தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 22, 2007

அநியாயத்துக்கு அளவில்லையா PJ? S.M பாக்கரின் மடல்..

Filed under: பி.ஜே பாக்கர் ததஜ செக — முஸ்லிம் @ 10:06 முப

குறிப்பு : இந்த மடல் நமக்கு இறைவனின் அடிமை (iraivan_adimai@yahoo.com) என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து நமக்கு கிடைக்கப்பெற்றது. அதை அப்படியே இங்கு மக்களின் பார்வைக்கு தருகின்றோம்.

திருவாளர் பி.ஜே தனது கூட்டாளி பாக்கரை பற்றி தனது திருவாயால் கூறிய குற்றச்சாட்டுக்களை கேட்கவோ அல்லது டவுன்லோட் செய்யவோ இங்கு சொடுக்கவும். (பாக்கரை பற்றி மட்டும் கூறும் குற்றங்கள்)

இறைவனின் திருப்பெயரால்…

அநியாயத்துக்கு அளவில்லையா? பீ.ஜே

உங்களுடைய விசயத்தில் உங்களின் நன்மையை மட்டும் நினைத்தே செயல்பட்டனே! அதற்கு நீங்கள் எனக்கு தரும் பரிசு ஒழுக்கக்கேடன் பட்டமா?

உங்களின் பொருளாதாரத்தை உயர்த்துவது பற்றியே சிந்தித்தேனே! அதற்கு பரிசு பொருக்கி பட்டமா?

உங்களை உத்தமர் என்று ஊரெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தேனே! அதற்கு நான் அயோக்கியத்தனம் செய்ததாக ஊரெல்லாம் நீங்கள் தரும் பட்டமா?

உங்கள் குடும்ப மேன்மையே என் இலட்சியம் என்று இருந்தேனே! அதற்கு தான் நான் குடும்பஸ்த்தன் இல்லை என்று தாங்ள் தரும் பட்டமா?

நீங்கள் மக்கள் ஆதரவற்று இடிவழுந்தவனைப் போல் இருந்தபோது உங்களுக்கு உற்ற துணையாக இருந்த எனக்கு நீங்கள் தருவது இடி ராஜா பட்டமா?

உங்கள் கை அசைவுக்கும், கண் அசைவுக்கும் களம் கண்ட என்னை களங்கமானவன் என்பது நீங்கள் எனக்கு தரும் பட்டமா?

உங்களின் பொன்னான முகம் வாடக்கூடாது என்றிருக்கும் எனக்கு பெண் மோகம் கொண்டவன் என்று நீங்கள் தரும் பட்டமா?

உங்களின் சிந்தனைகள் சிற்றூhருக்கும் சென்றிட வேண்டும் என்று எண்ணிய எனக்கு சிலுமிஷகாரன் என்று நீங்கள் தரும் பட்டமா?

குழப்பவாதி என்று சமுதாயம் உங்களை தூற்றிய போது, சமுதாயத்தின் அண்ணன் என்று உங்களை வலம் வரச் செய்த எனக்கு குறும்புத்திக்காரன் என்று தாங்கள் தரும் பட்டமா?

உலவி என்று ஊர் அறியா பட்டம் பெற்றிருந்த உங்களை பேரறிஞர் என்று புகழ் சூட்டி மகிழ்ந்த எனக்கு, செல்லாக் காசாகிவிடுவாய் என்று தாங்கள் தரும் எச்சரிக்கை பட்டமா?

உங்களின் அநியாயச் செயலுக்கு உங்கள் மீதுள்ள பாசத்தால் நான் நிறையவே துணை போய்ட்டேன், உங்களால் நானும் அநியாயம் இழைக்கப்பட்டுவிட்டேன். அநியாயத்துக்கு அளவில்லையா? அண்ணனே, உங்களால் அநீதிக்கு ஆளனது நானே கடைசியாக இருக்க வேண்டும். நீங்கள் சுவனம் செல்ல வேண்டும்.

