தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 28, 2008

தமுமுக இணையத் தளம் முக்கிய அறிவிப்பு

Filed under: தமுமுக — முஸ்லிம் @ 7:54 பிப
தமுமுக இணையத் தளம் முக்கிய அறிவிப்பு

சில தொழில் நுட்பக் காரணங்களால் தற்காலிகமாக நமது இணையத்தள முகவரிகளான

www.tmmkonline.orgwww.tmmk.in

 

இயங்கவில்லை.

ஆனால் பின்வரும் முகவரிகள் மூலம் நமது இணையத்தளத்தை நீங்கள் பார்க்கலாம்

www.tmmk.infowww.tmmkonline.netwww.tmmkonline.com

 

 

மேலே உள்ள செய்தி தமுமுக தலைவர் திரு. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து பெறப்பட்டது. சமுதாய மக்களின் தகவலுக்காக இங்கு பிரசுரிக்கப்படுகின்றது. –முகவைத்தமிழன்

 

புதுப்பிக்கப்பட்ட செய்தி : (29.07.2008 நேரம் இந்திய நேரம் மாலை 5.30)

தமுமுக தலைவர் திரு. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் மின்னஞ்சல் முகவரியான jawahir@tmmk.in சரியாக வேலை செய்வதாகவும் இனி அதிலேயே அவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் அதே போல் தமுமுக வின் www.tmmk.in என்ற இணைய முகவரியும் பிரச்சினைகள் நீங்கி சரியாக வேலை செய்வதாகவும் திரு ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மினஞ்சல் மூலம் தெறிவித்தள்ளார் என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

—– Original Message —–
From: jawahirullah
To: makkalurimai@gmail.com
Sent: Tuesday, July 29, 2008 3:09 PM
Subject: my email

Dear All,

My email id jawahir@tmmk.in is now working allright. You can communicate to me in this address. Also kindly note our website with url www.tmmk.in which was down has been set right. You can browse our website in this url. Kindly inform our friends.

jawahirullah

ஜூன் 19, 2008

சிங்கப்பூரில் இரத்த தான முகாம்

Filed under: சிங்கப்பூர், தமுமுக — முஸ்லிம் @ 6:48 முப

வரும் ஜீன் 22ம் தேதி சிங்கப்பூரில் உள்ள பென்கூலன் பள்ளிவாசலில் தமிழ்நாட முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சிங்கப்பூர் கிளை மாபெரும் இரத்த தான் முகாம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தள்ளது.

மனித நேயம் மிக்க இப்பணியில் பங்களிக்க விரும்புவோம் தங்கள் பெயர்களை பதிவு செய்வதற்கு 92282984 (சகோ. அக்பர் அலி) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு சிங்கப்பூர் தமுமுக கேட்டுக்கொள்கின்றது.

செய்தி : தமுமுக சிங்கப்பூர்

ஜூன் 15, 2008

முகவை தமுமுக வின் கல்வி உதவி

Filed under: தமுமுக, முகவை, TMMK Ramnad — முஸ்லிம் @ 8:48 பிப
அல்லாஹ்வின் திருப்பெயரால்…

இராமநாதபுரத்தில் தமுமுக வின் கல்வி உதவி


இராமநாதபுரத்தில் நகர் தமுமுக வழங்கிய கல்வி உதவி நிகழ்சியில் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப தங்கவேலன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ரவி சந்திர ராமவன்னி மற்றும் இராமநாதபுர (மத்திய) மாவட்ட தமுமுக தலைவர் சலிமுல்லாஹ் கான் உட்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(இன்ஷாஅல்லாஹ்) கல்லாமை என்பதை இல்லாமையாக்குவோம்!

இரத்த தானம் செய்தீடுவீர்! மனித உயிர் காக்க உதவிடுவீர்!!

வரதட்சணைக் கொடுமைகளை ஒழிப்போம்! மஹர் கொடுத்து மணம் முடிப்போம்!!!

