தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 2, 2008

IDMK பாடல்கள் கேட்பதற்கு….

Filed under: பாடல்கள், IDMK, songs — முஸ்லிம் @ 10:06 பிப

இந்திய தேசிய மக்கள் கட்சியின் இலட்சியப் பாடல்களை கேட்பதற்கு அல்லது டவுன்லோட் செய்வதற்கு இங்கு சொடுக்கவும். IDMK யின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்களால் இயற்றப்பட்ட பாடல்களை தனது சிம்மக் குரலில் பாடியுள்ளார் “இந்திய எங்கள் தாய்நாடு” பாடல் புகழ் முகவை திரு. சீனி முகம்மது அவர்கள்.

பாடல்களை கேட்டபின் உங்கள் கருத்துக்களை இங்கு பதியவும்.

TO LISTEN OR DOWNLOAD THE SONGS PLEASE CLICK HERE.

WWW.IDMK.ORG

ஜூன் 24, 2008

IDMK கொள்கை விளக்கப் பாடல்கள் வெளியீடு – பிரமுகர்கள் பங்கேற்பு

Filed under: சி.டி, பாடல்கள், IDMK, songs — முஸ்லிம் @ 9:25 பிப
திரு. அப்துல் ரவூப் உரையாற்றுகிறார், மேடையில் தலைவர்கள்

அபுதாபி, ஜீன் 24, ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இன்று இந்திய தேசிய மக்கள் கட்சியின் கொள்கைப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா விமரிசையுடன் நடைபெற்றது.

அபுதாபியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக புரவலர் நோபள் மரைன்ஸ் நிறுவனத்தின் மேலான் இயக்குனர் மரியாதைக்குறிய சாகுல் ஹமீது அவர்களும், சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்திருந்த இணைய எழுத்தாளரும் பிரபல சமூக ஆர்வலருமான திரு முகவைத்தமிழன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

நிகழச்சியில் பிரபல மார்க்க அறிஞரும் அறிவு ஜீவியும், திருக் குர்ஆன் விரிவுரையாளரும், பன்னூல் ஆசிரியரும் ஆகிய திரு. காஞ்சி அப்துல் ரவூப் பாக்கவி அவர்கள் சிறப்புறையாற்றினார்கள்.

பின்னர் புரவலர் நோபள் மரைன்ஸ் நிறுவனத்தின் மேலான் இயக்குனர் மரியாதைக்குரிய சாகுல் ஹமீது அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் கொள்கை விளக்கப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடை வெளியிட பிரபல சமூக ஆர்வலருமான திரு முகவைத்தமிழன் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்கள்.

குறுந்தகடை திரு. சாகுல் ஹமீது வெளியிட திரு முகவைத் தமிழன் பெற்றுக் கொள்கிறார் அருகில் IDMK தலைவர் திரு. குத்பதீன் ஐபக், அமர்ந்திருப்பது திரு. காஞ்சி அப்துல் ரவூப் பாக்கவி அவர்கள்.

பின்னர் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்களும், பொதுச் செயளலர் திரு. வரிசைக் ககனி அவர்களும் உரையாற்றினார்கள்.இறுதியில் இந்திய தேசிய மக்கள்கட்சியின் சட்ட ஆலோசகர் திரு. இஜாஸ் பேக் அவர்களும்,இந்திய தேசிய மக்கள்கட்சியின் ஆலோசகர் திரு. அப்துல் ரவூப் அவர்களும், இயக்கத்தை சோந்த பொறுப்பாளர்கள் திரு. கார்த்திக், திரு. குமரி ஜேம்ஸ் அவர்களும் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்கு திரு. சி.எம் ஹீசைன் அவர்கள் தலைமையேற்றார்கள், திரு கமால் பாஷா நன்றியுரை வழங்கினார்கள். நிகழச்சிக்கான ஏறபாடுகளை இந்திய தேசிய மக்கள் கட்சியின் அபுதாபி கிளை செய்திருந்தது.

Create a free website or blog at WordPress.com.