தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 14, 2008

வல்லத்தில் கட்டப்பட்ட "காபா" வும் முதல் பொருளாதார குற்றச்சாட்டும்

Filed under: ஊழல், எழுச்சி மாநாடு, ததஜ, வல்லம், TNTJ, vallam — முஸ்லிம் @ 8:13 முப
வல்லத்தில் பி.ஜே கட்டிய “காபா”
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தவ்ஹீத் எழுச்சி மாநாடு என்ற பெயரில் தஞ்சை மாவட்டம் வல்லத்தில் நடத்தப்பட்ட “தவ்ஹீத் திருவிழா” செய்திகளையும் அதில் கூடிய “10 லட்சம்” பேரையும் இன்னும் “100 ஏக்கர் பந்தல்” போடப்பட்டதையும் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டோம். மக்கள் வாசித்திருப்பீர்கள்.
எப்போதும் போல தற்போது இந்த கூட்டத்தின் மேல் மாநாட்டுக்காக “100 ஏக்கரில் பந்தல்” போடனும் தங்கும் வசதி, “10 லட்சம்” பேருக்கு வசதிகள் என கதையளக்கப்பட்டு கோடிக்கணக்கில் வசூல் செய்யப்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என முதல் பொருளாதார குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. இதை சில சகோதரர்கள் எமக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்கள் அதை மக்கள் பார்ரவைக்காக தருகின்றோம். (இது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது எமக்கு)
மாநாட்டில் தவ்ஹீத் எழுச்சி என்ற பெயரில் நடந்த அத்தனை அநாச்சாரங்களும் வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்சா அல்லாஹ் இறைவன் நாடினால் கூடிய விரைவில் இம்மாநாட்டில் உண்மையில் நடந்த “தவஹீத் எழுச்சி” ஆதாரங்களுடன் காட்டப்படும்.
ஆம்!! குதிரையில் தவ்ஹீத் எழுச்சி வீர வீராங்கனைகளின் சூத்தை பிடித்து ஏற்றியதில் இருந்து ஆனும் பென்னும் கலந்து கடலை போட்டது வரை இன்னும் மாநாட்டு பந்தலின் பின்புறம் நடந்த தவ்ஹீத் எழுச்சியால் தீவைத்து கொழுத்தப்பட்டது வரை அனைத்து புகைப்படங்களும் வெளியிடப்படும் காத்திருங்கள். முதலில் எழுச்சி பெற்றவர்கள் தங்கள் பகுதியை முடிக்கட்டும் “எழுச்சியின் மறுபகுதி” நம்மாள் வெளியிடப்படும்.
யார் மேல் உள்ள காழப்புணர்ச்சியானலுமத் இது வெளியிடப்படவில்லை, நடந்த சம்பவங்களின் முழு பரிமானத்தை மக்கள் தெறிய வேண்டும் என்பதற்காக மட்டும் வெளியிடப்படுகின்றது. பி.ஜே மற்றும் பாக்கர் கும்பல் மாநாட்டு மேடையில் குற்றம் சாட்டியது போன்று முக்கியமாக இந்த தளம் தமுமுக வால் நடத்தப்படவில்லை இன்னும் எமக்கும் எந்த அமைப்புகளுக்கும் தொடர்பும் இல்லை.
*****************************************************
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்….

அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு …..

நான் கடையநல்லூரைச் சார்ந்தவன் . தெஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்.
தாங்கள் மாநாடு பற்றி தங்கள் இணையதளத்தில் வெளியிட்ட சில தகவல்களை கண்டேன்.

குறைகளை மட்டும் சுட்டிக்காட்டிய தாங்கள் … நிறைகளையும் காட்டியிருக்கலாம் ….

நீங்கள் கூறிய தவறுகள் உண்மையானால் கண்டிக்கக் கூடியவையே…

மேலும் எங்கள் ஊரில் நாங்கள் மாநாட்டுக்காக வசூல் செய்த தொகை சுமார் 3 லட்சம் ரூபாய் (உள்ளுர் வசூல் மட்டும்)

எங்கள் அமைப்பின் கடையநல்லூர் கிளை மூலம் தனியாக ரசீது புக் தயார் செய்து சுமார் 13 லட்சம் ரூபாய் வரை வெளி நாட்டிலிருந்து வசூல் வந்தது . இப்பணம் எங்கள் அமைப்பின் மாநில துணைத்தலைவர் ஸைபுல்லா காஜா ஹஸரத் அவர்களுக்கு உண்டியல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. இதை அறிந்த என் போன்ற மூன்று சகோதரர்கள் அவர்களிடம் தலைமைக்கு இந்தப்பணத்தை அனுப்பிவிட்டீர்களா எனக்கேட்டால் இந்தப்பணம் தனியாக மஸ்ஜிதுல் முபாரக் கோர்ட் செலவுக்காக வைக்கப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே நிpர்வாகக் குழு கூட்டத்தில் கூறியபடி இதுவரை மஸ்ஜிதுல் முபாரக் பள்ளி செலவுக்காக செலவுசெய்த 26 லட்சத்தில் 6 லட்சம் கடன் உள்ளது எனவும் .

மாநாட்டு பந்தலின் முழு தோற்றம்

(இது மாநாடு முடிந்தபின் எடுக்கப்பட்டதல்ல இரன்டாம் நாள் பகலில் எடுக்கப்பட்டது. முதல் நாள் மாலை 3.00 மணிக்கு மேல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அதாவது மறைக்கப்பட்ட மறுபகுதி இனிமேல் வெளியிடப்படும்)

இதில் பேட்டையை சார்ந்த பாவா அவர்களுக்கு 4 லட்சம் கொடுத்கஉள்ளதாகவும் கூறினார்கள். மாநாட்டிற்காக மட்டும் நம் கடையநல்லூர் சகோதரர்கள் வசூல் செய்து அனுப்பிய பணத்தை இப்படி செய்யாமலிருக்கலாமே என நாசூக்காக கூறியும் ஹஸரத் அவர்கள் தட்டிக்கழித்துவிட்டு 3 நாட்களுக்கு முன்னமே மாநாட்டிற்கு சென்று விட்;டார்கள். மாநாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து வந்த ரியாத் சகோதரர் ரியாத்திலும், தம்மாமிலும் , வசூல் செய்த ரசீது புக்கின் அடிக்கட்டையை எங்களிடம் ஒப்படைத்து விட்டார். ஹஸரத் அவர்களிடம் மாநாட்டில் வைத்து கொடுத்துவிடலாம் என நினைத்து வந்தால் மாநாட்டில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மாநில நிர்வாகிகள் யாரையும் சந்திக்க முடியவில்லை. முதல்நாளே நாங்கள் பெறும் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினோம்.

மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட அரசு பேருந்துக்காக முன்பணமாக சுமார் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்கப்பட்டது . ஆனால் மாநாட்டுக்காக புறப்படும் நேரத்தில் பஸ்கள் எதுவுமே வரவில்லை. வாகனங்களுக்காக டிக்கட் வாங்கிய நம் மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த பணம் 150000 ஆயிரம் மீதி கையிருப்பு உள்ளது.

வஸ்ஸலாம்.

கலந்தர் மைதின்

மஜீத்

ரபீக்

From: EXSI XC <misiexsi@yahoo.co.in>Date: May 13, 2008 2:20 PMSubject: Re: salamTo: MohamedFazlul Ilahi <fazlulilahi@gmail.com>

தகவல் நன்றி : திரு.பஸ்லுல் இலாஹி அவர்கள்

மே 12, 2008

தினமனியில் வந்த விளம்பரம் – பஸ்லுல் இலாஹி (மீள் பதிவு)

Filed under: ததஜ, தினமனி, பி.ஜே, TNTJ, vallam — முஸ்லிம் @ 8:59 முப
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்
முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்கினார்களா?
ஜைனுல் ஆபிதீன் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே இஸ்லாமிய இணையப் பேரவையில் முஸ்லிம் விரோத தினமணியின் பித்தளாட்டத்தையும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களையும் கண்டித்து “”அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ?”” ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதை இங்கு சொடுக்கி வாசிக்கவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

உயர் திரு தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்களுக்கு மேலப்பாளையம் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி எழுதிக் கொள்வது. முதற்கண் உங்கள் மீது ஏக இறைவன் சாந்தியும் சமாதானமும் உண்டாகச் செய்வானாக என்ற வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். 14.10.2007 அரசியல் அரங்கம் எனும் தலைப்பில் த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீன் என்பவர் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு அளித்த சிறப்பு பேட்டி என்ற பெயரில் ஒரு பக்க விளம்பரம் இடம் பெற்றிருந்தது. அவரைப் பற்றி அவர் எப்படியெல்லாம் விளம்பரம் செய்து கொள்ள விரும்பினாரோ அந்த விளம்பர வாசகங்களை அப்படியே அவரது பேட்டி போல் வெளியிட்டிருந்தார்கள். தனக்கு விளம்பரம் தேடுவதற்காக, தன்னை தூய்மையானவராக காட்டுவதற்காக, அவர் விரும்பியவாறு விளம்பரம் செய்ய அவருக்கு உண்டு. அதற்காக முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்குகிறார்கள் என்று ஜைனுல் ஆபிதீன் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதனால்தான் இந்த கண்டன மடல்.

அனைத்தையும் டி ராஜேந்தர் படித்து விட்டாரா?

முன்னதாக நீங்கள் செய்துள்ள அறிமுக வாசகங்கள் கூட உங்களுடையது அல்ல. விளம்பரத்துக்காக அவர்கள் எழுதி தந்துள்ளதையே நீங்கள் அறிமுகம் செய்வது போல் இடம் பெறச் செய்துள்ளீர்கள். விளம்பரம் என்றாலே அவர்கள் எழுதி தருவதைத்தானே போட முடியும். ஜைனுல் ஆபிதீனின் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு நூல் விளம்பரத்துக்காக சினிமா நடிகர் விஜய டி ராஜேந்தரைக் கொண்டு விளம்பரம் தயாரித்தார்கள். இதுவரை வெளி வந்த திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புகளிலேயே இதுதான் சிறந்தது என்று அவரை பேச வைத்தாhகள்;. இதுவரை வெளி வந்துள்ளதில் இதுதான் சிறந்தது என்று டி ராஜேந்தர் சொல்வதாக இருந்தால் இதுவரை வெளி வந்துள்ள திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புகள் அனைத்தையும் டி ராஜேந்தர் படித்து விட்டாரா? என்று அறிவுள்ளவர்கள் கேட்டார்கள். அதன் பிறகு அந்த விளம்பரத்தை நிறுத்தினார்கள். இந்த மாதிரிதான் உங்கள் அறிமுக எழுத்துக்ளும் உள்ளன.

பொய்களை அரங்கேற்றும்பொழுதுதான் கூறப்படுகிறது, கருத இடமுண்டு என்று எழுதுவார்கள்.

எல்லா மதத்தினரையும் ஜாதியினரையும் கொண்ட தி.மு.க, அ.தி.மு.க. நடத்திய நிகழ்ச்சிகளில் கூட அவர்கள் 10 லட்சத்தைக் கூட்டியதாகக் கூறவில்லை. 2007 டிசம்பர் 14இல் தி.மு.க நடத்த இருக்கும் இளைஞர் அணி மாநாட்டுக்கு கூட 5 லட்சம் பேர் கூடுவார்கள் என்றுதான் மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார். சிறுபான்மை முஸ்லிம்களில் மிகச் சிறுபான்மையினரான தவ்ஹீதுவாதிகளில் பல பிரிவுகளில் ஒன்றுதான் த.த.ஜ. அது 10 லட்சத்தைக் கூட்டியதாக எழுதி தந்ததை போட முடியாத நீங்கள் சுதந்திர இந்தியாவில் மிகப் பெரிய பேரணி என்று கூறப்படுகிறது என எழுதியுள்ளீர்கள். கூறப்படுகிறது, கருத இடமுண்டு என்று சொன்னாலே த.த.ஜ. தலைவரின் அகராதிப்படி அவற்றின் மறு பெயர் பொய் என்பதுதான். உண்மைகளைத்தான் திட்டவட்டமாக உறுதியிட்டுக் கூற முடியும். பொய்களை அரங்கேற்றும்பொழுதுதான் கூறப்படுகிறது, கருத இடமுண்டு என்று எழுதுவார்கள். அப்படித்தான் அந்த விளம்பரத்திலும் உங்கள் பெயரால் எழுதப்பட்டுள்ள வாசகம் உள்ளது.

மொத்தத்தில் இது பேட்டி அல்ல. த.த.ஜ. தந்துள்ள விளம்பரம்.

தேச துரோகி கிரிமினல் பி.ஜே

(ISI என்ற பாகிஸ்த்தானிய உளவு அமைப்பின் தொடர்போடு தமிழக முஸ்லிம்களிடத்தில் முதல் முதலில் தீவிரவாதத்தை விதைத்து தமிழகமெங்கும் பல இந்து தலைவர்கள் கொல்லப்படுவதற்கும் பல குண்டு வெடிப்புகள் நிகழ்வதற்கும் மூல காரணமாயிருந்தவன் சவுதியில் ஜித்தாவில் உள்ள ஜிப்லி என்ற தனது ஏஜென்ட் மூலமும் இன்னும் இலங்கையில் உள்ள பாகிஸ்த்தானிய தூதரகத்தில் வைத்து நேரிலும் ISI உடன் ஆலோசனை நடத்தியவன். தற்போது முதல்வர் மகள் கனிமொழியின் பெயரையும் முதல்வர் பெயரையும் அடிக்கடி பயன் படுத்தி வருகின்றான் சம்பந்தப்பட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் முக்கியமாக தோழி கனிமொழி அவர்கள் உஷாராக இருக்கவும்)

சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் இருந்த முஸ்லிம் கட்சிகளில் த.மு.மு.க. மட்டும்தான் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை முன் வைத்து கூட்டணி அமைத்தது. இந்தச் செய்திகள் தேர்தல் நேர தினமணியின் எல்லா பதிப்புகளிலும் செய்தியாக வந்திருக்கிறது. இந்த உண்மைக்கு முரணாக எழுத முடியாது. அதனால்தான் அவர்கள் கூற்றை அப்படியே போட முடியாமல் கருத இடமுண்டு என்று எழுதியுள்ளீர்கள். ஒருவனை நல்ல படிக்கிறான் என்று ஆசிரியரும் நல்ல படித்திருக்கிறான் என்பதை அவனை விட கூடுதலாக படித்தவனும்தான் சொல்ல முடியும். வைத்தியநாதனின் கருத்து போல் இடம் பெறச் செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய கோட்பாடுகளை கரைத்துக் குடித்தவர் என்று சொல்லுக்கும் இதுதான் அளவுகோல்.

இது பேட்டி அல்ல. த.த.ஜ. தந்துள்ள விளம்பரம் இது. செய்திகள் வாசிப்பது போல் பேட்டி எடுப்பது போல் விளம்பரங்கள் டி.வி.க்களில் வருகின்றன. அது போன்ற ஒன்றுதான் இது என்பதை அப்பாவிகள் அறிய மாட்டார்கள்.

ஜைனுல் ஆபிதீன். இடம் பெறச் செய்துள்ள பொய்.

ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதுதான் மக்களாட்சியில் சரியான வழியே தவிர தீவிரவாதம் அல்ல என்பது தான் அன்றும் இன்றும் எனது அழுத்தமான அபிப்பிராயம். தங்களது எதிர்ப்புகளை நியாயமாக தெரிவிக்க முடியாதபோதுதான் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் எங்களது சமுதாய இளைஞர்கள் இறங்குகிறார்கள். இது முதல் கேள்வியின் பதிலில் ஜைனுல் ஆபிதீன் இடம் பெறச் செய்துள்ள பொய். அதாவது தனக்கு விளம்பரம் தேடுவதற்காக தன்னை தூய்மையானவராக காட்டுவதற்காக தன்னை காத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்குகிறார்கள் என்று எழுதியுள்ளார். இந்தியாவிலுள்ள தீவிரவாதிகளில் பலரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு உடையவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இந்திய முஸ்லிம்கள் அவர்களது சதி வலையில் விழுந்த விடக் கூடாது என்பதுதான் த.த.ஜ. கோரிக்கை என்றும் எழுதியுள்ளார்.

அதை தீவிரவாத இயக்கமாக ஆக்கப் பார்த்தார்.

உண்மை என்னவென்றால் ஜாக் என்ற அமைப்பில் இருந்த ஜைனுல் ஆபிதீன் அதை தீவிரவாத இயக்கமாக ஆக்கப் பார்த்தார். 1992இல் இலங்கை சென்ற அவர் பாகிஸ்தான் தூதரகம் சென்றார். ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டார். ஐ.எஸ்.ஐ.யின் சதி வலையாக ஆனார். தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் உறுதியான கொள்கை உடைய ஜைனுல் ஆபிதீன் அதற்காக இஸ்லாமிய சட்டங்களை வளைத்து திரித்து விளக்கம் கூறி இளைஞர்களை தூண்டி விட்டு கெடுத்து வந்தார். எனவே அதன் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனி எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் ஜாக் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனியை பார்த்து நீ கோழை, தொடை நடுங்கி என்றெல்லாம் ஜைனுல் ஆபிதீன் விமர்சித்தார். 1992இல் இலங்கை சென்று ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டார்.

மத்திய மாநில உளவுத் துறையினரிடமும் உள்ளது.

எனவே ஜைனுல் ஆபிதீனிடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கிய ஜாக் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனி ஜைனுல் ஆபிதீனை ஜாக்கிலிருந்து ஓரங் கட்டினார். தீவிரவாத செயலில் ஈடுபட்டதால் ஜாக்கிலிருந்து ஓரங்கட்டப்பட்டதை அறியாதவர்கள் பல சமாதான கூட்டங்களை கூட்டினார்கள். அவற்றில் ஒன்றுதான் 01.05.1997 வியாழன் அன்று திருச்சி அரிஸ்ட்டோ ஓட்டலில் நடந்த ரகசிய கூட்டம். 38 மவுலவிகள் (மதக் குருக்கள்) மட்டுமே கலந்த கொண்ட அந்த ரகசிய கூட்டத்தில் ஜைனுல் ஆபிதீன் அளித்த ரகசிய வாக்கு மூலம் ஆடியோவாகப் பதியப்பட்டுள்ளது. அதில் சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். ஆலுவலக குண்டு வெடிப்பு, நாகூர் பார்சல் குண்டு வெடிப்பு, சிந்தாதிரிப் பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு, பம்பாய் படப் பிரச்சனை மணிரத்னம் வீட்டு குண்டு வெடிப்பு, மதுரை ராஜகோபாலன் கொலை இப்படி தொடராக உள்ள அனைத்து சம்பவங்களுக்கும் நான்தான் மூல காரணம் என ரகசியமாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இந்த ரகசிய வாக்கு மூல கேஸட்கள் மத்திய மாநில உளவுத் துறையினரிடமும் உள்ளது.

இவரே காட்டிக் கொடுத்து இதுவரை தப்பித்து வந்திருக்கிறார்.

இந்த ரகசிய வாக்கு மூல கேஸட்களில் உள்ளதை அறிந்ததால்தான் 2004இல் அவர் துபையிலிருந்து அடித்து விரட்டப்பட்டார். இந்த ரகசிய கேஸட்டை கேட்டு விட்டுத்தான் சிலோன் போலீஸ் 2005இல் அவசரமாக நாடு கடத்தியது. தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கெல்லாம் நான்தான் மூல காரணம் என்று ஜைனுல் ஆபிதீன் கேஸட்களில் சொல்லி உள்ளதை கேட்டு விட்டுத்தான் கத்தர் அரசு வெளியான விஸாவை ரத்து செய்தது. மலேசிய அரசும் நாடு கடத்தியது. இந்தியாவில் மட்டும்தான் சட்டத் துறையினரை சரி செய்து இவரால் தூண்டி விடப்பட்டவர்களை இவரே காட்டிக் கொடுத்து இதுவரை தப்பித்து வந்திருக்கிறார்.

அவர்களிடம் மட்டும் அடிமை போல் அணுசரித்துப் போகிறார்.