மே 24, 2008

மேலப்பாளையத்தில் தமுமுக வின் திட்டத்தால் கைதான மாநகராட்சி ஊழியர்

Filed under: தமுமுக, மேலப்பாளையம், லஞ்சம் — முஸ்லிம் @ 4:02 பிப
மாட்டிக் கொண்ட மாநகராட்சி ஊழியர்

நெல்லை, மேலப்பாளையம், சாயன் தரகன் தெருவைச் சார்ந்தவர் மௌலவி காசிம் பிர்தௌசி, இவர் ஹாமீம்புரம் தவ்பா பள்ளியில் இமாமாகவும் உள்ள இவர் த.மு.மு.க.வின் தலைமைக் கழக பேச்சாளரும் ஆவார். இவரது மாமியார் ஜெய்லானி தனது பழைய வீட்டைப் புதுப்பித்து மாடியுடன் கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு புதிதாக தீர்வை செலுத்த வேண்டி மாநகராட்சிக்கு மனு செய்திருந்தார்.

இதனை அறிந்த நெல்லை மாநகராட்சி ஊழியர் 34வது வார்டு பில் கலெக்டர் பரமசிவம் (47) ஜெய்லானி அவர்களிடம் ‘உங்கள் வீட்டின் மதிப்பை குறைத்து மதிப்பீடு செய்து தீர்வையும் விரைவில் பெற்று தருகிறேன். அதற்கு நீங்கள் எனக்கு ரூ.5000ஃ- தர வேண்டும்’ என்று கூறியுள்ளார். இத்தகவல் காசிம் அறிந்தவுடன் மேலப்பாளையம் நகர நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்பு அவர் நகர நிர்வாகிகளுடன் நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திட்டத்தின்படி ரூ.5000ஃ-த்திற்கான நோட்டுகளில் இராசயன பவுடர் பூசப்பட்டது. பின்பு பரமசிவத்திடம் காசிம் இன்று மாலை 5.00 மணிக்கு என்னுடைய வீட்டில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று தகவல் தெரிவித்தார்.

மாலை 5 மணிக்கு முன்பாகவே லஞ்ச ஒழிப்பு போலீசார் காசிம் பிர்தௌசி வீட்டில் மறைந்திருந்தனர். சரியாக 5 மணிக்கு அங்கு வந்த பரமசிவத்திடம் காசிம் பிர்தௌசி ரூ.5,000ஃ- த்தை வழங்கினார். பரமசிவம் அதனை பெறும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவருடைய வீட்டிலும் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர். த.மு.மு.க வினரின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாரட்டினர்.

செய்தி: நெல்லை உஸ்மான்.

மே 20, 2008

நெல்லையில் சமூக தீமை ஒழிப்பு பொதுக்கூட்டம்

Filed under: தமுமுக, நெல்லை — முஸ்லிம் @ 3:44 முப

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நெல்லை நகர 52வது வார்டு கிளை சார்பாக சமூக தீமை ஒழிப்பு பொதுக்கூட்டம் டவுண் உழவர் சந்தை அருகில் நகரத் தலைவர் காதர் தலைமையில் நடைபெற்றது. 52வது வார்டு தலைவர் முகம்மது பாபு வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான், தலைமைக் கழக பேச்சாளர் காசீம் பிர்தௌசி, ஜாக் தாயீ ரபீக் பிர்தௌசி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு: நெல்லை உஸ்மான் கான்

ஏப்ரல் 25, 2008

மேலப்பாளையம் நகர த.மு.மு.க.செயற்குழு கூட்டம்

Filed under: தமுமுக, மேலப்பாளையம் — முஸ்லிம் @ 9:41 பிப

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.

மேலப்பாளையம் நகர த.மு.மு.க.செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மேலப்பாளையம் நகர செயற்குழு கூட்டம் 20.04.2008 ஞாயிறு இரவு 8.30 மணிக்கு நகர த.மு.மு.க.அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாளை ளு.ரபீக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான் முன்னிலை வகித்தார். நகர தலைவர் மு.ளு.ரசூல் மைதீன், நகர செயலாளர் யு.ஆ.மைதீன் பாதுஷா, பொருளாளர் யு.காஜா, துணை தலைவர் மு.மு.அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் நு.ஆ.அப்துல் காதர் உட்பட அனைத்து வார்டு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. சொத்து வரியை உயர்த்திய நெல்லை மாநகராட்சியை வன்மையாக கண்டிப்பது.

2. தொடர் மின்வெட்டை சரி செய்யாத மின் வாரியத்தை வன்மையாக கண்டிப்பது.

