பாளராகி, தவைலரும் தனது கருத்தையே பிரதிபலிக்க வேண்டுமென்று அங்கிருந்து விலகும் வரை நிர்பந்தித்து கொண்டிருந்தவர்தான் உங்கள் தலைவர்.

  • அந்த மேடையில் எங்கள் தர்காவிற்கு பஸ் விடு என்று முழங்கினார். பித்அத்கள் நரகத்திற்கு இட்டுச் செல்லு மென முழங்கிய அதே குரலிலல் எங்கள் ஹஸரத்தைக் கூப்பிட்டு ஃபாத்திஹா ஓதச் செய் என்றும் முழங் கினார்-சத்தியம் அவர் உள்ளத் தில் இருந்ததால் பேசியபோதே நினைவு வந்தவுடன் தர்கா கூடுமா? கூடாதா என்பது வேறு என்றும் சொல்லிக் கொண்டார்- அரசியலுக்கு ஒரு தலைமை ஆன்மீகத்திற்கு ஒரு தலைவர் என்று முஸ்லிம் சமு தாயம் சென்றதால்தான் சமுதாயம் சீரழிந்து போய்விட்டது என்று பேசிய அதே குரல் தான் அரசியலுக் கும் ஒரு அமைப்புத் தேவை என்று அமைப்பாளரானார்.
  • அமைப்பாளரானதும் தவ்ஹீத் மேடைகளில் முஸ் லிம்களின் பின்னடைவுக்கு ஆலிம்களே காரணம், ஏனெனில் இவர்கள் ஆங்கிலேயனின் மீது கொண்ட வெறுப்பால் இங்லீஸ் படிக்ககக் கூடாது என்றனர், பேண்ட் போடக்கூடாது என்றனர் என்று முழங்கினார், அதே குரலில் தவ்ஹீத் அல்லாததைச் சொல்வதற்காக பைஅத் செய்து கொண்ட மேடையில் முழங்கும் போது –சுப்ஹானல்லாஹ் நரம்பில்லா நாக்கு என்பார்களே அதை அப்படியே மெய்ப்பிக்கும் விதமாக- நமது ஆலிம்கள் எப்படிப்பட்ட தியாகிகள் தெரியுமா? (தேச பக்திக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைத் தவ்ஹீத் மேடையில் ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாகப் பேசியவர்)தேசபக்தியின் காரண மாக ஆங்கிலம் படிப்பது ஹராமென்றார்கள், பேண்ட் அணியக்கூடாது என்றனர் என்று முழங்கினார் முரண்பட்டுப் பேசுகிறாறே என்று ஆட்சேபிக்க வேண்டிய உங்களைப் போன்ற தவ்ஹீத் வரலாறு தெரியாத வர்கள் அப்போதும் நாரே தக்பீர் அல்லாஹுஅக்பர் என்று முழங்கினார்கள்.
  • உங்கள் ஓட்டு யாருக்கு என்ற தலைப்பில் எல்லா அரசியல்வாதிகளையும் அலசி எவருக்கும் ஓட்டுப் போடக்கூடாது என்று பேசிய அதே வேகத்தில் எந்த அரசியல்வாதியும் செய்யாத ஒன்றை– அதாவது ஒரு முறை திமுக, அடுத்து அதிமுக, அதையடுத்து சில பகுதிகளில் திமுக, சில பகுதிகளில் அதிமுகவை ஆதரிக்கிறோம் என்று -தடுமாற்றத்தையே வாடிக்கையாகக் கொண்டவர் தான் நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்பின் தலைவர். மட்டுமா! ஜெயலலிதாவை மிகக் கடுமையாக கேவலமானவர் என்று ஆதார அடிப் படைகளுடன் விமர்சனம் செய்து உணர்விலும் எழுதி, மேடைகளிலும் பேசிவிட்டு அம்மையாரை முத லமைச்சாருக்குங்கள் என்று ஊர் ஊராகச் சென்று ஓட்டு வேட்டை நடத்தினார், அவரின் தலைமை யின் கீழுள்ள சிலர் அம்மாவின் ஆட்சியில் முஸ்லிம்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என்றாகள்.
  • தவ்ஹீத் (தமிழ் நாடு தவ்ஹீதல்ல) மேடையில் பெண்களிடம் ஆட்சியை ஒப்படைப்பவர்கள் மண்ணுக்கு மேல் வாழ்வதை விட மண்ணுக்கடியில் வாழ்வதே சிறந்தது என்ற ஹதீஸை அற்புதமாக எடுத்துரைத்த மாமேதை தான் உங்களின் தலைவர்.
  • ஜம்மியத் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பின் தற்காலிகத் தலைவராக இருந்து பின்னர் அவரும் இணைந்து இவ்வமைப்பிற்கு கமாலுத்தீன் மதனியை தலைவராகத் தேர்வு செய்து, அது வளர ஆரம்பித்த கட்டத்தில் தலைவரின் மீது பலரும் பல குற்றச் சாட்டுகளைக் கூற தலைவர் தனது தலைமைத் தனத்திலிருந்த விலகிக் கொள்கிறேன் என்று வந்தபோது இஸ்லாத்தில் தலைமையை மாற்ற இடமேயில்லை மரணிக்கும் வரை அவர்தான் தலைவர் என்றும் அதற்கு நானே அவரிடம் முதன்மையாக பைஅத் செய்கிறேன் என்றும் கூறினார். பின்னர் அதிகாரமுள்ள தலைவர் அதிகாரமற்ற தலைவர் என்ற தத்துவத்தை முன் வைத்து தமிழ் முஸ்லிம்களுக்கு ஆன்மீகத்திற்குத் தலைவர் ஒருவர் கிடையாது என்று இரண்டாம் முறையாக அவர் பைஅத் செய்து கொண்ட மேடைகளில் பேசினார், எழுதினார்.
  • இன்றைக்குத் தமிழகத்தில் சமுதாயப் பணிகள் செய்வதற்கு முஸ்லிம்கள் நம்பிச் செயல்பட, உதவிகள் செய்ய மிகத் தகுதியான அமைப்பு தமுமுக, மார்க்கப்பணிகள் செய்திட நம்பி உதவி செய்யத் தகுதியான அமைப்பு ஹாமித் பக்ரியின் தலைமையில் இயங்கும் அனைத்துத் தவ்ஹீத் ஜமாஅத் என்று என்று மனம் திறந்து மடல் என்று மடலை– தமிழகம் அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் எதுவும் செய்கிறது என்பது போல—உணர்வில் எழுதினார், சுப்ஹானல்லாஹ் எழுதிய சில மாதங்களிலேயே வஹி வந்தவர்போல தமுமுக தவ்ஹீத் வாசலை அடைத்துவிடக்கூடிய அமைப்பு, ஹாமித் பக்ரிக்கு தீவிர வாதிகளுடன் தொடர்பு இருக்கின்றது என்றார், சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் கண்மூடித் தனமாக பின்பற்றும் தன்மையை ஒழிக்க வேண்டுமென முழங்கிய அவரே அத்தகைய கூட்டத்தின் தலைவராக மாறியிருக்கிறார்.