தீவிரவாதத்தை தூண்டி விடுவார். பயிற்சி கொடுப்பார். அதில் ஒருவர் மாட்டிக் கொண்டாலும் வரிசையாக மற்றவர்களையும் காட்டிக் கொடுத்து இன்பார்மர் வேலை செய்து இவர் மட்டும் நல்லவராக திறம்பட நடித்து தப்பி விடுவார். ஆக இதுவரை சிறையில் இருந்தவர்கள் தண்டணை பெற்று இருப்பவர்கள் பெரும்பாலும் அப்பாவிகளும் அம்புகளும்தான். எய்தவர் ஜைனுல் ஆபிதீன்;தான். இதற்குரிய ஆதார கேஸட் மேலப்பாளையம் ஷம்சுல்லுஹா, தென்காசி சுலைமான் ஆகியவர்களிடம் உள்ளது. அதனால்தான் பல பிரச்சனைகள் ஏற்பட்டும் அவர்கள் இருவரையும் த.த.ஜ.வை விட்டு நீக்காமல் தாஜா செய்து அவர்களிடம் மட்டும் அடிமை போல் அணுசரித்துப் போகிறார்.
தவ்பா பள்ளியில் போய் வம்பு இழுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் இன்றும் உறுதியாக உள்ளவர்தான் த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீன். தீவிரவாதத்துக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீனிடம் அனுமதி உண்டு. இதை ஆதாரத்தின் அடிப்படையில் இவரை விசாரிக்க கைது செய்ய அதிகாரிகள் முயற்சி செய்யும்பொழுதெல்லாம். ஆட்சியாளர்களின் காலில் விழுந்து சரண் அடைந்து விடுவார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து தப்ப அப்பொழுது கருணாநிதி காலில் விழுந்தார். பிறகு ஜெயலலிதா காலில் விழுந்தார். இப்பொழுது மீண்டும் கருணாநிதி காலில் விழுந்து கிடக்கிறார். இன்றும் இவரிடம் அடியாட்கள் உண்டு. பல கொலைகள் செய்த இவரது அடியாட்கள் இப்பொழுதும் மேலப்பாளையத்தில் உள்ள தவ்பா பள்ளியில் போய் வம்பு இழுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். பெருநாளையொட்டி கடலூர் மவாட்டம் சிதம்பரம் ஈத்கா விஷயத்திலும் வம்பிலுக்க முயன்றார்கள். தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் உறுதியான கொள்கை உடையவர் ஜைனுல் ஆபிதீன்தான்.

குடும்பத்துடன் பல போராட்டங்களை நடத்தியவர்.

த.மு.மு.க. நிர்வாகத்தில் எந்த வேலையும் செய்யாமல் எனது தற்காப்புக்காக த.மு.மு.க. அமைப்பாளர் பதவியை வகித்து வந்தேன். இப்பொழுது ஆபத்து நீங்கி விட்டது என 2001லேயே த.மு.மு.க. அமைப்பாளர் பதவியை விட்டு விட்டு வனவாசம் செல்வதாக அறிவித்தவர் ஜைனுல் ஆபிதீன். இப்பொழுது “”ஆமாம் அதன் அமைப்பாளர் நான்தான்”” என விளம்பர பேட்டியில் எழுதியுள்ளார். இன்றும் அவர்தான் த.மு.மு.க. அமைப்பாளர் என்ற கனவில் இருக்கிறார் பாவம். ராஜகோபாலன் கொலை வழக்கில் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதிலிருந்து தன்னை காத்துக் கொள்ள குணங்குடி ஹனீபாவின் த.மு.மு.க.வில் சரண்டர் ஆனவர் ஜைனுல் ஆபிதீன். இட ஒதுக்கீடுகளுக்காக குடும்பத்துடன் பல போராட்டங்களை நடத்தியவர் சிறை சென்றவர் குணங்குடி ஹனீபா. பெயரளவில் அமைப்பை வைத்திருந்ததாக எழுதி அவரையும் கொச்சைப்படுத்தியுள்ளார்.

த.மு.மு.க. தலைமையை காத்து இருந்து கருவறுத்தார்.

பதவி அரசியலில் நாட்டம் இல்லாதவர் எனவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே ஒவ்வொரு அமைப்பிலும் இருந்தார். புதிய அமைப்பில் தலைவராக இருந்தால் அது பதவியாக இருக்காது. கடினமாக உழைத்து அதை வளர்க்க வேண்டிய பொறுப்பாக இருக்கும் பொறுப்புடன் இருந்து கடமை ஆற்றாமல் அறுவடை செய்து மட்டுமே பழக்கப்பட்டவர் ஜைனுல் ஆபிதீன். எனவே தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே காலத்தை ஓட்டி வந்தார். த.மு.மு.க. பேரியக்கமாக வளர்ந்ததும் அதன் தலைமைப் பதவியை கைப்பற்ற முயன்றார். தஞ்சைப் பேரணிக்கு முன்பு நடந்த பொதுக்குழுவிலேயே மூக்கறுபட்டுப் போனார். தஞ்சைப் பேரணிக்கு முன் விலகினால் செல்லாக் காசு ஆகி விடுவோம் எனவே த.மு.மு.க. தலைமையை காத்து இருந்து கருவறுத்தார்.

ஜைனுல் ஆபிதீனின் சிகப்பு விளக்க ஆசை.

த.மு.மு.க.வுக்கு அரசியல் ஆசை என்றும் தனக்கு அரசியல் ஆசை இல்லை என்றும் கூறுகிறார். காங்ரஸ் கட்சியினர் ஜெய் ஹிந் என சொல்கிற மாதிரி. த.த.ஜ. எந்தக் காலத்திலும் தேர்தலில் போட்டியிடாது என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்ல வேண்டும் என்றதற்கு மறுத்து இருக்கிறார். தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று 20 வருடமாகக் கூறி வந்தவர் த.த.ஜ. தலைவராக இருந்தவரை கீழே தள்ளி விட்டு விட்டு இவர் தலைவராக ஆகி இருக்கிறார். இப்பொழுது அவரது ஒரே ஆசை தொண்டியைச் சார்ந்த த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி சிகப்பு விளக்க மின்ன பணியாற்றி வருகிறாரே. பணியாற்றும் தகுதி நமக்கு இல்லா விட்டாலும் கொஞ்ச நாளுக்கு சிகப்பு விளக்க மின்ன பவனி வர வேண்டும். இதுதான் ஜைனுல் ஆபிதீனின் சிகப்பு விளக்க ஆசை.

பேட்டி என்ற பெயரால் வெளியாகியுள்ள விளம்பரம்.

அவரது சிகப்பு விளக்க ஆசையை நிறைவேற்ற ஒரே வழி த.த.ஜ.வை தேர்தலில் போட்டியிடும் அமைப்பாக மாற்றுவதுதான். அதற்கு தடையாக இருப்பவர்கள் ரகசிய வாக்கு மூல கேஸட்களை வைத்துக் கொண்டு அவரை ஆட்டிப் படைக்கும் மேலப்பாளையம் ஷம்சுல்லுஹா, தென்காசி சுலைமான் ஆகியவர்கள்தான். எனவே அவரது ஆதரவாளர்களையெல்லாம் த.த.ஜ.வை தேர்தலில் போட்டியிடும் அமைப்பாக ஆக்க வேண்டும் என அவர்களாக சொல்வது போல் சொல்ல வைக்கும் வேலையில் முனைப்போடு ஈடுபட்டு வருகிறார் அதற்கான ஆயத்த பணிகளில் ஒன்றுதான் நீங்கள் எடுத்த பேட்டி என்ற பெயரால் வெளியாகியுள்ள விளம்பரம். பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடுவது அவரவர் உரிமை. நீங்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் Adv என போட மறந்து விட்டீர்கள். வஸ்ஸலாம்.

அன்புடன்:- கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி,
55.சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு,
மேலப்பாளையம், திருநெல்வேலி, 627005.

மே 11, 2008

எங்கப்பன் குதிருக்குள் இல்லை – அதிரை ஏ.எம். ஃபாரூக்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் சகோதர, சகோதரிகளே.,

நாம் வல்லத்தில் பெருந்தோல்வியுடன் நடந்த கொண்டிருக்கும் ததஜ வின் “தவ்ஹீத் எழுச்சி மாநாட்டின் செய்திகளை” தந்திருந்தோம் உடனே அலறி அடித்து கொண்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக தனக்கு தானே சுயமாக ஆப்ப வைத்துக் கொண்டர் அழைப்பு பணியில் அதிரை பாரூக் அவர்கள். அன்பரின் அறிவிப்பு இதோ மக்கள் பார்வைக்காக.

************************************************

அல்லாஹ்வின் திருப்பெயரால்….

தவ்ஹீத் எழுச்சி மாநாடு தகவல்கள் .

எதிர்பார்த்ததை விட மக்கள் கூட்டம் மடைதிறந்நத வெள்ளமாய் வல்லத்தில் நிரம்பி வழிந்தனர். திரண்டு வந்த மக்கள் வெள்ளத்தை உட்கொள்ள முடியாமல் திணறியது ராட்சஸ அரங்குகள்.

எந்தெந்த ஊர்களிலிருந்து எத்தனை வாகணங்களில் எவ்வளவு மக்கள் வந்தார்கள் என்ற துல்லியமான கணக்கு சொல்வதெல்லாம் மிகைப் படுத்தப் படுவதாக அமையும்.

எனது சொந்த ஊர் அதிரையிலிருந்து 30 வேன்கள் சென்றதாக அதிரை கிளை தலைவரிடமிருந்து தகவல் பெற்றுக் கொண்டேன். (அதிரையில் இருந்து 250 பேர் வந்ததாக் நாம் எழுதியுள்ளோம் வேன் ஒன்றுக்கு 10-12 பேர் வந்ததாகவும் எழுதியுள்ளார் நமது செய்தியாளர் அதை உண்மை படுத்தியுள்ளார் அதிரை பாரூக்)

இவ்வாறு ஒவ்வொரு ஊர்களிலிருந்துமாக தமிழ்நாட்டின் நாலாப் புறங்களிலிருந்தும் மக்;கள் புடைசூழ்ந்ததால் மதியத்திற்கு மேல் அரங்குகள் மக்களை பிpதுங்க தொடங்கியது. அதனால் பெண்களுக்கு மட்டும் உள்ளே தங்க அனுமதி வழங்கிவிட்டு ஆண்கள் வெளியேற்றப்பட்டனர்.

குறைபாடுகள்

எதிர்பார்த்ததை விட அதிகப்படியான மக்கள் வருகை தந்ததால் ஏற்கனவே வாக்களிக்;கப்பட்ட அடிப்படை வசதிகள் தோல்வியை தழுவின.

அதிகப்படியான மக்கள் குழுமுவார்கள் என்று ஏற்கனவே எதிர்பாரத்தது தான் ஆனால் மேல்படி நிகழ்;ச்சிகளின் ஏற்பாடுகளுக்காக நியமிக்;கப்பட்ட பொறுப்பாளர்கள் தகுதியற்றவர்கள் அவ்வளவு தான்.

100 ஏக்கர் நிலத்தை செப்பனிடுவதும் அரங்கத்திற்கான பந்தல் அமைப்பதிலுமே கவனம் செலுத்தியவர்கள் அடிப்படை வசதிகளின் மீது சரியான கவனம் செலுத்த வில்லை என்பதற்கு பல டாய்லெடட்டுகளில் பீங்கான் பதிக்கவேப் படாமல் விடப்பட்டிருப்பது ஒரு காரணமாகும்.

வதந்திகள்

அதிகமான மக்;கள் குழுமவில்லை என்று ஒருவர் கூறுவதை நம்ப வேண்டாம் ? இது வடிகட்டியப் பொய் ! (எங்கப்பன் குதிருக்குள் இல்லை!!)

மக்களுக்கான அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தப் படவில்லை என்பது மட்டுமே உண்மை.

கஃபா செட்டப் நொறுங்கி விழுந்ததாகவும் அதனால் மக்கள் அல்லோல கல்லோப் பட்டதாக கூறுவதையும் நம்ப வேண்டாம் பொய் அதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை.

இது பலநாட்களுக்கு முன் அதற்கான அரங்கில் செட் பண்ணும் பொழுது அந்த செட்டப் விழுந்ததும் அதை மீண்டும் அமைத்து விட்டார்கள். (இந்த வாக்கியத்திற்கும் மேலுல்ல வாக்கியத்திற்கும் நேரடி முரன்பாடு!! கவணிக்கவும்)

இறுதி தகவல்

பக்கத்தில் இயங்கும் போர் செட்டிவிலிருந்து பிவிசி பைப் மூலமாக மாநாட்டு அரங்கிற்கு இன்று தண்ணிர் கொண்டுவரப்பட்டு விட்டதது. நேற்று திரும்பிச் சென்றவர்களில் பலரும், நேற்று வரமுடியாதவர்களில் பலரும் தகவல் அறிந்து இன்று வருகை தந்தவண்ணமிருக்கின்றனர் அதனால் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. (மீண்டும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை!!)

அஸ்ஸலாமு அலைக்கும் அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

மே 10, 2008

வல்லம் தவ்ஹீத் எழுச்சி மாநாடு – சிறப்பு செய்திகள்

Filed under: எழுச்சி மாநாடு, ததஜ, வல்லம், TNTJ, vallam — முஸ்லிம் @ 11:09 பிப
மாநாட்டு பந்தலில் பிசுபிசுத்த கூட்டம்.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரால் தஞ்சை மாவட்டம் வல்த்தில் நடத்தப்படும் “தவ்ஹீத் எழுச்சி மாநாடு” பற்றி ஆஹோ..ஓஹோ வென புகழந்து அறிவிப்புகளும், அட்டகாசங்களுமாக இருந்தன. இடையிடையே இம்மாநாடு எதற்காக, என் நடத்தப்படுகின்றது என ததஜ வின் முக்கியத்தலைவர்களெல்லாம் தினந்தோறும் தொலைக்காட்சிகளில் மணிக்கணக்கில் புசிய வண்ணம் இருந்தனர் உச்சகட்டமாக ததஜ வனி் தலைவர் பி.ஜே அவர்கள் இம்மாநாட்டிற்கு 10 லடசத்திற்கும் அதிகமாக மக்கள் வருவர் என தனது 10 லட்ச புரானத்தையும் பாடினார். வலைகுடா நாடுகலெங்கும் ததஜ வின் தொண்டர்கள் அரபியிலும், ஆங்கிலத்திலும், தமிழிலுமாக பல மொழிகளில் அச்சடித்து நேட்டிஸ்கள் விநியோகித்து அரபுச் சள்ளிகளை வீதியெங்கும், ஏழை தொழிலாளர்கள் வசிக்கும் கேம்புகளென ஓடி..ஓடி பொருக்கி தங்கள் தலைமைக்கு லட்சங்களில் அனுப்பி வைத்தனர். இறுதியாக அந்த நாளும் வந்து விட்டது ததஜ வினர் ஆவலுடன் எதிர்பார்த்த “தவஹீத் எழுச்சி மாநாடு” நேற்று (10-05-2008) அன்று மிக தாமதமாக தொடங்கி இரவு 8 மணிக்கு முன்னராகவு முதல்நாள் அமர்வு முடிவடைந்து விட்டது. .

“தவ்ஹீத் எழுச்சி மாநாடு” குறித்து பலரும் பலவாறு எதிர்பார்த்து காத்திருக்க வரக்கூடிய தகவல்களோ உண்மை தவ்ஹீது் வாதிகளுக்கு மகிழச்சியை அளிக்க கூடியதாகவே உள்ளது. மாநட்டில் ஊடுருவியுள்ள நமது சிறப்பு செய்தியாளர் சகோ. சலீம் அவர்கள் மாநாடு தொடங்கியதில் இருந்து இரவு 10.00 மணிவரை நடந்த தகவல்களை தொகுத்து அனுப்பியுள்ளார் அதை செய்தித் துளிகளாக உலகெங்கும் இம்மாநாடு குறித்த செய்திகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக வழங்குகின்றோம்.

10 லட்சம் பேருக்கு வசதியா? 100 ஏக்கரில் பந்தலா? மக்கள் ஏமாற்றம்

மாநாட்டிற்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தருவர் என ஆஹோ ஓஹோவென தகவல்கள் அள்ளி வீசப்பட்டிருந்தன, இணையமெங்கும் ததஜ வின் தொண்டர்கள் தரணி பாடிக் கொண்டிருந்தனர் 100 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது, ISO தரச்சான்றிதழ் உடன் தமிழகமே கண்டிராத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மிகைப்படுத்தப்பட்ட தகவல்களும், புகைப்படங்களும் வெளியிடப்பட்டு வலைகுடா நாடுகள் எங்கும் மக்கள் நம்ப வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் ஆரம்பமே வந்திருந்த மக்களுக்கு பேரதிர்ச்சி அளிக்க கூடியதாக இருந்தது முக்கியமாக வலைகுடா நாடுகிளில் இருந்து அரபுச்சள்ளிகளை கட்டி அனுப்பிவிட்டு சிறப்பு விருந்தினராக வந்திருந்த வலைகுடா நாடுகிளன் பொருப்பாளர்களுக்கு.

ஆம் 100 ஏக்கரில் பந்தல் என்று அடித்து விடப்பட்ட கதையை நம்பியிருந்தவர்களுக்கு 3 ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பில் எந்த வசதியும் இல்லாது அமைக்கப் பட்டிருந்த பந்தல் பேரதிர்ச்சியாக இருந்தது. ஒரு ஏக்கருக்கு நெருக்கி அமாந்தாலும் பத்தாயிரத்துக்கு மேல் கொள்ளாது மூன்று ஏக்ரில் முப்பதாயிரம் பேர் கொள்ளளவு உள்ள பந்தலே அமைக்கப்பட்டிருந்தது.


மாநாட்டில் பென்கள் கலவரம்

மாநாடு தொடங்கி சரியாக சுமார் 3.00 மணியளவில் மாநாட்டிற்கு வந்திருந்த பென்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர், காரணம் மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு எந்த ஒரு வசதியும் தங்குவதற்கோ, இயற்கை உபாதைகளை நிறைவுற்றுவதற்கோ செய்து தராமல் இருந்ததுதான். முக்கியமாக பென்களுக்கு தனி இட வசதி ஏதும் செய்திருக்கவிலிலை, பல்வேறு ஊர்களில் இருந்தும் வாகனங்களில் ஏற்றிவரப்பட்ட பென்கள் எவ்வளவு தூரம்தான் இத்தனை ஆன்களுக்கு மத்தியில் மூத்திரமோ, மலமோ கழிக்காமல் இருக்க இயலும்? முதலில் சரியான வசதிகள் இல்லை, இரன்டாவதாக தண்ணீர் சுத்தமாக இல்லை அவ்வளவுதான் பென்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். உடனடியாக விழுப்புரம், சென்னை போன்ற பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக மாநாட்டு பந்தலில் இருந்து வெளியேறி தங்கள் ஊர்களுக்கு செல்ல துவங்கி விட்டனர்.

மாநாட்டிற்கு 10 லட்சம் பேர் வந்தனரா?

மாநாட்டில் கடைகள் அணைத்தும் பி.ஜே மற்றும் அவரது சுற்றத்தனராலேயே நடத்தப்பட்டது சாப்பாடு ஒன்று ரூ 50 க்கும் குடிநீர் பாக்கெட் ஒன்று 4 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதை கண்டு மக்கள் கொதித்து போய் விட்டனர்.பி,ஜே யின் கணக்கு இங்கு தவறி விட்டது என்பதை வந்திருந்த கூட்டம் நிறுபித்தது. காவரி டெல்டா பகுதிகளில் இருந்து அதிகமாக கூட்டம் வரும் என்று மனக்கணக்கு போட்டுத்தான் வல்லத்தில் ஏற்பாடு செய்தார் ஆனால் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக அவர் மிகவும் எதிர் பார்த்த பகுதிகளில் இருந்து மக்கள் குறைவாகவே வந்திருந்தனர் உதாரனமாக முத்துப்பேட்டையில் இருந்து சுமார் 500 பேர் மட்டும், அதிராம்பட்டினத்தில் இருந்து 250 பேர், பொதக்குடியில் இருந்து 1 கார் மட்டும், பண்டாரவடையில் இருந்து 2 வேன்கள், திருவாருரில் இருந்து சுமார் 100 பேர் என் மிகக ஏமாற்றமளிக்கும் வகையிலேயே கூட்டம் வந்திருந்தது.