3. விலைவாசி உயர்வுக்கு காரணமான ஆன் லைன் வர்த்தகத்தை தடை செய்ய மத்திய அரசை கேட்டுக் கொள்வது.

4. ரேசன் கார்டு பெயர் திருத்தம் செய்யும் நடைமுறையில் கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் பாளையங்கோட்டை வட்ட வழங்கல் துறையை கண்டிப்பது, மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு சரி செய்ய கோருவது.

5. ஹாமீம்புரம் 12 தெருக்கள், ஞானியரப்பா நகர் 8 தெருக்கள், பங்களப்பா நகர் 5 தெரு, ரஹ்மானியாபுரம் 2 தெரு, ராஜா நகர், தாய் நகர், அமுதா நகர் உள்ளிட்ட சுமார் 25 ஆயிரம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு ஒரு அடக்கஸ்தலம் (மயானம்) தான் உள்ளது. எனவே, மேலும் ஒரு அடக்கஸ்தலத்திற்கு அரசு ஒரு இடத்தை ஒதுக்கி தர அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

6. மே 10 அன்று மேலப்பாளையத்தில் த.மு.மு.க. தலைவர் ஆ.ர்.ஜவாஹிருல்லாஹ் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் நகர தலைவர் மு.ளு.ரசூல் மைதீன் நன்றி கூறினார்.

செய்திகள் : K.S.ரசூல் மைதீன்

ஏப்ரல் 21, 2008

ஏர்வாடியில் மதுக் கடையை அகற்றக் கோரி போராட்டம்

Filed under: ஏர்வாடி, தமுமுக, நெல்லை, மது ஒழிப்பு — முஸ்லிம் @ 10:30 முப
TAMIL MUSLIM READER – தமிழ் முஸ்லிம் திரட்டி
மதுக் கடையை அகற்றக் கோரி போராட்டம்.


நெல்லை மாவட்டம், ஏர்வாடி மெயின் ரோட்டில் மக்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ள செலக்ட் சப்பல் தெருவில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இத்தெருவில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் பெண்கள் கடை வீதிக்கு செல்லும்போது இம்மதுபான கடையில் மது அருந்திவிட்டு, குடிகாரர்கள் பெண்களை நோக்கி ஆபாச வார்த்தைகள் கூறுவதோடு அப்பகுதி போக்குவரத்திற்கும் பெரும் இடையூறு செய்கின்றனர்.

இக்கடைய அகற்றக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உரிய நபர்களிடம் பலதரப்பினர் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. எனவே, இக்கடையை அகற்றிட வலியுறுத்தி ஏர்வாடி த.மு.மு.க. இக்கடையின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏர்வாடி கிளைத் தலைவர் மாஹின் தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட தலைவர் பாளை ரபீக், மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான், வட சென்னை மாவட்ட தலைவர் ஹமீது, நெல்லை மாவட்ட துணை செயலாளர்கள் அன்சர் மற்றும் மீரான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் சர்வ கட்சி மற்றும் அனைத்து சமுதாய மக்களும் திரளாக கலந்து கொண்டனர். மதுபானக் கடைக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

செய்தி: நெல்லை உஸ்மான்

ஏப்ரல் 11, 2008

அச்சன்புதூர் ஆர்ப்பாட்டம்

Filed under: அச்சன்புதூர், தமுமுக — முஸ்லிம் @ 8:51 பிப
அச்சன்புதூர் ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ளது அச்சன்புதூர் கிராமம். இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய இடம் ஆகும். இவ்வூரில் ஏறக்குறைய 2500 க்கும் அதிகமான ரேசன் கார்டுகள் இருந்தும் ஒரே ஒரு ரேசன் கடை மட்டுமே இயங்கி வருகிறது.

இக்கடையை நடத்துபவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதால் நியாயமாக மக்களுக்கு சேர வேண்டிய பொருட்கள் கிடைக்காமல் போகிறது. பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. மேலும், இவ்வூரில் ஊராட்சி நிர்வாகம் முற்றிலுமாக நிர்வாக அதிகாரியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் தனக்கு கிடைக்க வேண்டிய பங்குத் தொகை கிடைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளதால், எந்த மக்கள் பணியும் நடப்பதே இல்லை. அத்திட்டங்களுக்கான பணம் மட்டும் முறையாக பில்கள் அனுப்பப்பட்டு பணப்பட்டுவாடா அதிகார தரகர்களுக்குள் பங்கு வைக்கப்படுகிறது.

