தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 10, 2008

கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகம்

Filed under: ஈமான், கடல், கண்காட்சி, கீழக்கரை — முஸ்லிம் @ 8:15 பிப

கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயை தலைமையிடமாகக் கொண்ட
பன்னாட்டு தொழில் நிறுவனமான இடிஏ அஸ்கான் குழுமத்தின் மேலாண்மை
இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் கீழக்கரையில் நிருபர்களிடம்
கூறியதாவது :

வள்ளல் சீதக்காதி, உமறுப்புலவர் உட்பட பல புலவர்கள் வாழ்ந்து மறைந்த ஊர்
கீழக்கரையாகும். போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள்
மற்றும் வீரத்தளபதிகள் இவ்வூருக்கு வந்து சென்றுள்ளனர்.

இந்த ஊரின் வரலாற்றுச் சிறப்பை விளக்கும் வகையில் ஒலி, ஒளி காட்சி
பிரமாண்டமாக அமைக்கப்படும். பழமையை நினைவுபடுத்தும் அருங்காட்சியகம்,
கடல்வாழ் உயிரின கண்காட்சியகம், பழமையான கடல் பொருட்கள் இந்த
அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ்
உயிரின கண்காட்சியகமும், அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் வகையில்
பிரமாண்ட திருமண மண்டபமும் கட்டப்படும்.

பல கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்திற்கான அறிக்கை வெஸ்ட் ஆசியா
நிறுவனங்களின் இயக்குநர் அஹமது ரிபாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திட்ட
அறிக்கை, வரைபட பணிகள் நிறைவடைந்த பின்னர் வேலைகள் துவக்கப்படும்.
இதற்கான செலவை இடிஏ அஸ்கான் குழு நிறுவனங்கள், கீழக்கரை நலச் சங்கம்
உள்ளிட்டவை ஏற்கும் என்றார்.

தகவல் :

கீழக்கரை ஹமீது யாசின்
ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர்
துபாய்

மார்ச் 31, 2008

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் முதல் ரேங்க் பெற்ற மாணவி

Filed under: கீழக்கரை, தினகரன், மாணவி, முதல் — முஸ்லிம் @ 7:52 பிப


கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் முதல் ரேங்க் பெற்ற மாணவி

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் யு.கே.ஜியில் முதலிடம் பெற்ற பாத்திமா ரீஸ்மாவுக்கு ஆண்டுவிழாவில் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

இவரது தந்தை ஹமீது யாசின் துபாய் ஈடிஏ ஜீனத் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மேலும் இவர் ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

ஹமீது யாசின் தந்தை கீழக்கரை தினகரன் செய்தியாளராவார்.

மார்ச் 19, 2008

கீழக்கரை தமுமுக அலுவலகத்தில் பென்னை கட்டி வைத்து சித்திரவதையா?

Filed under: கீழக்கரை, தமுமுக, மானபாங்கம் — முஸ்லிம் @ 9:40 பிப

02. இளம் பெண்ணை கட்டி வைத்து சித்ரவதை : வேறு நபருடன் பேசியதால் கொடூரம்


ராமநாதபுரம் : வேறு நபருடன் பேசி கொண்டிருந்த இளம் பெண் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கட்டி வைத்து அடித்து உதைத்து மானபங்கம் செய்த த.மு.மு.க., பிரமுகர்கள் உட்பட 36 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த கமால் ஜலாலுதீன் மகள் தஸ்லிமா(25). விவாகரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் கீழக்கரையில் பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பெரியபட்டினத்தை சேர்ந்த நயினாமுகம்மதுவுடன் பேசிகொண்டிருந்தார்.சந்தேகமடைந்த த.மு.மு.க., நகர தலைவர் சிராஜூதீன் தலைமையில் நகர் செயலர் மனாசீர் உட்பட த.மு.மு.க.,வினர் தஸ்லிமா, நயினாமுகம்மது ஆகியோரை த.மு.மு.க., அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை என்ற பெயரில் அடித்துள்ளனர். இருவரையும் பள்ளிவாசல் அருகே மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமை செய்தனர். தஸ்லிமாவை மானபங்கம் செய்து துன்புறுத்தி உள்ளனர். கீழக்கரை போலீசார்இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தஸ்லிமா புகாரின் படி, த.மு.மு.க., நகர் தலைவர் சிராஜூதீன், செயலர் மனாசீர் உட்பட 36 பேர் மீது பெண் வன்கொடுமை உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் த.மு.மு.க.,துணை தலைவர் வாபாசா துணை செயலர் ஜலால் ஆகியோர் தலைமையில், ஏராளமானோர் கீழக்கரை போலீஸ் நிலையம் முன் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்

Create a free website or blog at WordPress.com.