தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 23, 2008

ஸ்பெயினில் இஸ்லாம் வளர்ச்சியும் வீழ்ச்சியும் – உலக முஸ்லிம்களுக்கு படிபினையான ஒரு சிறந்த சரித்திரக் குறும்படம் இதோ தமிழில் உஙகள் முன்

Filed under: குறும்படம், சரித்திரம், தமிழ், ஸ்பெயின் — முஸ்லிம் @ 7:38 பிப

ஸ்பெயினில் இஸ்லாம் வளர்ச்சியும் வீழ்ச்சியும் – உலக முஸ்லிம்களுக்கு படிபினையான ஒரு சிறந்த சரித்திரக் குறும்படம் இதோ தமிழில் உஙகள் முன்

http://www.tamilmuslimtube.com இல்
மேலும் பரங்கிப்பேட்டை மானுட வசந்தம் மருத்துவர் ஹபீப் முஹம்மது கேள்வி / பதில்
Part 9 – விலங்கினம் மனிதனுக்காக என்றால், மனிதன் யாருக்காக?
Part 10 – வணிகம் குறித்து இஸ்லாம் சொல்வதென்ன?
Part 11 – தலித் முஸ்லிம் என்று இல்லாதபோது, முஸ்லிம் சவரத் தொழிலாளர்களை சில இடங்களில் ஒதுக்கி வைத்திருப்பதேன்?
Part 12 – அண்டை வீட்டாரை பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
Part 13 – மானுட வசந்தம் இவ்வுலகில் கிடைக்காதபோது மறு உலகில் கிடைக்கும் என்பது அறிவியலுக்கு பொருந்துமா?
Part 14- இறைவன் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்கின்றபோது மனிதனை வணங்குவதில் என்ன தவறு?

ஸ்பெயினில் இஸ்லாம் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

நர்கிஸ் – மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்

Filed under: கட்டுரை, தமிழ், நாவல், போட்டி — முஸ்லிம் @ 7:18 பிப

நர்கிஸ் – மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்

நர்கிஸ் – மல்லாரிப் பதிப்பகம்

இணைந்து நடத்தும்

“முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு”

நாவல் -கட்டுரைப் போட்டிகள்

கட்டுரை

தலைப்பு

“இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்”

முதல் பரிசு: ரூபாய் 5000/-
இரண்டாம் பரிசு: 3000/-
மூன்றாம் பரிசு: 2000/
5 ஆறுதல் பரிசுகள் : 1000/-

விதிகள்

1.கட்டுரை 12 முதல் 15 அத்தியாயங்களைக் கொண்டதாக அமையவேண்டும்.

2. ஒவ்வொரு அத்தியாயமும் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில்
4 – 6 பக்கம் அச்சில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

3. குர்ன் , ஹதீஸ் , நூல் மேற்கோல்கள் பயன்படுத்தும் போது சரியான
ஆதாரங்கள் தரப்பட வேண்டும்.

நாவல்

முதல் பரிசு: ரூபாய 5000/-
இரண்டாம் பரிசு: 3000/-
மூன்றாம் பரிசு: 2000/
5 ஆறுதல் பரிசுகள் : 1000/-

விதிகள்

1.இஸ்லாமிய விழுமியங்கள், கலாசாரம், சமூக ஒற்றுமை, மனிதநேயம்,
நாட்டுப்பற்று மேவும் முஸ்லிம் வாழ்வியலை மையமாக வைத்து எழுதப்படும்
சமகால சமூக நாவலாயிருக்கவேண்டும். வரலாற்று நாவல்கள் ஏற்றுக்
கொள்ளப்படமாட்டா.

2. அத்தியாயங்கள் 15 முதல் 18 -க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

3. ஒரு அத்தியாயம் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில் 6 – 8
பக்கம் அச்சில் 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

பொது விதிகள்

1.போட்டிகளில் பங்கு பெறுவோர் தனித்தாளில் தங்களது சரியான
பெயர்/தகப்பனார்/கணவர் பெயர்கள் /கல்வித்தகுதி/ முகவரி/ தொலைபேசி எண்கள்/
ஈமெயில் இவற்றுடன் ஆக்கம் தங்களுக்குச் சொந்தமானதென்றும், தழுவலோ அல்லது
மொழிபெயர்ப்போ அல்லவென்றும், போட்டி விதிகளுக்குக் கட்டுப்படுவதாகவும்
உறுதிமொழி அளித்து கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்

2. ஒரு பக்கம் மட்டுமே எழுத / டைப் செய்ய வேண்டும்

3. ஆக்கங்களை தபாலிலோ / கூரியர் சர்வீஸிலோ அனுபலாம். க்கங்கள் கிடைத்த
ஒரு வாரத்துக்குள் பெற்றுக்கொண்டதற்கான தகவல் அனுப்பப்படும். அதன் பிறகு
அது சம்பந்தமாக அனைத்து கடித/ ஈமெயில்/ தொலைபேசித் தொடர்புகள்
தவிர்க்கப்பட வேண்டும்.

