தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 18, 2007

புற்றுநோய் – தமிழ் விஞ்ஞானியின் சாதனை

இந்திய குடியரசுத்தலைவருடன் விஞ்ஞானி மாசிலாமனி அவர்கள்

புற்றுநோய்க்கான சாத்தியங்களை அதன் மிக ஆரம்பக்கட்டத்திலேயே-சிறிதே இரத்தம், சிறிதே சிறுநீர் வைத்து ஆராய்ந்து கண்டறிந்து விடுவதன் மூலம் பெருமளவு தடுத்துவிடமுடியும் என்று தமிழ்நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி முனைவர். வ.மாசிலாமணி நிரூபித்துள்ளார். மாசிலாவின் புற்றுநோய் பகுப்பாய்வு (Masila’s Cancer Diagnostics) என்று பெயரிடப்பட்டுள்ள இவ்வரிய சாதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் (Indian Council of Medical Research) அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

இக்கண்டுபிடிப்பு வழமையாக நடைமுறைபடுத்தப்பட்டால், வருடாவருடம் இலட்சக்கணக்கானோர் புற்றுநோய் தாக்குதலிலிருந்து தற்காத்து கொள்ள முடியும். ‘தென்றல்’ என்று பெயரிடப்பட்டுள்ள தனது அரசுசாரா, இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் மூலம் ஏழை, எளிய மக்களை கருத்தில் கொண்டு தாம் சேவையாற்றவிருப்பதாக விஞ்ஞானி மாசிலாமணி தெரிவித்துள்ளார்.

இடமிருந்து மைக்குடன் முகவைத்தமிழன், டாக்டர் (கேப்டன்) நூர்தீன், தமுமுக ரியாத் தலைவர் ஆரிப் மறைக்காயர்,விஞ்ஞானி மாசிலாமனி

முனைவர் மாசிலாமணி தன்னுடைய கண்டுபிடிப்பை அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் -டெல்லி (AIIMS – DELHI), குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், அஹமதாபாத் ஆகியவற்றில் பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தார் இச்சாதனையை அங்கிகரித்து அளித்த சான்றிதழைப் பெற்ற பின், தன்னுடைய மகனும் இளம் விஞ்ஞானியுமான இளங்கோவனுடன் குடியரசு தலைவர்
அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்.

விஞ்ஞானி முனைவர் வ.மாசிலாமணி ரியாதிலுள்ள அரசர் சவூத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

நன்றி : சற்றுமுன்

குறிப்பு :

நமது தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடையில் சில காலத்திற்கு முன் “மரணத்தை தழுவும் ஒரு முஸ்லிம் கிராமம்” என்ற தலைப்பில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் என்ற கிராமத்தை பற்றியும் அம்மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெருமளவில் உயிரிழப்பதை பற்றியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது பற்றியும் எழுதியிருந்தோம்.

பல்வேறு பட்ட முயற்சிகளுக்கு பின்னர் இந்த விஷயத்தை விஞ்ஞானி மாசிலாமனி அவர்களிடம் நாம் கொண்டு சென்றோம் பின்னர் அது குறித்து மிக ஆர்வமாக கேட்ட அவர் இது குறித்து தாம் அணைத்து வகையிலும் உதவ தயாராக இருப்பதாகவும் தெறிவித்தார். பின்னர் சவுதி அரேபியா வாழ் பெரியபட்டினம் கிராம மக்கள் அணைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு விஞ்ஞானி மாசிலாமனியை கொண்டு இரு கருத்தரங்கங்கள் ரியாத்தில் நடத்தப்பட்டன.

இக்கருத்தரங்கில் உரையாற்றிய விஞ்ஞானி மாசிலாமனி அவர்கள் தானே இந்தக கிராமத்தை தத்தெடுத்து அணைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தள்ளார். மற்றும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட டாக்டர் கேப்படன் நூருத்தீன் அவர்களும் அவர்களின் துனைவியார் டாக்டர் சுல்த்தானா அவர்களும் தாங்களும் இந்த நிகழச்சிக்காக அணைத்து உதவிகளையும் செயவதாகவும் வாக்களித்துள்ளார்கள்.

பெரியபட்டினம் கிராமத்தில் உள்ள அணைத்து மக்களுக்கும் விஞ்ஞானி மாசிலாமனி அவர்களை கொண்டு கேன்சர் கண்டரியும் நிகழ்ச்சி இன்சா அல்லாஹ் அடுத்த மாதம் பெரியபட்டினத்தில் நடக்க இருக்கின்றது இதற்காக விஞ்ஞானி மாசிலாமனி மற்றும் டாக்டர் நூருத்தின் மற்றும் அவர்களது துனைவியர் முதலியோர் இந்தியா செல்ல உள்ளார்கள். ரியாத்தில் பெரியபட்டினம் கிராம பொதுமக்களால் விஞ்ஞானி மாசிலாமனி அவர்களை வைத்து நடத்தப்பட்ட கருத்தரங்கில் நான் (முகவைத்தமிழன்) மற்றும் டாக்டர் நூருத்தீன் மற்றும் அவர்களது துனைவியார், ரியாத் தமுமுக தலைவர் ஆரிப் மறைக்காயர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இது போன்ற சமுதாயப் பணிகளின் மூலம் தான் ஒரு சிறந்த சமூக ஆர்வலர் என்பதையும் விஞ்ஞானி மாசிலாமனி அவர்கள் நிறுபித்து வருகின்றார்கள்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.