தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஒக்ரோபர் 24, 2007

கோவை தீர்ப்பு – அன்சாரி, பாஷாவிற்கு ஆயுள் தண்டனை

Filed under: கோவை தீர்ப்பு — முஸ்லிம் @ 6:48 முப
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: பாஷாவுக்கு ஆயுள் தண்டனை; முகமது அன்சாரிக்கு இரட்டை ஆயுள்


கோவை :கோவை குண்டு வெடிப்பு வழக்கில், சூஅல்உம்மா’ நிறுவனர் பாஷாவுக்கு ஆயுள் தண்டனையும் பொதுச் செயலர் அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது

மேலும் காஜீதீன், நவாப்கான், முகமது பஷீர், உசீர், பாபு, முகமது அலிகான் குட்டி, சித்திக் அலி, ஜாகீர் உசேன் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சாதாரண குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட 88 பேருக்கு நான்கு கட்டமாக தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. கூட்டுச்சதி, கொலை, குண்டு வைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட, சூஅல்உம்மா’ நிறுவனர் பாஷா, பொதுச் செயலர் அன்சாரி, ஊம்பாபு, சித்திக் அலி உள்ளிட்ட 70 பேருக்கான தண்டனை விவரத்தை இன்று காலை கோர்ட் அறிவித்தது.

முக்கிய குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டதால் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோர்ட்டை சுற்றியுள்ள பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகனங்களும் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.கோவை நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. 12 சோதனைச் சாவடிகளில் வாகனங்களின் பதிவு எண் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது; வீடியோ கேமராவிலும் பதிவு செய்யப்படுகிறது. அதிவிரைவுப்படை, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினரும் கோவை நகர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், மதுக்கரை, பொள்ளாச்சி, உடுமலை பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றிங்க.

Advertisements

Create a free website or blog at WordPress.com.