இவண்

எஸ்.எம்.பாக்கர்
முன்னாள் பொதுச் செயலாளர்
த.த.ஜ
0091 94443 60006

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்


நியாயம் கேட்க தயங்கும் த.த.ஜ.வின் உண்மை தவ்ஹித்வாதிகள்

பிஜேயின் நினைவாற்றலும் மாhக்க அறிவும் உலகத்தின் பல பகுதிக்கு சென்றடையவும், தமிழகத்தில் பரவலாக குக்கிராமங்கள் வரை சென்றடைய பாக்கரின் உடல் உழைப்பும், பணமும், பிரச்சார யுக்தியும், துணிச்சலான நடவடிக்கையும், தொண்டர்களை அரவணைத்து செல்லும் மனப்போக்கும் இறைவனின் உதவியால் காரணம் என்பதை பிஜே விட பாக்கரை அறிந்த தவ்ஹித்வாதிகள் நன்கு அறிவார்கள்.

தன்னைவிட ததஜாவில் முக்கியத்துவம் யார் பெறுவதையும் பிஜே விரும்ப மாட்டார் என்பது ஊர் அறிந்த பரம ரகசியம், கீழக்கரையின் சிங்கமான பாக்கரை அசிங்கபடுத்தி மகிழ்ந்துள்ளார்.

பேச்சுக்களை ஆடியோ, வீடியோ, சிடி என தொகுத்து மீடியாத்துறையில் குடும்பத்துக்கு வேலை கொடுத்து ஊதியம் கொடுத்து வந்த பாக்கரின் மீடியா வேல்ட் மீது மோகம் கொண்ட பிஜே மூன்(கமர்)என்ற பெயரில் மீயாத்துறை தொடங்கி ஊதியம் தந்த பாக்கரின் மீடிய வேல்டை ஒளி மங்கச் செய்தார்.

செல்வப் பின்னனியும் தொழில் துணிச்சலும் உள்ள பாக்கர் டிராவல்ஸ் தொழில் தொடங்கினார், இதில் பிஜேயின் எந்த தொடர்பும் இல்லாமல் பார்த்துக் கொண்டார், பிஜே சும்மா இருப்பாரா? பாக்கரை அசிங்ப்படுத்த தொடங்கி விட்டார்.

குர்ஆன்க்குள் காதல் கடிதம் கொடுத்தவர்,ஆணுக்கு ஆண் என்ற அமெரிக்க அனுமதியை பின்பற்றுபவர்கள், அடுத்தவர் மனைவியை கவர்ந்து கணவன் அப்பெண்ணை மன்னித்து இருவரும் இணைந்த பின்பும் மீண்டும் தொந்தரவு செய்து அப்பெண்ணைக் கொண்டு கணவனை குலா கொடுக்கச் சொல்லி பின்பு திருமணம் செய்து இன்று அப் பெண்ணை நடுரோட்டில் தவிக்கவிட்டுள்வர், மாணவிக்கு கொடுக்க கூடாததை கொடுத்தவர், பாலியல் மற்றும் கற்ப்பழிப்பு குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பியவர், தான் செய்யும் தொழிலுக்கு எல்லாம் மார்க்க அடிப்படையில் பிஜேயின் பித்தலாட்ட தீர்ப்பு கேட்டு மகிழும் யப்பாக்களும், தம்பிகளும் எப்படி பாக்கரிடம் விசாரிக்க முடியும் என்று ஆரம்ப கால தவ்ஹித் வாதிகள் எழுப்பும் கேள்வியில் நியாயம் உள்ளதுதானே?

ஓரு வேளை பாக்கரின் பஸ் பயனத்தில் தவறு செய்யும் முகந்திரம் தெரிந்தால் அதை மறைத்து அவரின் மரியாதையை காப்பாற்றி அவரை எச்சரித்து நல்வழி காட்ட வேண்டியது பிஜேயின் கடமையில்லையா? பத்திரிக்கையில் செய்தி போட்டு, இன்டர்நெட்டில் செய்தி போட்டு அசிங்கப்படுத்துவது தான் பிஜே கற்றுத் தரும் இஸ்லாமா?

பெண்ணுக்கு பாதுகாப்பு அளித்த பாக்கரை கேவளப்படுத்தும் பிஜே அவர்கள், இதுபோன்று குற்றச்சாட்டுகள் வந்து அவரால் ஒதுக்கி வைக்கப்பட்டு தேவையான நேரத்தில் பயன்படுத்தி வருபவர்களைப் பற்றியும் பத்திரிக்கையில் போட முன்வர வேண்டும். பிஜே தவறுகளுக்கு உடந்தையாக செல்பவர்கள் அல்லாஹ்க்கு அஞ்ச வேண்டும்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.