தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜனவரி 9, 2008

சூரப்புலியின் விட்டான் சவாரி பிடித்தான் ஓட்டம்

Filed under: குவைத் த.த.ஜ, ததஜ சூரப்புலி — முஸ்லிம் @ 8:01 முப

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,

சி. ஐ. டி. ஊதிய சங்கு

குவைத் நாட்டில் ததஜ செய்து வரும் அடாவடிகளால் அதிருப்தி அடைந்து வரும் பொதுமக்கள் மற்றும் நடுநிலைவாதிகள் 04-01-2008 அன்று நடந்த சம்பவத்தால் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். அதன் விவரத்தை தங்களுக்கு அறியத் தருகின்றோம்.

தமிழகத்தில் ஆறு விதமான லீக்கர்கள் இருப்பதைப்போல் குவைத்தில் மூன்றுவிதமான ததஜ-வினர் இருக்கின்றனர். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா. அதுதான் உண்மை. ஆம், காலத்தையும், உழைப்பையும் விரயம் செய்து கதைகளையும் கற்பனைகளையும் எழுத எங்ளிடம் கம்ப்யூட்டர் ஆலிம்சாக்கள் யாரும் இல்லை. விஷயத்திற்கு வருவோம்.

சில வருடங்களுக்கு முன் குவைத்தில் முஸ்லிம்கள் ஒற்றுமைக்குழு என்று ஒன்று துவங்கப்பட்டது. அது பிறகு இஸ்லாத்தை வழிகாட்ட வேண்டி மாற்றப்பட்டது. ஆனால் அவர்கள் காட்டிய வழி பிஜெயிஸமாக இருந்தது. அவர்களோடு ஆர்வக்கோளாறு என்று அனைவராலும் அழைக்கப்படும் அபுஸாலிஹ் என்பவர் தலைமையில் ஒரு குழு இணைந்தது. தவ்ஹீத் + தவ்ஹீத் வருமானங்களும் வாசகர்களும் பெருக ஆரம்பித்தனர். கேமரா என்னுடையது, வி.சி.ஆர் உன்னடையது என்று ஒரு கூடாரத்திற்குள்ளேயே பிரிவினைகள் உருவானது. இருதியில் ஆர்வக்கோளாறு தலைமையில் அந்தக்குழுவினர் பிளாட்பாரத்திற்கு விரட்டப்பட்டனர். வழக்கம் போல் வழிகாட்டுபவர்களை பற்றிய அவதூறுகளும், குற்றச்சாட்டுகளும் ஆர்வக்கோளாறு குழுவினரால் கணிசமாக பரப்பப்பட்டது. பிறகு தான் உணர்வில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பின் மூலமும், அதன் பிறகு நடந்து வந்த சம்பவங்களும் ததஜ கூட்டத்தாரிடமிருந்து மீண்டும் ஒரு குழு தனியே பிரிந்தது. ஆனால் அனைவருடைய வருமானங்களும் பிஜேவிற்கே சென்றது.

சமுதாய அப்பாவி மக்களின் உழைப்பு ஒரு குற்றவாளி கையில் சென்றடைந்தது. அதுமட்டுமல்லாமல் இருவரது பித்ரா வசூலை பொய்ப்படு்த்தி இருவருமே நோட்டீஸ் வெளியிட்டுக்கொண்டும் நாங்கள் தான் தலைமையால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்று இருவருமே மார்தட்டிக்கெண்டு வந்தனர். இந்த நேரத்தில் தான் வின்டிவி வியாபாரத்திற்காக பாக்கர் அவர்கள் குவைத்திற்கு வந்து இருவரையும் அழைத்து ஒருங்கிணைக்க முயற்சித்தார். ஆனால், அது பயனில்லாமல் போய்விட்டது. இருதியில் ஆர்வக்கோளாறு குழுவினரின் எதிர்தரப்பை அங்கீகரித்து அண்னணிடமிருந்து கடிதம் வந்தது. அதை குவைத் முழுவதும் ஒட்டி வைத்தனர். இருந்தும் ஆர்வக்கோளாறு ததஜவினர் அங்கீகரித்தால் தான் ததஜவா என்று எதிர்தரப்பை கேட்டு விட்டு நீ அங்கீகரிக்கப்பட்ட ததஜ என்றால் நான் அங்கீகரிக்கப்படாத ததஜ என்று வசூலில் இறங்கினார்கள்.

வசூல் நேரத்தில் நடுரோட்டிலேயே முட்டிக்கொண்டார்கள். அந்த சம்பவத்திற்குபின் பணத்திற்காக இவ்வளவு கேவலாமாகவும் இறங்கிவிட்டீர்களே என்று வருத்தப்பட்டு சிலபேர் ஆர்வக்கோளாறு குழுவினருடன் இணைந்தனர். ஆனால், ஆர்வக்கோளாறு மட்டும் தனது குழுவினரை கழட்டி விட்டு ததஜ வோடு இணைந்து கொண்டது. இந்த சம்பவங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சமுதாயம் எதிர்த்து கேள்வி கேட்கவும் இல்லை, திருந்தவும் இல்லை.

இதன் பிறகு இஸ்லாமிய வழிகாட்டியவர்களுக்கு ஜும்ஆ குத்பாவிற்கு பள்ளி கிடைக்கிறது. அவர்களது பிஜெ கடைகளை அங்கே பரப்பி வியாபாரம் செய்து கொள்கிறார்கள். ததஜவினரும் செய்தார்கள். கூட்டம் அதிகமாக ததஜவினருக்கு சேருகின்றது. பள்ளி வியாபாரம் தடைசெய்யப்படுகிறது. ஆனால், ததஜவினர் மட்டும் வியாபாரத்தை நிறுத்தாமல் நேற்று வரை தொடர்ந்து வந்தார்கள். நேற்று தான் அந்தச்சம்பவம் நடந்தது.

ஆம், குவைத் அரசாங்க உளவுத்துறையால் வேவு பார்க்கப்பட்டு இவர்கள் வியாபாரம் செய்வது உறுதி செய்யப்பட்டவுடன் இவர்களது டேபிளில் (மட்டுமே) வந்து என்ன இது என்றார் உளவுதுறை. தஃவா என்றார் ததஜ, எந்த லஜ்னா என்கிறார் உளவுதுறை. டிஎன்டிஜெ என்கிறார் ததஜ, சிவில் ஐடி காட்டு என்கிறது உளவுதுறை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு விட்டான் சவாரி பிடித்தான் ஓட்டம் அந்த ததஜ சூரப்புலி.

உடனே அருகில் இருந்த மற்றொறுவரின் சட்டையை கோர்த்து பிடித்து கொண்டு உன் சிவில் ஐடி எங்கே என்கிறது உளவுத்துறை அவர் தயங்கி தயங்கி காட்டுகிறார். அந்த சிவில் ஐடியை வாங்கி வைத்துக் கொண்டு உளவுத்துறை சொல்கிறது, ஓடிப்போனவனை கொண்டு வந்து போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டு உனது சிவில் ஐடியை வாங்கிப்போ என்று சொல்லிவிட்டு மொத்தக்கடையையும் அள்ளிக்கொண்டு வண்டியில் வைத்துவிட்டு திரும்பி வந்து எச்சரித்து விட்டு சென்றுவிட்டது. இனி திருந்துவார்களா ததஜ. பொருத்திருந்து பார்ப்போம். – வஸ்ஸலாம்.

தகவல் : மின்னஞ்சல் மூலமாக குவைத்திலிருந்து சகோ. அப்துல் ரஹ்மான் அமானுல்லா

Advertisements

Create a free website or blog at WordPress.com.