தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 21, 2007

தமிழகத்தில் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி

Filed under: என்டிஎஃப், சதிச்செயல், தீவிரவாதிகள் — முஸ்லிம் @ 2:28 பிப
கோவை குண்டு வெடிப்பு தீர்ப்புக்கு பின் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி

சென்னை, மே. 21-

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு தமிழ்நாட்டை உலுக்கியது.

பலரை பலி கொண்ட இந்த நாசவேலை தொடர்பாக அல்-உம்மா இயக்கத்தலைவர் பாட்சா, கேரள மக்கள் ஜன நாயகக் கட்சித் தலைவர் மதானி உள்பட 167 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக கோவை கோர்ட்டில் நடந்து முடிந்துள்ளது.

தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளிகளில் ஒருவர் இறந்து விட்டதால் மீதமுள்ள 166 பேரும் தீர்ப்பை எதிர் நோக்கி உள்ளனர். தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதை வரும் 31-ந் தேதி அறிவிப்பதாக கோவை கோர்ட்டு கூறி உள்ளது. இந்த தீர்ப்பை அறியதமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய பழமைவாதிகள் மிகவும் பரபரப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழக உளவுத்துறை அதிர்ச்சி ïட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டு அதிகாரிகளை உஷார்படுத்தி உள்ளது. கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப் புக்கு பிறகு தமிழ்நாடு, கேரளா வில் சில தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடதிட்டம் தீட்டி உள்ளனர். இதற் காக ரகசிய ஆயுதப்பயிற்சி அளித்து வருகிறார்கள் என்பதே உளவுத்துறை மோப்பம் பிடித்து வெளியிட்டுள்ள எச்ச ரிக்கை தகவலாகும்.

தமிழ்நாட்டில் சில இயக் கங்கள் “மனித உரிமை அமைப்பு” என்ற ரீதியில் செயல் பட்டு வருகின்றன. இந்த இயக்கங்களுக்கு வெளி நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது. அதை வைத்து அவர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் முகாம் உருவாக்கி உள்ளனர்.

இந்த முகாம்களில் உள்ள வாலிபர்கள் கடந்த சில மாதங்களாக கேரளாவில் உள்ள வண்டிப் பெரியார், கரும்பள்ளம், மலப்புரம் பகுதி களில் உள்ள காடுகளில் ரகசிய ஆயுதப் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களுக்கு கேரளாவில் உள்ள தேசிய வளர்ச்சி முன்னணி (என்.டி.எப்.) ஆயு தப் பயிற்சி அளிப்பது உறு திப் படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளை தயாரிப் பது, வெடிக்க வைப்பது, துப்பாக்கியால் குறிதவறாமல் சுடுவது போன்ற பயிற்சிகள் தமிழக வாலிபர்களுக்கு அளிக் கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

தமிழக வாலிபர்களை “மூளை”ச் சலவை செய்து இந்த ரகசிய ஆயுதப்பயிற்சியில் ஒரு அமைப்பு ஈடுபடுத்தி உள்ளது. இந்த அமைப்புக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான வாலிபர்கள் உள்ளனர். குறிப்பாக கோவையில் மட்டும் குறைந்த பட்சம் 1000 பேர் இருக்கிறார்கள்.

இவர்கள் சிறு சிறு ரகசிய குழுக்களாக இயங்குகின்றனர். ஏரியா கவுன்சில் மாவட்ட கவுன்சில் என்றெல்லாம் அழைக்கப்படும் இவர்களிடம் சிறு, சிறு ‘செல்’லும் உண்டு. இந்த `செல்’ ஒவ்வொன்றிலும் தலா 5 பேர் இருப்பார்கள்.

அவர்கள் செய்யும் செயல்கள் ஒருவருக்கு ஒருவர் தெரியாத படி இருக்கும். அந்த அளவுக்கு அவர்களை அந்த அமைப்பு இயக்கி வருகிறது.

