தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 11, 2008

துபாயில் பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு

Filed under: சொற்பொழிவு, துபாய், பெண்கள், மார்க்கம் — முஸ்லிம் @ 8:09 பிப

துபாயில் பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு

துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் வாரந்தோறும் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் முதல் மஃரிப் வரை பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு பெண் ஆலிமா ஹிஸானா ஸமீரா கைறியா அஜீஸ் ரஹ்மான் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

தாய்மார்களும், சகோதரிகளும் கலந்தி சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மார்ச் 31, 2008

திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா


Dear Brother
Assallamu Allaikum Wa Rahmathullahi wa Barakathuhu

Please find in the attachment the scanned copy of the
Invitation for the AIMAN WOMEN COLLEGE’S
5th Annual Convocation to be held on 3rd April 2008.

Kindly forward this message to all.

Kindly include in your Duaas for the successful
completion of all the events scheduled between
3 rd and 5th April 2008.

In case if you are unable to attend, please make Duaas for its success.

Regards
Seyed JAAFAR
Secretary
AIMAN EDUCATION AND WELFARE SOCIETY

My contact number in India: (91) 94860 14192
In UAE : (971 50) 49 29 184

மார்ச் 24, 2008

ஏர்வாடியில் பெண்கள் இஜ்திமா

Filed under: இஸ்லாம், ஏர்வாடி, பெண்கள், முஸ்லிம் — முஸ்லிம் @ 5:15 பிப
ஏர்வாடியில் பெண்கள் இஜ்திமா


கடந்த 22.03.2008 அன்று நெல்லை மாவட்டம், ஏர்வாடி ஓ.கே.திருமண மண்டத்தில் ஏர்வாடி த.மு.மு.க.மகளிர் பிரிவு சார்பாக பெண்கள் இஜ்திமா சகோதரி பாத்திமா தலைமையில் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தொடங்கிய நிகழச்சி இரவு 8 மணி வரை நடைபெற்றது.

இதில் வரதட்சணை, இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் போன்ற பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏர்வாடி சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதன் முடிவில் பெண்களுக்கு எதிரான சமுதாயக் கொடுமைகளை தீவிரமாக எதிர்த்து போராடுவது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கான தண்டனைகளை கடுமையாக்க மத்திய அரசை கோருவது, ஏர்வாடியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அமைந்துள்ள மதுக்கடையை அகற்றக் கோருவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏர்வாடி த.மு.மு.க.வினர் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தி: நெல்லை உஸ்மான்.

Create a free website or blog at WordPress.com.