மொத்தமாக உளவுத்துறை மற்றும் இவர்களின் கூட்டத்தை கவணித்து வரும் சில அமைப்புகளின் தகவல்படி 9 ம் தேதி இரவில் இருந்து 10 ம் தேதி இரவு சுமார் 10.00 மணி வரை வல்லத்துக்குள் தரை மார்க்கமாக நுலைந்த வாகனங்களின் எண்ணிக்கை கீழ் வருமாறு :

வேன்கள் (அனைத்து வகை) – 308 (1 வேனுக்கு 8 முதல் 12 பேரே அமாந்து வந்துள்ளனர்)

 • பஸ்கள் (அனைத்து வகை) – 172 (1 பஸ்சுக்கு 25 முதல் 40 பேர் வரை வந்துள்ளனர்)
 • சுமோ வகை கார்கள் – 78
 • ஸகார்பியோ இன்ன பிற வகை கார்கள் – 40
 • அம்பாசடர் கார்கள் – 79
 • மோட்டார் பைக் 2 சக்க வாகனங்கள் – 264

மொத்தமாக 10ம் தேதி மாலை வரை வந்த கூட்டம் சுமார் 13,000 த்தல் இருந்து 17,000 ம் வரையே. இந்த கூட்டத்திற்கே பந்தலில் முறையான வசதிகள் செய்யப்படவில்லை. ஆகையால் இதில் ஒரு பகுதியினர் மாலை 3 மணிக்கு மேல் தங்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்ததை காண முடிந்தது.

30,000 பேரே அமர இயலாத பந்தலுக்கு ஏறத்தால 46,000 சேர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்தது இவர்களின் சரிவர திட்டமிடாமையை காட்டியது. இடையில் பென்களின் ஊடே மாநாட்டிற்கு வந்திருந்த சில இளைஞர்கள் புகுந்து சில்மிசங்களில் ஈடுபட்டதால் அமளி ஏற்ப்பட்டது உடனே திரு. பாக்கர் அவர்களும், திரு. பி.ஜே அவர்களும் மைக்க பிடித்து உடணடியாக பென்களின் ஊடே ஊடுருவி உள்ள ஆன்கள் வெளியேறுமாறு தொடாந்து அறிவித்த வண்ணம் இருந்தனர்.

நொருங்கி விழுந்த காபா செட்

அசம்பாவிதங்களின் உச்ச கட்டமாக உலகெமெங்கும் எதிர்ப்பை மீறி மக்காவில் அமைந்துள்ள காபத்துல்லா என்ற இறையில்லம் போன்று அமைக்கப்பட்டிருந்த அந்த அமைப்பு (செட்) ன் ஒரு பகுதி நொருங்கி விழுந்தது. உடன்டியாக மாநாடெங்கும் பரபரப்பு ஏற்ப்பட்டது. ஏற்னவே அக்கிணி வெயிலிலிலும் அனல் காற்றிலும் சரிவர எந்த வசதியும் செய்து தராததால் மனம் வெதும்பி போய் இருந்த பென்களுக்கு இது போன்று தண்ணீரோ மூத்திரம் பேய்வதற்கு கூட வசதிகளோ இல்லாததால் கூக்குரலிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர், இந்த நிலையில் காபா போன்று அமைக்கப்பட்ட செட்டும் உடைந்து விழுந்துவிட மக்களும் கட்டுப்பாடின்றி உரை எதையும் கேட்காமல் அங்கும் இங்கும் அலைய ஆரம்பித்தவுடன் வெறுப்பாகி போன் பி,ஜே யும் பாக்கரும் மேடையில் ஏறி சும்மாக்காச்சும் அழுது காட்டி மக்களை சென்டிமென்டாக டச் பண்ண முயற்சி செய்தனர் பாச்சா எதுவும் பலிக்கவில்லை என்றவுடன் விரைவாக மீட்டிங் முடிக்கப்பட்டது.

நிகழச்சியில் தன்னாலும் முடியும் என்ற போட்டி மனப்பான்மையுடன் பீஸ் மாநட்டில் ஏற்பாடு செய்திருந்தது போல் ஒரு கண்காட்சிக்கும் முயற்சி செய்திருந்தனர் அந்த கண்காட்சியல் வைக்கப்பட்டிருந்த தகவல்தான் கொடுமையிக் உச்சம், அதாவது இஸ்லாத்தின் வரலாறு என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் நபிமார்கள். சஹாபாக்கள், தாபியின்கள், அறிஞர்கள் என்ற வரிசையில் பலரின் பெயர், பிறந்த வருடம் ஊர் என குறிப்பிடப்பட்டிருந்தது அந்த வரிசையில் இமாம் புகாரி (ரஹ்) இப்னு தைமியா(ரஹ்) என இவர்களுக்கு அடுத்தபடியாக பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களின் பெயரை குறிப்பிட்டு மாபெரும் மார்க்க அறிஞர் என அவரின் பிறந்த வருடமும் குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது பலரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது..

அதுவும் இமாம் புகாரி (ரஹ்) வரிசையில் இப்னு தைமிய்யா அவர்களுக்கு அடுத்தபடியாக உலகில் இஸ்லாத்திற்கு முக்கிய சேவையாற்றியவர் என பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களின் தகவல் வைக்கபபட்டிருந்ததை பார்த்த ததஜ வினர் பலருக்கே நெருடலாக இருந்ததை உணர முடிந்தது.

அத்துடன் இடையில் வெளியடப் பட்ட அறிவிப்பு ஒன்று இன்னும் மக்கள் சங்கடப்பட வைத்தது அதாவது நாளை (இன்று 11-05-2008) நடைபெறும் நிகழ்ச்சியில் பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களுக்கு தவ்ஹீதை காத்ததற்காக பட்டம ஒன்று வழங்கப்பட உள்ளது என்ற செய்தி. நிகழ்சி எதிர் பார்த்தபடி நடக்காததாலும் மக்கள் கூட்டம வராததாலுமட் வந்திருந்த மக்களுக்கு முறைப்படி வசதிகள் இல்லாததால் சலசலப்பு ஏறப்பட்டு கலைந்து சென்றதாலும் வெறுப்பின் உச்சத்தில் இருந்த பி.ஜே பலரை கடும் வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்ததை சாதாரன தொண்டர் முதற்கொண்டு காண முடிந்தது.

இறுதியில் மைக்கை பிடித்த பி.ஜே நீலிக் கண்ணீர் வடித்தும் மக்கள் மசியாததால் பதினைந்தாயிரம் பேரே கூடாத இந்த கூட்டத்தை கும்பகோனத்தில் நடக்கும் மகாமகத்துக்கும், மக்காவில் நடக்கும் ஹஜ்ஜீக்கும் ஒப்பிட்டார், ஹஜ்ஜீக்கு லட்சக்கணக்கில் வசூல் செய்யும் சவுதி அரசாங்கத்தாலேயே வரக்கூடிய மக்களுக்கு சவுகரியங்கள் செய்ய இயலவில்லை அது இது என சாக்கு போக்குகள் சொல்லி மற்றவர்களின் தவறுகளையும் குறைகளையும் எடுத்து சொல்லி அத்துடன் இம்மாநாட்டில் உள்ள குறைகள் ஒன்றும் பெரிததல்ல என்பது போல் ஒப்பீடு நடத்தியது வந்திருந்த மக்களுக்கு மேலும் எரிச்சலை ஏறப்படுத்தியது.

இடையி்ல் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை பி.ஜேயும் பாக்கரும் நடத்தினர் வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய பி.ஜே மாநாட்டிற்கு ஒரு லட்சத்திற்கு அதிகமாக மக்கள் வந்திருப்பதாக தனது சுருதியை குறைத்து (10 லட்சம் என ஏற்கனவே பலமுறை அடித்து விட்டவர்) வாசித்தார் ஆனால் விடாத இந்தியா டைமஸ் நிருபர் ஒரு லட்சம் என்கின்றிர்கள் வந்திருப்பது மிக குறைவாக உள்ளதே என்றதற்கு மழுப்பினார்.

பின்னர் மற்றொரு நிருபர் நேற்று வேலுர் கோட்டையில் தமுமுக வினர் தொழுகை நடத்த திரண்டு நடத்திய போராட்டத்தையும் அங்கு கூடிய மக்களையும் சுட்டிக் காட்டி கேள்விகளை எழுப்பினார் அதற்கும் மழுப்பலாக பி.ஜே நாங்கள் நடத்தும் இம்மாநாடு மக்களிடையே பிள்ளி, சூனியம், மந்திரம் தந்திரம் போன்ற மூட நம்பிக்கைகளை போக்கவும், வரதட்சினை போண்ற கொடுமைகளை ஒழிக்கவும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவுமே நடத்தப்படுகின்றது என திரும்ப திரும்ப கூறிக் கொண்டேயிருந்தார் ஒரு இடத்தில் கூட ஏகத்துவத்தை நிலைநாட்டவும், இஸ்லாத்தை பற்றிய எழுச்சியை மக்களிடையே ஏற்படுத்தவும் என கூறவில்லை. இறுதியாக மற்றோர் ஆங்கில பத்திரிகை நிருபர் தமுமுக வின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இம்மாநாடு குறித்து கருத்து தெறிவிக்கையில் “இது பொழுது போக்கிற்காக” நடத்தப்படும் நிகழச்சி (It is an entertainment gathering) என்று கூறியுள்ளார் இது குறித்து தங்கள் பதில் என்ன என்று கேட்டதற்கு மழுப்பலாகவே ஏதோ சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

தென்மாவட்டங்களில் இருந்து அதிகமாக கூட்டம் வரவில்லை வந்த சில வாகனங்களையும் திருச்சியிலேயே நிறுத்தி வைத்துள்ளதாக தகவல், இங்கு இட வசதி இல்லை என்ற காரனத்தினால் பலர் திரும்பி சென்று கொண்டுள்ளனர், பெரும் தூரங்களில் இருந்த வந்திருந்த பென்கள் தங்குவதற்கும், இயற்கை உபாதைகளை நிறைவேற்றுவதற்குதம் கூட மறைவான இடம் இல்லை. நுறு (100) ஏக்கர் பந்தல் கதை அம்பேலாகி விட்டது.

மாநாட்டிற்கு வந்திருந்த மக்கள் காறித்துப்பாத குறையாக நிர்வாகிகளை பிடித்து உழுக்கி கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. அரசியல் அனுபவமே இல்லாத தப்லீக் ஜமாத்தனர் கூட இரன்டு லட்சத்திற்கு அதிகமாக மக்கள் கூடிய தங்கள் இஜ்திமாவில் முறையாக உணவு, கழிப்’பிடம், தங்கும் வசதிகளை செய்திருந்தனர் ஆனூல் அரசியல் வித்தகர்களாக கூறிக்கொள்ளும் இவர்களால் 15 ஆயிரம் பேருக்கு வசதிக் செய்ய முடியவில்லை என பேசிக் கொண்டிருந்தனர்.

இறுதியாக மக்கள் தகவலுக்காக 10 லட்சம் பேர் வரவேண்டும் என்றால் எத்தனை வாகனம் வேண்டும் என்ற கணக்கு கீழே உள்ளது பார்த்து கொள்ளவும், இன்னும் 10 லட்சம் பேர் கூடிய ஒரு நிகழ்வு ஹஜ்ஜீக்கு அடுத்தபடியாக நிகழ்ந்ததென்றால் ஈரான் மதகுரு திரு. கொமெனி அவர்களின் சவ ஊர்வலத்தின்போது தான் தமிழகத்தில் பேரரிஞர் அண்ணா மரணித்தபோது இத்தனை பேர் கூடவில்லை என்பது வரலாறு.இது மக்ள் கற்பித்த பாடமா? இல்லை தற்பெருமைக்கு இறைவனால் வைக்கப்பட்ட ஆப்பா? …. செய்தி தொடரும்…

10,00,000 – பத்து இலட்சம்

கும்பகோணத்தில் நடைபெற்ற பேரணியில் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக த.த.ஜ.வினர் கூறிவருகின்றனர். பத்து இல்லை பதினைந்து, பதினெட்டு என்று கூறுவோரும் உண்டு. பத்து இலட்சம் மக்கள் கலந்துகொண்டால் வாகன வசதி பின்வருமாறு இருக்க வேண்டும்.

5,000 – ஒப்பந்த ஊர்திகள்

34 பேர் பயணம் செய்யக்கூடிய பேருந்தில் மிக அதிகபட்சமாக 50 பேர் பயணம் செய்தார்கள் எனக்கொண்டால் 2,50,000 பேர்.

10,000 – வேன்கள்

11பேர் பயணிக்கக்கூடிய வேனில் மிக அதிகபட்சமாக 20 பேர் பயணம் செய்தனர் எனக் கணக்கிட்டால் 2,00,000 பேர்.

25,000 – பைக்குகள்

2 பேர் பயணம் செய்யக்கூடிய பைக்குகளில் 3 நபர் வீதம் பயணம் செய்தனர் என்று கணக்கிட்டால் 75,000 பேர்.

உள்ளூர் மக்கள்

கும்பகோணத்தின் மொத்த மக்கள் தொகை (இந்துக்கள் உள்பட) சுமார் 1,60,000. இதில் 1,50,000 பேர் கலந்து கொண்டார்கள் எனக் கருதுவோம்.

அக்கம் பக்கத்தினர் – 3,25,000

தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மண்ணார்குடி, சென்னை சாலை என 5 வழித் தொடர்பு உள்ள கும்பகோணத்திற்கு ஒவ்வொரு வழியிலிருந்தும் அரசு பேருந்துகள் மூலமாக சுமார் 1000 பேருந்தில் ஒவ்வொரு பேருந்திலும் குறைந்தது 65 நபர்கள் பயணம் செய்தால் 3,25,000 மக்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அதாவது மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 வழித்தடங்களிலிருந்தும் காலை 4மணி முதல் மாலை 4 மணிவரை – 12 மணிநேரத்தில் சுமார் 1000 பேருந்துகள் வரவேண்டும். அதாவது ஒரு மணிநேரத்திற்கு சுமார் 83 பஸ்கள் – புரியும்படி சொன்னால் இந்த ஐந்து வழிகளில் ஒவ்வொரு வழியிலிருந்தும்
45 விநாடிகளுக்கு ஒரு பேருந்து வரவேண்டும். இப்படி பேருந்து சேவை உள்ள பகுதி உலகில் எங்குமே இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

அக்கம் பக்கத்தினர் வருவதற்கு மட்டுமே 45 விநாடிகளுக்கு ஒரு பேருந்து. ஒப்பந்த ஊர்திகளில் வருவோரும் இந்த 5 வழிகளில்தான் வரவேண்டும். இதையும் சேர்த்தால் 12 மணி நேரத்தில் சராசரியாக 22.5 விநாடிகளுக்கு ஒரு பேருந்து வந்திருக்க வேண்டும். இவை பேருந்துக்கான கணக்கு மட்டுமே. வேன்களின் எண்ணிக்கையும் சேர்த்து நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள்.

பேரணி – மாநாடு முடிந்து இந்த வாகனங்களில் வந்தவர்கள் திரும்பி செல்வதாயிருந்தால் மொத்தம் 45,000 வாகனங்கள் ஒவ்வொரு வழியிலும் 9,000 வாகனங்கள் திரும்புவதாகக் கணக்கிடுவோம். 5 விநாடிக்கு ஒரு வாகனம் வீதம் நிமிடத்திற்கு 12 வாகனங்கள். ஒரு மணி நேரத்திற்கு 720 வாகனங்கள். 12.5 மணி நேரத்திற்கு 9000 வாகனங்கள் ஆகியிருக்கும். ஒரு நிமிடத்திற்கு 12 வாகனங்கள் வீதம் சென்றால் எத்துனை அசம்பாவிதங்கள் நடக்கும். எத்துனை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதையெல்லாம் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இது சாத்தியமா? இத்துனை மக்கள் கும்பகோணத்தில் கூட முடியாது என்பதும் கூடினால் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதெல்லாம் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தெரியாதா? பின் யாரை ஏமாற்ற 10 இலட்சம்? வெளிநாடுகளில் இருக்கும் தமிழக முஸ்லிம்கள் நாம் சொல்வதை அப்படியே நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம்தானே இப்படிச் சொல்ல வைக்கின்றது. அவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என்று நினைக்காதீர்கள்.

குறிப்பு: பேரணி நடந்த மறுநாள் நான் போட்ட கணக்கு இது. பத்து இல்லை. அதில் பாதி கூட கலந்து கொள்ளவில்லை என்பதை தேர்தல் நிரூபித்துவிட்டது. எனினும், த.த.ஜ.வினர் பொய்க் கணக்குகளை, புள்ளி விபர மோசடிகளை இன்றும் அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவி பக்தர்கள் அறிந்து கொள்வதற்காக இப்போது பதிகிறேன்

மே 3, 2008

பி.ஜே யோடு கைகோர்த்து பணி செய்ய காத்திருக்கின்றேன் – மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

Filed under: இம்தாதி, ததஜ, பி.ஜே, PJ, TNTJ — முஸ்லிம் @ 9:00 பிப

கண்டு விட்டீர்களா? மெளலவி ஜமால் மதனியின்…ததஜ வை விமர்சிப்பது ஏன்?

அல்லாஹ்வின் திருநாமத்தால்……..

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்’ 51:55, ‘எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினை இருக்கிறது’50:35.

அன்புச் சகோதரரே! பல சகோதரர்களின் உருவப்படங்களுடன் எனது உருவப் படத்தையும் இணைத்து நீங்கள் தொகுத்த ஒரு ஆக்கம் கண்டேன். அதைக் கண்டபோது அதைத் தொகுத்த நீங்கள் தவ்ஹீதில் அக்கறை உள்ளவர் என்பதும், அதே நேரம் நீங்கள் தமிழகத்தில் தவ்ஹீத் உருவான, உருவாகி வளர்ந்த வரலாறு தெரியாதவர் என்பதும் பளிச்சென தெரிந்து விட்டது. எனவே உங்களைப் போன்று தமிழகத்தில் தவ்ஹீத் உருவான வரலாறு தெரியாமலேயே செயல்படும் பல இளைஞர்கள் உண்மையைப் புரிந்து உரிய பலனைப் பெற வேண்டுமென்ற நன் நோக்கில் மேற் குறிப்பிட்டிருக்கும் இறைவாக்கிற்கொப்ப இதனை அறியத் தருகிறேன். யா அல்லாஹ்! சத்தியத்தை சத்தியமாகக் காட்டி அதனை பின் பற்றும் பாக்கியத்தையும் அசத் தியத்தை அசத்தியமாகக் காட்டி அதனை தவிர்ந்து கொள்ளும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

அன்புச் சகோதரரே! தமிழகத்தில் குர்ஆனும் ஹதீசும்தான் மார்க்கம் அவ்விரண்டிற்கும் மாற்றமானவை மார்க்கமற்றவை என்பதை நமது நாட்டில் துவங்கி பல இடையூறுகளை அனுபவித்து அல்லாஹ்வின் மா பெரும் அருளால் அது வளர ஆரம்பித்ததும் தமிழகத்தில் பல பகுதிகளில் பல்வேறு பெயர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல அமைப்பின் சகோதரர்கள் திருச்சியில் 1986 களில் கூடிய ஒருசமயத்தில் எல்லோர் உள் ளத்திலும் ஒரே பெயரில் நாம் இயங்கினால் நன்றாக இருக்குமே என்று எண்ணியபோது நிறுவப்பட்ட அமைப் புதான் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன், வல்ஹதீஸ்., அன்றைக்கு அந்த சிந்தனையைப் பரப்புவதில் அதிகப் பங்கு வகித்தவர்களில் முக்கியமாக இருந்த உங்களின் தலைவர் தான் அப்போதைக்கு முதலாவதாக தற் காலிகத் தலைவராக இருந்தார் அதன் பின்னர் கூடிய கூட்டத்தில் தான் உங்களின் தலைவரும் சேர்ந்து இவ்வமைப்பிற்கு தற்போது இருந்து வரும் கமாலுத்தீன் மதனி தலைவராக்கப்பட்டார்.