அல்லாஹ்வின் கிருபையால் தமுமுக அவர் வெளியே வந்த பின்னர் தமுமுக மேடையிலேயே தவ்ஹீதை பகிரங்கமாக முழங்கும் நல்ல சூழலுக்கு மாறியுள்ளது, பல நல்லவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் அமைப்பாகவும் மாறியுள்ளது அல்ஹம்து லில்லாஹ்.

  • மா மனிதர் என்று ஒரு தலைப்பில் மிக அழகாக (ஸல்)அவர்களைப் பற்றி பல காலமாகப் பேசியிருக்கி றார். அதில் ஒரு முறை மாமனிதர் (ஸல்)அவர்கள் சபையில் இருக்கும்போது அவர்களைத் தேடி வருபவர்கள் முஹம்மத் யார் எனக் கேட்குமளவிற்கு மக்களோடு மக்களாக அமர்ந்திருப்பார்கள் என்ற உண்மையை அழகாக அழுத்தமாக எடுத்துச் சொன்னவர் உங்களின் தலைவர் இன்று வரை அவரை யாராவது பார்க்கச் சென்றால் நேரடியாகச் செல்ல முடியாது, ஏன் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூட நேரடியாக தொடர்பு கொள்ள இயலாது, சபையில் மக்களோடு மக்களாகப் பார்க்கவே முடியாது.
  • உங்களின் தலைவர், மா மனிதர் இடம், நேரம், காலத்திற்குத் தகுந்தாற்போல உங்களைப் போன்ற தம்பிகள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு பேசுவதில் அவருக்கு நிகர் அவரே. சிறந்த அறிவாளி ஆனால் அறிவாளிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் அற்றவர்.

ஒவ்வொரு அமைப்பை விட்டும் வெளியேறும்போது ஏதேனும் நொண்டிக் காரணங்களை தூய எண்ண முள்ளவர்கள் கூறுவதுபோல கூறிவிட்டு சென்ற பின்னர் தான் சார்ந்திருந்த காலங்களிலெல்லாம் அவர்க ளுடன் கைகோர்த்து எல்லாக் காரியங்களையும் செய்து விட்டு அல்ல அல்ல தனது சர்வாதிகாரத்தால் செய்ய வைத்துவிட்டு இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளைக் கூறுவார் உங்களைப் போன்ற புகழ் பாடும் கூட்டமிருப்பதால்! எந்த அளவிற்கென்றால் அல்லாஹ்வும் ரசூலும் வண்மையாக மிக மோசமான கெட்டவை என்று கண்டித்துக் கூறியதை அவரது கட்டுப்பாட்டிற்கு கீழிருந்த இருக்கிறவர்களில் இருவரை ஊர் ஊராக அனுப்பி குற்றங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து வீடியோவில் பதிவு செய்து அதைப் பார்க்கச் செய்து பலரை பெரும் பாவம் செய்ய வைத்தவர்.