அந்த அமைப்பை மிக ரகசியமாக கண்காணித்து வரும் உளவுத் துறையினர் தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதி களில் இருந்து எத்தனை பேர் கேரளா சென்று ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளனர் என்ற விபரத்தை சேகரித்துள்ளனர். அதோடு கேரளாவில் உள்ள ரகசிய ஆயுத பயிற்சி மையங்கள் குறித்தும் தகவல்களை திரட்டி உள்ளனர். இதை கேரளா அரசுக்கு அனுப்பி அவர்களையும் தமிழக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

மலப்புரம், மஞ்சேரியில் பெரிய அளவில் ஆயுதப் பயிற்சி நடந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து கேரள உளவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா எல்லைகள் சந்திக்கும் மலைக்காடுகளில்தான் அதிக அளவில் ஆயுதப் பயிற்சி நடக்கிறது. கூடலூர் வழியாக ஆயுதங்களை கடத்தி வருகிறார்கள். குண்டல்பேட்டையில் தான் பெரிய முகாம் உள்ளது. இவை எல் லாம் தெரிந்தும் அரசியல் குறுக் கீடுகளால் எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை” என்றார்.

கோவை குண்டு வெடிப்பு தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லாதபட்சத்தில் மீண்டும் நாசவேலையில் ஈடுபட அவர்கள் சதி திட்டம் தீட்டி இருப்பதை `கிï’ பிராஞ்ச் போலீசாரும் உறுதி செய் துள்ளனர். சமீபத்தில் புதுச்சே ரியில் இருந்து ரகசிய ஆயுதப்பயிற்சிக்கு சென்ற 25 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி னார்கள்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மூலம்தான் இந்த அதிர்ச்சி தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக கசிந்தன. இதையடுத்து தமிழ் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கண் காணிப்பு பணியையும் போலீசார் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

நன்றி : மாலைமலர்

மே 18, 2007

ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு

ஹைதராபாத் மக்கா மஸ்ஜித்

ஹைதராபாத் சார்மினார் பகுதியில் உள்ள 17ம் நூற்றான்டை சோர்ந்த புகழ்பெற்ற மக்க பள்ளியில் இன்று வெள்ளிக்கிழமை ஜீம்மா தொழுகையின்போது தீவிரவாதிகளால் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் இது வரை 5 பேர் கொல்லப்பட்டுள்னர் இன்னும் பலர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போரடியபடி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (Update :சாவு எண்ணிக்கை 20 க்கும் மேலாக உயாந்துள்ளது)

அத்துடன் பள்ளியில் வெடிக்காத நிலையில் இருந்த இன்னும் இரன்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றி செயல் இழக்க செய்துள்ளனர். வழக்கமாக 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் தொழும் இந்த மஸ்ஜிதில் இன்று மதியம் சரியாக 1.25 இந்திய நேரத்திற்கு இந்த குண்டு வெடித்தள்ளது. இதில் காயமுற்றவர்களை தொழ வந்திருந்த மற்றவர்கள் அருகில் உள்ள உஸ்மானியா மருத்துவமனைக்கும் இன்னும் பல மருத்துவமனைகளுக்கும் தங்கள் வாகனங்களில் அழைத்து சென்று சேர்த்துள்னர்.

குண்டு வெடித்த இடம்

புகழ்பெற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த மஸ்ஜிதுக்கு போதிய பாதுகாப்பு வழங்காமல் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரை ஆத்திரத்தில் இருந்த முஸ்லிம்கள் கல்வீசி தாக்கினர் பதிலுக்கு காவல்துறையினரும் லத்தி சார்ஜீம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். மத்திய அரசு உடனடியாக சம்பவத்தை பற்றி விசாரனை செய்வதற்காக மத்திய புலனாய்வு குழு ஒன்றையும் மஹாராஸ்ட்டிர மாநில தீவிரவாத தடுப்பு காவல் பிரிவையும் அனுப்பி வைத்து உத்தரவிட்டுள்ளது.

அந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உடனடியாக இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ.ஐந்து லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ 25000 மும் வழங்க உத்தரவிட்டுள்ளார் அவர் மேலும் இது பற்றி தெறிவிக்கையில் சமூக விரோத சக்திகளால் தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலானது நாட்டின் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை குழைப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் சட்ட ஒழுங்கு சீர்குழையாமல் இருப்பதற்காகவும் மத நல்லினக்கம் கெடாமல் இருப்பதற்காகவும் மாநிலமெங்கும் காவல்துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அன்டை மாநிலங்களான பெங்களுர், மும்பை, டெல்லி போன்ற நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு இவ்விவகாரத்தை கூர்ந்து கவணித்து வருவதாக மத்திய அரசின் உள்விவகாரத் துறை அமைச்சர் தெறிவித்துள்ளார்.

ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதை பற்றிய சில தகவல்கள் :

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த புகழ் பெற்ற பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும். கி.பி 1617 ம் ஆண்டு ஹைதராபாத்தின் 6வது சுல்த்தானான முகம்மத் கூலி குதுப் ஷா என்பவரால் மிர் ஃபைசுல்லா பைக் மற்றும் ரங்கையா சவுத்திரி ஆகியோரின் மேற்பார்வையில் இந்த பள்ளியின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படடன பின்னர் வந்த ஆட்சியாளர்களான அப்துல்லாஹ் குதுப் ஷா மற்றும் தானா ஷா ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும் தொடரப்பட்ட இந்த பள்ளியின் பணிகள் கி.பி 1694 ம் ஆண்டு மொகலாயச் சக்கரவாத்தி அவுரங்கசிப் அவர்களால் இப்பள்ளியின் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு தொழுகைக்காக திறக்கப்பட்டது.

ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் ஒரு பழைய படம்

புகழ்பெற்ற சார்மினாரில் இருந்து 100 அடி தொலை வில் உள்ள இந்த பள்ளியின் மத்தியில் உள்ள வளைவானது மக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டதால் இது மக்கா பள்ளி என்று அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள். இன்னும் இது 8000 ம் கொத்தனார்களை கொண்டு 77 வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டதாகும். இந்த பள்ளியின் உள் வளாகமானது 75 அடி உயர உயரமும் 220 அடி அகலமும் 180 அடி நீளமும் உடையதாக உள்ளது. இன்னும் பல புகழ் பெற்ற பல கட்டிடக்கலை சிறப்பம்சங்களையும் தன்னிடத்தே கொன்டதாக இந்த பள்ளி உள்ளது.

இந்த பள்ளியைப் பற்றிய சரித்திர குறிப்புக்களில், இந்த பள்ளியின் நிர்மான வேலைகள் ஆரம்பமாகியபோது இதை ஆரம்பித்த சுல்த்தான் முகம்மது குதுப் ஷா அவர்கள் நாட்டில் உள்ள அனைத்து புகழ்பெற்ற மார்க்க அறிஞர்களையும் அழைத்து எவர் ஒரு தொழுகையைக் கூட விடாமல் இதுவரை தொழுதுள்ளாரோ அவர் வந்து இதற்காக அடிக்கல்லை நாட்டலாம் என்றபோது ஒருவரும் வரவில்லையாம் பின்னர் சுல்த்தான் முகம்மது குதுப் ஷா அவர்களே அந்த அடிக்கல்லைலை நாட்டிவிட்டு தான் தனது 12 ம் வயதில் இருந்து இதுவரை ஒரு தொழுகையை கூட விடவில்லை என்று கூறியதாக வரலாறுன்டு. மேலும் இது இந்திய அரசால் புராதான சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த பள்ளியில் தான் சமூக ஒற்றுமையை குழைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இதில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளை கைது செய்ய வேணடும்.

மே 7, 2007

மேலப்பாளையம் மும்தாஜ் படுகொலை நியாயமா? (VIDEO)


நாம் கடந்த மாதம் நம்து வலையில் “தமிழகம் பாகிஸ்த்தானாக மாற்றப்படும் அபாயம்” என்ற தலைப்பில் மேலப்பாளையத்தில் ஒரு முஸ்லிம் பென் விபச்சாரக் குற்றத்திற்காக இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றப்போகின்றோம் என்று கூறித்திறியும் சில முஸ்லிம் பெயர் தாங்கி தீவிரவாதிகளால் நடு ரோட்டில் படு கொலை செய்யப்பட்டது குறித்து எழதியிருந்தோம்.

இந்தக் கொலையில் தமிழக அரசும், காவல் துறையும் கொலையின் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்யாதல் கொலை செய்தவர்களை மட்டும் கைது செய்ததன் விளைவு மும்தாஜ் கொலையின் இரத்தம் காய்வதற்குள் அதே காரனத்திற்காக மற்றோர் கொலை அதே மேலப்பாளையத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

காவல்துறையும் வழக்கம்போல் தனது பெயர் கெட்டுவிடாமல் இருப்பதற்காக சாக்கடை நீரை விடுவதில் தகறாறு அதனால் பென் வெட்டிக் கொல்லப்பட்டார் என்ற ரீதியில் வழக்கை சித்தரிக்கின்றது. இன்னும் முந்தைய வழக்கிலும் இந்த வழக்கிலும் “அல் உம்மா தீவிரவாதிகள்” என்ற ரீதியிலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மும்தாஜ் படுகொலையில் கைதான தீவிரவாதிகள்
தமிழக அரசையும் காவல்துறையையும் எச்சரிக்கின்றோம், இன்னும் நீங்கள் “அல் உம்மா தீவிரவாதிகள்” என்ற ரீதியிலேயே அணைத்து வழக்குகளையும் பதிந்தீர்கள் என்றால் தமிழகம் பாகிஸ்த்தான், ஈரான் என்று பல நாடுகளின் பண உதவி பெறும் தீவிரவாதிகளின் கொலைக்களமாக மாறி சட்டம் ஒழுங்கு சீரழிவதை யாராலும் தடுக்க இயலாது.

