தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஒக்ரோபர் 10, 2007

சிறையிலிருந்து மீண்டவர்களுக்கு TMMK மறுவாழ்வு நிதி

Filed under: கோவை சிறைவாசிகள், தமுமுக, kovai prisoners, TMMK — முஸ்லிம் @ 10:21 பிப
கோவை சிறையிலிருந்து மீண்டவர்களுக்கு மறுவாழ்வு நிதி
10 லட்சம் மதிப்பில் தமுமுக உதவிகள்


அந்த துயர நிகழ்வுகள் நடத்திருக்கவே கூடாது. ஆனால் நடத்துவிட்டது. கான்ஸ்டபிள் செல்வராஜ் படுகொலை, அதனை தொடர்ந்து போலீஸ் மற்றும் இந்துத்துவ கூட்டணியால் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது. இவையெல்லாம் அடுத்தடுத்து கோவையில் நிகழ்ந்த கறுப்பு சம்பவங்கள்.


காவல்துறை மற்றும் அரசின் மெத்தனப் போக்கும், நியாமற்ற அணுகுமுறைகளும் கோவையில் மனக்கப்புகளை மேலும் உருவாக்கியது. அதன் விளைவு மோசமான குண்டு வெடிப்புகள் நடைபெற்று ஒரு பாவமும் அறியாத அப்பாவிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஏராளமானோர் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு 9 1/2 ஆண்டுகாலமாக சிறையில் வாடி தற்போது விடுதலையாகியுள்ளனர்.

இடைக்காலத்தில் அவர்களின் குடும்பங்கள் சீரழிந்து, வறுமையில் வாடியது. சமுதாயத்தின் ஆர்வலர்கள் மனிதாபிமான அடிப்படையில் சிறுஉதவிகளை செய்திருந்தாலும் அவை ‘யானைக்கு சோளப்பொறி’ என்ற அளவிலேயே இருந்தது.

இந்நிலையில் வெளியே விடுதலையாகி வந்த குடும்பங்களுக்கு கோவை ஜமாத்துகள் சார்பில் ஒரு முறை 5 ஆயிரமும், மறுமுறை 10 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன

இந்நிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சிறையிலிருந்து மீண்ட 91 பேர்களுக்கு, நபர் ஒருவருக்கு ரூபாய் 10 ஆயிரம் வீதம் பணமும், பெருநாள் கொண்டாடுவதற்காக துணிமணிகளும் வழங்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு பத்து லட்ச ரூபாயாகும்.

இந்நிகழ்வில் மாநில பொருளாளர் ஓ.யு. ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர்கள் பி. அப்துஸ் ஸமது, கோவை. உமர் உட்பட மாவட்ட, மாநகர நிர்வாகிகளும் பங்கு பெற்றனர்.

– கடல் கடந்த தமுமுக
குறிப்பு : இந்தப் பதிவு நமது மன்ற உறுப்பினர் “கடல் கடந்த தமுமுக” வால் பதிக்கப்பட்டது ஆனால் நீண்ட தலைப்பின் காரனமாக மறைந்ததால் மீள்பதிவு செய்யப் படுகின்றது. – முகவைத்தமிழன்

ஜூலை 24, 2007

நீதியைத்தேடி ஒரு அபலையின் பயனம்-குறும்படம் (SHORT FILM VIDEO)


நீதியைத்தேடி ஒரு அபலையின் பயனம் கோவை சிறைவாசிகள் பற்றிய குறும்படம் காண்பதற்கு அல்லது டவுன்லோட் செய்வதற்கு இங்கு சொடுக்கவும்.

Please Click Here to Watch or Download the Short Film.

காவல்துறையின் அராஜகம்…

காக்கிகள் மற்றும் காவி உடை பயங்கரவாதிகளால் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட முஸ்லிம் பென்கள்..

காக்கிகளோடு காவிகள் இணைந்து அரங்கேற்றிய பயங்கரவாதம்…

வீடியோவை காண்பதற்கு அல்லது டவுன்லோட் செய்வதற்கு

தமிழ் முஸ்லிம் மீடியா

தமிழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் அவர்களுக்கெதிராக நடத்தப்படும் அடக்குமுறைகளையும் எதிரொலிக்கும் ஊடகமாக இன்சா அல்லாஹ்…

,இஸ்லாம், முஸ்லிம்

Create a free website or blog at WordPress.com.