சுருங்கச் சொல்வதாயிருந்தால் தமிழகத்தில் — இவரும் இணைந்திருந்த காலத்தில்–ஏகத்துவத்தை உருவாக்க இன்று வரை கஷ்ட, நஷ்டங்கள் பட்டுக் கொண்டிருப்பவர்களையும் அவர்கள் நடத்தப்பட்டு வரும் இதழ்கள், அழைப்பு மையங்கள், கல்லூரிகளை இழித்தும் பழித்தும் கூறிக் கொண்டிருக்கிறார்.

இவையெல்லாம் சரிதானே என்று உங்களைப் போன்ற ஒரு கூட்டமும் சேர்ந்து கொண்டு செய்கிறது. மிகத் துணிவாக பொய்களைக் கலந்து சேற்றை வாரி வீசுவதற்கு முக்கியக் காரணம் தற்போது அவர் பின்னாலிருக்கும் கூட்டம் உங்களைப் போன்ற தவ்ஹீதின் உருவாக்கத்தைத் தெரியாதவர்கள் என்பதுதான். நினைவுக்கு வந்த சிலவற்றைக் கூறியுள்ளேன், இதுவும் அவரின் குறைகளை அலச அல்ல. மாறாக உங்களைப் போன்று தவ்ஹீதை தவ்ஹீதுவாதிகள் மூலம் பெறாமல் செய்திச் சாதனங்கள் மூலமாக மடடும் தெரிந்து கொண்டு, தெரிந்த கொண்ட ஆர்வக் கோளாறுகளால் தலைவரைப் போன்றே உங்களைப் போன்றவர்கள் இறங்கிவிடுகிறார்கள், தெரிந்ததைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இவற்றை அறியத் தருகிறேன், நீங்கள் அவரை விட்டு வெளியேறிவிடுவீர்கள் என்ற எண்ணத்தில் அல்ல எடுத்துச் சொல்வது மட்டுமே அல்லாஹ் இட்ட கட்டளை!.

ஆரம்ப காலங்களில் தவ்ஹீதை பரவச் செய்ய பொருளால், அறிவால் இன்னும் பல வழிகளில் பாடுபட்ட பல நல்லவர்களை உங்கள் தலைவர் பகைத்துக் கொண்டு வரலாறு தெரியாத புதியவர்களோடு இணைந்திருக்கிறார்., பழையவர்களோடு இருந்தால்தான் குறை நிறைகளை தெரிந்து தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள முடியும், ஒருவேளை குறைகளே தெரியக்கூடாது என்று எண்ணுகிறாரோ என்னவோ! அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

உங்களின் தலைவருக்கு உங்கள் மூலமாக இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என பல சந்தர்ப்பங்களில் பேச்சுக்களின் மூலமும் எழுத்துக்கள் மூலமும் தெரிவித்திருக்கிறேன். இப்போதும் அதையேத் தெரிவித்துக் கொண்டு மற்றொன்றையும் சேர்த்து சொல்லிக் கொள்கிறேன்.

சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என்ற தலைப்பிலும், மற்றும் உலகம் முழுவதற்கும் பிறை ஒன்றே என்ற இந்த இரு தலைப்புளையும் பற்றி நீங்கள் விரிவாக அலசுவதற்குத் தயாரா? நாம் எப்போதும் தயார்.

இதையெல்லாம் இன்ஷா அல்லாஹ் நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லத் தயார் பல சமயம் இவற்றில் பலவற்றை தபால் மூலமும் உங்களின் தலைவருக்குத் தெரிவித்திருக்கிறேன்.

உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வரவேண்டி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் என்றும் நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்—ஒருவேளை உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வந்துவிட்டால் அவரோடு கைகோர்த்து முந்தைய காலங்களைப் போன்று பணி செய்யவும் காத்திருக்கிறேன்– அல்லாஹ் போதுமானவன்.

அவனே காரியங்களை நம்பி ஒப்படைப்பதற்கு மிகத் தகுதியானவன், மிக்க நல்லவன், யா அல்லாஹ் உள்ளங்களில் உணர்வுகளை அறிந்தவனே! உள்ளங்களை விரல்களுக்கிடையில் வைத்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பவனே! எந்தெந்த உள்ளங்களை ஈடு இணையற்ற உனது தவ்ஹீதைப் படிக்க பரப்ப தேர்ந்தெடுத்தாயோ அந்த உள்ளங்களை ஓரணியில் இணைப்பாயாக! உனது திருப் பொருத்தைத்தை மட்டுமே நாடி உனது பணியினை மேற்கொண்டு உண்மை முஸ்லிமாக வாழ்ந்து உண்மை முஸ்லிமாக மரணித்து முடிவே இல்லா நிரந்தர இன்ப பாக்கியங்கள் நிறைந்த சுவனபதியில் நலலோர்களுடன் இருக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக! ஆமின் ஆமின் யா ரப்பல் ஆலமீன்.

கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

அல்கோபர்

சவுதி அரேபியா

ஏப்ரல் 29, 2008

ஆஹா….ச்சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்துட்டாய்ன்களடா…

Filed under: அதிரை ஃபாருக், இம்தாதி, ததஜ — முஸ்லிம் @ 9:55 பிப
அழைப்பு பணியில் அதிரை (ஜோக்கர்) ஃபாருக்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பிரிவினை வாத கும்பலை சேர்ந்த ஃபாருக் என்பவர் இவர் எதை அழைத்தார் என்று தெறியவில்லை தனது பெருக்கு முன்னால் அழைப்பு பணியில் அதிரை ஃபாருக் என்று போட்டு கொள்கின்றார். பெரும்பாலும் இவரது மின்னஞ்சல்களை ஏதாவது ஒரு பென்னின் பெயரில் தான் ஃபார்வர்ட் செய்து வரும் (கவர்ச்சிக்காக இவர்களின் செட் அப் ஐடி) அதிராம் பட்டினத்தை சேர்ந்த இவர் கடந்த 20-04-2008 அன்று எப்போதும் போல் தனது பெயரிலும், கவாச்சிக்காக கிரியேட் செய்து வைத்துள்ள பென்கள் ஐடிகளிலும் இருந்தும் இவர் அனுப்பிய ஒரு மின்னஞ்சல் நமது பல மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது. (இங்கு கிளிக் செய்து அந்த மின்னஞ்சலை டவுன்லோட் செய்யவும்)

கோவில்களுக்கு செல்லும் இஸ்லாமிய பென்கள் என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த மின்னஞ்சலில் நமது இணையத் தளத்தில் இருந்து திருடப்பட்ட பல தலைவர்கள் மற்றும் மார்க்க அறிஞர்களின் புகைப்படங்களும், சில அமைப்புகளின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன. சரி கோவிலுக்கு செல்லும் இஸ்லாமிய பென்களுக்கும் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பிப்போய் ததஜ வின் ஏவி விடப்பட்ட புதிய “அது” வான் “அழைப்பு பணியில் அதிரை ஃபாருக்கின்” மின்னஞ்சலை வாசித்தபோது அதில் குறிப்பிட பட்டிருந்த சாரம்சம் இதுததான்.

அதாவது அவர் இணைத்திருந்த புகைப்படத்தில் இருந்த அணைத்து தலைவர்களும், மார்கக் அறிஞர்களும், அமைப்புகளும் குராபிகளோடு பைஅத் செய்து கொண்டு ஏகத்துவத்தை பரப்ப தவறிவிட்டர்கள் என்றும் இன்று இஸ்லாமிய பென்கள் கோவில்களுக்கு செல்வதற்கு காரனம் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா, சவுதி அரேபியாவில் அழைப்பாளராக பணிபுறியும் பிரபல மார்க்க அறிஞர் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, மற்றாரு மார்க்க அறிஞர் ஹாமித் பக்ரி, முஸ்லிம் லீக்கை தனது வீட்டு கொல்லையில் கட்டிபோட்டு யுனானி மருந்து கொடுத்து வளர்க்கும் ஹக்கிம் டாக்டர் செய்யது சத்தார், மனித நீதி பாசறை என்ற அமைப்பினர் என தமிழகத்தில் தான் சார்ந்திருக்கும் ததஜ என்ற கலகக் கும்பலை தவிற அணைத்து அமைப்பினரும்தான் என்றும் எழுதியிருந்தார்.

இதில் பெருங்கூத்து என்னவென்றால் தமுமுக வினர் சந்தனக்கூட்டுக்கு நோட்டிஸ் அடித்தார்கள் என்று நடந்து முடிந்து விள்கம் தரப்பட்ட ஒரு பழைய விசயத்தை குறிப்பிட்டிருந்தார். அந்த விசயத்திற்கு தமுமுக வினர் தங்கள் அமைப்பின் சார்பில் நேரடியாக அறிக்கை வெளியிட்டு தெளிவு படுத்திவிட்டார்கள் அதைக்கூட வாசிக்க மறந்து விட்டார் இந்த அதிகம்படித்த அதிராம்பட்டினம் (அழைப்பு பணி??) ஃபாருக்.

கட்டுரையின் முடிவில் ஒரு ஜோக்கடித்திருந்தார் பாருங்கள் அதுதான் தாங்க முடியல, உலகிலேயே ஏகத்துவத்தை எடுத்து சொல்லும் ஒரே அமைப்பு ததஜ தான் என்பது பூல் முடித்திருந்தார் அதைப் படித்துவிட்டு நானும் எனது நன்பர்களும் விழுந்து விழுந்து சிரித்தோம். இறுதியில் இந்த அதிராம்பட்டினம் (அழைப்பு பணி??) ஃபாருக் ஜோக்கர் ஃபாருக் ஆகியதுதான் மிச்சம்.