இன்று தமிழகத்தில் ஒரு இரகசிய இயக்கம் படுகொலைகளையும் சதிச்செயள்களையும் “அல் உம்மா” அல்லாஹ்வின் அடிமைகள்”
என்றும் இன்னும் பல போலி PROXY பெயர்களில் செய்து வருகின்றது. இந்த உண்மை குற்றவாளிகளையும் அதன் தலைவர்களயும் தமிழக அரசு கைது செய்து நசடவடிக்கை எடுக்காமல் “அல் உம்மா” அல்உம்மா என்று கூறி வந்தால் மீண்டும் கோவை மற்றும் மும்பை கொடூரத்தை விட படுபயங்கர பாதகச் செயல் ஒன்று தமிழக மன்னில் நடக்கவிருப்பதை தவிர்க்க இயலாது.

மும்தாஜை அடுத்து நேற்று முன்தினம் மேலப்பாளையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஹைருன் நிஷா உள்பட எந்தக் கொலையிலும் “அல் உம்மா” என்ற செத்துப்போன அமைப்பின் பங்கு இல்லை. இந்தப் பெயரிலும் இன்னும் பல பெயர்களிலும் தமிழகத்தில் PROXY ஆக இயங்கி வரும் வெளி நாட்டு ஆதரவை பெறும் தீவிரவாத அமைப்பையுமு் அதன் மூல காரணகர்த்தாக்களையும் கண்டுபிடிக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹைருன் நிஷா படுகொலையில் கைதான தீவிரவாதிகள் சிலர்
நேற்று முன்தினம் மேலப்பாளையத்தில் விபச்சாரக் குற்ற்றத்திற்காக கொடூரமான முறையில் கொல்லப்பட்ட ஹைருன் நிஷா என்பவரின் படு கொலை சம்பந்தமாக வந்த செய்திகள் :

செய்தி 1

செய்தி 2

மேலும் தமிழக முஸ்லிம்கள் இவ்விஷயத்தில் மிக உஷாராக இருப்பது மிக்க அவசியம் இல்லையெனில் இந்தக் கூட்டத்தினரால் கூடிய விரைவில் தமிழக முஸ்லிம்களுக்கு பேராபத்து குஜராத், மும்பையில் ஏற்ப்பட்டது போல் ஏற்படுவதை தடுக்க இயலாது.

ஜனாப்.பஸ்லுல் இலாஹி
மேலப்பாளையம் மும்தாஜ் படுகொலையை கண்டித்து “மும்தாஜ் படுகொலை நியாயம்தானா?” என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜனாப் க.அ. முகம்மது பஸ்லுல் இலாஹி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோவை இங்கு சொடுக்கி காணவும்.

இந்த வீடியோ இரண்டு சிடிக்களாக உள்ளது அவசரத்தில் தெளிவாக இல்லாமல் பதிவேற்றம் செய்துள்ளார் நமது இந்திய செய்தியாளர். கூடிய விரைவில் இரண்டு செய்திகளும் முழுமையாக இங்கு வெளியிடப்படும்.

மீண்டும் தமிழக அரசுக்கும் மத்திய மாநில உளவத்துறை மற்றும் காவல் துறையினருக்கு நமது எச்சரிக்கை என்னவென்றால் இந்த அல் உம்மா” பூச்சான்டியை விட்டுவிட்டு உண்மையான குற்றவாளிகளையும், தமிழகத்தில் பேராபத்தாய் வளர்ந்து வரும் இந்திய மற்றம் உலக அளவில் அணைத்த தீவிரவாத அமைப்புக்களுடனும் தொடர்புள்ள ஒரு இரகசிய தீவிரவாத இயக்கத்தையும் கண்டுபிடித்து உடணடி நடவடிக்கை எடுக்காவிட்டால் பின்னர் அதற்காக வருந்த நேரிடும்..

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.