4. நர்கிஸ் – மல்லாரி பதிப்பகம் நியமிக்கும் நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.

5. ஆக்கங்கள் ஜூலை மாதம் 31 -ம் தேதிக்குள் கிடைக்கவேண்டும்

6. ஆக்கங்களைத் திருப்பி அனுப்ப இயலாது. தபால் தலைகள் அனுப்ப வேண்டாம்.

7.பரிசு பெறும் நாவல்கள்/ கட்டுரைகள் முழுமையாகவோ/ பகுதியாகவோ நர்கிஸில்
தொடர் கதைகளாக/ கட்டுரைகளாக வெளிவரும்; அவற்றை நர்கிஸில் வெளிவரும் வரை
வேறு வகையில் பிரசுரிக்கக் கூடாது.

8.பரிசீலனை முடிந்த பிறகு நர்கிஸ் இதழில் முடிவு அறிவிக்கப்படும்;
அதைத்தொடர்ந்து பரிசுபெற்றவர்களுக்கும் பதிவுத் தபால் / கூரியர் சர்வீஸ்
மூலம் தெரிவிக்கப்படும். அதனுடன் பரிசுத்தொகையும் காசோலை மூலம்
அனுப்பிவைக்கப்படும்.

9.கட்டுரைகள்/ நாவல்கள் நர்கிஸ் முகவரிக்கு ( 54, மரியம் நகர்,
மல்லிகைபுரம், திருச்சி- 620001, தமிழ்நாடு, இந்தியா) அனுப்பப் பட
வேண்டும் ; கடித உறையின்மீது கட்டுரை/ நாவல் என்று தெளிவாகக்
குறிப்பிடவேண்டும்

10.ஒருவரே இரண்டு போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்; ஒன்றுக்கு மேற்பட்ட
ஆக்கங்களையும் அனுப்பலாம்.

எம். அனீஸ் பாத்திமா
பதிப்பாளர்/நிர்வாக ஆசிரியை
நர்கிஸ்
திருச்சி -620001

டாக்டர் அ. சையத் இப்ராஹீம்
(ஹிமானா சையத்)
கௌரவ ஆசிரியர் : நர்கிஸ்
நிறுவனர்:மல்லாரி பதிப்பகம்
சித்தார்கோட்டை-623513

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் ”தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி”

Filed under: இஸ்லாம், குவைத், சங்கம், தமிழ், மீலாது — முஸ்லிம் @ 5:16 பிப

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் ”தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி” மற்றும் ”குவைத் மீலாது (ஹிஜ்ரி 1429) மாநாடு ஒலி / ஒளிப்பேழைகள் வெளியீடு”

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 24-04-2008 வியாழக்கிழமை மாலை 6:30 மணி இரவு 9:30 மணி வரை குவைத், சுர்ரா பகுதியில் உள்ள சங்கத்தின் துணைச்செயலாளர் அல்ஹாஜ் எம். முனீர் அஹ்மத் அவர்களின் இல்லத்தில் (கத்ஆ : 3, ஷாரா : 6, வீட்டு எண் : 23, தொலைபேசி : 6633054) குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-tic) ஏற்பாடு செய்யும் ‘தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி’ மற்றும் ‘குவைத் மீலாது (ஹிஜ்ரி 1429) மாநாடு ஒலி / ஒளிப்பேழைகள் வெளியீடு’ நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ ஹழ்ரத் அவர்களும், சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் ஏ. முஹம்மது அலீ ரஷாதி ஹழ்ரத் அவர்களும், சங்கத்தின் துணைச்செயலாளர் அல்ஹாஜ் எம். முனீர் அஹ்மத் M.A., அவர்களும் சிறப்புரையாற்றுகின்றனர்.
சங்கம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம், அதன் செயற்பாடுகள், கடந்து வந்த பாதை, எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., அவர்கள் எடுத்துரைக்கின்றார்.
கடந்த மார்ச் (2008) மாதம் சங்கம் செய்த மாபெரும் ஸீறத்(மீலா)துன் நபி சிறப்பு மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் மஜ்லிஸ் மதாரிஸுல் அரபிய்யா என்ற தமிழக அரபிக்கல்லூரிகளின் கூட்டமைப்பின் தலைவர், நீடுர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரியின் முனனாள் முதல்வர், சென்னை மந்தைவெளி பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைமை இமாம், வீரசோழன் கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் இன்னாள் முதல்வர், நாடறிந்த நாவலர், எழுத்தாளர், நூலாசிரியர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் ஓ.எம். அப்துல் காதிர் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் மீலாது மற்றும் குவைத் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளின் அடங்கிய ஒலி / ஒளிப்பேழைகள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளன.
இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் இந்திய, இலங்கையைச் சார்ந்த தமிழ் இஸ்லாமியர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளதாகவும் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.K-Tic.com என்ற இணையதளத்தை பார்வையி டுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http: //groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு அழைப்பு விடுக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி :
தகவல் தொடர்பு பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
இணையதளம் : http://www.K-Tic.com
மின்னஞ்சல் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹூ குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

