தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 20, 2008

இன இழிவு தீர இஸ்லாமே நன்மருந்து!.

Filed under: இனவெறி, இழிவு, இஸ்லாம் — முஸ்லிம் @ 8:02 முப
இன இழிவு தீர இஸ்லாமே நன்மருந்து!.

விழுப்புரம் மாவட்டம் எறையூர் வன்னிய கிறித்தவர்கள் மற்றும் தலித் கிறித்தவர்கள் அதிகமாக வாழும் ஊர். இவ்வூரில் வன்னிய கிறித்தவர்களுக்கும், தலித் கிறித்தவர்களுக்கும் இடையே நீண்ட காலமாக தொடர்ந்து வந்த மனப்புழுக்கம், ஒரு பேரிடியாக வெடித்து ரத்த மழையை கொட்டியிருக்கிறது.

எறையூரில் வன்னியர்கள் மத்தியில் வாழும் தலித் கிறித்தவர்களுக்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உயர் சாதி கிறித்தவர்கள் நடுவில் வாழும் தலித் கிறித்தவர்களுக்கு அவலமும், கேவலமும் தொடரத்தான் செய்கின்றன. இதன்காரணமாக பல ஊர்களில் தலித் கிறித் தவர்கள் தங்களுக்கென தனி தேவாலயங்களை கட்டிக் கொள்கிறார்கள். அதுபோலவே தனி கல்லறைத் தோட்டங்களும் உண்டு.

தலித் கிறித்தவ மக்கள் மத்தியிலும் கூட, பள்ளர் கிறித்தவர், பறையர் கிறித்தவர், அருந்ததியின கிறித்தவர் என்றும், இன்னும் பலவுமான அடுக்குகளில் பிரிவுகளும், கசப்புணர்வு களும் இருக்கத்தான் செய்கின்றன.

16ம் நூற்றாண்டில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழகம் வந்த கிறித்தவ மத போதகர் களின் ஈர்ப்பால் தமிழகத்தில் சொற்பமானவர் கள் கிறித்தவ மதத்தைத் தழுவினார்கள். அக்காலத்தில் கிறித்தவத்திற்கு மதம் மாறியவர் கள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிர்முகாமாக கிறித்தவ மதத்தைப் பார்த்ததில்லை. ஆதிக்க சாதியினரும், அடக்குறைக்கு உள்ளான சாதி யினரும் சமகாலத்தில்தான் மதம் மாறினார்கள் கூடவே, அவர்கள் தங்கியிருந்த இந்து மதத்தில், தேங்கியிருந்த சாதிய எண்ணமும், வடிவமும் எந்த சிதைவுக்கும் உட்படாமல் மதம் மாறிக் கொண்டன. இதனால் வழிபாட்டு முறை, தேவாலய உரிமை, குடியிருப்பு விதிமுறைகள், சமூக பழக்கவழக்கங்கள் எல்லாவற்றிலும் இருந்துவந்த உணர்வுப்பூர்வமான சாதியம் கிறித் தவத்திலும் தொற்றிக் கொண்டது.

சடங்குகளும், சம்பிரதாயங்களும், மதகுரு மார்களுக்கு அளிக்கப்பட்டுவந்த கடவுளுக்கு இணையான கௌரவமும் இந்து மதத்தில் இருப்பதைப் போன்றே, கிறித்தவத்திலும் தொடர்ந்து வந்ததால், சமூக அமைப்பில் மாற்றம் உண்டாக வழியில்லை.

இதனால்தான், இஸ்லாம் என்ற தளத்தில் இந்த சாதிப் புற்று வளராமல் இருக்க மிக விழிப்புணர்வுடன் முஸ்லிம் அமைப்புகள் செய லாற்றி வருகின்றன. முஸ்லிம் சமூகத்தில் தலித் முஸ்லிம், தாழ்த்தப்பட்ட முஸ்லிம் என்ற சொல் அடுக்குகள் சொருகப்படுவதை மிகக் கவனமாக முஸ்லிம்கள் எதிர் கொண்டு வருகின்றனர். 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் மாநில சட்டசபைக்கான பொதுத்தேர்தலில், தமுமுக வைத்த முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக் கீட்டை தருவதாக ஜெயலலிதா வாழ்வுரிமை மாநாட்டில் வாக்குறுதி அளித்தார். பின்னர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘தலித் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு’ என்று விஷமத் தனம் செய்தார். நாம் விழித்துக் கொண்டு கேள்வி எழுப்பிய போது, அச்சுப் பிழை என்று தன் ‘நச்சு’ எண்ணத்தை மாற்றிக் கொண்டார். திருத்தம் செய்கிறேன் பேர்வழி என்று, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக ரத்து செய்தார். சமுதாய முன்னேற்றத்திற்காக சமூகத்தைப் பிளவுபடுத்துவதை இஸ்லாமிய நெறி ஒரு போதும் ஒப்புக்கொள்ளாது. முஸ்லிம் சமுதாயமும் ஏற்காது. சமத்துவத்தை பரப்பவும், நிலை நாட்டவும்தான் இஸ்லாம் உலகளாவிய பணியாற்றி வருகிறது. மனித மனங்களின் உள் உணர்ச்சிக்கு இந்த மார்க்கத்தில் என்றுமே இடம் இருப்பதில்லை. இறைகட்டளையை நடை முறைப்படுத்துவது மட்டுமே சமூக நடவடிக் கைகளின் முதல் திட்டம். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையே மனித குலத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவது தான், யூதமும், கிறித்தவமும், ஆரியமும், இந்துத்துவமும் மனிதகுல சமத்துவத்துக்காக உருவான மதங்கள் என்று எந்தப் பதிவுகளும் இல்லை. சமத்துவமாக வாழ்ந்த ஒரு காலக்கட்டம் இருந்ததாக வரலாறும்கூட இல்லை.