இவ்விரு பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தி அச்சன்புதூர் த.மு.மு.க. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு

நெல்லை உஸ்மான் கான்.

மார்ச் 25, 2008

முஸ்லிம் இளைஞன் மீது காவல்துறை கட்டுமிரான்டி தாக்குதல்

Filed under: காவல்துறை அராஜகம், தமுமுக — முஸ்லிம் @ 12:47 பிப
வாசுதேவநல்லூரில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட
முஸ்லிம் இளைஞன்.

காவல்துறையால் தாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்

நெல்லை மாவட்டம், புளியங்குடியை அடுத்துள்ள ஊர் வாசுதேவநல்லூர். இங்கு சுமார் 2,000 முஸ்லிம் மக்கள் வசித்து வருகிறார்கள். வாசுதேவநல்லூரில் கோட்டை தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது 13 வயது மகன் பாதுஷா அவ்வூரைச் சார்ந்த சில இளைஞர்களுடன் எப்பொழுதும் பேசிக் கொண்டிருப்பது பிடிக்காத அப்துல் காதர் பலமுறை தனது மகனின் நண்பர்களான நிஜாம் சேக் உள்ளிட்டோரை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று மதியத்திற்கு மேல் பாதுஷா, நிஜாம் சேக் மற்றும் 6 நபர்களுடன் ஊரில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். தன் பேச்சை தொடர்ந்து மதிக்காமல் நடந்து வரும் தன் மகன் மற்றும் நண்பர்கள் மீது ஆத்திரமுற்று தன் நண்பரான வாசுதேவநல்லூர் உளவுத்துறை தலைமைக் காவலர் கண்ணனிடம் தன் மகனின் நண்பர்களை கண்டிக்குமாறு வாய்மொழியாக புகார் செய்துள்ளார். உடனே கண்ணன் குளக்கரைக்கு வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த நிஜாமை வலுக்கட்டாயமாக காவல் நிலையம் கொண்டு சென்று சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளார். அப்போது அங்கிருந்த கணேசன். பண்டாரம் ஆகிய இரு காவலர்களும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இம்மூவரும் சேர்ந்து நிஜாமை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், இவரிடம் நாளை அழைக்கும்போது வர வேண்டும் என்று கூறி அனுப்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த நிஜாமின் வாயிலிருந்து இரத்தம் வர தொடங்கியுள்ளதோடு, மூச்சு விடவும் அவதிப்பட்டுள்ளார். இவருடைய தந்தையார் ஏற்கனவே விபத்தில் காயமுற்று நடக்க இயலாத நிலையில் உள்ளார். இவருடைய உறவினர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்க முற்பட்டபோது அவர்கள் சிசிக்கை அளிக்க மறுத்துள்ளனர். இவ்விஷயம், புளியங்குடி த.மு.மு.க.நகர நிர்வாகிகளுக்கு தெரிய வர அவர்கள் தலையிட்டு நிஜாமை புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது நிஜாம் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் கேள்விப்பட்ட அவ்வூர் மக்கள் ஞாயிறு இரவு வாசுதேவநல்லூர் மெயின் ரோட்டில், குற்றம் இழைத்த காவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்தனர். உடனடியாக அங்கு விரைந்த புளியங்குடி நகர நிர்வாகிகளிடம், புளியங்குடி துணை கண்காணிப்பாளர் திரு.அசோக்குமார் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. உடனடியாக 3 காவலர்களும் ஆயுதப் பிரிவிற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வாசுதேவநல்லூரில் திங்களன்று கூடிய த.மு.மு.க.உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் செவ்வாயன்று (25.03.2008) கடை அடைப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உட்பட்ட உளவுப் பிரிவினர் தங்களது பணியை மறந்து சட்டம், ஒழுங்கு காவல்துறையினருடன் கை கோர்த்து கொண்டு சில இடங்களில் கட்டப் பஞ்சாயத்து, பணம் வசூல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதோடு உண்மை தகவல்கள் கண்காணிப்பாளருக்கு தெரியாமல் மறைத்து விடுகின்றனர். துடிப்புடன் செயல்படுபவர் என்று பெயர் பெற்ற நெல்லை மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளர் திரு.தினகரன் அவர்கள் இதுபோன்ற நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதோடு உளவுத்துறைக்கு தகுதியான நபர்களை பணி அமர்த்த வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

செய்தி தொகுப்பு : நெல்லை உஸ்மான்.