குறிப்பு :
இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்… குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஏப்ரல் 19, 2008

துபையில் இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) நடத்திய இஸ்திமா நிகழ்ச்சி

துபையில் இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) நடத்திய இஸ்திமா நிகழ்ச்சி

துபை மண்டல இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) சோனாப்பூர் கிளையின் சார்பாக, சோனாப்பூர் பலிதியா கேம்ப் பள்ளிவாசலில் 18.4.08 வெள்ளிக்கிழமையன்று அஸர் முதல் இஷா வரை இஸ்திமா நடைபெற்றது. துபை மண்டல முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் சகோதரர்.கொடுங்கையூர். மொய்தீன் அவர்கள் தலைமையெற்க, சகோதரர். மேலப்பாளையம். மெளலானா அவர்கள் கிராஅத் ஓதினார். இஸ்திமா நிகழ்ச்சியினை சகோதரர். பரமக்குடி. எ.ஏஸ். இப்ராஹீம் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். முதல் அமர்வில் சகோதரர். கொடுங்கையூர். அமீர் சுல்தான் அவர்கள் “திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு” என்ற தலைப்பிலும், இரண்டாவது அமர்வில் சகோதரர் நூருல் அமீன் அவர்கள் “ஷிர்க்கை ஒழிப்போம்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் துபை முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக 22.2.2008 அன்று நடைப்பெற்ற இரத்த தான முகாமில் கலந்துக்கொண்டு இரத்த கொடுத்த சகோதரர்களுக்கு, இரத்தம் தானம் செய்ததற்கான அடையாள அட்டையானது சகோதரர். சுலைமான் ஹாஜியார் அவர்களிடம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதனை சோனாப்பூர் கிளை முஸ்லிம் முன்னேற்றக்கழக நிர்வாகி சகோதரர். திருச்சி. நியாஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

சகோதரர். நிஜாமுதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த, இறுதியாக துஆ ஓதப்பட்டு நிகழ்ச்சியானது அல்லாஹ்வின் உதவியால் மிகச்சிறப்பாக முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் துபை மண்டல முஸ்லிம் முன்னேற்றக்கழக பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். சோனாப்பூர் பகுதியில் பல நாட்டை சார்ந்த தொழிலாளர்கள் வசிப்பதால், மொழி தெரியாவிட்டாலும் தமிழ் இஸ்லாமிய நிகழ்ச்சியினை ஆர்வமுடன் கேட்க வேண்டி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாட்டை சார்ந்த தொழிலாளர்களும் கலந்துக்கொண்டனர். மற்றும் தொழிலாளார்கள் அதிகம் வசிக்கும் அல்கூஸ் போன்ற பகுதியிலிருந்தும் ஏராளமான சகோதர உள்ளங்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

ஏப்ரல் 11, 2008

பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் மீலாது விழா!

Filed under: சங்கம், தமிழ், பாங்காக், மீலாது, முஸ்லிம் — முஸ்லிம் @ 4:52 முப

பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் மீலாது விழா!

பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் சார்பில் கடந்த 23.03.2008 அன்று மீலாது விழா நடத்தப்பட்டது. முன்னதாக ரபீஉல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை தினமும் மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது.

23.03.2008 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் பாங்காக் மஸ்ஜிதில் மீலாது விழா நடத்தப்பட்டது. துவக்க நிகழ்ச்சியாக, காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் ஹாஜி அஹ்மத் சுலைமான் தலைமையில் மீலாது விழா நிகழ்ச்சிகள் துவங்கின. காயல்பட்டணம் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ முன்னிலை வகித்தார்.

