தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 19, 2007

பிரதீபாவுக்கு தமுமுக கண்டனம்

Filed under: பிரதீபாவுக்கு தமுமு — முஸ்லிம் @ 6:52 பிப

பிரதீபாவுக்கு தமுமுக கண்டனம்

பெண்கள் பர்தா அணிவது தேவையற்றது. பெண்கள் முகத்தை மூடும் பர்தா அணியும் வழக்கம் மொகலாயர் ஆட்சி காலத்தில் ஏற்பட்டது.

மொகலாயர்கள் படையெடுத்து வந்து போது அவர்களிடமிருந்து பாதுகாக்கவே பெண்கள் பர்தா அணிந்தனர். பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பட்டில் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து தெறிவித்திருந்தார். இந்நிலையில் பிரதீபா பாட்டீல் கூறிய கருத்துக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:

பர்தா அணிவதும், முக்காடு அணிவதும் பெண் குலத்திற்கு எதிரானது என்று பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார். இதை எந்த அடிப்படையில் அவர் கூறியுள்ளார் என்பது தெரியவில்லை.

மாநிலங்களவைத் துணைத் தலைவராகவும்இ ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் அவர் உயர்ந்துள்ளார். தனது சேலை முந்தானையால் முக்காடு போட்டுக் கொண்டுதான் இந்தப் பதவிகளுக்கு அவர் உயர்ந்தார் என்பதை மறந்து விடக் கூடாது.

பர்தா என்ற கவச உடை முஸ்லீம் பெண்களின் உரிமையும் கடமையும் ஆகும். அதை விமர்சிப்பதும் குறுகிய நோக்கில் சாடுவதும் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின்படி ஆளுநராகப் பதவியேற்றுள்ள ஒருவருக்கு உகந்ததல்ல.

பிரதீபா பாட்டீலின் கருத்து முஸ்லீம்கள் மட்டுமல்ல இந்தியப் பெண் குலத்துக்கே மாசு கற்பிக்கும் செயலாகும்.

முகலாயர் காலத்தில்தான் பர்தா அணியும் முறை நடைமுறைக்கு வந்ததாக பிரதீபா பாட்டீல் கூறுவது தவறானதாகும். இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்தேஇ இஸ்லாம் இந்தியாவுக்கு வருகை புரிவதற்கு முன்பிருந்தே பர்தா முறை இந்தியாவில் இருந்து வருகிறது என்று கூறியுள்ளார் ஜவாஹிருல்லாஹ்.

Create a free website or blog at WordPress.com.