தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 28, 2008

அல்கோபரில் நடந்த இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி

Filed under: அக்ரபியா, இஸ்மாயில் ஸலஃபி — முஸ்லிம் @ 9:05 பிப


அல்கோபர் மாநகரில் அக்ரபியாவில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மற்றும் பிரச்சார மையத்தின் தமிழ் பிரிவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழச்சியில் இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வருகை தந்திருக்கும் பிரபல மார்க்க அறிஞரும் மற்றும் இலங்கையில் இருந்து வெளிவரும் ” உண்மை உதயம்” பத்திரிகை ஆசிரியருமான மெளலவி இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்கள்.

சரியாக இரவு 8.30 அளவில் அக்ரபியா இஸ்லாமிய அழைப்பு மற்றும் பிரச்சார மையத்தின் தமிழ் பிரிவு அழைப்பாளராக பனியாற்றும் தமிழகத்தை சேர்ந்த பிரபல மார்க்க அறிஞர் மெளலவி அலி அக்பர் உமரி அவர்கள் நிகழச்சியை துவக்கி வைத்து துவக்க உரையாற்றினார்கள்.


அதன் பின்னர் சிறப்புரை ஆற்ற வருகை தந்திருந்த மெளலவி இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் “குழந்தை வளர்ப்பும், இஸ்லாமிய கல்வியும்” என்ற தலைப்பில் மிக அருமையான, அவசியமான உரை ஒன்றை ஆற்றினார்கள்.

நிகழச்சியின் இறுதியில் கிழக்கு மாகான தமிழ் தஃவா கமிட்டியின் துனைத் தலைவர் மெளலவி உவைஸ் பாக்கவி அவர்கள் நிறைவுரை நல்க நிகழச்சி இனிது நிறைவுற்றது.


இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஆன்களும், பென்களும், குழந்தைகளுமாக தம்மாம் அல்கோபர் பகுதிகளில் இருந்து இந்திய, இலங்கையை சோந்த தமிழ் பேசக்கூடிய சகோதரர்கள் நூற்றுக்கணக்கில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அணைவருக்கும் சுவையான இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழச்சிக்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகான தமிழ் தஃவா கமிட்டி அக்ரபியா சென்டருடன் இணைந்து செய்திருந்தது. தமிழ் தஃவா கமிட்டியின் தன்னார்வ தொண்டர்கள் வந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறுதல் முதல் அணைத்து பணிகளையும் சிறப்பாக செய்தனர்.

செய்தி மற்றும் புகைப்படம் : சகோ. அபு இஸாரா & முகவைத்தமிழன்

குறிப்பு : இந்நிகழ்ச்சியின் வீடியோ நமது தமிழ் முஸ்லிம் மீடியா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.