தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 13, 2007

ISLAM-MADURAI நிர்வாகிகள் தேர்வு

Filed under: இஸ்லாமிய சமூக வழிகா, மதுரை — முஸ்லிம் @ 11:05 முப


மதுரை மாநகரில் வசிக்கும் இஸ்லாமிய பெருமக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் மார்க்க கல்வி போன்றவைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியும் அம்மக்களை மற்ற சமூகத்தினரைப் போல் கல்வி பொருளாதார முன:னேற்றங்களை ஏற்படுத்த வேண்டுமு் என்ற நோக்கிலும் துவங்கப்பட்ட இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு – மதுரை (ISLAM) ன் உறுப்பினர்கள் அணைவரும் கடந்த வெள்ளியன்று (09-03-2007) ஒன்று கூடி ஒரு மனதாக கீழக்கண்ட நிர்வாகிகளை இதன் பொருப்புதாரர்களாக தேர்ந்தெடுத்தனர். இவ்வமைப்பிற்கான பைலாவும் உருவாக்கப்பட்டது. இதன் நிர்வாகிகள் 6 மாதங்கள் வரையில் பதவியில் இருப்பார்கள் என்றும் பின்னர் சுழற்சி முறையில் நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு – மதுரை (ISLAM) நிர்வாகிகள் :

தலைவர் – சகோ. S. முகம்மது ரஃபி (+966502650465)

துனைத் தலைவர் – சகோ. சையத் கஃபூர் (+966502743448)

செயலாளர் – சகோ. முகம்மது மஹ்பூப் சுபுஹான் – (+966561516778)

துனை செயலாளர் – சகோ. S. அப்துல் ரஷீத் (+96635826986)

பொருளாலர் – சகோ. S.A.K. இப்றாஹிம் – (+966502144820)

மக்கள் தொடர்பு : சகோ. I.அப்துல் ரஷீத் ( +96638121836 Ext. 324)

மதுரையைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்க்ள இவ்வமைப்பை தங்கள் பகுதிகளில் துவக்க விரும்பினாலோ அல்லது இவ்வமைப்பிற்கு ஆலோசனைகள் வழங்க விரும்பினாலோ அல்லது இவ்வமைப்பில் தங்களை உறுப்பினர்களாக பதிந்து கொள்ள விரும்பினாலோ மேலே குறிப்பிட்டுள்ள நிர்வாகிகளில் யாரையாவது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி என்களில் தொடர்பு கொள்ளவும் என்று இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு – மதுரை (ISLAM) ன் செய்திக் குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் : இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு – மதுரை (ISLAM) தொலை நகல் வழியாக

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

மார்ச் 3, 2007

இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு – மதுரை (ISLAM)

Filed under: இஸ்லாமிய சமூக வழிகா, மதுரை — முஸ்லிம் @ 10:24 முப
இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு – மதுரை (ISLAM)
Islamic Social Lead Association of Madurai (ISLAM)

சவுதி அரேபியா தம்மாம் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (02.03.2007) அல் ஒயாஸிஸ் ஹோட்டலில் இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு – மதுரை (ISLAM) உடைய ஆலோசனை அமர்வு நடைபெற்றது.

தமிழகம் எங்கும் பெரும்பாலன ஊர்களில் முஸ்லிம்கள் தங்கள் சமுதாயத்திற்கு நற்பணி செய்க்கூடிய வகையில் பல அமைப்புக்களையும் சங்கங்களையும் ஏற்படுத்தி அதன் மூலம் உள்ளுரில் உதவி தேவைப்படுமு் சக முஸ்லிம் குடும்பங்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார்கள். ஆனால் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாகவும் முஸ்லிம்கள் மிகைத்து வாழக்கூடிய இடமாகவும் இருக்கும் மதுரை முஸ்லிம்களுக்கு தங்களுக்கென ஒரு அமைப்பு இல்லாமல் பல கூறுகலாக பிறிந்து கிடக்கும் அவல நிலையை கவணத்தில் கொண்ட சில சகோதரர்கள் தங்களுக்குள் தோன்றிய இந்த அற்புத கருத்துக்களை கருவாக்கியதன் விளைவு இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு – மதுரை (ISLAM) என்ற அமைப்பு உண்டாகியது.