மார்ச் 23, 2008

மாநிலங்களவை எம்.பி. பதவி: தமுமுகவுக்கு ஏமாற்றமா?

Filed under: தமுமுக — முஸ்லிம் @ 10:39 முப

எம்.அஹ்மது, இளையான்குடி
கேள்வி : முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் உள்ளதாக முதல்வரை சந்தித்து முறையிட்டுள் ளீர்கள். இச்சிக்கல் குறித்து ஆரம்பத் தில் நீங்கள் மறுத்ததாகவும், பிறகு ஏற்றுக் கொண்டதாகவும் உங்களை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். உண்மை நிலை என்ன?

பதில் : முஸ்லிம்களுக்கு அüக்கப் பட்ட 3.5% இடஒதுக்கீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளம்பரம் செய்த சில பணிகüல் முழுமையாக கிடைக்கவில்லை என்பதை நாம் மறுக்க வில்லை, டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் வெüயிட்ட விளம்பரத்தை பார்த்த பிறகு, அந்த பாரபட்சத்தை அந்த ஆணையத்திற்கு சுட்டிக்காட்டி முதல் கடிதத்தை அன்று எழுதி உடன் முறையிட்டது தமுமுகதான் என்பதை சொல்லிக் கொள்கிறோம். ஒரு வார பத்திரிக்கையில் இது பற்றிய செய்தி வந்த அதே வாரம் நமது மக்கள் உரிமையிலும் (4:32) அதை சுட்டிக்காட்டி, போராடத் தயங்க மாட்டோம் என்று எழுதியிருந் தோம். அதன் பிறகு உயர் அதிகாரிகளை எல்லாம் சந்தித்து கிருத்தவர்களுக்கு சரியான எண்ணிக்கையில் இடஒதுக்கீடு அமலாகும்போது முஸ்லிம்களுக்கு ஏன் இப்படி சிக்கல் உள்ளது என்று வினவினோம்.

அதன்பிறகுதான், ”ரோஸ்டர் சிஸ்டம்’ என்ற ஒன்று இருப்பதாகவும், அதன் வழியாகத்தான் இதை செயல்படுத்து கிறோம் என்றும் அதிகாரிகள் விளக்கி னார்கள். அதன் பிறகுதான் ரோஸ்டர் சிஸ்டம் என்றால் என்ன? இடஒதுக் கீட்டில் அது எந்த வகையில் தலையிடு கிறது என்பதையெல்லாம் விளக்கி மக்கள் உரிமையில் 4:33 எழுதியிருந்தோம்.

நாம் இப்படி உண்மை நிலையை விளக்கிய பிறகுதான் களவாடப்பட்ட பத்திரிக்கையில் (உரிமை 12, குரல் 20), நம்மை விமர்சிப்பவர்கள் கூட அதை ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு விளக்கத்தை எழுதியிருந்தார்கள்.

மிகவும் நுட்பமான இந்த விவகா ரத்தை எப்படி கையாள்வது? அதை எப்படி தீர்ப்பது? என்பது பற்றி தமுமுக நிர்வாகக் குழுவில் ஆலோசித்தோம். நீதிமன்றத்திற்குப் போனால் அது இடஒதுக்கீட்டிற்கே ஆபத்தாக முடிந்து விடக்கூடும். போராட்டம் நடத்துவது என்பது விளம்பரத்திற்காக இருக்கக் கூடாது. மாநில அரசோடு நல்ல புரிந்துணர்வு உள்ளதால், மீண்டும் முதல்வரை சந்தித்து, ரோஸ்டர் முறையை நீக்கக் கோருவது என்றும், எதுவுமே நடக்காத பட்சத்தில்தான் இறுதியாக போராட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.