அன்று உருவாகப் பட்ட அமைப்பில் அங்கம் வகித்த நான் அன்றிலிருந்து இன்று வரை அல்லாஹ்வின் பேரருளால் அதே கொள்கையில் அதே தலைமையில் அதே அமைப்பில் இருந்து செயல்பட்டு வருகிறேன். அல்லாஹ் இதே நிலையில் என்னை இறுதி வரை வாழ வைத்து ஈமானுடன் உண்மை முஸ்லிமாக மரணிக்கச் செய்ய வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டுமிருக்கிறேன். ஒரே அமைப்பில் இருக்கிறேன் என்று சொல்வதால் உங்கள் தலைமையை கண்மூடித்தனமாக உங்களைப் போன்றவர்கள் பின்பற்றுவது போல என்று எண்ணி விடக்கூடாது. மாறாக, அல்ஹம்து லில்லாஹ் தலைமையில் காணுகின்ற குறைகளை அன்றும் இங்கு வரு வதற்கு சில தினங்களுக்கு முன்பும் கூட தயவுதாட்சண்யமின்றி சுட்டிக் காட்டித்தான் வந்திருக்கிறேன்., அல்ஹம்துலில்லாஹ் எங்களது தலைவர் உங்களின் தலைவர் போன்றில்லாமல் தவறை உணர்த்தப்பட்டால் உடனே மன்னிப்புக் கேட்கும் தலைவர். அச்சுபாவம் உங்களின் தலைவருக்கு இல்லாததால் தான் அமைப்பு அமைப்பாக தலைவர் தலைவராகத் தாவிச் சென்று இறுதியில்– நான் எந்த அமைப்பிலும் கேள் விப்படாத தலைவரை உதவித் தலைராக்கிவிட்டு–தானே தலைவராகிவிட்டார்.

உங்களின் தலைவர் பகிரங் கமாகக் கூறிய பொய்ச் செய்தியைச் சுட்டிக்காட்டியபோதும் கூட அதை ஏற்காதவர். மட்டுமின்றி நாங்கள் ஒரே தலைமையின் கீழிருந்த காலத்தில் நான் சுட்டக்காட்டிய அளவிற்கு உங்கள் தலைவர் சுட்டிக் காட்ட வில்லை –அவருக்கு தலைமையின் மூலம் இலாபமிருந்தது– மட்டுமின்றி தனது கருத்தைத்தான் தலைவர் செய்ய நிர்ப்பந்திப்பார்.

விஷயத்திற்கு வருவோம்;.

எனது படத்தைப் போட்டுவிட்டு எனது பெயரைக் குறிப்பிடாமல் …குராஃபாத் அமைப்புகளில் பைஅத் செய்து கொண்டதாகவும் ஏகத்துவத்தைக் கை கழுவி விட்டதாகவும் எழுதியிருந்ததைப் பார்த்ததும் உங்களின் மீது அனுதாபம்தான் எனக்கு ஏற்பட்டது. ஹைர்! அல்லாஹ்வே சாட்சி! அல்லாஹ்வே போது மானவன்! நீங்கள் கூறியதை சாட்சியோடு இன்னவரிடம் பைஅத் செய்துள்ளார், இன்ன இடத்தில் தவ்ஹீ துக்கு மாற்றமாக பேசியுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தால் நீங்கள் ஒரு தெளிவான தவ்ஹீத்வாதி என ஏற்றுக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு நம்மைச் சுற்றி என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது என்ற மதமதப்பில் உங்கள் தலைவர் போல பல செய்திகளை அடித்துவிட்டிருக்கிறீர்கள்.

நினைவுக்கு வந்த சிலவற்றைத் தருகிறேன், படியுங்கள் சிந்தியுங்கள், திருந்துங்கள், திருத்துங்கள்.நான் குறிப்பிட்டவற்றில் தவறு கண்டால் சுட்டிக் காட்டுங்கள், ஆதாரத்துடன் தவறை சுட்டிக்காட்டுபவருக்கு நன்றி கூறி திருத்திக் கொள்வேன். இவையெல்லாம் சுட்டிக் காட்டுவதன் நோக்கமே தவறு செய்தவர்கள், செய்ப வர்கள் திருந்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான். தவறெனத் தெரிந்ததும் திருந்துபவர், திருத்திக் கொள்பவர், திருத்த முயற்சி செய்பவர் ஆகிய அனைவரும் இறையன்பைப் பெறும் தகுதிக்குரியவர், தவறைத் திருத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்த நினைப்பவர் ஷைத்தானின் அடிமைகள். யா! அல்லாஹ் ஏகத்துவ வாதிகளை உன் அன்பைப் பெறத் தகுதியானவர்காக ஆக்கி அருள்வாயாக!.


நீங்கள் உங்களின் ஆக்கத்தில் கூறியிருக்கிற குற்றச்சாட்டுகள் உங்கள் தலைவரைத்தான் என்பதை நீங் களே நான் தருகின்ற ஆக்கங்கள் மூலம் புரிந்துகொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.

உங்களின் தலைவர் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சத்தியத்தைக் கூறுவதெற்கென்றே தமிழகத்தில் உருவாக்காப்பட்ட அமைப்பிலிருந்து தடம்புரண்டு வேறு அமைப்பில் பைஅத்துச் செய்து கொண்ட பின் அவரின் முரண்பாடுகளில் சில:

ஏகத்துவ மேடைகளில் (நான் ஏகத்துவ மேடை என்று குறிப்பிடுவது 1986 களில் தமிழகத்தில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உருவாகப்பட்ட அமைப்பு) தர்க்காவிற்கு செல்வது அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன், நிரந்தர நரகம், அப்படிச் செய்பவர் முஷ்ரிக், காஃபிர் இத்தகையவர்களிடம் சமரசம் செய்து கொள்வதற்கு இடமே இல்லை என்று அழுத்தம் திருத்தமாகப் பேசிய அதே நாக்கு, முஸ்லிம் என்ற பெயர் உள்ள எல்லோரும் வாருங்கள் நீங்கள் எந்தக் கொள்கையில் இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்காக குரல் கொடுப்ப தற்கே அமைப்பை உருவாக்கப்பட்டிருக்கிறது, இது தவ்ஹீதைக் கூறாது எனக் கூறி அந்த அமைப்பின் தலைவரிடம் பெயருக்கு பைஅத் செய்து அமைப்பாளராகி, தவைலரும் தனது கருத்தையே பிரதிபலிக்க வேண்டுமென்று அங்கிருந்து விலகும் வரை நிர்பந்தித்து கொண்டிருந்தவர்தான் உங்கள் தலைவர்.

 • அந்த மேடையில் எங்கள் தர்காவிற்கு பஸ் விடு என்று முழங்கினார். பித்அத்கள் நரகத்திற்கு இட்டுச் செல்லு மென முழங்கிய அதே குரலிலல் எங்கள் ஹஸரத்தைக் கூப்பிட்டு ஃபாத்திஹா ஓதச் செய் என்றும் முழங் கினார்-சத்தியம் அவர் உள்ளத் தில் இருந்ததால் பேசியபோதே நினைவு வந்தவுடன் தர்கா கூடுமா? கூடாதா என்பது வேறு என்றும் சொல்லிக் கொண்டார்- அரசியலுக்கு ஒரு தலைமை ஆன்மீகத்திற்கு ஒரு தலைவர் என்று முஸ்லிம் சமு தாயம் சென்றதால்தான் சமுதாயம் சீரழிந்து போய்விட்டது என்று பேசிய அதே குரல் தான் அரசியலுக் கும் ஒரு அமைப்புத் தேவை என்று அமைப்பாளரானார்.
 • அமைப்பாளரானதும் தவ்ஹீத் மேடைகளில் முஸ் லிம்களின் பின்னடைவுக்கு ஆலிம்களே காரணம், ஏனெனில் இவர்கள் ஆங்கிலேயனின் மீது கொண்ட வெறுப்பால் இங்லீஸ் படிக்ககக் கூடாது என்றனர், பேண்ட் போடக்கூடாது என்றனர் என்று முழங்கினார், அதே குரலில் தவ்ஹீத் அல்லாததைச் சொல்வதற்காக பைஅத் செய்து கொண்ட மேடையில் முழங்கும் போது –சுப்ஹானல்லாஹ் நரம்பில்லா நாக்கு என்பார்களே அதை அப்படியே மெய்ப்பிக்கும் விதமாக- நமது ஆலிம்கள் எப்படிப்பட்ட தியாகிகள் தெரியுமா? (தேச பக்திக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைத் தவ்ஹீத் மேடையில் ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாகப் பேசியவர்)தேசபக்தியின் காரண மாக ஆங்கிலம் படிப்பது ஹராமென்றார்கள், பேண்ட் அணியக்கூடாது என்றனர் என்று முழங்கினார் முரண்பட்டுப் பேசுகிறாறே என்று ஆட்சேபிக்க வேண்டிய உங்களைப் போன்ற தவ்ஹீத் வரலாறு தெரியாத வர்கள் அப்போதும் நாரே தக்பீர் அல்லாஹுஅக்பர் என்று முழங்கினார்கள்.
 • உங்கள் ஓட்டு யாருக்கு என்ற தலைப்பில் எல்லா அரசியல்வாதிகளையும் அலசி எவருக்கும் ஓட்டுப் போடக்கூடாது என்று பேசிய அதே வேகத்தில் எந்த அரசியல்வாதியும் செய்யாத ஒன்றை– அதாவது ஒரு முறை திமுக, அடுத்து அதிமுக, அதையடுத்து சில பகுதிகளில் திமுக, சில பகுதிகளில் அதிமுகவை ஆதரிக்கிறோம் என்று -தடுமாற்றத்தையே வாடிக்கையாகக் கொண்டவர் தான் நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்பின் தலைவர். மட்டுமா! ஜெயலலிதாவை மிகக் கடுமையாக கேவலமானவர் என்று ஆதார அடிப் படைகளுடன் விமர்சனம் செய்து உணர்விலும் எழுதி, மேடைகளிலும் பேசிவிட்டு அம்மையாரை முத லமைச்சாருக்குங்கள் என்று ஊர் ஊராகச் சென்று ஓட்டு வேட்டை நடத்தினார், அவரின் தலைமை யின் கீழுள்ள சிலர் அம்மாவின் ஆட்சியில் முஸ்லிம்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என்றாகள்.
 • தவ்ஹீத் (தமிழ் நாடு தவ்ஹீதல்ல) மேடையில் பெண்களிடம் ஆட்சியை ஒப்படைப்பவர்கள் மண்ணுக்கு மேல் வாழ்வதை விட மண்ணுக்கடியில் வாழ்வதே சிறந்தது என்ற ஹதீஸை அற்புதமாக எடுத்துரைத்த மாமேதை தான் உங்களின் தலைவர்.
 • ஜம்மியத் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பின் தற்காலிகத் தலைவராக இருந்து பின்னர் அவரும் இணைந்து இவ்வமைப்பிற்கு கமாலுத்தீன் மதனியை தலைவராகத் தேர்வு செய்து, அது வளர ஆரம்பித்த கட்டத்தில் தலைவரின் மீது பலரும் பல குற்றச் சாட்டுகளைக் கூற தலைவர் தனது தலைமைத் தனத்திலிருந்த விலகிக் கொள்கிறேன் என்று வந்தபோது இஸ்லாத்தில் தலைமையை மாற்ற இடமேயில்லை மரணிக்கும் வரை அவர்தான் தலைவர் என்றும் அதற்கு நானே அவரிடம் முதன்மையாக பைஅத் செய்கிறேன் என்றும் கூறினார். பின்னர் அதிகாரமுள்ள தலைவர் அதிகாரமற்ற தலைவர் என்ற தத்துவத்தை முன் வைத்து தமிழ் முஸ்லிம்களுக்கு ஆன்மீகத்திற்குத் தலைவர் ஒருவர் கிடையாது என்று இரண்டாம் முறையாக அவர் பைஅத் செய்து கொண்ட மேடைகளில் பேசினார், எழுதினார்.
 • இன்றைக்குத் தமிழகத்தில் சமுதாயப் பணிகள் செய்வதற்கு முஸ்லிம்கள் நம்பிச் செயல்பட, உதவிகள் செய்ய மிகத் தகுதியான அமைப்பு தமுமுக, மார்க்கப்பணிகள் செய்திட நம்பி உதவி செய்யத் தகுதியான அமைப்பு ஹாமித் பக்ரியின் தலைமையில் இயங்கும் அனைத்துத் தவ்ஹீத் ஜமாஅத் என்று என்று மனம் திறந்து மடல் என்று மடலை– தமிழகம் அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் எதுவும் செய்கிறது என்பது போல—உணர்வில் எழுதினார், சுப்ஹானல்லாஹ் எழுதிய சில மாதங்களிலேயே வஹி வந்தவர்போல தமுமுக தவ்ஹீத் வாசலை அடைத்துவிடக்கூடிய அமைப்பு, ஹாமித் பக்ரிக்கு தீவிர வாதிகளுடன் தொடர்பு இருக்கின்றது என்றார், சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் கண்மூடித் தனமாக பின்பற்றும் தன்மையை ஒழிக்க வேண்டுமென முழங்கிய அவரே அத்தகைய கூட்டத்தின் தலைவராக மாறியிருக்கிறார்.

அல்லாஹ்வின் கிருபையால் தமுமுக அவர் வெளியே வந்த பின்னர் தமுமுக மேடையிலேயே தவ்ஹீதை பகிரங்கமாக முழங்கும் நல்ல சூழலுக்கு மாறியுள்ளது, பல நல்லவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் அமைப்பாகவும் மாறியுள்ளது அல்ஹம்து லில்லாஹ்.

 • மா மனிதர் என்று ஒரு தலைப்பில் மிக அழகாக (ஸல்)அவர்களைப் பற்றி பல காலமாகப் பேசியிருக்கி றார். அதில் ஒரு முறை மாமனிதர் (ஸல்)அவர்கள் சபையில் இருக்கும்போது அவர்களைத் தேடி வருபவர்கள் முஹம்மத் யார் எனக் கேட்குமளவிற்கு மக்களோடு மக்களாக அமர்ந்திருப்பார்கள் என்ற உண்மையை அழகாக அழுத்தமாக எடுத்துச் சொன்னவர் உங்களின் தலைவர் இன்று வரை அவரை யாராவது பார்க்கச் சென்றால் நேரடியாகச் செல்ல முடியாது, ஏன் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூட நேரடியாக தொடர்பு கொள்ள இயலாது, சபையில் மக்களோடு மக்களாகப் பார்க்கவே முடியாது.
 • உங்களின் தலைவர், மா மனிதர் இடம், நேரம், காலத்திற்குத் தகுந்தாற்போல உங்களைப் போன்ற தம்பிகள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு பேசுவதில் அவருக்கு நிகர் அவரே. சிறந்த அறிவாளி ஆனால் அறிவாளிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் அற்றவர்.

ஒவ்வொரு அமைப்பை விட்டும் வெளியேறும்போது ஏதேனும் நொண்டிக் காரணங்களை தூய எண்ண முள்ளவர்கள் கூறுவதுபோல கூறிவிட்டு சென்ற பின்னர் தான் சார்ந்திருந்த காலங்களிலெல்லாம் அவர்க ளுடன் கைகோர்த்து எல்லாக் காரியங்களையும் செய்து விட்டு அல்ல அல்ல தனது சர்வாதிகாரத்தால் செய்ய வைத்துவிட்டு இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளைக் கூறுவார் உங்களைப் போன்ற புகழ் பாடும் கூட்டமிருப்பதால்! எந்த அளவிற்கென்றால் அல்லாஹ்வும் ரசூலும் வண்மையாக மிக மோசமான கெட்டவை என்று கண்டித்துக் கூறியதை அவரது கட்டுப்பாட்டிற்கு கீழிருந்த இருக்கிறவர்களில் இருவரை ஊர் ஊராக அனுப்பி குற்றங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து வீடியோவில் பதிவு செய்து அதைப் பார்க்கச் செய்து பலரை பெரும் பாவம் செய்ய வைத்தவர்.

சுருங்கச் சொல்வதாயிருந்தால் தமிழகத்தில் — இவரும் இணைந்திருந்த காலத்தில்–ஏகத்துவத்தை உருவாக்க இன்று வரை கஷ்ட, நஷ்டங்கள் பட்டுக் கொண்டிருப்பவர்களையும் அவர்கள் நடத்தப்பட்டு வரும் இதழ்கள், அழைப்பு மையங்கள், கல்லூரிகளை இழித்தும் பழித்தும் கூறிக் கொண்டிருக்கிறார்.

இவையெல்லாம் சரிதானே என்று உங்களைப் போன்ற ஒரு கூட்டமும் சேர்ந்து கொண்டு செய்கிறது. மிகத் துணிவாக பொய்களைக் கலந்து சேற்றை வாரி வீசுவதற்கு முக்கியக் காரணம் தற்போது அவர் பின்னாலிருக்கும் கூட்டம் உங்களைப் போன்ற தவ்ஹீதின் உருவாக்கத்தைத் தெரியாதவர்கள் என்பதுதான். நினைவுக்கு வந்த சிலவற்றைக் கூறியுள்ளேன், இதுவும் அவரின் குறைகளை அலச அல்ல. மாறாக உங்களைப் போன்று தவ்ஹீதை தவ்ஹீதுவாதிகள் மூலம் பெறாமல் செய்திச் சாதனங்கள் மூலமாக மடடும் தெரிந்து கொண்டு, தெரிந்த கொண்ட ஆர்வக் கோளாறுகளால் தலைவரைப் போன்றே உங்களைப் போன்றவர்கள் இறங்கிவிடுகிறார்கள், தெரிந்ததைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இவற்றை அறியத் தருகிறேன், நீங்கள் அவரை விட்டு வெளியேறிவிடுவீர்கள் என்ற எண்ணத்தில் அல்ல எடுத்துச் சொல்வது மட்டுமே அல்லாஹ் இட்ட கட்டளை!.

ஆரம்ப காலங்களில் தவ்ஹீதை பரவச் செய்ய பொருளால், அறிவால் இன்னும் பல வழிகளில் பாடுபட்ட பல நல்லவர்களை உங்கள் தலைவர் பகைத்துக் கொண்டு வரலாறு தெரியாத புதியவர்களோடு இணைந்திருக்கிறார்., பழையவர்களோடு இருந்தால்தான் குறை நிறைகளை தெரிந்து தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள முடியும், ஒருவேளை குறைகளே தெரியக்கூடாது என்று எண்ணுகிறாரோ என்னவோ! அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

உங்களின் தலைவருக்கு உங்கள் மூலமாக இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என பல சந்தர்ப்பங்களில் பேச்சுக்களின் மூலமும் எழுத்துக்கள் மூலமும் தெரிவித்திருக்கிறேன். இப்போதும் அதையேத் தெரிவித்துக் கொண்டு மற்றொன்றையும் சேர்த்து சொல்லிக் கொள்கிறேன்.

சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என்ற தலைப்பிலும், மற்றும் உலகம் முழுவதற்கும் பிறை ஒன்றே என்ற இந்த இரு தலைப்புளையும் பற்றி நீங்கள் விரிவாக அலசுவதற்குத் தயாரா? நாம் எப்போதும் தயார்.

இதையெல்லாம் இன்ஷா அல்லாஹ் நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லத் தயார் பல சமயம் இவற்றில் பலவற்றை தபால் மூலமும் உங்களின் தலைவருக்குத் தெரிவித்திருக்கிறேன்.

உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வரவேண்டி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் என்றும் நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்—ஒருவேளை உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வந்துவிட்டால் அவரோடு கைகோர்த்து முந்தைய காலங்களைப் போன்று பணி செய்யவும் காத்திருக்கிறேன்– அல்லாஹ் போதுமானவன்.

அவனே காரியங்களை நம்பி ஒப்படைப்பதற்கு மிகத் தகுதியானவன், மிக்க நல்லவன், யா அல்லாஹ் உள்ளங்களில் உணர்வுகளை அறிந்தவனே! உள்ளங்களை விரல்களுக்கிடையில் வைத்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பவனே! எந்தெந்த உள்ளங்களை ஈடு இணையற்ற உனது தவ்ஹீதைப் படிக்க பரப்ப தேர்ந்தெடுத்தாயோ அந்த உள்ளங்களை ஓரணியில் இணைப்பாயாக! உனது திருப் பொருத்தைத்தை மட்டுமே நாடி உனது பணியினை மேற்கொண்டு உண்மை முஸ்லிமாக வாழ்ந்து உண்மை முஸ்லிமாக மரணித்து முடிவே இல்லா நிரந்தர இன்ப பாக்கியங்கள் நிறைந்த சுவனபதியில் நலலோர்களுடன் இருக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக! ஆமின் ஆமின் யா ரப்பல் ஆலமீன்.

கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

அல்கோபர்

சவுதி அரேபியா

ஏப்ரல் 29, 2008

ஆஹா….ச்சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்துட்டாய்ன்களடா…

Filed under: அதிரை ஃபாருக், இம்தாதி, ததஜ — முஸ்லிம் @ 9:55 பிப
அழைப்பு பணியில் அதிரை (ஜோக்கர்) ஃபாருக்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பிரிவினை வாத கும்பலை சேர்ந்த ஃபாருக் என்பவர் இவர் எதை அழைத்தார் என்று தெறியவில்லை தனது பெருக்கு முன்னால் அழைப்பு பணியில் அதிரை ஃபாருக் என்று போட்டு கொள்கின்றார். பெரும்பாலும் இவரது மின்னஞ்சல்களை ஏதாவது ஒரு பென்னின் பெயரில் தான் ஃபார்வர்ட் செய்து வரும் (கவர்ச்சிக்காக இவர்களின் செட் அப் ஐடி) அதிராம் பட்டினத்தை சேர்ந்த இவர் கடந்த 20-04-2008 அன்று எப்போதும் போல் தனது பெயரிலும், கவாச்சிக்காக கிரியேட் செய்து வைத்துள்ள பென்கள் ஐடிகளிலும் இருந்தும் இவர் அனுப்பிய ஒரு மின்னஞ்சல் நமது பல மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது. (இங்கு கிளிக் செய்து அந்த மின்னஞ்சலை டவுன்லோட் செய்யவும்)

கோவில்களுக்கு செல்லும் இஸ்லாமிய பென்கள் என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த மின்னஞ்சலில் நமது இணையத் தளத்தில் இருந்து திருடப்பட்ட பல தலைவர்கள் மற்றும் மார்க்க அறிஞர்களின் புகைப்படங்களும், சில அமைப்புகளின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன. சரி கோவிலுக்கு செல்லும் இஸ்லாமிய பென்களுக்கும் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பிப்போய் ததஜ வின் ஏவி விடப்பட்ட புதிய “அது” வான் “அழைப்பு பணியில் அதிரை ஃபாருக்கின்” மின்னஞ்சலை வாசித்தபோது அதில் குறிப்பிட பட்டிருந்த சாரம்சம் இதுததான்.

அதாவது அவர் இணைத்திருந்த புகைப்படத்தில் இருந்த அணைத்து தலைவர்களும், மார்கக் அறிஞர்களும், அமைப்புகளும் குராபிகளோடு பைஅத் செய்து கொண்டு ஏகத்துவத்தை பரப்ப தவறிவிட்டர்கள் என்றும் இன்று இஸ்லாமிய பென்கள் கோவில்களுக்கு செல்வதற்கு காரனம் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா, சவுதி அரேபியாவில் அழைப்பாளராக பணிபுறியும் பிரபல மார்க்க அறிஞர் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, மற்றாரு மார்க்க அறிஞர் ஹாமித் பக்ரி, முஸ்லிம் லீக்கை தனது வீட்டு கொல்லையில் கட்டிபோட்டு யுனானி மருந்து கொடுத்து வளர்க்கும் ஹக்கிம் டாக்டர் செய்யது சத்தார், மனித நீதி பாசறை என்ற அமைப்பினர் என தமிழகத்தில் தான் சார்ந்திருக்கும் ததஜ என்ற கலகக் கும்பலை தவிற அணைத்து அமைப்பினரும்தான் என்றும் எழுதியிருந்தார்.

இதில் பெருங்கூத்து என்னவென்றால் தமுமுக வினர் சந்தனக்கூட்டுக்கு நோட்டிஸ் அடித்தார்கள் என்று நடந்து முடிந்து விள்கம் தரப்பட்ட ஒரு பழைய விசயத்தை குறிப்பிட்டிருந்தார். அந்த விசயத்திற்கு தமுமுக வினர் தங்கள் அமைப்பின் சார்பில் நேரடியாக அறிக்கை வெளியிட்டு தெளிவு படுத்திவிட்டார்கள் அதைக்கூட வாசிக்க மறந்து விட்டார் இந்த அதிகம்படித்த அதிராம்பட்டினம் (அழைப்பு பணி??) ஃபாருக்.

கட்டுரையின் முடிவில் ஒரு ஜோக்கடித்திருந்தார் பாருங்கள் அதுதான் தாங்க முடியல, உலகிலேயே ஏகத்துவத்தை எடுத்து சொல்லும் ஒரே அமைப்பு ததஜ தான் என்பது பூல் முடித்திருந்தார் அதைப் படித்துவிட்டு நானும் எனது நன்பர்களும் விழுந்து விழுந்து சிரித்தோம். இறுதியில் இந்த அதிராம்பட்டினம் (அழைப்பு பணி??) ஃபாருக் ஜோக்கர் ஃபாருக் ஆகியதுதான் மிச்சம்.

சரி, இப்ப நான் என்ன சொல்ல வர்ரேன் என்றால், தமுமுக வினரை குறிப்பிட்டிருந்தது போல் தமிழகத்தில் தருதலை ஜமாத் தலைவர் பி.ஜே என்று ஏகத்துவம் ஆரம்பமாகியது என்று சொல்கின்றாரோ அன்றிலிருந்து ஏகத்துவத்தை சொல்லி வரும் தமிழகத்தின் பிரபல மார்க்க அறிஞரும், சவுதி அரேபியாவின் அங்கீகரிக்கப்பட்ட பல இஸ்லாமிய அழைப்பு மையங்களில் பணி புறிந்து தற்ச்சமயம் அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மைத்தில் சேவையாற்றி வருபவருமான மெளலவி. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதியின் புகைப்படத்தையும் போட்டு அவரும் தமிழகத்தில் குராபிகளுடன் அக்ரிமென்ட் செய்து கொண்டு இஸ்லாமிய பென்கள் கோயில்களுக்கு செல்வதற்கு காரனமாகிவிட்டார் என்று எழுதியிருந்தது இந்த ஏவி விடப்பட்ட அதிரை ஜோக்கர் ஃபாருக்.

இவர் குறிப்பிட்டிருந்த மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் நான் வசிக்க கூடிய அல்கோபர் என்ற பகுதியிலேயே தங்கியிருந்து இஸ்லாமிய ஊழியம் செய்்து ஏகத்துவத்தன் பால் மக்களை அழைத்து வருவதால் அவரிடமே நேரில் இது குறித்து கேட்டு விடுவோமே என்று ஏவி விடப்பட்ட அதிரை ஜோக்கர் ஃபாருக்.எழுதியதை ஒரு நகல் எடுத்துக் கொண்டு சென்று மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களை அவரது இல்லத்திற்கு வெளியே சந்தித்து இது பற்றி கூறி விளக்கம் கேட்டோம்.

அதை வாசித்து விட்டு நம்ம ஏவி விடப்பட்ட அதிரை ஜோக்கர் ஃபாருக் போன்ற ததஜ வின் மூலை கழுவி விடப்பட்ட ஜெனமங்களுக்காக வருத்தப்பட்டவர், இது போன்ற எதையும் சொன்னால் நம்பக் கூடிய, கேள்வியே கேட்காமல் பனிபற்றக் கூடிய சிலர் இருப்பதால்தான் இந்த மனிதர் பி.ஜே எதையும் அடித்து விடுகின்றார் இந்த மூலை கழுவி விடப்பட்ட கூட்டங்களும் பி.ஜே சொல்வதெல்லாம் மார்க்கம் என்று நம்பி விடுகின்றது இது போன்றவாக்ளுக்கு பி.ஜே வைப்பற்றின பல உண்மைகள் தெறிய வாய்ப்பில்லை எது தற்போது உள்ளதோ அதை மட்டுமே பார்க்க்கூடியவர்களாக இவர்கள் உள்ளார்கள் தற்போது பி.ஜே சொல்பவற்றிற்கும் கடந்த கால நிகழ்வுகளையும் இவாக்ள் என்றும் ஒப்பிட்டு நோக்கியதில்லை. இவர்கள் திருத்தப்பட வேண்டும். இன்று எங்களிடம் இருந்து பி.ஜே தனியாக பிரிந்து சென்று விட்டாலும் பி.ஜே யோடு ஆரம்ப காலத்தில் இருந்து ஒன்றாக இருந்தவன் என்ற நிலையில் இவர்களின் அறிவிற்காக பி.ஜே வைப் பற்றிய சில தகவல்களை (ரகசியங்களை???) நான் இவர்களிடம் எடுத்து வைக்கலாம் என்றுள்ளேன் நான் அவற்றை கட்டுரையாகவே எழுதித் தருகின்றேன் வெளியிட்டு விடுங்கள் என்று கூறினார்.

அதிரை ஃபாருக் என்பவர் எழுதியுள்ள அனைத்துமே அவரது தலைவர் பி.ஜே விற்கு முற்றாக பொருந்தி போகக்கூடியவை என்பது எனது பதில் கட்டுரையை படித்த பிறகு இவர்கள் விளங்கி கொள்வார்கள் என்று கூறினார்.

விரைவில் எதிர் நோக்குங்கள்…சில நாட்களிலேயே …..பி.ஜே மற்றும் ததஜ வின் முகத்திரையை கிழிக்கும், உண்மைகளை அம்பலப்படுத்தும், ததஜ வின் மூலை மழுங்கிய கூட்டத்தினருக்காக மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களின் அறிவுரைகள் அடங்கிய பதில்.

விரைவில் எதிர் நோக்குங்கள்…உண்மைகள் என்றும் உரங்குவதில்லை….
பொய்யர்களின் கூற்றுக்களை தவிடு பொடியாக்க வருகின்றது…
மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவாக்ளின் அறிவுரைகள்…

இதன் பின்னரும் சிந்தனை உள்ள சகோதரர்கள் இப்பரிவினைவாதக் கும்பலோடு நீடிப்பரா???

கைப்புள்ள கமென்ட்:
ஆஹா….ச்சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்துட்டாய்ன்களடா…மாநாட்டு சமயத்துல மறுபடியும்ளடா
கெளம்பிட்டாய்ன்க….

ஏப்ரல் 28, 2008

T.N.T.J (ததஜ) வை விமர்சிப்பது ஏன்? – மெளலவி.ஜமால் முஹம்மத் மதனி

Filed under: ததஜ, jamal, TNTJ — முஸ்லிம் @ 11:09 முப

“T.N.T.J (ததஜ) வை விமர்சிப்பது ஏன்?”

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Al-Sheikh. Jamal Mohamed Madhani..

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்
.

தமிழ் முஸ்லிம் மீடியா

பிப்ரவரி 28, 2008

விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு, TNTJ விற்கு கோர்ட் அபராதம், கண்டனம்

Filed under: ததஜ, TNTJ, TNTJ Fraud — முஸ்லிம் @ 7:59 முப
சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனம் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை கடைபிடிக்ககோரி வழக்கு ஐகோர்ட்டு தள்ளுபடி

சென்னை, பிப்.28.-

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை கடை பிடிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ஆசிரியர்கள் நியமனம்

தமிழ்நாடு தவுகித் ஜமாத் மாநில செயலாளர் சையது இக்பால், வக்கீல் ஏ.சிராஜுதீன் மூலம் பொதுநலன் கருதி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தலா 3Ñ சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக, கடந்த செப்டம்பர் மாதம் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 35 காலி இடங்களில் ஆசிரியர்களை நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டது.

இதில், ஒரு இடம் முஸ்லிம¢களுக்கும், இன்னொரு இடம் கிறிஸ்தவர்களுக்கும் தரவேண்டும். கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி முதல் இதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அக்டோபர் மாதம் 9-ந் தேதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி ஆகும்.

சிறுபான்மையினருக்குரிய சட்டத்தை பின்பற்ற, சென்னை பல்கலைக்கழகம் தவறிவிட்டது. முஸ்லிம்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கவில்லை.
இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் 35 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 10, 11-ந் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு பட்டியல் சிண்டிகேட்டில் உள்ளது. சிறுபான்மையினருக்குரிய இடஒதுக்கீட்டை பின்பற்றாதது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதம் முடிவடையாததால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிண்டிகேட் கூட்டம் எப்போது வேண்டுமானாலும் நடத்தி பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கலாம். சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை பின்பற்றாமல், ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இந்த இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் காலி இடங்களை நிரப்பக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஐகோர்ட்டு தள்ளுபடி

இந்த வழக்கை நீதிபதிகள் முகோபாத்தியா, எம்.வேணுகோபால் ஆகியோர் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள். தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை கடைபிடித்து பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. பணியிடங்கள் தொடர்பாக பொதுநல வழக்கு தொடர முடியாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், இந்த வழக்கு விளம்பரத்துக்காக போடப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் சையது இக்பால் வழக்கு செலவாக ரூ.10 ஆயிரத்தை வழங்க வேண்டும். இந்த பணத்தை தமிழ்நாடு சட்டப்பணி ஆணையத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினத்தந்தி

நவம்பர் 20, 2007

ஜகாத் ஓர் ஆய்வு – பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-03)

Filed under: குடந்தை சயீத், ஜகாத், ததஜ, பி.ஜே — முஸ்லிம் @ 9:05 பிப
ஜகாத் ஓர் ஆய்வு – பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-02)
குடந்தை சயீத் – தாயிஃப்-சவுதி அரேபியா

இதன் முதல் பகுதி (PART-01) வாசிப்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்
இதன் முதல் பகுதி (PART-02) வாசிப்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்
ஏக இறைவனின் திருப்பெயரால்…

காலக்கெடு இருக்கிறது

இதை யாவரும் மிக எளிதாக விளங்கிக்கொள்ளலாம். ஒரு காரியத்தை செய்து கொண்டே இருங்கள் என்று சொன்னால், அங்கு கால இடைவெளி இல்லை. அந்த காரியத்தையே திரும்பவும் செய்யுங்கள் என்றால், ஒரு இடைவெளிவிட்டு திரும்பவும் செய்யுங்கள் என்று அர்த்தம். அந்த இடைவெளி ஒரு நாளாக இருக்கலாம், ஒரு மாதமாக இருக்கலாம் அல்லது ஒரு வருடமாக இருக்கலாம். ஒரு காலஇடைவெளியில் அதைச்செய்ய வேண்டும் என்பது தெளிவு. காலஇடைவெளி இல்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஏன் என்றால் திரும்பவும் செய்யுங்கள் என்று சொன்னாலே ஒரு
இடைவெளிக்கு பிறகு செய்யுங்கள் என்றுதான் அர்த்தம். தொடர்ந்து செய்யுங்கள் என்றால் இடைவெளி கிடையாது தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டியது தான்.

கொடுத்த பொருளுக்கும் திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை புகாரியில் இடம் பெற்ற பலமான நபி மொழி மூலம் முன்பே நிரூபிக்கப்பட்டுள்ளது. கொடுத்த பொருளுக்கும் திரும்பவும் கொடுக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு இடைவெளி (காலக்கெடு) உண்டு. எத்தனை ஆடுகள் இருந்தால், எத்தனை ஆடுகள் ஜகாத் கொடுக்க வேண்டும், என்பதை விளக்குவது தான் அந்த நபி மொழியின் நோக்கம். கால இடைவெளி நிச்சியமாக உண்டு என்பதை அது நிரூபிக்கிறது.

கால இடைவெளியை அறிவிக்கக்கூடிய வேறு நபி மொழிகள் இருக்கின்றன. அதைப் பின்னால் பார்ப்போம். இங்கு நாம் சொல்ல வருகின்ற விஷயம், கொடுத்த பொருளுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை நபி மொழி சொல்லிக் கொண்டிருக்க, மாற்றமாக கொடுத்த பொருளுக்கு தேவையில்லை என்று பி.ஜே. சொல்லிக்கொண்டு இருக்கிறார். காலக்கெடு இருக்கிறது என்று நபி மொழி சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு மாற்றமாக காலக்கெடு இல்லை என்று பி.ஜே. சொல்லிக் கொண்டிருக்கிறார். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் எந்த ஆதாரமும் தான் கொடுக்க வேண்டியதில்லை என்று சொல்லியே இவைகளைச் சொல்கிறார். (மதுரை விவாத சிடியில் இதைப் பார்க்கலாம்). அதையும் ஏற்றுக்கொள்ள பலர் இருக்கின்றனர். ஆதாரத்தின் அடிப்படையில் சொல்வதை உதாசீனப்படுத்துகின்றனர்.

சுருக்கமாக: கொடுத்த பொருளுக்கு திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு காலக்கெடு உண்டு. அதைப் போலவே கால இடைவெளியில் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றாலே கொடுத்த பொருளுக்கும் சேர்த்துதான் கொடுக்க வேண்டும். இதற்கான விளக்கத்தைத்தான் மேலே சில ஆதாரங்களுடன் பார்த்தோம்.

மேலதிக நடைமுறை உதாரணம்.

மேலதிகமாக சில நடைமுறை உதாரணங்களைக் கொண்டும் இவைகளைப் புரியலாம். ஒரு அரசாங்கம் கீழ் கண்ட ஒரு வரியை கட்டச்சொல்லி உத்தரவு இடுகிறது. அதாவது ஒரு இலட்சத்திற்கு மேல் பணம் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் அதில் இருந்து 2.5% வரியாகக் கட்ட வேண்டும். ஒரு இலட்சத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. ஒருவர் பத்து இலட்சம் வைத்திருக்கின்றார். இந்த வருடம் 2.5ம% கட்டிவிட்டார். அடுத்த வருடம் 12 இலட்சம் இருக்கிறது. இப்போது 12 இலட்சத்துக்கு 2.5ம% கட்ட வேண்டுமா? அல்லது 2 இலட்சத்துக்கு 2.5% கட்ட வேண்டுமா? அந்த சட்டத்தின் படி 12 இலட்சத்திற்கு 2.5ம% கட்ட வேண்டும் என்றுதான் யாரும் கூறுவார்கள். அவர் இரண்டு இலட்சத்திற்கு மட்டும் வரி கட்டினால் அது ஏற்றுக்கொள்ளப்படாது.

அவர் இரண்டு இலட்சத்திற்கு வரி கட்டினால் போதும் என்றால், அது சொல்லப்பட்டிருக்க வேண்டும். போன வருடம் கட்டிய பணத்திற்கு இந்த வருடம் கட்டத் தேவையில்லை என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் சொல்லப்படாவிட்டால் தானாகவே கையில் உள்ள அனைத்துக்கும் கட்ட வேண்டும் என்பது சொல்லாமலே புரியக்கூடியதாக இருக்கிறது. வரி கட்டிய பணத்திற்கே திரும்பத் திரும்ப கட்டு என்று சொல்லப்பட வேண்டியதில்லை, அப்படி யாரும் சொல்வதும் இல்லை, இதுதான் நடை முறை.

ஜகாத் விஷயத்திலும் அது தான் சட்டம்

ஜகாத் விஷயத்தில் மட்டும் வருடா வருடம் 2.5 சதம் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு வேறு அர்த்தமாம். வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்று நிரூபித்தால் மட்டும் போதாது, கொடுத்ததற்கே திரும்பத் திரும்ப கொடு என்று நபி மொழி வேண்டும் என்று பி.ஜே. கேட்கின்றார். அதையே இலட்சக்கணக்கானோரின் உதடுகளும் திருப்பி சொல்கின்றன.

ஆக அவர் கேட்பது எல்லாம் ‘இல்லாத ஊருக்கு வழிதான்’. நாம் திருப்பிக் கேட்கின்றோம் கொடுத்ததை விட்டுவிட்டு புதிதாய் வந்ததற்கு மட்டும் கொடு என்று சொல்லப்பட்டிருக்கின்றதா? அதற்கு தான் ஆதாரம் தர வேண்டும். இல்லை என்றால் கொடுத்ததற்கும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்பது தான் அர்த்தம். பி.ஜே. மாற்றி சொல்வதற்கு காரணம் அவர் போட்ட அடிப்படை தான். பொருளுக்கு தூய்மை என்று வைத்து அடித்தளம் போட்டாகிவிட்டது. இப்போது அடித்தளத்தை மாற்ற முடியாது என்று கட்டிடத்தை அடித்தளத்திற்கு தகுந்தாற் போல் கட்டப் பார்க்கிறார். கொடுத்த பொருள்தான் தூய்மையாகிவிட்டதல்லவா? அதற்கே திரும்பத் திரும்ப கொடுக்க வேண்டுமா? இதுதான் அவரின் பிரச்சினை.

ஆனால் பொருளுக்குத் தூய்மை ஜகாத் என்பது ஒரு வாதத்திற்கு தவறாகப் போனாலும் நான் சொன்னது சரி தான் என்று கூறிக்கொள்கிறார். அதை முக்கியமான ஆதராமாக வைக்கவில்லை என்கின்றார். அதையும் பலர் ஆமோதிக்கின்றனர்.

காலக்கெடு (இடைவெளி) என்ன?