சரி, இப்ப நான் என்ன சொல்ல வர்ரேன் என்றால், தமுமுக வினரை குறிப்பிட்டிருந்தது போல் தமிழகத்தில் தருதலை ஜமாத் தலைவர் பி.ஜே என்று ஏகத்துவம் ஆரம்பமாகியது என்று சொல்கின்றாரோ அன்றிலிருந்து ஏகத்துவத்தை சொல்லி வரும் தமிழகத்தின் பிரபல மார்க்க அறிஞரும், சவுதி அரேபியாவின் அங்கீகரிக்கப்பட்ட பல இஸ்லாமிய அழைப்பு மையங்களில் பணி புறிந்து தற்ச்சமயம் அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மைத்தில் சேவையாற்றி வருபவருமான மெளலவி. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதியின் புகைப்படத்தையும் போட்டு அவரும் தமிழகத்தில் குராபிகளுடன் அக்ரிமென்ட் செய்து கொண்டு இஸ்லாமிய பென்கள் கோயில்களுக்கு செல்வதற்கு காரனமாகிவிட்டார் என்று எழுதியிருந்தது இந்த ஏவி விடப்பட்ட அதிரை ஜோக்கர் ஃபாருக்.

இவர் குறிப்பிட்டிருந்த மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் நான் வசிக்க கூடிய அல்கோபர் என்ற பகுதியிலேயே தங்கியிருந்து இஸ்லாமிய ஊழியம் செய்்து ஏகத்துவத்தன் பால் மக்களை அழைத்து வருவதால் அவரிடமே நேரில் இது குறித்து கேட்டு விடுவோமே என்று ஏவி விடப்பட்ட அதிரை ஜோக்கர் ஃபாருக்.எழுதியதை ஒரு நகல் எடுத்துக் கொண்டு சென்று மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களை அவரது இல்லத்திற்கு வெளியே சந்தித்து இது பற்றி கூறி விளக்கம் கேட்டோம்.

அதை வாசித்து விட்டு நம்ம ஏவி விடப்பட்ட அதிரை ஜோக்கர் ஃபாருக் போன்ற ததஜ வின் மூலை கழுவி விடப்பட்ட ஜெனமங்களுக்காக வருத்தப்பட்டவர், இது போன்ற எதையும் சொன்னால் நம்பக் கூடிய, கேள்வியே கேட்காமல் பனிபற்றக் கூடிய சிலர் இருப்பதால்தான் இந்த மனிதர் பி.ஜே எதையும் அடித்து விடுகின்றார் இந்த மூலை கழுவி விடப்பட்ட கூட்டங்களும் பி.ஜே சொல்வதெல்லாம் மார்க்கம் என்று நம்பி விடுகின்றது இது போன்றவாக்ளுக்கு பி.ஜே வைப்பற்றின பல உண்மைகள் தெறிய வாய்ப்பில்லை எது தற்போது உள்ளதோ அதை மட்டுமே பார்க்க்கூடியவர்களாக இவர்கள் உள்ளார்கள் தற்போது பி.ஜே சொல்பவற்றிற்கும் கடந்த கால நிகழ்வுகளையும் இவாக்ள் என்றும் ஒப்பிட்டு நோக்கியதில்லை. இவர்கள் திருத்தப்பட வேண்டும். இன்று எங்களிடம் இருந்து பி.ஜே தனியாக பிரிந்து சென்று விட்டாலும் பி.ஜே யோடு ஆரம்ப காலத்தில் இருந்து ஒன்றாக இருந்தவன் என்ற நிலையில் இவர்களின் அறிவிற்காக பி.ஜே வைப் பற்றிய சில தகவல்களை (ரகசியங்களை???) நான் இவர்களிடம் எடுத்து வைக்கலாம் என்றுள்ளேன் நான் அவற்றை கட்டுரையாகவே எழுதித் தருகின்றேன் வெளியிட்டு விடுங்கள் என்று கூறினார்.

அதிரை ஃபாருக் என்பவர் எழுதியுள்ள அனைத்துமே அவரது தலைவர் பி.ஜே விற்கு முற்றாக பொருந்தி போகக்கூடியவை என்பது எனது பதில் கட்டுரையை படித்த பிறகு இவர்கள் விளங்கி கொள்வார்கள் என்று கூறினார்.

விரைவில் எதிர் நோக்குங்கள்…சில நாட்களிலேயே …..பி.ஜே மற்றும் ததஜ வின் முகத்திரையை கிழிக்கும், உண்மைகளை அம்பலப்படுத்தும், ததஜ வின் மூலை மழுங்கிய கூட்டத்தினருக்காக மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களின் அறிவுரைகள் அடங்கிய பதில்.

விரைவில் எதிர் நோக்குங்கள்…உண்மைகள் என்றும் உரங்குவதில்லை….
பொய்யர்களின் கூற்றுக்களை தவிடு பொடியாக்க வருகின்றது…
மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவாக்ளின் அறிவுரைகள்…

இதன் பின்னரும் சிந்தனை உள்ள சகோதரர்கள் இப்பரிவினைவாதக் கும்பலோடு நீடிப்பரா???