எனவே இந்த பாரபட்சத்தை நீக்குவதற்கு மாற்று வழி என்ன என்பதை ஆய்வு செய்வதற்காக தமுமுக தலைவர் தலைமையில், ஓய்வுபெற்ற நமது சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் குழு ஒன்றை நியமித்தோம். பழுத்த அனுபவசாலிகளைக் கொண்ட அந்தக் குழு மாற்று திட்டத்தை வகுத்தது. பிறகு அந்த திட்டத்தை ரோஸ்டர் முறையை வடிவமைத்த பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கான அரசு செயலாளர். அத்துறைக்கான அமைச்சர் திரு. ஆற்காடு வீராசாமி, தமிழக அரசின் சட்டத்துறைச் செயலாளர் ஆகியோரிடம் எடுத்துச்சென்று அüத்ததுடன் மட்டுமில் லாமல் ரோஸ்டர் முறையில் யூனிட் என்பது குறிப்பிட்ட பணியாகத்தான் இருக்க வேண்டுமே தவிர மாவட்டங் களாகப் பிரிந்த பிறகு அதிலுள்ள அலுவலகங்களை யூனிட்டாக கருதக் கூடாது என்பதை எடுத்துரைத்தோம். அவர்களும் நமது ஆலோசனை சரியானது என்பதை ஒத்துக் கொண் டார்கள். ஆனால் இந்த மாற்றத்தை எப்படி கொண்டு வருவது என்று யோசித்தார்கள். இச்சூழலில் ராஜ்யசபா தேர்தல் குறித்த வேட்பாளர்கள் அறிவிப்பெல்லாம் முடிந்து அந்த அரசியல் பரபரப்பு ஓய்ந்தபிறகு கடந்த 07.03.2008 அன்று தமிழக முதல்வரை தமுமுக தலைவரும், பொதுச் செலாளரும் சந்தித்தார்கள்.

ரோஸ்டர் முறை குறித்து தமுமுக நிர்வாகிகள் முதல்வரிடம் உரிய ஆதாரங்களுடன் விளக்கிய பொழுது, அவர் அதிர்ந்து விட்டார். ”இது நீதி கட்சி கால நடைமுறை. அது இன்னுமா நடைமுறையில் உள்ளது” என்று அதிர்ச்சியாக முதல்வர் கேட்டார். (அதை முதல்வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒப்புக்கொண்டு பேசிய செய்தியைப் பார்க்கவும்) ””நான் உடனே அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கüன் கூட்டத்தைக் கூட்டி விசாரித்து சரி செய் கிறேன்” என்று கூறினார். அதன்பிறகு ரோஸ்டர் முறையை நீக்குவது குறித்து உரிய அதிகாரிகüடம் பேசியிருக்கிறார்.

இதனிடையே அருந்ததியின மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது குறித்து 12.03.2008 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு முழு அளவில் அமல் படுத்தப்படவில்லை என்றும், இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை தேவை என்பதையும் வலியுறுத்தி அதிரடியாகப் பேசினார். இதை முதல்வர் உட்பட பலரும் எதிர்பார்க்கவில்லை. பொதுச் செயலாளரை மேற்கோள்காட்டி அங்கு பேசிய விஜய டி.ராஜேந்தரும் அதையே வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய ஹைதர் அலி அவர்கள், ”’முஸ்லிம் களுக்கு 3.5% இடஒதுக்கீட்டை அரசு கொடுத்திருக்கிறது, ஆனால் அதிகாரிகள் அதை பல்வேறு காரணங்களை கூறி முழுமையாக பயன்பெற விடாமல் செய்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார். எந்த நோக்கத்திற்காக அங்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்ததோ, அதையும் பேசிவிட்டு, அங்கே சமுதாயத்தின் உரிமைக் குரலையும் உரக்கப் பதிவு செய்தார்.

அதற்கு தமிழக முதல்வர், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர் களின் பேச்சுக்கு பதிலüத்துப் பேசும் போது, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குழப்பத்தைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகப் பேசியது உள்üட்ட அனைத்து விபரங்களும் தமிழக அரசின் இணையதளத்திலும், 13.03.2008 அன்று வெüயான நாüதழ்கüலும் வெüவந்திருக்கிறது.

ஆக தமுமுகதான் இப்பிரச்சனையை முதன்முதலில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு கொண்டு சென்று தொடர்ந்து அதிகாரி களை சந்தித்து முறையிட்டது. மேலும் முதல்வரை சந்தித்து இதுகுறித்து நேரில் முறையிட்ட ஒரே முஸ்லிம் அமைப்பும் தமுமுகதான்! இவை அனைத்தையும் தூய உள்ளத்தோடுதான் செய்து வருகிறது.

