தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

பிப்ரவரி 20, 2008

என்னைக் கவர்ந்த கருத்துப் படம்

Filed under: ஈழம், கொசோவோ, eelam, kosovo — முஸ்லிம் @ 8:21 முப

என்னைக் கவர்ந்த கருத்துப் படம். வாழ்த்துக்கள்!!

நன்றி : யாழ் கருத்துக்களம்

Advertisements

நவம்பர் 2, 2007

சு.ப.தமிழ்செல்வன் படுகொலை கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்(eelam)

Filed under: ஈழம், சு.ப.தமிழ்செல்வன் — முஸ்லிம் @ 9:38 பிப

ஈழ (தமிழின்) செல்வனே

எம் கண்களின் முன்னே
உமிழ்கிறது…
உன் புன்னகையின் வசீகரம்
ஒற்றைக்கால் தாங்கி
நீ பயணித்த திசைகளில்
சமாதானத்தின் தூது செல்ல
உன் விரல் படர்ந்த
ஊன்று கோல் மட்டுமே இனி…

விடுதலையின் நீண்ட பாதையில்
துவண்டு வீழாமல்
தோழர்கள் நடைபயில
உடன்வரும் உன் நினைவுகள்

கவிதை – கா.இளம்பரிதி

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்ததிலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றி தமிழீழ விடுதலைப் போரை தொடர்ந்து நடத்துவார்கள் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

மதுரையிலிருந்து பழ. நெடுமாறன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் சிங்கள வான்குண்டு வீச்சுக்குப் பலியாகி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கடந்த 25 ஆண்டுகாலத்திற்கும் மேலாக தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நம்பிக்கையினைப் பெற்றவர். பல்வேறு களங்களில் தலைமை தாங்கி போராடியவர்.

சந்திரிகா அரசு இருந்த போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் பின்னர் நார்வேயின் முயற்சியால் நடைபெற்ற அனைத்து பேச்சு வார்த்தைகளிலும் புலிகளின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர். இளம் வயதில் சர்வதேச ராஜதந்திர அரசியலில் சிறந்து விளங்கியவர். புலிகளின் சார்பில் சமரச பேச்சுக்களுக்கு தலைமை தாங்கிய தளபதியை குறிவைத்து குண்டுவீசி படுகொலை செய்ததன் மூலம் இனி சமரசப் பேச்சுக்களுக்கு சிங்கள அரசு தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தி விட்டது.

தமிழ் ஈழ தேசியத் தலைவரின் அஞ்சலி

மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்பதற்கு இணங்க மறைந்த தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றி விடுதலைப் போரை தொடர்ந்து நடத்துவார்கள் என்பதில் அய்யமில்லை.

மறைந்த தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகமெங்கும் கூட்டங்களை நடத்தும்படி அனைத்து தமிழ்த்தேசிய அமைப்புகளை வேண்டிக்கொள்கிறேன் என்றார் அவர்.

தமிழகமெங்கும் பெறியார் தி.க சார்பில் சு.ப. தமிழ்செல்வன் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள்

ஆர்ப்பாட்டத்தில் பெறியார் தி.க தோழர்கள்

சிறிலங்கா வான் குண்டுத்தாக்குதலினால் வீரச்சாவடைந்த அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு வீரணவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் இன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெற்றன. சேலம்சேலம் போஸ் மைதானம் அருகில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வும் அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளத்தை அழித்த சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் வித்துடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டித்தும் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணிக்கு வீரவணக்க நிகழ்வும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பெரியார் திராவிடர் கழக நிர்வாகி டைகர் பாலன் தலைமை வகித்தார்.ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மனித உரிமைக் கழகம், புதியன பண்பாட்டுக் கழகம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, தலித் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர். கோவைகோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் திராவிடர் கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் தலைமை வகித்தார்.இந்நிகழ்வில் பெரியார் தி.க.வின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் வெ. ஆறுச்சாமி, நிர்வாகிகள், தமிழின உணர்வாளர்கள் பலரும் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.பிடிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் பெரியார் தி.க.வின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. .

ஒக்ரோபர் 24, 2007

சிரிக்கும் சிங்கள பேரினவாத நாய்கள்!!

Filed under: ஈழம், சிங்கள பேரிணவாதம் — முஸ்லிம் @ 9:25 பிப
சிரிக்கும் சிங்கள பேரினவாத நாய்கள்!!

வீரனுக்கு உடை
அவன் வீரமன்றி
துணி அல்ல

துணி அவிழ்த்து
பார்க்கும் கோழையே
நிர்வாண உடம்பில்
என்ன தேடுகிறாய்

தொடை நடுங்கி கூட்டமே
துணி அற்ற உடலும்
தொடை நடுங்க
வைக்குதா

பிறந்த பலனை
நாட்டுக்கு கொடுத்தவன்
துணியில்லாமல்
சாவதில் பெருமை இருக்கும்

சுற்றி நின்று
வேடிக்கை பார்கிறாய்
துணி இருந்தும் நீ
அம்மணம்தானே

குறித்துக்கொள்
சாகும் நாளை
செய்துகொள்
சவபெட்டியை
நினைத்து கொள்
ஈழம் பயந்தவன்
பூமி இல்லை

(அநுராத புரம் தாக்குதல் இறந்த புலிகளுக்கு வீரவணக்கங்கள்
உயிரெனும் ஆயுதம் ஏந்திய உங்களின் புகழுடம்பு மங்காது)

அநுராத புரம் தாக்குதல் இறந்த புலிகளின் உடலை அம்மணப்படுத்தி
வேடிக்கை பார்க்கும் சிங்கள பேரின வாதத்தை கேள்வி கேட்க எழுதியது – தியாகு.

நன்றி : செம்மலர்

சிங்களவன் பாதங்களை நக்கும் தமிழர் என்று தங்களை அழைக்க வெட்கப்படும் சில தமிழ் பேசும் இனத்துரோக நாய்கள் தன் எஜமானனை திருப்தி படுத்த “அப்ப இது நியாயமா?” என்று கேட்டு ஒப்பேறாத புகைப்படங்களுடன் விரைவில் பதில் பதிவுகளும் மின்னஞ்சல்களும் அனுப்புவார்கள். .

Create a free website or blog at WordPress.com.