கைப்புள்ள கமென்ட்:
ஆஹா….ச்சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்துட்டாய்ன்களடா…மாநாட்டு சமயத்துல மறுபடியும்ளடா
கெளம்பிட்டாய்ன்க….

மார்ச் 17, 2008

இறையச்சம் – மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி(VIDEO)

Filed under: இம்தாதி, இறையச்சம், video — முஸ்லிம் @ 7:32 பிப

“இறையச்சம்”

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Al-Sheikh. Rahmathullah Imthadhi

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்
.

தமிழ் முஸ்லிம் மீடியா

பிப்ரவரி 26, 2008

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் (VIDEO)

Filed under: இம்தாதி, ஹிஜ்ரத், hijrat, imthadhi, video — முஸ்லிம் @ 9:53 பிப

“ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்”

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Al-Sheikh. Rahmathullah Imthadhi

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்
.

தமிழ் முஸ்லிம் மீடியா

பிப்ரவரி 8, 2008

குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் அறிஞர்கள் யார்?

“குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் அறிஞர்கள் யார்?”

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Al-Sheikh. Rahmathullah Imthadhi

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்
.

தமிழ் முஸ்லிம் மீடியா

ஜூலை 7, 2007

தம்மாம் இஸ்லாமிய கருத்தரங்கம் செய்திகள்

Filed under: இம்தாதி, எஸ்கே, ஜாக், IDGC, imthadhi, jaqh, S.K. — முஸ்லிம் @ 8:19 பிப

தம்மாம் மாநகரில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா சென்டரில் 06.07.2007 வெள்ளிக்கிழமை அன்று அரை நாள் இஸ்லாமிய கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. I.D.G.C ஏற்பாடு செய்திருந்த இந்த இஸ்லாமிய கருத்தரங்கத்தில் தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞரும் தமிழகத்தில் தவ்ஹீத் என்ற ஏகத்துவம் காலூன்றுவதற்கு முக்கிய காரணகர்த்தாவுமான ஜம்மியத்துல்அஹ்லுல் குர்ஆன் வ அல் ஹதீஸ் (JAQH) அமைப்பின் தலைவருமான மறியாதைக்குறிய அஷ்ஷேய்க் எஸ்.கமாலுத்தீன் மதனி அவர்களும் மற்றும் தலைசிறந்த மார்க்க அறிஞரான அஷ்ஷேய்க் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்கள்.

நிகழ்ச்சியை இலங்கையை சோந்த மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க் உவைஸ் மெளலவி அவர்கள் துவங்கி வைக்க தம்மாம் IDGC யின் தற்போதைய துனைத்தலைவரும் சவுதியில் உள்ள பல இஸ்லாமிய சென்டர்கள் உருவாவதற்கு வழிகாட்டியவரும் ஜம்மியத்துல்அஹ்லுல் குர்ஆன் வ அல் ஹதீஸ் (JAQH) அமைப்பின் தலைவருமான மறியாதைக்குறிய அஷ்ஷேய்க் எஸ்.கமாலுத்தீன் மதனி அவர்களின் சக வகுப்பு தோழரும் (மதினா பல்கலைக்கழகம்) ஆன மறியாதைக்குறிய அஷஷேய்க் அஹமத் அல் அஹமத் அவர்கள் சிறப்பு விருந்தினர்களான மறியாதைக்குறிய அஷ்ஷேய்க் எஸ்.கமாலுத்தீன் மதனி மற்றும் அஷஷேய்க் ரஹ்மத்துலு்லாஹ் இம்தாதி அவர்களையும் மற்றும் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தவர்களையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்கள்.

அஷ்ஷேய்க் அஹமத் அல் அஹமத் அவர்களின் அரபியல் அமைந்த உரையை IDGC யின் அழைப்பாளர் அஷ்ஷேய்க் நூஹ் மெளலவி அவர்கள் தமிழில் மொழி பெயர்த்து சொன்னார்கள். அஷ்ஷேய்க் அஹமத் அல் அஹமத் அவர்கள் தனது உரையில் தனது தாய் நாடு சவுதியாக இருந்தாலும் தமிழகம் தனது இரன்டாவது தாய்நாடு என்றும் தான் அங்கு 9 முறை விஜயம் செய்துள்ளதையும் மற்றும் அஷ்ஷேய்க் கமாலுத்தீன் மதனி உடனான தனது மாணவ கால நினைவுகளையும் நினைவு கூர்ந்தார்க்ள. இன்னும் 20 வருடங்களுக்கு மேல் கழித்து சவுதி அரேபியாவிற்கு வருகை புறிந்துள்ள மார்க்க அறிஞரான அஷ்ஷேய்க் எஸ்.கமாலுத்தீன் மதனி அவர்களை பல வருடங்களுக்கு முன்னர் கூடிய அனைத்து தவ்ஹீத் மார்க்க அறிஞர்கள் கூட்டத்தில் ஏகோபித்த முடியவாக குர்ஆன் மற்றுமு் ஹதீஸை எடுத்தும் சொல்லும் அமைப்புகளுக்கு அமீராக தேர்வு செய்ததையும் அதை அவர்கள ஏற்க மறுத்ததையும் பின்னர் அனைத்து மார்க்க அறிஞர்களும் சேர்ந்து அஷ்ஷேய்க் எஸ்.கமாலுத்தீன் மதனி அவர்களை வற்புருத்தி அப்பொருப்பை ஏற்க வைத்ததையும் அஷ்ஷேய்க் அஹமத் அல் அஹமத் அவர்கள் தனது உரையில் நினைவு கூர்ந்தார்கள் இன்னும் அஷ்ஷேய்க் எஸ்.கமாலுத்தீன் மதனி அவர்கள் தமிழகத்தில் ஆற்றி வரும் சமுதாய அரும்பணிகளையும் அதை தான் பல முறை தமிழகத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டதையும் விவரித்தார்கள்.