காலஇடைவெளியில் தான் ஜகாத் சட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஜகாத் சட்டத்தில் காலஇடைவெளியும் ஒரு அம்சமாக இருக்கிறது. அதை விட்டுவிட்டு செயல்படுத்தவே முடியாது.

நாம், கால இடைவெளி ஒன்று நிச்சயமாக உண்டு என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்த பின் காலக்கெடு பற்றி அறிவிக்கின்ற ஏராளமான ஹதீஸ்களைப் பார்த்து அவைகளில் பலமான நபி மொழிகளை சுட்டிக்காட்டுகிறோம். மௌலவி பி.ஜே. அவர்களோ காலக்கெடு இருக்கிறது என்பதற்கு ஆதாரம் இல்லை என்கின்றார். அது மட்டுமல்ல அதனால் தான் ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்ற முடிவை எடுத்தேன் என்கின்றார்.

ஆகவே வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு சரியான நபி மொழி இருக்கின்றது என்று அவர் ஏற்றுக்கொண்டால், அவரது முடிவு தவறு என்று அவரே சொன்னதாக ஆகிவிடும், இந்த நிலையில் தான் அவர் இருந்து கொண்டிருக்கிறார்.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு நபி மொழி உட்பட பல ஆதாரங்கள் தரப்படுகின்றன. சகோதரர் பி.ஜே. அவர்கள் இது பலகீனம், அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று எல்லாவற்றையும் தட்டி விடுகின்றார்.

நாம் கேட்பது இதுதான், ஒரு காலக்கெடு இருக்கிறது என்று சரியான நபி மொழி சொல்லிக் கொண்டிருக்கிறது, என்பதை நிரூபித்த பின் அந்த காலக்கெடு ஒரு வருடம் என்பதற்கான ஆதாரங்களைக் கண்டு அதை ஏற்றுக்கொள்கிறோம்.

காலக்கெடு இருக்கின்றது என்பது உறுதிபடுத்தப்பட்ட ஒன்று. வருடா வருடம் கொடுக்க ஆதாரம் இல்லை என்றால், அந்த காலக்கெடு என்ன? என்று திருப்பிக் கேட்கின்றோம். ஆறு மாதமா? இரண்டு வருடமா? இரண்டு மாதமா? அதற்கு ஏதும் ஆதாரம் இருந்தால் கொண்டு வரட்டும். இல்லை என்றால் இந்த விஷயத்தில் வீண் குழப்பங்கள் செய்யாமல் இருக்கட்டும்.

திருக்குர்ஆனின் 6:141 வசனத்திற்கே, உண்மைக்கு மாற்றமான விளக்கம் கொடுக்கும் போது, சரியான நபி மொழிகளை ஏதேனும் காரணம் காட்டி தட்டி விடுவது அதைவிட இலகுவான காரியம்தான்.

வருடா வருடம் கொடுக்க வேண்டும்

வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பதற்கு பல நபி மொழிகள் இருக்கின்றன. இதில் பலமானதும், பலகீனமானதும் இருக்கின்றன. இவை அணைத்துமே வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதையே அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆறு மாதம் என்றோ, இரண்டு வருடம் என்றோ அறிவிக்கும் ஒரு நபி மொழி கூட இல்லை. நபித் தோழர்களின் செயல்பாடுகளும் கருத்து வேறுபாடில்லாமல் இதையே உறுதி செய்கின்றன.

ஸஹீஹ்கான நபி மொழியாக அபு-தாவூத்தில் வரக்கூடிய ஒரு நபி மொழியை அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்:

மூன்று விஷயங்களை செய்யும் ஒருவர் ஈமானின் ருசியை சுவைத்து விட்டார்

(1) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை மட்டுமே வணங்குவது. (2) தனது செல்வத்திற்கான ஜகாத்தை ஒவ்வொரு வருடமும் மன விருப்பத்துடன் வழங்கி வருவது……………. என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் முஆவியா அல் காழிரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இந்த நபி மொழியையும் பல காரணங்களைக் கூறி பலவீனம் என்று ஒதுக்குகிறார். எல்லாவற்றையும் எழுதினால் இன்னும் நீண்டு கொண்டே போகும் என்ற காரணத்தினால் ஒரு காரணத்தை மட்டும் விளங்குவோம்:

இதை அறிவிக்கக் கூடியவர் நபித் தோழர் இல்லை என்கின்றார். இதைக் கூறிவிட்டு அவரே சொல்கிறார், இருந்தாலும் சில நூற்களில் இவரை நபித் தோழர் என்று கூறி இருப்பது ஏன் என்று புரியவில்லை என்று.

அறிவிப்பாளர்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்ட இவர் மேற்கோள் காட்டும் எல்லா நூல்களிலும் இவரை நபித் தோழர் என்றே கூறப்பட்டுள்ளது.

(01) தக்ரீப் – 226 (02) தஹ்தீபுத் தஹ்தீப் – 2ஃ670 (03) அல் இஸாபா – 2ஃ371 இந்த மூன்று நூல்களும் நபித் தோழருக்கான இலக்கணம் கூறிய இப்னு ஹஜர் அவர்களுக்குரியதாகும். (04) தாரிக்குல் கபீர் – 4ஃ345 இது இமாம் புஹாரிக்குரியது. (05) அல் இஹ்திஆப் – 3ஃ117 (06) அல் ஜரஹ் வத்தஃதீல் – 5ஃ185 (07) தஹ்தீபுல் கமால் – 5ஃ645. (08) ஃதிகாத் – 1ஃ365. (09) தபகாத்துல் குப்ரா – 7ஃ421. (10) உசுல் ஃகாபா – 3ஃ392. (11) அவ்னுல் மஃபூத் 2ஃ324. (12) அல் காஷpஃப் – 1ஃ599. (13) முஃஜமுஸ் ஸஹாபா – 2ஃ37. (14) மஃரிபத்துஸ் ஸஹாபா – 4ஃ178. (15) நைலுல் அவ்தார் – 4ஃ152. (16) தஜ்ரீத் அஸ்மாவுஸ் ஸஹாபா – 1ஃ335.

இவர் நபித் தோழர் இல்லை என்று உலகில் உள்ள எந்த ஒரு நூலிலும் கூறப்படவில்லை. ஹதீஸ் கலை அறிஞர்கள், அறிவிப்பாளர்களை ஆய்வு செய்யும் அறிஞர்கள் யாருமே இவரை நபித் தோழர் இல்லை என்று கூறவில்லை.

அது மட்டுமல்ல நபித் தோழர் என்பதில் சந்தேகம் இருக்கிறது என்று கூட கூறவில்லை. நாம் இத்தனை நூட்களின் பட்டியலைக் காட்டி அவர் நபித்தோழர் என்று நிரூபிக்கின்றோம். பி.ஜே. ஏதாவது ஒரு நூலில் இருந்தாவது, அவர் நபித் தோழர் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். இவராக ஒர காரணத்தைச் சொல்லி அதனால் அவர் நபித் தோழர் இல்லை என்கின்றார். இதைப் போன்று சில காரணங்களைச் சொல்லி அந்த நபிமொழியை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றார்.

ஹதீஸ் கலையின் பொது விதி

இந்த நேரத்தில் ஹதீஸ் கலையின் பொதுவான ஒரு விதியையும் இங்கே குறிப்பிட வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. மேற்கண்ட ஹதீஸை நாம் முன்பு பார்த்த (நபித் தோழர் இல்லை என்ற) காரணத்தைச் சொல்லி எந்த ஆதாரமும் இல்லாமல், அவர் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னாலும், ஹதீஸ் கலையின் பொதுவான ஒரு விதி அந்த ஹதீஸ் சரிதான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு நபி மொழியை சரி இல்லை என்று சொல்வதற்கு எந்த ஹதீஸ் கலையின் விதியை பயன்படுத்துகிறோமோ, அதே ஹதீஸ் கலையின் பொதுவிதியைத் தான் நாம் பார்க்க இருக்கின்றோம்.

அந்த விதியாவது:
‘அறிஞர் பெருமக்கள் அணைவரும் ஒரு ஹதீஸை செயல்படுத்தி வர வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தால் அந்த ஹதீஸை ஏற்று செயல்படுத்துவது கட்டாயக் கடமையாகும்’ இக்கலையின் சிறந்த அறிஞர்கள் பலரும் இதனைத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். (அந்நுகத் – 171)

‘ஒரு நபி மொழியை மக்கள் அணைவரும் ஒப்புக்கொண்டுவிட்டால் அதற்கு சரியான அறிவிப்பாளர் தொடர் இல்லை என்றாலும் அது ஆதாரப்பூர்வமானதுதான் என்று தீர்மானிக்கப்படும்’ (தத்ரீப் – 29)

இவ்வாறு ஒப்புக்கொள்ளப்படுவதற்கு கீழ்கண்ட நிபந்தனைகளும் உண்டு.

* அந்த நபி மொழியின் அறிவிப்பாளர் மீது பொய் உரைப்பவர், இட்டுக்கட்டுபவர், என்ற குற்றச்சாட்டு இருக்கக் கூடாது. ஆனால் நினைவாற்றல் குன்றியவர் என்ற குற்றச்சாட்டு இருக்கலாம்.

* மேலும் குர்ஆன், மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழியுடன் நேரடியாக மோதக்கூடியதாக இருக்கக் கூடாது.

* முக்கியமாக இக்கலையின் அறிஞர் பெருமக்கள் யாவரும் மறுக்காது அந்தக்கருத்தை செயல்படுத்தி வந்திருக்க வேண்டும்.

இந்த நிபந்தனையின் படி ஒரு ஹதீஸ் இருந்தால் அது ஆதாரப்பூர்வமானதுதான் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஹதீஸ் கலையின் பொது விதியாகும்.

நாம் முன்பு பார்த்த அபு-தாவூத்தில் பதிவாகியுள்ள வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும், என்ற நபி மொழி ஆதாரப்பூர்வமானதுதான். அதைப் பி.ஜே. அவர்கள் தான், ஏற்கப்படாத காரணங்களைக் கூறி சரியானது இல்லை என்கின்றார். அவர் சொல்கின்ற காரணங்களில் ஒன்றை ஏற்கனவே பார்த்தோம்.

அபு-தாவூத்தில் பதிவாகியுள்ள அதே ஹதீஸை வேறொரு அறிவிப்பாளராகிய அப்துல் ஹமீத் அபுத்தகி என்பவரும் அறிவிக்கிறார். இது தப்ரானி, முஃஜமுஸ் ஸஹாபா ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது. இதுவும் ஹதீஸ் கலையின் விதியின் படி சரியான ஹதீஸ் ஆகும்.

இந்த அறிவிப்பாளர், பொய் உரைப்பவர், இட்டுக்கட்டுபவர் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதவர்.

* இந்த ஹதீஸ் குர்ஆனுக்கோ நபி மொழிக்கோ எதிரானது அல்ல. மாறாக, மற்ற நபி மொழிகளோடும், நபித் தோழர்களின் நடவடிக்கையோடும் ஒத்துப் போகக்கூடியது.

* இந்த ஹதீஸ் நபித் தோழர்கள் காலத்தில் இருந்து இன்று வரை எல்லா அறிஞர்களாலும் ஏற்று செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

மேற்கண்ட மூன்று நிபந்தனைகள் தான் அந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமானதுதான் என்று ஹதீஸ் கலையின் விதிப்படி நிரூபிக்கிறது. அது மட்டுமல்ல அபு-தாவூத்தில் அம்ர் பின் ஹாரிஸ் என்பவர் வழியாக பதிவாகியுள்ள இதே ஹதீஸையும் ஆதாரப்பூர்வமானது என்று ஊர்ஜீதப்படுத்துகிறது.

ஆதாரத்தின் அடிப்படையில்

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை எவ்வித சந்தேகங்களுக்கும் இடமில்லாமல், ஆதாரங்களுடன் கூறியுள்ளோம். அது மட்டுமல்ல வருடா வருடம் கொடுக்கும் போது, ‘கொடுத்த பொருள்’, ‘கொடுக்காத பொருள்’ என்றெல்லாம் சொல்ல முடியாது. கொடுத்த பொருள் செலவாகியிருக்கலாம். புதிய பொருள் வந்திருக்கலாம். அல்லது கொடுத்த பொருள் கையில் இருக்கவும் செய்யலாம். கையில் இருக்கின்ற மொத்த பொருட்களையும் கணக்கிட்டு 2.5 சதம் ஜகாத் கொடுக்க வேண்டும். இது தான் இஸ்லாமிய நடை முறை. உலகம் முழுவதும், எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படிப் பின் பற்றவில்லை, என்பதற்கான ஆதாரங்களையும் விளக்கங்களையும் தந்துள்ளோம். இதற்கு மாற்றமாக சொல்பவர்களிடம் தான்
ஆதாரம் இல்லை. எந்த ஒரு சரியான ஆதாரத்தைக் காட்டினாலும், ‘அந்த அறிஞர் தவறுக்கு அப்பாற்பட்டவர் இல்லை, அவர் தவறு செய்துவிட்டார்’ என்று சொல்லி, இவர் தனது சொந்த விளக்கத்தை தான் ஆதாரமாக வைக்கின்றார். அவைகள்தான் தவறாக இருக்கின்றன. இவைகளை நாம் ஆதாரத்துடன், சுட்டிக்காட்டியுள்ளோம். ஆகவே அவர் சொல்வது இங்கு அவருக்கே பொருத்தமாக இருக்கிறது. இந்த ஜகாத் விஷயத்தில் பி.ஜே. தவறாக சொல்கின்றார். தவறுக்கு அப்பாற்பட்டவர் அல்ல
பி.ஜே.

மார்க்கத்தில் சொல்லாத புதிய சட்டத்தின் பயங்கர விளைவுகள்

* பி.ஜே. சொல்வது மார்க்கத்தில் உள்ளதுதான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது புதிதாக தினிக்கப்பட்டது. ஆகவே பித்அத்தான விஷயம். பித்அத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றவர், இந்த விஷயத்தில் பித்அத்தை செய்யச்சொல்லி பிரச்சாரம் செய்கின்றார். பித்அத்தான விஷயம் ஒவ்வொன்றும் வழிகேடு, ஒவ்வொரு வழி கேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

* இவரது சட்டம், மக்களுக்கு கூடுதலான சுமை. செயல்படுத்தவே சாத்தியம் இல்லாத ஒரு சட்டம். ஜகாத் கடமையான ஒருவன், அவனுக்கு புதிதாய் வருகின்ற ஒவ்வொரு பொருளுக்கும், (ஒரு பைசாவாக இருந்தாலும்) உடனே ஜகாத் கொடுத்துவிட வேண்டும். கொடுக்காமல் செலவு செய்ய முடியாது. அப்படிச்செய்தால், அந்த பொருளுக்கு ஜகாத் கொடுக்காத குற்றவாளி. அந்த பொருட்கள் எல்லாம் உருக்கப்பட்டு மறுமையில் சூடு போடப்படுவான். உதாரணமாக ஒரு பத்து ரூபாய் பணம் வருகின்றது, உடனே அதற்கு ஜகாத் கொடுத்துவிட வேண்டும். அடுத்த நிமிடமே இன்னொரு ஐந்து ரூபாய் வந்தாலும் உடனே கொடுக்க வேண்டும். இப்படியாக வாழ்நாள் முழுவதும் வருகின்ற ஒவ்வொரு பைசாவுக்கும் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

* அல்லாஹ் (ஸுப்) சொன்ன சட்டம் வெகு எளிமையானது. அதன்படி ஜகாத் கடமையான ஒருவன் இந்த வருடம் ஜகாத் கொடுக்கின்றான். பின்பு எவ்வளவு சம்பாதித்தாலும் அவைகளை எல்லாம் ஜகாத் கொடுக்காமலே செலவு செய்து கொள்ளலாம். செலவு போக மிச்சம் உள்ளதை சேமிக்கலாம். இவைகளுக்கெல்லாம் ஜகாத் இல்லை. அடுத்த வருடம் ஜகாத் கொடுக்கும் நேரம் வரும் பொழுது, அவன் செலவு போக அதிகப்படியாக சேமித்து வைத்ததிலிருந்து 2.5 சதம் கொடுக்க வேண்டும். அதாவது அவன் ஜகாத் கொடுக்கின்ற நேரத்திலே, கையிலே எவ்வளவு உள்ளதோ அவைகளுக்கு 2.5 சதம் ஜகாத். இடையில் வருகின்ற பொருட்களை அவன்
விரும்பியபடி செலவு செய்து கொள்ளலாம்.

* ஆனால் மார்க்கத்தில் இல்லாத, பி.ஜே. அவர்களின் சட்டத்தை செயல்படுத்தினால் அவன் குற்றவாளியாகிறான். அந்த சட்டம் சரியானது என்று வைத்துக் கொண்டாலும் குற்றவாளியாகிவிடுவான். ஏன் என்றால் ஜகாத் கடமையான ஒருவன் வாழ் நாள் முழுவதும் சம்பாதிக்கின்ற ஒவ்வொரு பைசாவுக்கும் ஜகாத் கொடுத்தே ஆக வேண்டும். இதை செயல் படுத்த முடியாமல் மறுபடியும் குற்றவாளியாகிறான். ஆக பி.ஜே.யின் சட்டத்தை செயல்படுத்தினால், எப்படியும் அவனக்கு அல்லாஹ்வின் தண்டனை உண்டு என்பதிலே எவ்வித சந்தேகமும் இல்லை.

* பி.ஜே. யின் கருத்துப்படி, ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத், ஆனால் ஒவ்வொரு பொருளுக்கும் அப்படி ஒரு தடவை கொடுத்தே ஆக வேண்டும் என்பதை விளக்கமாகக் கண்டோம். ஆனால் பி.ஜே.யோ, ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத், ஆனால் கொடுத்ததிற்கே திரும்பத் திரும்ப கொடுக்கச் சொல்கின்றார்கள், என்று சொல்லி அவர் சொல்வது எளிமையாக இருப்பது போல் பிரச்சாரம் செய்கிறார். மாற்றுக் கருத்துப்படி ஜகாத் கொடுத்தால் பிச்சைக்காரனாகி விடுவார்கள் என்றெல்லாம் சொன்னார். ஆனால் இவர் சொல்கின்றபடி ஜகாத் கொடுத்தால்தான், ஒருவன் அதிகப்படியான பொருளை செலவிட வேண்டி வரும். ஏன் என்றால் புதிதாய் வரும் அனைத்து பொருட்களுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும.

* ஜகாத் கொடுத்த பொருளை அப்படியே வைத்துக் கொண்டு, அதற்கு திரும்பவும கொடுக்க வேண்டும் என்ற யாரும் சொல்லவில்லை. அடுத்த வருடம் திரும்பவும் கொடுக்கின்ற நேரம் வருகின்ற போது, இவர் செலவு எல்லாம் போக அந்த பொருள் கையில் மிச்சம் இருந்தால், அதில் இருந்து 2.5 சதம் கொடுக்க வேண்டும். அந்த பொருளை செலவு செய்து இருந்தால் அதற்கு ஜகாத் கிடையாது. இதை நடை முறை உதாரணத்துடன் முன்பே கண்டோம்.

முடிவுரை

இறுதியில் மறுபடியும் தமிழ் முஸ்லீம்களுக்கு நாம் வைக்கும் அன்பான வேண்டுகோள். எதையும் ஆதாரத்தை வைத்து முடிவெடுங்கள்.

ஜகாத் விஷயத்திலே பல நிலைபாடுகளிலே, பி.ஜே. இருந்து வருகிறார் என்பதை நாம் ஆதாரத்துடன் தந்துள்ளோம். சுருக்கமாக மறுபடியும் கீழே
தரப்பட்டுள்ளது.

* முதலிலே சில ஆதாரங்களை கொடுத்தது.

* அது தவறானதும், அதே கருத்தில் வேறு ஹதீஸைத் தந்தது.

* பின்பு அதையும் விட்டுவிட்டு, வேறு ஆதாரம் இருக்கிறது என்றது.

* ஆதாரம் என்று சொல்லிவிட்டு ‘கொடு’ என்ற பொதுவான கட்டளையை காண்பித்தது.

* ஆதாரம் கொடுக்க அவசியம் இல்லை என்று தற்சமயம் சொல்வது.

மேற்கண்ட இந்த நிலைப்பாடுகளை ஒருவர் கவனித்தாலே, அவரது கருத்து சரியா? தவறா? என்பது தெளிவாக விளங்கும்.

