தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 6, 2008

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

Filed under: ஒற்றுமை, குழந்தை வளர்ப்பு — முஸ்லிம் @ 7:14 பிப
நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளை பெற்றவர்கள் மேற்க்கொண்டு படிக்க………….

www.otrumai.com

ஜனவரி 10, 2008

வரவேற்கத்தக்க முடிவு!

Filed under: A.F.F, ஒற்றுமை — முஸ்லிம் @ 1:33 பிப

வரவேற்கத்தக்க முடிவு!

வரும் ஜனவரி 14ம் தேதி சென்னை வருகைதரும் நரவெறிபிடித்த நரேந்திர மோடியை எதிர்த்து தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினோர் மீது அக்கரைக்கொண்ட சில அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஃபாசிச எதிர்ப்பு முன்னனி (A.F.F) என்றப் பெயரில் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இந்த முன்னனிக்கு அமைப்பாளராக தமுமுக தலைவர் சகோ. ஜவாஹிருல்லாஹ் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க பட சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கக்கூடிய சமுதாய இயக்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சேர்ந்து இந்த முன்னனியில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த முன்னனியின் சார்பாக வரும் ஜனவரி 14ம் தேதி நரேந்திர மோடி பங்கேற்க உள்ள காமராஜர் அரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று முடிவெடுத்துள்ளனர். எல்லாம் வல்ல இறைவன் இந்த முன்னனியின் செயல்பாடுகளை வெற்றியாக்கிவைப்பானாக. நமது சமுதாய இயக்கங்களுக்கு மத்தியில் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுப்பிரச்சினை என்று வந்த பொழுது ஒன்று சேர்ந்து நமது சமுதாய நல விரும்பிகளும் இந்த முன்னனியில் தங்களையும் இணைத்துக்கொண்டு போராட இருப்பது பெரிதும் பாராட்டத்தக்க ஒன்று.

சமுதாய அக்கரைக்கொண்ட தமுமுகவும் அதன் தலைவர்களும் ஏன் இதே போன்று மற்ற இஸ்லாமிய அமைப்புகளை ஒன்றினைத்து டிசம்பர் 6 போண்ற சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தக்கூடாது? ஓரு தனிப்பட்ட இயக்கம் என்று நடத்தாமல் ஒட்டுமொத்த சமுதாயத்தின் இயக்கங்கள் சேர்ந்து நடத்தினால் அது ஒட்டுமொத்த சமுதாயத்தின் கோரிக்கையாக அமையுமல்லவா? தனக்ககென தனிஇயக்கம் கண்டவர்கள் சமுதாயத்தை துன்டாட நினைப்பவர்கள், தங்களுக்கென உள்ள மடையர் கூட்டத்தை தக்கவைக்க ஒரு கொள்கை – அதுதான் எங்களுக்கென உள்ள தனிக் கொள்கை என்று பிரிவினையை தங்களது கொள்கையாக வகுத்துக் கொண்டவர்கள் எனக்கு கூட்டம் அதிகமா? உனக்கு கூட்டம் அதிகமா? (இப்படியே அவர்கள் ததஜவை உறுவாக்கியப் பிறகு நடந்த டிசம்பர் 6 க்கு பிறகு வந்த உண்ர்வு இதழில் எழுதினார்கள்) என்று சமுதாயத்தை பிரித்து கணக்கு பார்க்கக்கூடிய சமுதாய துரோகிகளின் எண்ணங்களை தவிடு பொடியாக்கலாமே? வருடா வருடம் ஒவ்வொரு குழுக்களாக – தனித்தனியாக போராடாமல், ஒட்டு மெத்தமாக அனைத்து இயக்கங்களும் ஒன்றினைந்து போராடினால் அதன் மூலம் சமுதாயம் பலன் பெறுமல்லவா? தமுமுக போண்ற சமுதாய இயக்கங்கள் இதை செய்ய முன்வருமா? இதற்கு சமுதாய இயக்கங்கள் பதிலளிக்க வேண்டும். பதில் அளிப்பார்களா?

இஸ்லாமிய புத்தாண்டு பிறந்திருக்கும் இந்த நல்ல வேளையில் சமுதாய இயக்கங்களிடமிருந்து நல்ல அறிவிப்புகள் வரும் எதிர்ப்பார்ப்போம்.

– அப்துல்லாஹ், சென்னை

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.