அதனால்தான் முதல்வரே தமுமுகவை குறிப்பிட்டு, அவர்களால்தான் இந்த ரோஸ்டர் சிக்கல் தீர்க்கப்பட உள்ளது என்பதையும் தெüவுபடுத்தியுள்ளார். (அல்ஹம்துலில்லாஹ்)

இடஒதுக்கீடு பாரபட்சம் குறித்து நாம் இதையெல்லாம் முன்பு மறுத்ததாக சிலர் வதந்தியை கிளப்புவதாகக் கேள்வி கேட்டுள்ளீர்கள். கருணாநிதி முஸ்லிம்களை ஏமாற்றிவிட்டார் என்றும், முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றும், முஸ்லிம்களுக்கு 1.5% இடஒதுக்கீடுதான் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ‘புளுகு’ பிரமுகர் அவதூறு கிளப்பினார். தமுமுகவையும் சீண்டினார். நாம் இதையெல்லாம் மறுத்தோம். இந்த சிக்கலுக்கும் முதல்வருக்கும் சம்பந்த மில்லை என்றும், இது அதிகாரிகள் செய்த குழப்பம் என்றும், நமக்கு 3.5% இடஒதுக்கீடுதான் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அதை பெறுவதில் ‘ரோஸ்டர்’ முறையில்தான் சிக்கல் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தோம். நமது நிலையை தெüவாகப் புரிந்து கொள்ளாதவர் கள்தான் பரபரப்பு கிளப்பினார்கள்.

ஆனால் பாவம்! நீதிமன்றத்தால் ”விளம்பரத்திற்காக செயல்படுபவர்கள்” என்ற பட்டத்தையும் வாங்கி, 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் கட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சமுதாயம் இதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.

இறைவன் மிகப்பெரியவன்! விளம் பரத்திற்காக செயல்படுபவர்களையும், உள்ளத்தூய்மையோடு செயல்படுவர் களையும் அவனே நன்கு அறிந்தவன்!

பி. முகம்மது அலி ஜின்னா, கோவை

கேள்வி : மாநிலங்களவை எம்.பி. பதவி தமுமுகவுக்கு கொடுக்கப்படும் என்று ஒரு செய்தி உலவியது. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி, தன்னிடம் சீட் கேட்ட கட்சிகளைப் பற்றி குறிப்பிடும்போது ஒரு இடத்தில் கூட தமுமுக கேட்டதாக சொல்லவில்லை. இது பற்றி சரியான விளக்கம் தேவை.

பதில் : உங்கள் கேள்வியின் இறுதிப் பகுதியில் பாதி பதில் இருக்கிறது. இப்போது மட்டுமல்ல சில மாதங்களுக்கு முன்பு கனிமொழி மற்றும் திருச்சி சிவா ஆகியோர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் இதே வதந்தி பரவியிருந்தது. தற்போது மாநிலங்களவைக்கான தேர்தலில் தமிழகத்திலிருந்து 6 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதும், அதில் திமுக கூட்டணியிலிருந்து ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதும், இச்செய்திகள் கடந்த இரண்டு மாதமாக கூட்டணிக் கட்சி களும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. கடந்த ஆறு மாதத்தில் சமுதாய மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக முதல்வரை சந்தித்து நாங்கள் பேசியுள்ளோம். அவரிடம் ‘வருகின்ற ராஜ்யசபா தேர்தலில் எங்களுக்கு ஒரு இடம் ஒதுக்குங்கள்’ என்று தமுமுக கேட்கவில்லை,
அரசிடம் சமுதாய பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே பேசி வருகிறோம். சமீபத்தில் இடஒதுக்கீடு சிக்கல் குறித்து பேசுவதற்காக முதல்வரை சந்தித்தோம். 05.03.2008 அன்று முதல்வர் தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி அனைத்தையும் அறிவித்த பிறகு 07.03.2008 அன்றுதான் அவரை சந்தித்தோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அப்போது மாநிலங்களவையில் முஸ்லிம் ஒருவருக்கு வாய்ப்பüக்க வேண்டும் என்று மட்டுமே கோரிக்கை வைத்தோம். சிறுபான்மையினர் குரலை ஒலிக்க வைப்போம் என்று நம்மிடம் தெரிவித் தார். நமது கோரிக்கையை ஏற்று திமுக சார்பில் வழக்குறைஞர் ஜின்னா அவர்கள் திமுகவின் வேட்பாளராக மார்ச் 9ம் தேதி அறிவிக்கப்பட்டார். வழக்குறைஞர் ஜின்னா அவர்களும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் தனக்கு இப்பொறுப்பு தரப்பட்டுள்ள தாகவும், இதனை மனதில் வைத்து செயல்படுவேன் என்றும் தினத்தந்தி நிருபரிடம் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை நிலை இப்படியிருக்க, சில விஷமிகளும் பிறரை குறைகூறியே வளர நினைப்பவர்களும் பரப்பும் வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என சமுதாய மக்களை தமுமுக கேட்டுக் கொள்கிறது.

