தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

செப்ரெம்பர் 13, 2007

தமிழ்ஈழ விடுதலை

Filed under: தமிழ் ஈழம் — முஸ்லிம் @ 10:19 முப

தமிழ்ஈழ விடுதலை ஆதரவாளர்கள் கூட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில்தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர் கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. ம.தி.மு.க., இளைஞரணி மாநில துணை செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். பா.ம.க., மாவட்ட இளைஞர் சங்க தலைவர் நீதி அப்துல்லா முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன், தமிழர் தேசிய இயக்க பொதுச்செயலாளர் பரந்தாமன், ம.தி.மு.க.,மண்டபம் ஒன்றிய செயலாளர் பேட்ரிக், உழைக் கும் மக்கள் விடுதலை இயக்கம் தலைவர் மெல்கியோர், தமிழ் நாடு மீனவர் இளைஞர் பேரவை மாநில பொதுசெயலாளர் செரோன்குமார் உட்பட பலர் பேசினர். இளங்கோ நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கு செல்ல படகு இல்லாததால் தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் விரக்தி *கடற்படை தளத்தில் நுழைந்து ரகளை;117 பேர் கைது

ராமேஸ்வரம்: இலங்கைக்கு செல்ல படகு இல்லாததால் விரக்தியடைந்த தமிழ்ஈழ விடுதலை ஆதரவாளர் அமைப்பினர் ராமேஸ்வரம் இந்திய கடற்படை படகு தளத்தில் அத்துமீறி நுழைந்து வீரர்களை தள்ளிவிட்டு கோஷம் எழுப்பியதால் 117 பேரை போலீசார் கைது செய்தனர்.இலங்கை தமிழர்களுக்கு உணவு பொருட்களை வழங்க ராமேஸ்வரத்திலிருந்து படகில் செல்ல போவதாக தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர் அமைப்பினர் தெரிவித்திருந்தனர். இதற்காக மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், கோவை, ஈரோடு,விருதுநகர், துõத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து 200 தொண்டர்கள் ராமேஸ்வரம் வந்திருந்தனர். எட்டு கிலோ அரிசி, ஒரு கிலோ எடை மருந்து பொருட்கள் கொண்டு வந்திருந்தனர். மாநில பொது செயலாளர் பரந்தாமன் தலைமையில் ராமேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து மீன்பிடி துறைமுகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். ராமநாதபுரம் டி.ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி., திருஞானம், குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,ஆறுமுகச்சாமி, கீழக்கரை டி.எஸ்.பி., மாதவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். துறைமுகம் செல்லும் முன் போலீசார் கைது செய்வர் என அமைப்பினர் எதிர்பார்த்தனர். கைது செய்யாததால் துறைமுக தளத்தில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இலங்கை செல்ல படகு இல்லாததால் ஒரு மணி நேரம் கோஷம் எழுப்பிய அவர்கள் விரக்தியடைந்த நிலையில் இந்திய கடற்படை படகு தளத்தில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வீரர்களை பிடித்து கீழே தள்ளினர். கடற்படை படகின் மேல் தளத்தில் ஏறி நின்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து எஸ்.பி., திருஞானம் தலைமையில் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி நான்கு பெண்கள் உட்பட 117 பேரை போலீசார் கைது செய்து மண்டபம் முகாம் கொண்டு சென்றனர்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.