தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

செப்ரெம்பர் 14, 2007

Arabnews ன் இந்த ஃபத்வாவை பின்பற்ற பி.ஜே தயாரா? (மீள் பதிவு)

Filed under: arabnews, தாராவிஹ் — முஸ்லிம் @ 1:24 பிப
Arabnews ன் இந்த ஃபத்வாவை பின்பற்ற பி.ஜேயும் பி.ஜேயானிகளும் தயாரா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதரர்களே,

கடந்த சில நாட்களாக ஃபத்வா என்றால் என்ன? யார் வழங்குவது? என்ற விபரம் கூட இல்லாமல் தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை தனது எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்ற தனது கொள்கையின் அடிப்படையில் த.த.ஜ வின் தலைவர் பி.ஜே என்பவர் ஜாக் என்ற அமைப்பை சவுதி அரசாங்கத்திடம் போட்டுக்கொடுங்கள் ஏன் என்றால் அவர்கள் நம்மை போட்டுக்கொடுக்கிறார்கள் என்று ஒரு தலைவனுக்குறிய தன்மானம் சிறிதும் இல்லாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இவர்கள் சவுதி அரசாங்கத்தை திருப்தி படுத்திவிடலாம் (அப்பத்தானே அரபுச்சல்லி தடங்களின்றி வசூலாகும்) என்ற நப்பாசையில் ARABNEWS என்ற சவுதி பத்திரிகையில் வந்த பிறை சம்பந்தமான ஒரு கேள்விக்கான பதிலை ஃபத்வாவாக ஃபிளாஸ் நியுஸ் உட்டார்கள். பத்திரிகையில் வரும் கேள்விக்கான பதிலையெல்லாம் ஃபத்வாவாக மாற்றக்கூடிய திறமை ததஜ வின் தலைவர் பி.ஜேக்கு மட்டுமே சாத்தியம் அதை நம்பக்கூடிய மூலை கழுவி விடப்பட்ட பி.ஜே யானிகளும் குதித்து கும்மாளமிட்டார்கள். அதையும் அப்துல்லாஹ் என்பவர் மிகத் தெளிவாக எழுதி இவர்களின் பித்தளாட்டங்களை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார்.

ARABNEWS பத்திரிகையில் வரும் அனைத்து ஃபத்வாக்களையும் பி.ஜே யும் பி.ஜே யானிகளும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றால் அதே ARABNEWS பத்திரிகையில் கடந்த 29.09.2006 அன்று வெளியான ஒரு கேள்விக்கான பதிலில் (பி.ஜே யின் வாதப்படி ஃபத்வா) தராவிஹ் தொழுகை குறித்து ASHRAF T.K – TAIF ல் இருந்து கேட்டிருந்த கேள்விக்கான பதிலில் (பி.ஜே யின் வாதப்படி ஃபத்வா வில்) தராவிஹ் 20 ரக்காத் தொழ வேண்டும் என்றுள்ளது (இனைக்கப்பட்டுள்ள ARABNEWS கட்டிங்கை பார்க்கவும்).

பெரியதாக பார்ப்பதற்கு இதன் மேல் சொடுக்கவும்

இப்போது பி.ஜே க்கும் பி.ஜே யானிகளுக்கும் நமது கேள்வி என்னவென்றால், பிறை விஷயத்தில் ஒரு கேள்விக்கான பதிலை ஃபத்வா என்று ஃபிளாஸ் நியுஸ் உட்டு மற்ற இயக்கத்தவர்களை சவுதி அரசாங்கத்திடம் போட்டுக்கொடுக்கச் சொன்ன பி.ஜே அவர்களே, பி.ஜே யானிகளே, தற்போது அதே பத்திரிகையில் தராவிஹ் தொடர்பாக தங்களின் கொள்கைக்கு எதிராக வந்துள்ள இந்த ஃபத்வாவை (உங்கள் வாதப்படி ஃபத்வா தானே?) ஏற்றுக்கொள்ளத் தயாரா?

ஏற்றுக்கொள்வதாக இருந்தால் உடனடியாக onlinepj யிலும் tntj யிலும் ஃபிளாஸ் நியுஸ் உட வேண்டும் இலலையென்று கூறி எப்போதும் போல் கேனையனாக மாறி சல்ஜாப்பு கூறி தப்பிக்கலாம் என்றால் ஃபித்ரா வசூலுக்கு வரும்போது மக்கள் உங்களை செருப்பால் அடிக்க தயாராக உள்ளார்கள்.

வஸ்ஸலாம்

அபு சுஹைப்

Create a free website or blog at WordPress.com.