அடுத்தபடியாக உரையாற்ற வந்த தமிழகத்தை சேர்ந்த பிரபல மார்க்க அறிஞரான அஷ்ஷேய்க் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் “பாவமண்ணிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அவர்களின் உரையில் பெருகி வரும் பாவங்களை பற்றியும் முஸ்லிம்கள் எவ்வாறு பாவங்களில் இருந்து மீண்டு தவ்பா எனும் பாவ மண்ணிப்பு தேடுவது என்பது பற்றியும் மிகச் சிறப்பாக விளக்குவதாக அமைந்திருந்தது.

இறுதியாக உரையாற்ற வந்த ஜம்மியத்துல் அஹ்லுல் குர்ஆன் வ அல் ஹதீஸ் (JAQH) அமைப்பின் தலைவருமான மறியாதைக்குறிய அஷ்ஷேய்க் எஸ்.கமாலுத்தீன் மதனி அவர்கள் “ஒன்றுபடுவோம் வெற்றிபெறுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். தனது உரையில் தாங்கள் எப்படி ஆரம்ப கால கட்டத்தில் அதாவது 1980 களில் தமிழகத்தில் ஏகத்துவ பிரச்சாரத்தை ஆரம்பித்தனர் என்றும் இன்று ஏகத்துவ கொள்கை தமிழகமெங்கும் பரவி வயாபித்து நிற்பதற்காக தானும் தனது சகாக்களும் எவ்வளவு கஷ்ட்டப்பட்டோம் என்பதையும் அதனால்தான் இன்று ஏகத்துவம் தமிழகத்தில் காலூன்ற முடிந்தது என்பதையும் விளக்கினார்கள்.

1980 களிள் தான் ஜம்மியத்துல் குர்ஆன் வல்ஹதீஸ் இயக்கத்தை ஆரம்பித்து ஏகத்துவ பிரச்சாரத்தை மேற்கொண்டதாகவும் நீண்ட கஷ்ட்டங்களுக்கு பின்னர் 1995 வாக்கில் தமிழகத்தில் பெரும் மாற்றம் ஏற்ப்பட்டிருந்த சமயத்தில் இன்னும் 5 வருடங்களில் தமிழகத்தில் 50 சதவிகித முஸ்லிம்க்ள ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நிலைமையில் சுய ஆதாயத்திற்காக சாத்தானிய சக்தி ஒன்று ஒன்று பட்டிருந்த இஸ்லாமிய இயக்கமும் தாய் இயக்கமுமான ஜம்மியத்துல் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) அமைப்பை உடைத்து தனி அமைப்பு கண்டதையும் பின்னர் அதே சாத்தானிய சக்தி தான் ஜாக்கில் இருந்து உடைத்து சென்று அமைத்த இயக்கத்தையும் உடைத்து வெளியேறி தவ்ஹீத் பெயரில் புதிய அமைப்பு கண்டதையும் தமிழக முஸ்லிம்கள் அனைவரையும் பிரித்து துன்டாடிய அந்த சைத்தானிய சக்தியின்ட சதியையும் தளிவாக விவரித்து அந்த சைத்தானிய சக்தியை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள்.

இஸ்லாத்தில் இமாமை அல்லது அமீரை பின்பற்றுவதன் அவசியத்தையும், இமாம் அல்லது அமீர் தவறு செய்யும் நேரத்திலும் கூட அவரது தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் ஆனால் எந்த ஒரு நிலையிலும் அந்த அமீரையோ அல்லது இமாமையோ பிறிந்து சென்று விடக்கூடாது என்பது பற்றியும், எந்த ஒரு இஸ்லாமிய காரணமும் இல்லாத நேரத்தில் தனது சுய புகழ் காரணமாக ஒன்று பட்ட பல முஸ்லிம் அமைப்புக்களை உடைத்து தமிழக முஸ்லிம்களை துன்டாடி பிரிவினைக்கு வித்திட்டு இன்று தமிழக முஸ்லிம்கள் பல அமைப்பக்களாகவும் குழுக்கலாகவும் பிறிந்து நின்று தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் அடித்துக் கொள்ளும் அவல நிலைக்கெல்லாம் காணமான அந்த ஒரே சைத்தானிய சக்தியை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் எனவும் வலியுருத்தினார்கள்.


