தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 18, 2007

பிரதிபா என்ற ஜனாதிபதி வேட்பாளர் – சங்பரிவார முகமூடியா??

பிரதிபா பாட்டில்

*********************************************************

காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கம் பிரதிபா பாட்டில் என்பவர் நேற்று இஸ்லாத்தின் மீதும் இந்திய முஸ்லிம்கள் மீதும் ஒரு பாரிய தாக்குதலை தொடுத்திருக்கிறார். கருத்து ரீதியாக இந்திய முஸ்லிம்களின் மீது தொடுக்கப்பட்ட இந்த ஜனாதிபதி வேட்பாளரின் தாக்குதலானது ஃபாசிஸ சங்பரிவார கும்பலின் வரலாற்று புரட்டுக்கு துனை போகும் வகையில் அமைந்துள்ளது.

இவரின் இந்த கருத்து இன்று பல சரித்திர ஆய்வாளர்களையும், நடுநிலையாளர்களையும், இந்திய முஸ்லிம்களையம் பேரளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒருவர் சிறுபான்மை இனத்தவரைப் பற்றி அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி நம்பிக்கையை சிதைக்கும் வகையில் கருத்து வெளியிடப்பட்டிருப்பது பெரும் கண்டணத்திற்கறியதாகும். இவர் ஜனாதிபதியானால் இவரின் நடவடிக்கைகள் அனைத்தும் நியாயமானவையாக இருக்குமா என்பதே சந்தேகத்திற்குறியதாக உள்ளது.

சிறுபான்மை சமுதாயத்தி்ற்கெதிராக நச்சக் கருத்தக்களை கூறி சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவித்து இந்திய வரலாற்றை புரட்டி எழத நிணைக்கும் இந்த சங்பரிவார சித்தாந்த சிந்தனை கொண்ட பிரதிபா பாட்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து மாற்றப்பட வேண்டும். அவரின் இந்த நச்சுக் கருத்துக்குமண்ணிப்பு கோர கோரியம் அவருக்கு பதிலாக மாற்று வேட்பாளரை அறிவிக்க கோரியும் தமிழ அரசையம் காங்கிரசையம் வலியுருத்தி தமிழக முஸ்லிம் அமைப்புக்கள் மக்களை திரட்டி போராட வேண்டும்.

தமிழ் பேசக்கூடிய மக்களின் பார்வைக்காக “தி ஹிந்து” ஏட்டில் வந்த செய்தி இங்கு தமிழில் மொழி பெயர்த்து பதியப்பட்டுள்ளது.

*********************************************************

முகலாய படைகளிடமிருந்து பெண்களை பாதுகாப்பதற்காகவே புர்கா அணியும் பழக்கம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது’ என்ற தனது கூற்றின் மூலம் வரலாற்று ஆசிரியர்களையும், இஸ்லாமிய சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சியூட்டியிருக்கிறார் தற்போதைய ராஜஸ்தான் மாநில ஆளுனரும், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியால் இந்திய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டிருப்பவருமான பிரதீபா பாட்டீல்.

உதய்பூரில் உள்ள நகர் பரிஷத் அரங்கில் நடைபெற்ற மஹாரானா பிரதாப் உடைய 467வது பிறந்த நாள் விழாவில் உரையாற்றிய திருமதி பாட்டீல் ‘ இந்திய
கலாச்சாரம் எல்லா காலத்திலும் பெண்களுக்கு மதிப்பளித்தாலும், முகலாயர்கள் ஆட்சி காலத்தில், முகலாய படைகளிடமிருந்து பெண்களை பாதுகாக்கவே புர்கா அணியும் வழக்கம் ஆரம்பித்தது’ என கூறினார்.


