தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 7, 2007

கடலூர் மாவட்ட ததஜ கலைப்பு -TNTJ BAKAR SEX SCANDAL எதிரொலிப்பு

Filed under: ததஜ செக்ஸ், பாக்கர் பி.ஜே கடலூர் — முஸ்லிம் @ 7:37 முப
தவ்ஹீத் ஜமா அத் கடலூர் மாவட்டத்தில் கலைப்பு

பாக்கர் மாற்று மதத்தில் இருந்து இஸ்லாத்தை தழுவிய ததஜ நடத்தும் கல்லூரி மாணயை கெளப்பி கொண்டு சென்றார் என்பதற்கு பி.ஜே அளித்த ஒப்புதல் வாக்குமூலம் படிப்பதற்கும் கேட்பதற்கும் இங்கு சொடுக்கவும்.

கடலுõர் : கடலுõர் மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து கிளைகளையும் கூண்டோடு கலைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கடலூர் மாவட்ட தலைவர் கலீமுல்லா, செயலாளர் ஷேர் அலி, பொருளாளர் ஷாகுல் அமீது ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கடலூர் மாவட்டம் சார்பில் கடலுõரில் பொதுக் குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலீமுல்லா தலைமை தாங்கினார். செயலாளர் ஷேர் அலி, பொரு ளாளர் ஷாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் சையத் ஹமீத்,, துணை செயலாளர்கள் ரசூல் பாஷா, ஷேக் உமர், அப்துர்ரகுமான், பக்கீர் முகமது, தொண்டரணி செயலாளர் ஷாஜகான், வணிகரணி செயலாளர் தமீமுன் அன்சாரி மற்றும் காட்டுமன்னார்குடி, லால்பேட்டை, ஆடூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட 20 கிளைகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொள்கைக்கு மாறாகவும் வியாபார நோக்குடன் அமைப்பை கொண்டு செல்வதாகவும், மாநில நிர்வாகிகளே விரும்பத்தகாத செயல்களை செய்து விட்டு அவர்களுக்குள் சமரசம் செய்து கொள்கின்றனர். கொள்கையில் பிடிப்பாய் இருக்க வேண்டிய மாநிலத் தலைமை பொய்களையும், புரட்டுகளையும் ஆயுதமாக பிறர் மீது பயன்படுத்த முயல்வதால்.


கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் அனைத்து கிளைகளையும் கலைத்து விடுவது. எதிர்கால திட்டம் பற்றி வரும் 13ம் தேதி கிளை நிர்வாகிகள் கூட்டம் கூட்டி முடிவெடுப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

Create a free website or blog at WordPress.com.