இப்பொழுது, ஆதாரம் கொடுக்க மாட்டேன், ஆனால் நான் சொன்னதுதான் சரி என்று சொல்கின்றார். அதுவும் முக்கிய கடமையான ஜகாத் விஷயத்திலே.

விவாதம் என்று அழைத்து, ஆனால் அங்கு என்ன நடைபெறுகிறது என்றால், தாம் சொல்வது சரி என்று மக்களுக்கு காட்டும் நிகழ்ச்சிதான் நடைபெறுகிறது. இதற்கு ஆதாரமாக மதுரையிலே நடந்த விவாதத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி, ஆதாரத்துடன் தான் சொல்கிறோம். தான் கூறுவதுதான் சரி என்று காண்பிக்க, குர்ஆனின் வசனத்தையே (6:141) மறுக்கும் நிலைக்கு போய் விட்டார், சகோதரர் பி.ஜே.

இவ்வளவுக்கு பின்பும், விவாதத்தின் மூலம்தான் உண்மையை கண்டறிய முடியும் என்று ஒருவர் நினைத்தால், அவர்கள் அதற்கு ஏற்பாடு செய்யட்டும். நாம் தயாராக இருக்கின்றோம். ஏற்கனவே அவரோடு இருக்கின்ற மௌலவி பக்கீர் முஹம்மது அல்தாஃபி உடன், சிறிய அளவிலே ஒரு விவாதம் நடத்தி உள்ளோம். நாம் பின் வாங்க மாட்டோம் என்று இதன் மூலம் மறுபடியும் உறுதி கூறுகின்றோம்.

அடுத்தது இதைவிட, பொதுவாக யாருக்கும் விளங்கக்கூடிய ஒரு முக்கியமான விஷயத்தை பார்க்க இருக்கின்றோம் இன்ஷh அல்லாஹ்.

குர்ஆனோடு, பலமான நபி மொழி மோதுமா? என்பதுதான் அது. ஜகாத் விஷயத்தைவிட அது இன்னும் எளிதாக மக்களுக்கு புரியும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நவம்பர் 19, 2007

ஜகாத் ஓர் ஆய்வு – பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-02)

Filed under: குடந்தை சயீத், ஜகாத், ததஜ, பி.ஜே — முஸ்லிம் @ 7:39 பிப
ஜகாத் ஓர் ஆய்வு – பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-02)
குடந்தை சயீத் – தாயிஃப்-சவுதி அரேபியா

இதன் முதல் பகுதி (PART-01) வாசிப்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்
ஏக இறைவனின் திருப்பெயரால்…

ஜகாத்துடன் இணைப்பு

எப்படி இந்த கான்செப்ட் ஐ ஜகாத்துடன் இணைக்கின்றார் என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்போம். அவரது கான்செப்ட் சரியா? தவறா? என்ற விஷயத்திற்கே நாம் போகவில்லை.அது சரி என்று வைத்துக்கொண்டே பார்ப்போம்.

ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்பவர்கள் ஆதாரம் தரவேண்டுமாம். வேண்டாம் என்பவர்கள் ஆதாரத்தை மறுக்கக்கூடியவர்களாக இருப்பார்களாம். ஜகாத் கொடுக்க வேண்டாம் என்று ஒரு சாராரும், கொடுக்க வேண்டும் என்று இன்னொரு சாராரும் சொன்னால், அங்கு தான் பி.ஜே.யின் விளக்கப்படி, வேண்டாம் என்பவர்கள் ஆதாரம் கேட்பவர்கள். கொடுக்க வேண்டும் என்பவர்கள் ஆதாரம் தருபவர்கள். ஆனால் இங்கு இரு சாராருமே ஜகாத் கொடுக்க வேண்டும் என்று சொல்பவர்கள். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி என்றால் பி.ஜே.யின் கான்செப்ட் இங்கு செயல்படாது. அவரவர்கள் சொல்கின்ற கருத்துக்கு அவரவர்கள் ஆதாரம் தரவேண்டும்.

ஜகாத் கொடுக்க வேண்டும,; அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதை எப்படிக்கொடுக்க வேண்டும் என்பதில்தான் கருத்து வேறுபாடு. ஜகாத் ஒவ்வொரு பொருளுக்கும் தரவேண்டும், ஆனால் ஒரு தடவை கொடுத்தால் போதும். பொருள் வந்தவுடன் கொடுத்துவிட வேண்டும். இது பி.ஜே. சொல்கின்ற முறை.

மேற்கண்ட பி.ஜே. சொன்ன முறையில் ஜகாத், கொடுக்க வேண்டும் என்பதற்கு பி.ஜே. ஆதாரம் தரவேண்டும். பி.ஜே.யின் கான்செப்ட் படி அவர் இப்பொழுது ஆதாரம் தரக்கூடியவராக இருக்கின்றார். எப்படி என்ற விளக்கத்தை பார்ப்போம்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தடவை ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது பி.ஜே.யின் கருத்து. இதற்கு மாற்றமாக உலகம் முழுவதும் பின்பற்றிக்கொண்டிருக்கக்கூடிய மாற்றுக் கருத்தாவது. ஒரு முறை ஜகாத் கொடுத்த பின்பு, அடுத்த வருடம் திரும்பவும் ஜகாத் கொடுக்கும் வரை, இடையில் வருகின்ற பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டாம். இங்கு மாற்றுக் கருத்துடையவர்கள் ‘கொடுக்க வேண்டாம்’ என்று சொல்லக்கூடிய பொருட்களுக்கு, பி.ஜே. அவர்கள் ஜகாத் கொடுக்க வேண்டும் என்கிறார். அவரது கான்செப்ட்படி ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள் ஆதாரம் தரவேண்டும். வேண்டாம் என்று சொல்பவர்கள் ஆதாரம் கேட்க வேண்டும். அதன்படி ஒவ்வொரு பொருளுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்ற பி.ஜே. அதற்குன்டான ஆதாரத்தை தரக்கூடியவராக இருக்கிறார்.

மாற்றுக்கருத்துடையவர்கள் ஆதாரம் கேட்பார்கள்.

அப்படியானால் அவரது கான்செப்டை செயல்படுத்தினாலும் அவர் ஆதாரம் தரவேண்டும்.(மேற்கண்டவாறு). அவரது கான்செப்ட் செயல்படாவிட்டாலும் அவர் ஆதாரம் தரக்கூடியவராக இருக்கிறார். ஏனென்றால் முன்பே குறிப்பிட்டபடி ஜகாத் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதில்தான் கருத்து வேறுபாடு. அதன்படி ஜகாத் கொடுக்க வேண்டாம் என்று யாரும் மறுக்கவில்லை. ஆகையால் அவரவர் கருத்துக்கு அவரவர் ஆதாரம் தரவேண்டும். இதுதான் உண்மை. இதை நிரூபித்துள்ளோம்.

ஆனால் அவர் சொல்லும் கருத்துக்கு ஆதாரம் தர வேண்டியதில்லை என்று ஒரு கான்செப்ட் ஐ முன் வைக்கிறார். அந்த கான்செப்ட் தவறு என்பது வேறு விஷயம். ஆனால் அவர் உண்டாக்கிய கான்செப்ட் படி அவர் ஆதாரம் கொடுக்க வேண்டியவராக இருக்கின்றார், அல்ஹம்துலில்லாஹ்.

இந்த பி.ஜே.யின் கான்செப்ட் வரக்காரணம் என்ன? என்பது எல்லோருக்கும் புரிந்து இருக்கும் என நினைக்கின்றோம். அதாவது பி.ஜே. ஜகாத் விஷயத்திலே ஒரு புதிய கருத்தை பிரச்சாரம் செய்கின்றார். அவர் அந்த முடிவை எடுக்க எதை ஆதாரம் என்று நினைத்தாரோ, அது உண்மையிலே ஆதாரமாக இல்லை. அவர் எடுத்த முடிவு எந்த ஆதாரமும் இல்லாமல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. ஆதாரம் இல்லாததனால் இந்த கான்செப்ட் ஐ முன்வைத்து ஏதும் ஆதாரம் இல்லாமலே அந்தக் கருத்தை சொல்வேன் என்கின்றார்.

நிலைமை இப்படி இருக்க……!

குர்ஆன் வசனத்திற்கே (6:141) உண்மையான அர்த்தத்திற்கு மாற்றமாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதை ஆரம்பத்திலே சுட்டிக்காட்டியுள்ளோம். நபி மொழி பலமானதை, பலகீனமாக்குவது அவர்களுக்கு பெரிய விஷயமல்ல. பேச்சாற்றல், விவாதத்திறமை அதற்கு உதவி செய்யும். பி.ஜே. அவர் சொல்கின்ற கருத்திற்கு எந்த ஆதாரமும் வைக்காமல், ‘மாற்றுக் கருத்துடையவர்களின் ஆதாரம் எல்லாம் சரியில்லை என்று சொல்லிவிட்டேன்’, ஆகவே எனது கருத்துதான் சரி என்கிறார். அது சரிதான் என்று ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களும் பலர் இருக்கின்றனர்.

விவாதம் என்ற பெயரில்

மாற்றுக் கருத்துடைய, உண்மையிலே ஜகாத் விஷயத்தை மற்றவர்களைவிட அதிகமாக ஆய்வு செய்த மௌலவி நூர் முஹம்மது பாகவி அவர்களுடன் மதுரையிலே விவாதம் என்ற பெயரில் மூன்று நாட்கள் மேற்சொன்ன விஷயங்கள்தான் நடந்தேறின. இதை 17 சிடிகளிலே பதிவு செய்து விற்பனை செய்து வருகின்றனர். அவைகளை நடுநிலையோடு பாருங்கள் உண்மை தெரியும் என்று சகோதரர் பி.ஜே. சொல்கின்றார்.

அவைகளை நடுநிலையோடு பார்த்த போது கண்ட உண்மைகளைத்தான் நாம் எடுத்து சொல்லி இருக்கிறோம், அந்த (6:141) விளக்கம் உட்பட.

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத்

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை. அப்படி ஆதாரம் ஏதும் இல்லாததால்தான் ஜகாத் ‘கொடு’ என்ற சொல்லை மட்டும் வைத்து, புரிந்து கொண்டு, ஒரு தடவை கொடுத்தால் போதும் என்ற முடிவெடுத்ததாக ஏகத்துவம் கூறுகின்றது. ஏகத்துவம் 2005 செப்டம்பர், பக்கம்: 05. 2006 ஜனவரி, பக்கம்: 40.

அப்படியானால் கொடுத்த பொருளுக்கு திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று சரியான ஆதாரம் இருந்தால், ஒரு தடவை கொடுத்தால் போதும் என்ற முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

சரியான ஆதாரம்

புஹாரியில் இடம்பெறக்கூடிய ஸஹிஹான ஹதீஸ்.

ஒரு மனிதனிடம் 40 முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அதற்கான ஜகாத் 01 ஆடு ஆகும். 121 முதல் 200 வரை 02 ஆடுகள் ஆகும். 201 முதல் 300 வரை 03 ஆடுகள் ஆகும். 300க்கு மேல் ஒவ்வொரு 100 ஆடுகளுக்கும் ஒரு ஆடு வீதம் ஜகாத்தாகும்.

ஆடுகள் அதிக பட்சம் ஆடுகள் ஜகாத்

முதல் நிலை 40 – 120 வரை 80 01

இரண்டாம் நிலை 121 – 200 வரை 80 02

மூன்றாம் நிலை 201 – 300 வரை 100 03

301ல் இருந்து ஒவ்வொரு 100க்கும் 01

முதல் நிலையில் உள்ள ஒருவன் அதிகபட்சமாக வைத்திருக்கும் 80 ஆடுகளுக்கும் ஜகாத் ஒரு ஆடு என்று அல்லாஹ்வின் தூதர் சொல்கின்றார்கள். அதன்படி அவன் ஜகாத்தாக ஒரு ஆடு கொடுத்துவிடுவான்.

ஆடுகள் பெருகியதால் அவன் இரண்டாம் நிலையை அடைந்துவிட்டான். (121 – 200)அதிகபட்சமாக இங்கும் 80 ஆடுகளே உள்ளன. இப்பொழுது இவன் இந்த 80 ஆட்டுக்கும் 02 ஆடுகள் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் சொல்கின்றார்கள்.

மதிப்பிற்குறிய மௌலவி பி.ஜே. அவர்களின் கருத்துப்படி இரண்டாவது நிலையை அடைந்த அவன் ஒரு ஆடுதான் கொடுக்க வேண்டும். ஏன்என்றால் ஏற்கனவே ஒரு ஆடு ஜகாத் கொடுத்து 120 வரை உள்ளதை தூய்மைப்படுத்திவிட்டான். 121 – 200 வரை உள்ள 80 ஆடுகளுக்கும் ஒரு ஆடுதான் ஜகாத் கொடுக்க வேண்டும்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் முதல் நிலைக்கு உள்ள ஒரு ஆட்டையும் சேர்த்து மொத்தம் இரண்டு ஆடுகள் ஜகாத் கொடுக்கச் சொல்கின்றார்கள். இப்படியாக எந்த நிலையில் எடுத்துப் பார்த்தாலும் கொடுத்த பொருளுக்கும் சேர்த்துதான் ஜகாத் கொடுக்கச் சொல்லி இருக்கின்றார்கள்.

ஜகாத் கொடுத்தால் பொருள் தூய்மையாகிவிடுகிறது. ஆகையால் கொடுத்ததை விட்டுவிட்டு புதிதாய் வரும் பொருளுக்குத்தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்கு மாற்றமாக, கொடுத்த பொருளுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும், என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லி இருப்பது இங்கு நிரூபிக்கப்பட்டு, எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

ஜகாத் விஷயத்தில் பி.ஜே.யின் நிலைப்பாடு அன்று முதல் இன்று வரை

ஜகாத் விஷயத்தில் ஒரு புதிய கருத்தை பி.ஜே. அவர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த அன்று முதல் இன்று வரை அவரது நிலைப்பாட்டை நடுநிலமையோடு கவனிக்கும் யாருமே அவரது நிலைப்பாடு சரி என்று கூறமுடியாது. அதை சுருக்கி எளிதாக்கி கீழே தரப்பட்டுள்ளது.

(1) முதல் நிலைப்பாடு

ஜகாத் கொடுத்தால் பொருள் தூய்மை அடைகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அவர்கள் அப்படி சொல்லி இருக்கும் காரணத்தினால், ஜகாத் கொடுத்து தூய்மையாக்கிவிட்ட பொருளுக்கு திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டாம். அதாவது ஒரு பொருளுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டும். இதை ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும் போது கொடுத்ததை விட்டுவிட்டு புதிதாய் வந்ததற்கு கொடுக்க வேண்டும். ஆதாரம்: ஜகாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பின் பி.ஜே. பேசியது. இதற்கான VIDEO CLIP தரப்பட்டுள்ளது.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் அப்படிக் கூறவில்லை. ஆகையால் ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்பது தவறு என்று நாம் முன்பே கண்டோம். அதை சரி என்று வைத்துக் கொண்டாலும் இரு முரண்பட்ட கருத்துக்களைச் சொல்லி அதன்படி ஜகாத் கொடுக்க வேண்டும் என்று பி.ஜே. சொல்கின்றார். அதையும் நம்பி மக்கள் எற்றுக் கொண்டனர்.

முரண்பட்ட இரு அம்சங்கள்

அதாவது ஒன்றை செயல்படுத்தினால் மற்றொன்றை செயல்படுத்தவே முடியாதபடி உள்ள இரண்டு அம்சங்களை ஜகாத் விஷயத்திலே சொல்லி, மக்களை அதன்படி ஜகாத் கொடுக்க வேண்டும் என்று ஒரு ஆறேழு வருடங்களுக்கு முன்பாக பிரச்சாரம் செய்கின்றார்.

முதல் அம்சம், பொருள்களுக்கு தூய்மையாக ஜகாத் கடமையாக்கப்பட்டுள்ளது. ஆகவே ஜகாத் கொடுத்து பொருட்களை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். புதிதாய் பொருள் வந்தால் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளை தவிர்த்துவிட்டு புதிதாய் வந்த பொருளுக்கு கொடுக்க வேண்டும்.

இரண்டாவது அம்சம், ஜகாத் வருடா வருடம் கொடுக்க வேண்டும்.

இவை இரண்டையுமே ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாது. அப்படி செயல்படுத்த முடியாததை அல்லாஹ்வின் தூதர் சொல்லி இருக்க மாட்டார்கள்.

விளக்கம்: முதல் அம்சம்:

புதிதாய் பொருள் வந்தால், ஜகாத் கொடுத்து தூய்மையாக்க வேண்டும். இதை செயல்படுத்தினால், பொருள் வரும்போதெல்லாம் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற அம்சத்தை செயல்படுத்த முடியாது. ஏனென்றால் புதிதாய் பொருள் வந்தவுடன் ஜகாத் கொடுத்து தூய்மையாக்கிவிட வேண்டும். ஒரு வருடம் வரை தாமதிக்க இயலாது. முதல் அம்சத்தை (பொருளைத் தூய்மைப்படுத்துவது) செயல்படுத்தினால், இரண்டாவது அம்சத்தை (வருடா வருடம் ஜகாத் கொடுப்பது) செயல்படுத்த இயலாது.

இரண்டாவது அம்சம்:

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற அம்சத்தை செயல்படுத்தினால் ஜகாத் கொடுத்த நாளிலிருந்து அடுத்த வருடம் ஜகாத் கொடுக்கும் வரை சம்பாதிக்கும் எதையும் செலவு செய்யக்கூடாது. அடுத்த வருடம் ஜகாத் கொடுக்கும் போதுதான் அவை தூய்மையாகும். அதுவரை புதிதாய் வந்த பொருள் ஒரு பைசா கூட செலவு செய்யக்கூடாது. புதிதாய் வந்த பொருட்களையெல்லாம் சேர்த்து, அடுத்த வருடம் ஜகாத் கொடுக்கும்வரை செலவு செய்யாமல்
பாதுக்காக்க வேண்டும். ஆக இரண்டாவது அம்சத்தை (வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை) செயல்படுத்தினால் முதல் அம்சத்தை (பொருளை தூய்மைப்படுத்துவது) செயல்படுத்த முடியாது.

பி.ஜே.யின் இந்த முதல் நிலைப்பாட்டை எடுத்து காண்பிக்க என்ன காரணம் என்றால், அவர் தவறு செய்துவிட்டார் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுவதற்கல்ல. செயல்படுத்த முடியாத ஒரு சட்டத்தைச் சொல்கின்றார், அதையும் நாம் ஏற்றுக்கொண்டிருந்தோம். என்பதை நாம் உணர வேண்டும்.

செயல்படுத்த சாத்தியமே இல்லாத இந்தச் சட்டத்தை சொல்லும் போதாவது ஏதோ சான்றுகள் என்று எதையோ கொடுத்தார். அது தவறானது என்பது வேறு விஷயம்.அதாவது தவறான ஆதாரத்தை கொடுத்தார், செயல்படுத்தவே முடியாத சட்டத்தை,அல்லாஹ்வின் தூதர் சொன்னதாகச் சொன்னார். அவைகளை அப்படியே ஏற்றுக்கொண்டோம்.

தற்சமயம் ஆதாரம் ஏதும் கொடுக்க மாட்டேன், ஆதாரம் ‘கொடு’ என்று மாற்றுக்கருத்துடையவர்களை கேட்பேன் என்று சொல்லி, உலகுக்கு மாற்றமான ஒரு கருத்தைச் சொல்கின்றார். இதையும் ஏற்றுக்கொள்ள இலட்சக்கணக்கானவர்கள் இன்று இருக்கிறார்கள்.

அவர் தவறான ஆதாரத்தை கொடுத்து ஒரு சட்டத்தைச் சொன்னாலும், அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். அந்த ஆதாரம் தவறாகப் போனதால், எந்த ஆதாரமும் இல்லாமல் அதே சட்டத்தைச் சொல்கிறார், இதையும் அப்படியே ஏற்றுக்கொள்கின்றனர். (ஆதாரம் தர வேண்டாம் என்று சொன்னதை மதுரை விவாத சிடிகளில் பார்க்கலாம்)

அப்படி என்றால், ஏதோ ஒரு அம்சம் அல்லாஹ்வின் தூதர் சொல்லாதது. பொருட்களுக்குத் தூய்மையாகத் தான் ஜகாத் என்பது அல்லாஹ்வின் தூதர் சொல்லாததாக இருக்க வேண்டும். இல்லையெனில் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் தூதர் சொல்லாததாக இருக்க வேண்டும். ஆனால் இரண்டுமே அல்லாஹ்வின் தூதர் சொன்னதுதான் என்று பி.ஜே. அவர்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள் அதையும் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

(2) இரண்டாவது நிலைப்பாடு

பின்பு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு சரியான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி அடுத்தகட்ட பிரச்சாரத்தை ஆரம்பிக்கின்றார்.