‘இன்று நாம் சுதந்திர இந்தியாவின் பிரஜைகள். இதுபோன்ற பழக்க வழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டியது அவசியம். இவ்வாறு செய்வது மட்டுமே பெண்களுக்கு உண்மையான மதிப்பளிப்பதை உறுதிப்படுத்தும். இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்ற நிலையில், இதுபோன்ற பழக்க வழக்கங்களை தொடராமலிப்பது நம்முடைய கடமையாகும்’ என்றும் கூறினார் திருமதி பாட்டீல்.

பெண்கள் புர்கா அணியும் பழக்கம் முகலாயர்கள் படையெடுப்பதற்கும் முன்னால், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருவதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ‘பதினொன்றாம் நூற்றான்டிலேயே சித்தாவுர்கர் அரண்மனையில் பெண்களுக்கென ‘ஸனானா’ எனப்படும் மறைவான ரகசிய அறைகள் கட்டப்பட்டிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன’ என ராஜஸ்தானைப் பற்றி ஆய்வு செய்யும் முனைவர் வர்ஸா ஜோஷி கூறுகிறார்.

‘ராஜ்புத்திர மன்னர்களின் முடிசூட்டு விழாக்களில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்ததோடு மட்டுமின்றி, பெரும்பாலும் பெண்கள் வீடுகளில் சிறைபடுத்தப்பட்டிருந்தார்கள்’ எனவும் முனைவர் வர்ஸா ஜோஷி கூறுகிறார். முகலாய படைகளிடமிருந்து பெண்களை பாதுகாக்கவே புர்கா அணியும் வழக்கம் ஆரம்பித்தது என வாதிடுவது, வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பதாகும்’ என்கிறார் முனைவர் வர்ஸா ஜோஷி.

‘முகலாய ஆட்சியாளர்களின் மீதிருந்த பயத்தின் காரணத்தால் பெண்களை புர்கா அணியும் வழக்கம் ஆரம்பித்தது என கருத்து தெரிவிப்பது, சங் பரிவார் கூட்டத்தினர் வரலாற்றை திரித்துக் கூறியதை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது. பாஸிஸ சக்திகளின் கருத்துக்களை, தனது உரையில் திருமதி பாட்டீல் கூறியிருப்பது உண்மையிலேயே துரதிஷ்டவசமானதாகும்’ என்கிறார் ஜமாஅத்-ஏ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தலைவரான முஹம்மது ஷலீம்.

‘திருமதி பாட்டீல் கூறியிருக்கும் கருத்து உண்மைக்கு புறம்பானதும்;, வரலாற்று ரீதியாக ஏற்றுக்கொள்ளத் தகாததுதமாகும்: இதற்கு முன்பு இதுபோன்ற தவறான கருத்துக்களை சங்பரிவார் பரப்புவதை கேட்டிருக்கிறோம். சங்பரிவாரின் சிந்தனையை ஒட்டிய அடிச்சுவட்டில் திருமதி பாட்டீல் போன்றவர்கள்; செல்வது ஆச்சரியத்தை அளிக்கிறது’ என அகில இந்திய மில்லி கவுன்சிலின் செயலாளர் அப்துல் ஹையூம் அக்தார் கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் பரம் நவ்தீப்பிடம் ஹிந்து ஆங்கில நாளேட்டின் நிருபர் இதுபற்றி விசாரித்தபோது திருமதி பாட்டீலின் மேற்படி கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதுதான் எனவும், முகலாய மன்னர்களின் காலத்தையும், ஆட்சி அதிகாரத்தையும் கவனத்தில் கொண்டு இந்த கருத்தை ஒப்பிட்டு நோக்க வேண்டும் எனவும் விளக்கமளித்தார். மேலும், முகலாய மன்னர்களின் ஆட்சிகாலத்தில் பெண்களே அதிகம் தாக்குதலுக்கான இலக்காக இருந்தார்கள் என்பதில் எந்தவித முரண்பாடும் இல்லை எனவும் கூறினார்.

நன்றி : தி ஹிந்து ஆங்கில ஏடு

தமிழாக்கம் நன்றி : அபு இஸாரா

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.