தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 11, 2008

‘காயிதே மில்லத்தின் கருத்துரைகள்’ நூல் வெளியீட்டு விழா!

Filed under: காயிதேமில்லத், குவைத், நூல், வெளியீடு — முஸ்லிம் @ 4:46 முப

‘காயிதே மில்லத்தின் கருத்துரைகள்’ நூல் வெளியீட்டு விழா!
குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) ஏற்பாடு!

03-04-2008 வியாழக்கிழமை மாலை 7.00 மணியளவில் குவைத், அப்பாஸிய்யா பகுதியில் உள்ள இந்தியன் சென்ட்ரல் ஸ்கூல், காயிதே மில்லத் (ரஹ்) அரங்கத்தில் குவைத் இ.யூ.மு.லீக்கின் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்கள் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் கருத்தாழமிக்க நாடாளுமன்ற, சட்டமன்ற உரைகள் மற்றும் பத்திரிகை நேர்காணல்களை மிகவும் சுவையாக தொகுத்து எழுதிய ‘கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்…!
குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (KKMCC) நடத்திய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 60வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக நிகழ்ந்த இந்நூல் வெளியீட்டு விழாவை குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) ஏற்பாடு செய்திருந்தது.
குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் தலைவர் கொரட்ரபுரம் முஹம்மது ரஃபீக் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் குவைத் இ.யூ.மு.லீக்கின் செயலாளர் சத்திரமனை ஏ. ஹஸன் முஹம்மது, பொருளாளர் ஷாஹின் ஷா மற்றும் தலைமை நிலையச் செயலாளர் ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கேரளா இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பானக்காடு சைய்யத் முஹம்மது அலி ஷிஹாப் தங்கள் அவர்கள் இந்நூலை வெளியிட, குவைத் கோல்டன் அல்மாஸ் உணவக அதிபர் முஹம்மது முஸ்தஃபா, குவைத் இ.யூ.மு.லீக்கின் தலைவர் முஹம்மது ஃபாரூக், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க(K-Tic )த்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ மற்றும் துணைத்தலைவர் மவ்லவீ எம். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவி ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர்.
கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும், கேரள அரசின் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான பி.கே. குஞ்சாலி குட்டி, கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி. கார்த்திகேயன், தோமஸ் சாண்டி மற்றும் கேரள முன்னாள் அமைச்சர் சேர்குளம் அப்துல்லாஹ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நூலின் தொகுப்பாசிரியரான குவைத் இ.யூ.மு.லீக்கின் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்கள் நூல் குறித்து அறிமுகவுரையாற்றி ஏற்புரையாற்றியதுடன் இவ்விழா இனிதே நிறைவுபெற்றது.
இச்சிறப்பு மிகு விழாவில் மேதகு குவைத் இந்திய தூதர் எம். கணபதி, கேரள தொழிலதிபர் பத்மஸ்ரீ எம்.ஏ. யூஸுஃப் அலீ, குவைத் இந்திய இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் அல்ஹாஜ் முக்தார் மஃரூப், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர், தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் காப்பாளர் குழு உறுப்பினர்கள் சோழபுரம் ஜாஹிர், திருபுவனம் ஜாஹிர், காரைக்கால் எஸ்.எம். ஆரிஃப் மரைக்காயர், குவைத், இந்திய அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், குவைத் வாழ் தமிழக மற்றும் கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கர்கள், ஆர்வலர்கள், அனுதாபிகள், பல்வேறு தமிழ் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரங்கம் நிரம்ப கலந்து கொண்டனர்.
குவைத் இ.யூ.மு.லீக்கின் அதிகாரப்பூர்வ வலைப்பூவான http://www.kuwaitiuml.blogspot.comல் நிகழ்ச்சி குறித்த செய்தியையும், புகைப்படங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மேலதிக விபரங்களுக்கும், தங்களின் கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் iumlkuwait@yahoo.com / iumlkuwait@gmail.com என்ற மின்னஞ்சல்கள் வாயிலாக தொடர்பு கொள்ளும்படியும் குவைத் இ.யூ.மு.லீக்கின் செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

செய்தி :
குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML)
வலைப்பூ: http://www.kuwaitiuml.blogspot.com
மின்னஞ்சல்கள் : iumlkuwait@yahoo.com / iumlkuwait@gmail.com

Create a free website or blog at WordPress.com.