எஸ்.ஆதம் மாலிக், காயல்பட்டினம்

கேள்வி : பழனி அருகே உள்ள பாலநத்தத்தில் தமுமுக சகோதரர்கள் தேவையற்ற விஷயங்களுக்காக வாழ்த்து சுவரொட்டி அடித்துள்ளார்கள். இதை தலைமை கண்டிக்கவில் லையா…?

பதில் : இச்செய்தி வந்தவுடன் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் அன்சாரியை தொடர்பு கொண்டு விசாரித்தோம். அதை உண்மை என்றவர், அவர்கள் இயக்கத்திற்கு மிகவும் புதியவர்கள் என்றும், நமது கொள்கை கோட்பாடுகளை முழுமையாகப் புரியாமல் ஆர்வத்தில் வந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இயக்கத் திற்கு நன்மை செய்கிறோம் என நினைத்து தவறு செய்துவிட்டார்கள் என்றும் மாவட்ட நிர்வாகிகள் விளக்கமüத்தனர். மேலும் இந்த செய்தி வந்த சில மணி நேரத்திற்குள் சுவரொட்டி ஒட்டப்பட்ட அந்த கிராமத்திற்கு மேல்மட்ட நிர்வாகிகள் சென்று விளக்கங்களை அüத்தார்கள் என்றும், அதன்பிறகு உடனடியாக, ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அவர்களே கிழித்து விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

நாம் நடந்த சம்பவங்களைக் கண்டித்த தோடு, அங்கு தர்பியா வகுப்புகளை எடுத்து புதியவர்களை ஒழுங்குபடுத்து மாறும் கேட்டுக்கொண்டோம். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் சென்ற பிறகு இதனை பரப்பி விடுபவர்கள் தமுமுகவை மூன்று மாதத்தில் அழித்துவிடுவேன் என்று அல்லாஹ்வை மறந்து சாபமிட்டு, அந்தக் கனவு நிறைவேறாமல் இரவெல் லாம் தூக்கமில்லாத நிலையில் இது போன்ற ஃபித்னாக்களை பரப்புவதை தங்கள் வாழ்வின் இலட்சியமாக்கிக் கொண்டு நமக்கு நன்மைகளை சேர்த்து தருகிறார்கள்.

நாள்தோறும் பெருகிவரும் புதிய கிளைகüல் சில சகோதரர்கள் அறியாமை யின் காரணமாக தவறு செய்துவிடுகிறார் கள். அவர்களை அரவணைத்து திருத்து வதுதான் நமது பணி. தெரிந்து பல அநியாயங்களை செய்பவர்களைவிட தெரியாமல் தவறு செய்யும் அப்பாவிகள் இரக்கத்திற்குரியவர்கள். அவர்களை நேர்வழிப்படுத்தும் பணியை இன்ஷா அல்லாஹ் நாம் செய்வோம்.. இதனை அரசியலாக்கி லாபத்தைப் பெற முயல் பவர்கள் லாட்ஜ், சொகுசு பேருந்து, தொலைபேசி லீலைகள் இத்தியாதி என நிரம்பி வழியும் தங்களது மற்றும் தங்களது இன்னாள் சகாக்கüன் முகத்தையும், முதுகையும், ஈனச் செயல்களையும் உற்றுப்பார்ப்பது நல்லது.

நன்றி : தமுமுக இணையத்தளம்

Older Posts »

Create a free website or blog at WordPress.com.