காயல்பட்டணம் ஹாஃபிழ் ஓ.எ.சி. செய்யிது முஹம்மத் கிராஅத் ஓதினார். சங்கத்தின் செயலாளர் ஹாஜி ஹ{மாயூன் வரவேற்புரையாற்றினார். ஹாஜி கத்தீப் மீராஸாஹிப், ரைட் ஜெம்ஸ் – ஹாஜி அஷ்ரஃப் ஆகியோர் பைத் பாடினர்.

ஹாஃபிழ் ஐதுரூஸ் ஆலிம் மற்றும் பாங்காக் மஸ்ஜித் இமாம் மவ்லவீ முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.

தொடர்ந்து சென்னை – மந்தைவெளி மஸ்ஜித் இமாம் மவ்லவீ இல்யாஸ் மீலாது சிறப்புரையாற்றினார். பின்னர் அனைவராலும் ஸலாம் பைத் பாடப்பட்டது. நன்றியுரைக்குப் பின், மவ்லவீ ஓ.எ.சி.ஷாதுலீ ஆலிம் துஆவுடன் விழா நிறைவுற்றது.

விழாவில் கலந்துகொண்ட சுமார் 300 பேருக்கு லுஹ்ர் தொழுகைக்குப் பின் மதிய உணவு விருந்துபசாரம் செய்யப்பட்டது.

விழாவில் பாங்காக் மஸ்ஜித் மக்தப் பிரிவு மாணவ-மாணவியரின் சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன. விழாவில் பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டனர்.

விழா நிகழ்ச்சிகளை சங்கத்தின் துணைத்தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தொகுத்து வழங்கினார்.

http://www.kayalpatnam.com/shownews.asp?id=1698

ஏப்ரல் 3, 2008

துபாய் கல்விக் கண்காட்சியில் தமிழக கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு

துபாய் கல்விக் கண்காட்சியில் தமிழக கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு

துபாய் கல்விக்கண்காட்சி ஏப்ரல் 2 முதல் 5 வரை துபாய் உலக வர்த்தக மையம்
அருகேயுள்ள கண்காட்சி அரங்கில் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில்
தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மற்றும் திருச்சி,
ஸ்ரீஇராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மையம்,
சென்னை ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி மையங்கள் உட்பட
இந்தியா, வளைகுடா, அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மையம் குறைந்த செலவில் மருத்துவப் படிப்புகளை
ரஷ்ய பல்கலைக்கழகம் மூலம் வழங்கி வருகிறது. ரஷ்ய் பல்கலைக்கழகம் குறித்த
விபரங்களை தொலைபேசி வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம். தொடர்பு எண் சுபாஷ்
: 050 354 1775

இக்கல்வி கண்காட்சியில் வேலைவாய்ப்பு வழங்கும் பல்வேறு வங்கிகள், வளைகுடா
வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவையும்
பங்கேற்றுள்ளன. வேலை தேடும் வளைகுடா பயணம் மேற்கொண்டுள்ள தமிழக
இளைஞர்களுக்கு மிகுந்த பயனுடையதாய் இருக்கும் என கண்காட்சிக்கு
வருகைபுரிந்துள்ள வேலை தேடும் தமிழக இளைஞர் நபீஸ் அஹமது தெரிவித்தார்.

இக்கண்காட்சியில் இந்திய மற்றும் வளைகுடா இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து
கொண்டு உயர்கல்வி குறித்த விபரங்களைச் சேகரித்து செல்வதாக சென்னை ஏ.ஜே.
கல்வி ஆலோசனை மைய பிரதிநிதி சுபாஷ் தெரிவித்தார்.

மார்ச் 27, 2008

பஹ்ரைனில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி

Filed under: இஸ்லாம், தமிழ், துபாய், பஹ்ரைன் — முஸ்லிம் @ 9:30 பிப

பஹ்ரைனில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி

பஹ்ரைன் தாருல் ஈமான் தமிழ் இஸ்லாமிக் சென்டர் சார்பில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி 29.03.2008 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை முஹர்ரக் அல் இஸ்லாஹ் சொசைட்டியில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியினை துபாய் ஜலாலுதீன் ஒருங்கிணைத்து நடத்த இருக்கிறார்.

மேலதிக விபரங்களுக்கு 3 9 0 3 2 2 2 3 மற்றும் 3 9 0 7 3 4 6 4
ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Create a free website or blog at WordPress.com.