தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 3, 2007

JULY-1 ல் புதிய சட்டம் – முஸ்லிம்களுக்கு ஆந்திராவில் 4% இட ஒதுக்கீடு

அமைச்சர் முகம்மது அலி ஷபீர்

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு தர திட்டம்

ஐதராபாத்: முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீடு அளிக்க, ஆந்திர அரசு தயாராக உள்ளது.மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள், பொருளாதார அளவில் பின்தங்கிய நிலையில் உள்ளதால், அவர் களுக்கு நான்கு சதவீத ஒதுக்கீடு அவசியமாகிறது என்று நியாயப்படுத்தும் அரசு, அது தொடர்பாக, சட்டத்திருத்தம் கொண்டு வர உள்ளது. ஜூலை 1ம் தேதி, சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர் பான முடிவை எடுத்த போது, பிரச்னை, கோர்ட்டுக்கு போய் விட்டது. இந்நிலையில், ராஜசேகர ரெட்டி அரசு, இப்போது, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது. இது சட்டப்படி செல்லத் தக்கதாக இருக்குமா என்பது கேள்விக்குறியே.சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது அலி ஷபீர் கூறியதாவது:வரும் கல்வியாண்டில், இச்சட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சட்டத்தின் படி, முஸ்லிம் களுக்கு ஒதுக்கீடு அளிப்பதில் எந்த பிரச்னையும் வராது என்று நம்புகிறோம். முஸ்லிம்கள் பொருளாதார நிலை குறித்தும், அவர் களுக்கு ஒதுக்கீடு அளிக்க வகை செய்வது பற்றியும், அரசுக்கு பரிந்துரைக்க அமைக்கப்பட்ட கமிட்டி, தன் அறிக்கையை அரசிடம் விரைவில் அளிக்க உள்ளது.

சட்டச் சிக்கல் எதுவும் வராமல் இருக்கும் வகையில் தான், முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.எந்த ஒதுக்கீட்டை சேர்த் தாலும், அதில் சட்டப்படி எல்லா நியாயங்களும் இருக்க வேண்டும்; மொத்தத்தில் 50 சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது என்று, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, ஏற்கனவே உள்ளது. அதை கருத்தில் கொண்டு தான், இப்போது மாற்றம் கொண்டு வரப் பட்டுள்ளது. ஏற்கனவே, முஸ்லிம் களுக்கு ஐந்து சதவீத ஒதுக்கீடு அளிக்க முடிவு செய்த போது, கோர்ட்டில் பிரச்னை கிளப்ப காரணம், மொத்தத் தில் 51 சதவீதத்தை தாண்டியது என்பது தான். அதனால் தான், ஒரு சதவீதம் குறைத்து, நான்கு சதவீதமாக மாற்றியுள்ளது அரசு. அதனால், மொத்த ஒதுக்கீடு சதவீதம் 50 ஆக இருக்கும். அதனால், இந்த முறை, முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு அளிப்பதை அமல் படுத்துவதில் எந்த சட்டச்சிக்கலும் இருக்காது என்று அரசு நம்புகிறது.

நன்றி : தினமலர்

குறிப்பு : இதுபோன்ற அறிவிப்பை தமிழக அரசும் வெளியிட்டு கூடியவிரைவிலேயே தமிழக சட்டமன்றத்தில் அவசர சட்டம் மூலம் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தமிழகத்தின் முஸ்லிம் எம்.எல்ஏ க்களும் எம்.பி க்களும் மற்றும் ஆழும் கட்சியோடு கூட்டணியில் உள்ள முஸ்லிம் அமைப்புக்களும் ஆவன செய்வார்களா?

இட ஒதுக்கீடு கிடைத்த விட்டது, 1 வாரத்தில் அவசர சட்டம் என்று முதல்வர் அறிவித்து விட்டார் “அல்லாஹீ அக்பர் அல்லாஹீ அக்பர்” என்று என்று மெயிலுக்கு மேல் மெயில் அடித்த தமுமுக கண்மணிகளே ஒரு வாரத்திற்கு இன்னும் இரன்டொரு நாட்களே உள்ளன!! ஒரு வாரத்திற்குள் வேண்டாம் இந்த ஆட்சிக் காலத்திற்குள்ளாவது அந்த அறிவிப்பை வெளியிட்டு சட்டமாக்க சொல்லுங்கள். இல்லையேல் தமுமுக வின் வாக்குறுதிகள், வாதங்கள் எல்லாம் வாய்ஜாலங்களாக வக்ஃப் வாரியத்திற்குள் மூழ்கி விட்டதாக நாளை பேச்சு வரலாம் இன்னும் நாளைய சமுதாயம் பதவிக்கு சமுதாயத்தை அடகு வைத்ததற்காக உங்களை தூற்றலாம்!!

பதவிகளை உதறி தள்ளிவிட்டு சமுதாய நலனுக்காக போராடுவதற்காக தயாராகுங்கள் இல்லையேல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு அரசில் பதவிகளை வாங்கிக்கொண்டு நாம் நடத்தும் போராட்டங்கள் எல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே அர்த்தமாகும்!! சமுதாயத் தலைவர்களும் தொண்டர்களும் சிந்திப்பார்களா?

Create a free website or blog at WordPress.com.