தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 19, 2007

பிரதிபா பட்டிலுக்கு அதரவை கலைஞர் மறு பரீசீலனை செய்ய வேண்டும் – IDMK

Filed under: கண்டனம், பிரதிபா பட்டில். IDMK — முஸ்லிம் @ 6:40 பிப
முற்போக்கு தேசிய முன்ணணியின் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் பிரதிபா பாட்டீல் ஆதரவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை.

மதச்சார்பற்ற தேசம் நம் இந்திய தேசம். 30 கோடி முகமுடையாள் நம் சிந்தனை ஒன்றுடையாள் என்ற ஒருமைப் பாட்டை உரக்க முழங்கிய நாடு நம் தமிழ்நாடு. தேசிய முற்போக்கு கூட்டணியரால் உயர்பதவிக்கு (குடியரசுத் தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட உள்ள பிரதிபா பாட்டீல் வரலாறு தெரியாமல் வாயில் வந்ததை எல்லாம் உளரி இருப்பது இந்திய சமூக நல்லிணக்கத்திற்கும், இந்திய இறையாண்மைக்கும், திராவிட பகுத்தறிவு சிந்தனைக்கும் எதிரான கருத்து.

மதச் சார்பற்ற நாட்டில் உயர் பதவிக்கு வர இருப்பவர் மத உணர்வுகளைப் புண்படுத்துகிற விதத்தில் பேசி இருப்பது அவர் சார்ந்த விழ வீரியத்தின் வெளிப்பாடு என்பது அம்பலமாகி உள்ளது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு சமூகத்தின் மத உணர்வுகளுக்கு எதிராக தீக்குச்சிகளை கொளுத்திப் போடுவது அழகான செயல் அல்ல. கடந்த கால மன்னர்கள் வரலாறு என்றாலே, போரும், சூழ்ச்சியும், துரோகமும் தான் காண முடியும். அவை எல்லா மத மன்னர்களிடமும் மண்டிக் கிடந்ததை வரலாற்று வல்லுனர்கள் செப்புகின்றனர். அதில் முகலாய மன்னர்கள் மட்டும் விதி விலக்கு அல்ல.

இன்றைய நவீன இந்தியாவில் பால்ய விவாகம், சிசுக்கொலை, கணவன் இறந்தால் மனைவியை உயிருடன் எரிப்பது, விதவைத் திருமணம் மறுப்பு, வரதட்சினைக் கொடுமை இவை எல்லாம் அதிகம் அறங்கேற்றப்படும் மாநிலம் ராஜஸ்தான் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறும் சான்று. இவற்றிற்கு எல்லாம் பிரதிபா பாட்டீல் மறுப்பு தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்?

சிறு நெருப்புத்தானே என்று தங்க அனுமதி அளித்தால் தங்கும் இடத்தையே அது அழித்துவிடும். அது தீயின் இயல்பு, அப்படித்தான் அன்று நாலந்தா பல்கலைக்கழகம் தீக்கு இறையாக்கப்பட்டது.

முற்போக்கு கூட்டணியின் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களே! பிற்போக்கு கொள்கைகளைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரதிபா பாட்டீல் அவர்களை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுப்பதை மறுபரிசீலனை செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

வரலாறு வாய்மைக்குச் சான்று பகரட்டும். வரலாறு உங்கள் செயல்களை வழி மொழியட்டும்.

இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு
No. 39/21, Maraikayar Street, Mannady, Chennai – 600 001

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.