அஷ்ஷேய்க் கமாலுத்தீன் மதனி அவர்கள் தனது உரையில் பல இடங்களில் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு நேர் எதிராக தான் இருந்த அமைப்போ அல்லது அந்த அமைப்பின் தலைமையோ எந்த ஒரு இஸ்லாத்திற்கு எதிரான செலையும் செய்யாத நிலையில் (இஸ்லாமிய கோட்பாடென்பது எந்த ஒரு சூழ்நிலையிலும் அமீரை (தலைவரை) பின்பற்ற வேண்டும் அந்த தலைவர் வெளிப்படையாக சிர்க் செய்கின்றார் என்ற நிலையில்தான் அவரை விட்டு விலக வேண்டும்) தனது சுய லாபங்களுக்காக வேண்டி அந்த சைத்தானிய சக்தி வெண்னை திரன்டு வரும் நிலையில் பானையை உடைத்த கதையாக அமைப்பை உடைத்து மாற்று அமைப்பு கண்டதையும் பின்னர் அந்த அமைப்பையும் உடைத்து புதிய அமைப்பு கண்டதையும் கூறி “பிரிவினையை ஏற்படுத்துபவர்கள் காஃபிர்கள்” ஆகவே முஸ்லிம்களிடம் பரிவினையை ஏற்படுத்துவதற்காக வேண்டி மற்றவாக்ள் மீது பொய்க் குற்றங்கயை சுமத்தி, பல கேவலமான வேலைகளையும் செய்யத் தயங்காத இந்த சைத்தானிய சக்தியிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுருத்தினார்கள்.

அத்துடன் கடந்த இருபது வருடங்களில் தலைமையை உடைத்து பிரிவினை செய்து இந்த சைத்தானிய சக்தியால் தனி ஜமாத்தக்களாக பல அமைப்புக்களாக பிரிந்து கிடக்கும் முஸ்லிம்கள் அனைவரையும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுருத்தியும் இந்த சைத்தானின் சதி்ச்செயலால் எப்படி பல அமைப:பக்களாக தமிழக முஸ்லிம்கள் பிளவு பட்டார்கள் என்பதையும் மீண்டும் அந்த சைத்தானிய சக்தியின் சதிச் செயலுக்கு பலியாகாமல் தமிழக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த சைத்தானிய சக்தியால் தாய்க் கழகத்திலிருந்து விலகி பல அமைப்புக்களாக பிளவுன்டு கிடக்கும் அனைத்து முஸ்லிம்களும் மீண்டும் ஒரே தலைமையின் கீழ் ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழகத்தில் பல வெற்றிக் கணிகளை எட்டுமாறு கோரிக்கை விடுத்தார்க்ள.

தமிழக முஸ்லிம்கள் ஏன் இத்தனை அமைப்புக்களாக உடைந்து கிடக்கின்றார்கள் என்றும் தமிழக முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி பல கூறுகளாக ஒற்றுமையின்றி அவர்களை பிறித்தது எந்த சைத்தானிய சக்தி என்று பல காலமாக தமிழ் முஸ்லிம்களின் மனதில் உழன்று வந்த இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் அந்த சைத்தானிய சக்தி எது வென்பதை மக்களுக்கு தெளிவாக அடையாளப்படுத்தும் விதமாகவும் இருந்தது அஷ்ஷேய்க் கமாலுத்தீன் மதனி அவர்களின் சிறப்புர மேலும் ஒரு தலைமையின் கீழ் ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை வலியுருத்துவதாகவும் அமைந்திருந்தது.

அஷ்ஷேய்க் கமாலுத்தீன் மதனி அவர்களின் உரைக்கு பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வும் அத்துடன் அஷ்ஷேய்க் உரைஸ் மெளலவி அவர்களின் நன்றியுரையுடனும் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழச்சிக்கு ஜீபைல், ரஸத்தநூரா, அப்கைக், ரியாத்ட உட்பட பல நகரங்டகளில் இருந்தும் தமிழ் பேசக்கூடிய முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள் அனைவருக்கும் அருசுவை மதிய உணவும் அத்துடன் மாலை நேரத்தில் தேனீரும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.நிகழ்ச்சிக்கான அத்தனை எற்பாடகளையம் தம்மாம் I.D.G.C நிலையத்தினர் எற்பாட செய்திருந்தனர்.இலங்கை இந்திய அழைப்பாளர்களும். இலங்கை இந்திய தமிழ் முஸ்லிம் சகோதரர்களும் தன்னார்வத் தொண்டர்களாக பணியாற்றியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. மேலதிக தகவல்களுக்கு இந்நிகழ்ச்சியின் வீடீயோ பதிவினை பாருங்கள்.

தம்மாம், அல்கோபர் மற்றும் சுற்றுவட்டார இஸ்லாமிய அழைப்பு நிலையங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் வீடியோக்களை காண எப்போதும் இஸ்லாமிய தாஃவா டாட் காம் காணுங்கள். இஸ்லாம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.