இதனால்தான் தமிழகத்திலும், கிறித்தவ மதமாற்றத்தில் கரைந்து போன தலித்துகள் உயர் சாதி கிறித்தவர்களுடன் இரண்டற கலந்து போக இயலவில்லை. காரணம், தலித்துகளது கிறித்தவ மத மாற்றம் என்பது சமூக விடுதலைக்கான நடவடிக்கையாக ஒரு போதும் இருந்ததில்லை. அதை கிறித்தவ திருச்சபைகளும் ஒப்புக் கொண்டதில்லை. கிறித்தவ சமூகம் உருவான காலக்கட்டத்தில் இருந்தே உட்பூசல்களும், மோதல்களும் அதன் உள்கட்டமைப்பில் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. அது இன்று வெளிப்பட்டிருக்கிறது.

இந்து மதத்தில் இருக்கும் தலித்துகளுக்கு சமூக விடுதலை வேண்டி மாநில, தேசிய அளவில் போராட்டங்களை தலித் அமைப்புகள் வீரியமாக நடத்த தொடங்கியதன் பின்னணியில் தான், கிறித்தவ சமுதாயத்தில் தனித் தொகுதியாக நிற்கும் தலித் கிறித்தவர்களும் உரிமை குரல் எழுப்பத் தொடங்கினர். இந்து மதத்தில் இருந்து வெளியேறும் பொழுது எந்த மதத்திற்குச் சென்றாலும் சமூக விடுதலை கிடைக்கும் என்று எண்ணுவது ஒரு கற்பனை அல்லது திரிபுவாதம். மத நம்பிக்கை ஆதிக்க சக்திகளின் முகமூடியாக இருக்கும் வரை ஒடுக்கப்பட்டவனின் தப்பிப் பிழைக்கும் ஓட்டம் ஓர் தொடர் போராட்ட மாகத்தான் இருக்கும். இஸ்லாம் மட்டுமே அந்த துப்புரவுப் பணியை திறம்பட செய்கிறது. காரணம், இஸ்லாம் தன் நெறியை ஒப்புக் கொள்பவர்களின் சொல், செயல், எண்ணம், பெயர், நடை, உடை, பாவனை, உறவு முறை, உணவு முறை, தோற்றப் பொலிவு, வாழிடம், வாழ்நிலை, அங்க சுத்தி, சுகாதாரம், உடல் நலம் என அத்தனை திக்குகளிலும் ஒரு மனிதனை மறுவடிவம் செய்கிறது. ஒரு மனிதனிடத்தில் இத்தனை மாற்றங்களையும் மொத்தமாக செய்து முடிக்க இஸ்லாம் தவிர்த்து எந்த கொள்கையிலும் சக்தி இல்லை.

அதனால்தான் தந்தை பெரியார், ‘இன இழிவு தீர இஸ்லாமே நன்மருந்து’ என பரிந்துரைத் தார். அவரது அன்றைய பரிந்துரை இன்றைக் கும், என்றைக்கும் இம்மண்ணுக்குத் தேவையாக இருக்கிறது! ஒரே இறைவன் உலக மக்களுக் காக வழங்கிய இஸ்லாமிய நெறியில்தான் உண்மையான சமத்துவம், சகோதரத்துவம் அடங்கியுள்ளது. எனவே சமத்துவம் தேடும் மக்களை நோக்கி தன் கரங்களை விரித்து ‘இணைய வாரீர்’ என இஸ்லாம் வரவேற்கிறது.

திருநெல்வே­ நகரம், 51வது வார்டு கிளை சார்பில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ரத்த தான முகாமிற்கு நகர மருத்துவர் அணிச் செயலர் கபீர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஐ. உஸ்மான்கான் முகாமை தொடக்கி வைத்தார்.

மாவட்ட மருத்துவ சேவை அணிச் செயலர் தாஹிர், நிர்வாகிகள் ஜின்னா, வாஹித்அ­, சாதிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முகாமில் 30க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

நன்றி : தமுமுக இணையத்தளம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.