பொருட்கள் வந்தவுடன் ஜகாத் கொடுத்துவிட வேண்டும். ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது அல்லாஹ்வின் தூதர் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்று சொல்கின்றார். அந்த முதல் கருத்து ‘பொருட்களுக்குத் தூய்மையாக ஜகாத்’ என்பது அல்லாஹ்வின் தூதர் சொன்னது. வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் சொல்லாதது என்ற முடிவுக்கு வந்து பிரச்சாரம் செய்கின்றார். இதையும் மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

(3) மூன்றாவது நிலைப்பாடு

ஆனால் பொருட்களுக்குத் தூய்மையாக ஜகாத் என்ற கருத்து தான் தவறானது என்று மௌலவி நூர் முஹம்மது பாகவி முதலில் அதை அறிவிக்கின்றார்.

இதை ஏன் தவறானது? என்று ஆரம்பத்திலேயே விளக்கியுள்ளோம். அதாவது அல்லாஹ்வின் தூதர் ‘பொருட்களுக்கு தூய்மையாக ஜகாத்’ என்று கூறியதாக, சகோதரர் பி.ஜே. வைத்த ஆதாரம் (புகாரி: 1404) தவறானது.

இங்கு தான் மக்கள் கவனிக்க வேண்டும். பி.ஜே.யின் ஆதாரம் தவறானது என்று தெரிந்த பின், அவர் சொல்வதாவது, ஒரு வாதத்துக்கு ‘பொருள்களுக்கு தூய்மையாக ஜகாத்’ என்பது தவறாகப் போனாலும், ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்பதில் மாற்றமில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றார். இது தான் மூன்றாவது நிலைப்பாடாக இருக்கின்றது.

(4) நான்காவது நிலைப்பாடு

‘நீங்கள் கூறியபடியான ஆதாரம் புகாரியில் இல்லை. பின்பு எப்படி ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்ற முடிவை எடுத்தீர்கள்?’ என்ற கேள்விகள் வந்தன. அதை தவறுதலாக சொல்லிவிட்டேன், ஆனால் வேறு ஒரு ஆதாரம் இருக்கின்றது என்று அபு-தாவூதில் இருந்து வேறு ஒரு நபி மொழியைக் காட்டினார். அந்த நபி மொழிக்கும், பொருளை தூய்மைப்படுத்தும் என்பதற்கும் சம்பந்தமில்லை. அதனோடு அது பலகீனமானதும்கூட. இது விஷயமாகத்தான் நூர் முஹம்மது பாகவி அல்-ஜன்னத்தில் எழுதியதும், அதற்கு ஏகத்துவத்தில் இவர்கள் பதில் எழுதியதும். அவைகளை படித்த அதிகமான நபர்களுக்கு ஒன்றும் புரிந்திருக்காது. தனிப்பட்ட நபர்கள் மீதான வசைப்பாடுதல்கள்தான் அவைகளில் அதிகமிருந்தன.

(5) ஐந்தாவது நிலைப்பாடு

‘பொருட்களைத் தூய்மைப்படுத்தத்தான் ஜகாத்’ என்பதை நாம் முக்கியமான ஆதாரமாக வைத்து அந்த முடிவை எடுக்கவில்லை என்று கூற ஆரம்பித்தார். அது ஒரு துணை சான்றுதான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று கூறினார். ஒரு வாதத்துக்கு அது தவறாகப் போனாலும் ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத் என்றார். இவர் இப்படியெல்லாம் கூறியதை ஏகத்துவம் செப்டம்பர் 2005, மற்றும் ஏகத்துவம் ஜனவரி 2006 அவைகளில் பார்க்கலாம். மதுரையில் நடந்த விவாத சிடிகளிலும் பார்க்கலாம்.

இதைப் போலவே நாம் முன்பே குறிப்பிட்டபடி பொருட்களைத் தூய்மைப்படுத்ததான் ஜகாத் என்ற ஆதாரத்தை அடிப்படையாக வைத்துதான் அந்த முடிவை எடுத்தார் என்பதை ‘ஜகாத் ஒரு ஆய்வு’ என்ற சிடியை பார்க்கும் யாரும் தெரிந்து கொள்ளலாம். நாமும் Video Clip ல் தந்திருக்கிறோம்.

அப்படியானால் முக்கிய சான்று என்ன? என்ற கேள்விகள் வந்தது. அதற்கு அவர் சொல்வது வருடா வருடம் கொடுப்பதற்கு எந்த சான்றும் இல்லை. அல்லாஹ் (ஸுப்)ஜகாத் கொடு என்று சொல்லி இருக்கின்றான். கொடு என்றால் ஒரு தடவையைத் தான் குறிக்கும். ஆகவே ஒரு தடவை கொடுத்தால் போதும் என்கின்றார்.

இதுவும் தவறு என்று நாம் முன்பே நிரூபித்திருக்கிறோம். அதுமட்டுமல்ல ஒரு தடவை ஒருவன் ஜகாத் கொடுத்து விட்டால் திரும்பவும் வாழ்நாள் முழுவதும் ஜகாத் கொடுக்க வேண்டாம் என்று தான் அவர் சொல்வதற்கு அர்த்தம். ஆனால் புதிதாய் பொருள் வரும் போது மறுபடியும் கொடுக்க வேண்டும் என்று விளக்கம் கொடுக்கிறார். அவர் சொல்கின்ற கருத்துக்கு மாற்றமாக அவரே விளக்கம் கொடுக்கின்றார்.

கொடு என்ற பொதுவான ஒரு கட்டளை வாக்கியத்தை வைத்துக் கொண்டு தான் ஜகாத் விஷயத்திலே இவ்வளவு சட்டங்களையும் வகுத்தாரா? என்ற சந்தேகங்களும், கேள்விகளும் மக்கள் மனதிலே உண்டாகியது. ‘கொடு’ என்பது ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வார்த்தை. எப்படிக்கொடுக்க வேண்டும்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? எப்போது கொடுக்க வேண்டும்? என்பதற்கவிளக்கங்கள் அதில் இருந்து எடுக்க முடியாது என்பது சாதாரனமாக யாருக்கும் தெரியக்கூடிய விஷயம். எப்படி கொடுக்க வேண்டும் என்ற மேலதிக விளக்கங்களை நபி மொழியல் இருந்துதான் எடுக்க வேண்டும். எப்போது கொடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்கத்தக்க நபி மொழி ஏதும் இல்லை என்று பி.ஜே. சொல்கிறார். அதாவது எப்போது கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ்வோ, தூதரோ சொல்லவில்லை என்கிறார். ஜகாத் என்ற கட்டாயக் கடமையை எப்போது நிறைவேற்ற வேண்டும் என்று அல்லாஹ் சொல்லவில்லை என்கிறார். அவர் சொல்லியது சரிதான் என்று நினைத்திருந்தவர்கள்கூட இந்த விஷயத்தில் பி.ஜே. சொல்லும் கருத்துக்கு ஆதாரம் இல்லையே! என்று யோசிக்க ஆரம்பித்தனர். இப்படி யோசிக்க ஆரம்பித்தவர்கள் குறைவு. ஆனால் அதையும் நம்பக்கூடியவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள்.

(6) ஆறாவது நிலைப்பாடு, தற்போது உள்ள நிலைப்பாடு

தற்சமயம் அவர் கூறுவது: ஜகாத் விஷயத்தில் நான் கூறும் கருத்துகளுக்கு, ஏதும் ஆதாரங்களை நான் தரவேண்டியதில்லை. மாற்றுக் கருத்துடையவர்கள்தான் ஆதாரம் தரவேண்டும். நான் அவர்களிடம் ஆதாரம் கொடு என்று கேட்பேன்.

அதன் பின்பு அந்த ஆதாரம் சரியாக இருக்கிறது என்று பி.ஜே. ஏற்றுக் கொண்டால், மாற்றுக் கருத்து சரியாம். அவர் ஆதாரம் சரியில்லை என்று ஒதுக்கிவிட்டால் பி.ஜே.யின் கருத்து சரியாம். இப்படி சொன்னதோடு நிற்காமல் அதை செயல்படுத்தியும் காட்டினார். இதைப் பார்க்க விரும்புபவர்கள் மதுரையில் நடந்த ஜகாத் விவாத சிடிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பார்க்கலாம். இப்படி அவர் கூறுவது, அவர் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு முக்கிய கடமையான ஜகாத் விஷயத்தில் தனது கருத்துக்களை புகுத்தி ஒரு தவறான சட்டத்தை வகுத்துவிட்டார் என்பதைத்தான் காட்டுகிறது.

இதுமட்டுமல்ல ஆரம்பத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர் நிலையை மாற்றிக் கொண்டிருப்பதும் அதை உறுதிப்படுத்துகிறது. இதையும் நம்பி பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்படி இவர் ஆதாரம் தரவேண்டியதில்லை என்பதற்கு அவர் சொல்லும் காரணங்கள் அவருக்கு எதிராகவே உள்ளதை ஏற்கனவே விளக்கியுள்ளோம்.

தமிழக முஸ்லீம்களுக்கு

தமிழக முஸ்லீம் சகோதரர்களுக்கு, நாம் வைக்கும் அன்பான வேண்டுகோள் இது தான். யாரையும் கண்னை மூடிக்கொண்டு ஆதரிக்காதீர்கள், அதைப் போலவே கண்னை மூடிக்கொண்டு எதிர்க்கவும் செய்யாதீர்கள். அப்படி செய்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

குர்ஆன், நபி வழிதான் நம் வழி. அதன்படி யார் சொன்னாலும் கேட்டு நடப்போம். அதற்கு மாற்றமாக யார் சொன்னாலும் தட்டிக்கேட்போம். தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களுக்கு உணர்த்துவோம். அது முடியவில்லை எனின் குறைந்த பட்சம் நம் அளவிலாவது தவறான கருத்துகளில் இருந்து விலகிக்கொள்வோம்.

நாம் இதுவரை பல விஷயங்களை பார்த்தோம். இனி ஒரு சில விஷயங்களையும் பார்க்க இருக்கின்றோம். இதை அனைத்தையும் பார்க்க முடியாதவர்கள், நேரமில்லாதவர்கள் குறைந்த பட்சம் ஜகாத் விஷயத்தில் பி.ஜே.யின் நிலைப்பாடு ‘அன்றிலிருந்து இன்றுவரை’ என்ற தலைப்பில் ஆறு நிலைப்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. இவைகள மட்டுமாவது தயவு செய்து பார்க்கவும். மறுபடியும் அன்போடு நாம் வைக்கும் முக்கியமான வேண்டுகோள். அல்லாஹ்வுக்கும், ரசூலுக்கும் மட்டும் பயந்து, யார் மீதும் விருப்பு வெறுப்பின்றி, நடுநிலையோடு படிக்கிறேன் என்று அல்லாஹ்விடத்தில் உறுதி மொழி எடுத்துக்கொண்டு படியுங்கள். அதில் வரும் விஷயங்களுக்கு மேலதிக விளக்கங்களும் முன்பு தரப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் அதைப் பார்த்துக்கொள்ளலாம். அதற்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், நம்மை தொடர்பு கொள்ளலாம்.

அதன் பின்பு அவர்களின் முடிவுக்கு அவர்களே பொறுப்பு. ஒருவர் செய்யும் பாவங்களுக்கு, மற்றவர்களை அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.

இதுவரை நாம் பகிர்ந்து கொண்டவை:

(1) ஜகாத் விஷயத்தில் மதிப்பிற்குறிய சகோதரர் பி.ஜே. அவர்களின் கருத்து ஏன் எற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது? என்பதை ஆதாரங்களுடன் பார்த்தோம்.

(2) சரியான கருத்து என்ன? என்பதிலே ஒரு பகுதியை பார்த்திருக்கின்றோம். அது கொடுத்த பொருளுக்கும், திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதுதான். அதற்கான ஆதாரங்களையும் பார்த்தோம்.

(3) இனி நாம் பார்க்க இருப்பது, எப்போது ஜகாத் கொடுக்க வேண்டும்? என்பதை.

ஜகாத் எப்போது கொடுக்க வேண்டும்?

ஜகாத் எப்போது கொடுக்க வேண்டும்? என்ற கேள்வியே எப்போது வரும் என்றால் கொடுத்த பொருளுக்கும் திரும்ப கொடுக்க வேண்டும் என்று வரும் போதுதான். நன்றாக சிந்திக்கும் போது நாம் இதை எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.

கொடுத்த பொருளுக்கு திரும்ப தேவையில்லை என்று இருந்தால் புதிதாய் வரும் பொருளுக்குத் தான் ஜகாத் கொடுக்க வேண்டும். புதிதாய் எப்போது பொருள் வருகின்றதோ அப்போது கொடுக்க வேண்டும். ஒரு வருடம் கழித்து கொடு என்றோ, ஆறு மாதம் கழித்து கொடு என்றோ சொல்ல முடியாது. ஒருவருக்கு இரண்டு நாளில் பொருள் வரலாம், அடுத்தவருக்கு இரண்டு மாதத்தில் வரலாம் இப்படியாக மாறுபடும்.

அதாவது கொடுத்த பொருளுக்கு ஜகாத் இல்லை என்றால், அங்கு காலக்கெடு கிடையாது. இது மேலே விளக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே காலக்கெடு இருந்தால், கொடுத்த பொருளுக்கு ஜகாத் இல்லை என்பது அடிபட்டுப் போய்விடும். ஏன்னென்றால் கொடுத்த பொருளை தவிர்த்து புதிதாய் வந்த பொருளுக்கு கொடுக்க வேண்டும் என்றால், புதிதாய் வருவதையெல்லாம் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான், செலவு செய்ய இயலாது. இதை முன்பே விளக்கியுள்ளோம். தேவைப்பட்டால் அதைப்பார்த்துக் கொள்ளலாம்.

கால இடைவெளியில் அதாவது வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்றால், கொடுக்கின்ற நேரத்தில் கையில் இருப்பவைகளுக்கு கணக்கிட்டு 2.5மூ கொடுக்க வேண்டும். அதில் கொடுத்த பொருளும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், புதிதாய் வந்த பொருளும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். பொருளுக்கு முக்கியத்துவம் இல்லை.

ஆனால் பி.ஜே. அவர்கள் பொருளுக்குத் தூய்மை ஜகாத் என்று தவறான ஆதாரத்தின் அடிப்படையில் ‘கொடுத்த பொருள்’, ‘புதிதாய் வந்த பொருள்’ என்று பொருளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதினால் வந்த கோளாறுதான் எல்லாம்.

ஆகவே கொடுத்த பொருளுக்கு திரும்பவும் ஜகாத் உண்டா? இல்லையா? என்பதைத்தான் முதலில் பி.ஜே. முடிவு செய்ய வேண்டும். திரும்பவும் கொடுக்க வேண்டும் என்று அவர் ஏற்றுக்கொண்டால், பின்பு எப்போது திரும்ப கொடுக்க வேண்டும், வருடா வருடமா? என்ற கேள்வியை எழுப்பலாம். ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் இருக்கிறாதா? என்று கேட்டால், ‘கொடுத்த பொருளுக்கு திரும்பவும் கொடுக்க வேண்டும்’ என்பதை அவர் ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தம். அப்பொழுதுதான் அந்த கேள்வியை எழுப்ப முடியும். ஆனால் பி.ஜே. வருடா வருடம் ஜகாத் கொடுக்க சரியான நபி மொழி இருக்கின்றதா? கொடுத்த பொருளுக்கே திரும்பத் திரும்ப கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் இருக்கின்றதா? என்று இரண்டையும் கேட்கின்றார். இரண்டையும் நாம் கொடுக்கின்றோம். ஒரு பொருளுக்கு ஒரு தடவையா? திரும்பவும் கொடுக்க வேண்டுமா? அதை முதலில் முடிவு செய்வோம். அதற்கு ஆதாரத்தை அவரும் கொண்டுவரட்டும், நாமும் தருவோம். அவர் ஆதாரம் ஏதும் கொடுக்க வேண்டியதில்லை என்கின்றார். ஆனால் நாம் ஆதாரம் கொடுத்திருக்கின்றோம். அவரது கருத்து எந்த ஆதாரமும் இல்லாமல், அவரது கருத்தாக சொல்லப்பட்டவைதான் என்பதை இதில இருந்தே புரிந்து கொள்ளலாம்.

ஏன் என்றால் அல்லாஹ் (ஸுப்) ஜகாத், தர்மம் இவைகளைக் கொடுத்தால், கொடுத்த மனிதன் தூய்மைப்படுத்தப் படுகிறான் என்றும், தர்மம் சில பாவங்களுக்கு பரிகாரம் என்றும் சொல்கின்றான்.

9:103 – ஜகாத் கொடுத்த மனிதன் தூய்மை
அடைகிறான்.

92:18 – தர்மம் கொடுத்த மனிதன் தூய்மை
அடைகிறான்.

2:271 – தர்மம் சில பாவங்களுக்கு
பரிகாரம்.

ஜகாத்துக்கும் தூய்மைக்கும் என்ன உறவு என்பதை அல்லாஹ் 9:103ல் தெளிவாக சொல்லிவிட்டான். அல்லாஹ் சொல்கின்றபடி, ஜகாத் கொடுக்கும் அந்த நேரத்தில் இருக்கின்ற செல்வத்தில் 2.5மூ கொடுத்தால் ஜகாத் கடமையை நிறைவேற்றியவனாவான், அதன் மூலம் தூய்மைப் படுத்தப்படுகிறான்.

ஜகாத் கொடுத்தால் மனிதன் தூய்மைப் படுத்தப்படுவதை;ச் சொன்ன அல்லாஹ் (ஸுப்), பொருள் தூய்மை அடைகிறது என்றால் அதையும் சேர்த்தே சொல்லி இருப்பான். அல்லாஹ் அறிந்தவன். அவன் சொல்லாததை நாமாக தவறான அடிப்படையில் விளங்கிக் கொண்டு, கொடுத்த பொருளுக்கு திரும்பவும் கொடுக்க வேண்டுமா? என்றெல்லாம் கேட்பது சரியான ஒரு நிலைப்பாடில்லை. மக்களிடையே குழப்பம் தான் மிஞ்சும்.

ஆகவே வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்று இருந்தாலே, கொடுத்த பொருளுக்கும் சேர்த்துதான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது தெளிவு. இதை எதற்கு விளக்குகின்றோம் என்றால் பி.ஜே. அவர்கள் தற்சமயம் கேட்பது என்னவென்றால், வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் இருந்தால் மட்டும் போதாது, கொடுத்ததற்கே திரும்பத் திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் ஹதீஸ் வேண்டும் என்கின்றார். அவர் இப்படிச் சொல்லிவிட்ட ஒரே காரணத்தினால் இலட்சக்கணக்கானோரின் உதடுகளும் இதையே உச்சரிக்கின்றன. இதை எப்படிக் கொடுக்க முடியும்? ‘இல்லாத ஊருக்கு வழி’ கேட்டால் எப்படி சொல்ல முடியாதோ, இவர்கள் கேட்பதும் நூறு சதம் அதேயே தான்.

நான் சொன்ன ஹதீஸ் தவறு என்று சொன்னீர்கள் அல்லவா? ஆகவே நீங்கள் எதை ஆதாரமாக வைத்தாலும் இல்லை என்போம். பின்பு அதையே இலட்சக்கணக்கானோரும் சொல்வார்கள் என்பது போல் இருக்கின்றது அவர் சொல்வது. விவாதத்திலே 6:141க்கு விளக்கம் சொன்னது போல.

அதைப் போலவே கொடுத்த பொருளுக்கு திரும்ப ஜகாத் கொடுக்க வேண்டும் என்றாலே, அங்கு ஒரு காலக்கெடு இருக்கின்றது என்பதும் தெளிவு. கொடுத்த பொருளுக்கும் சேர்த்து ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை முன்பே புகாரியில் பதிவு செய்யப்பட்ட ஆடு சம்பந்தமான ஹதீஸில் பார்த்தோம். ஆகவே ஒரு காலக்கெடு இருக்க வேண்டும் என்பதையும் அந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது.

இன்சா அல்லாஹ்…நாளை தொடரும்….

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.