இதன் ஆலோசனை கூட்டம்தான் மேற்கூறிய தம்மாம் அல் ஒஸாயிஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தை நெல்லை ஏர்வாடியை சேர்ந்த சகோ. முகம்மது மீரா சாஹிப் அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். தம்மாமில் வசிக்கும் பொறியாளர் சஃபியுள்ளாஹ் கான் அவர்கள் தலைமையேற்று சமூக ஒற்றுமையை வலியுறுத்தி தலைமையுரை நிகழ்த்தினார்கள்.

மதுரையை சேர்ந்த பொறியாளர் முகம்மது ரஃபி அவர்கள் வறவேற்புரையும் மதுரையை சோந்த மற்றோர் சகோதரர் கபீர் அவர்கள் “ஒன்றுபடுவோம் – பிரிந்து விடோம்” என்ற தலைப்பில் சிற்றுரையும் ஆற்றினார்கள்.

நிகழச்சியின் முக்கிய அம்சமாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆற்றாங்கரை அலாவுதீன் என்றழைக்கப்படும் முகவை மாவட்டத்தை சேர்ந்த மெளலவி அலாவுத்தீன் பாக்கவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இவர்கள் தனது உரையில் மதுரையை பற்றிய தனது அனுபவங்களையும் அந்த ஓர் மக்கள் கல்வியின்மையால் எப்படி சிதைவுன்டு வருமை கோட்டின் கீழ் முஸ்லிம்கள் என்ற அடையாளம் கூட தெறியாது வாழந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும், தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களிலும் இருந்து பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கும் மற்ற பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் வேலையில் மதுரையை சேர்ந்த முஸ்லிம்கள் இன்னும் வீதியோரங்களில் நடைபாதை வியாபாரிகளாகவும், பள்ளிக்கு வந்தால் மட்டுமே இவர் முஸ்லிம் என்று அடையாளம் காணக்கூடிய நிலையிலும் இருக்கக் கூடிய அவலத்தையும் இதற்கு முக்கிய காரணம் மதுரை முஸ்லிம்களிடையே கல்வியரிவு இல்லாதுதான் என்பதையும் திறம்பட விளக்கினார்.

அத்துடன் தனது உரையில் மாலிக் காபூரில் இருந்து மருதநாயகம் வரை பல்வேறு பட்ட காலங்களில் பலநூறு ஆன்டுகள் முஸ்லிம்களாலேயே ஆளப்பட்ட மதுரையில் முஸ்லிம்கள் தாழந்த நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி அவர்கள் தங்கள் சமுதாயத்திற்கு கல்வி உதவிகளையும் சமூக உதவிகளையும் வழங்கிட ஒரு அமைப்பு நிச்சயம் தேவை என்பதையும் அதற்காக இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு – மதுரை (ISLAM) துவங்கப்பட்டதை பாராட்டி வாழத்துக்களை வழங்கினார்.

இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு – மதுரை (ISLAM) என்ற அமைப்பை பற்றியும் அதன் அவசியத்தை பற்றியும் விளக்கி கூறும் வகையில் மதுரை முகம்மது மஹ்பூப் சுபுஹான் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். தமது உரையில் ஒற்றுமையின்மையினாலும் தங்கள் நகர மக்களை ஒன்றுபடுத்த ஓர் அமைப்பு இல்லாத காரனத்தாலும் மதுரை முஸ்லிம்கள் எந்த அளவிற்கு ல்வி வேலை வாய்ப்புக்களில் பின் தங்கியிருக்கின்றார்கள என்பதையும். மதுரையில் முஸ்லிம்கள் ஒவ்வோர் முறையும் தங்கள் தேவைகளுக்கு உதவ சமூக அமைப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் எவ்வளவு கஷ்ட்டப்படுகின்றார்கள் என்பதையும் விளக்கி அதற்காக இந்த அமைப்பு துவங்கப்பட்டது என்றும் இது எவ்வாரெல்லாம் செயல்பட வேண்டும் என்பதையும் இந்த அமைப்பை தொடாந்து வெறிறிகரமாக நடத்திட மதுரை முஸ்லிம்களிடம் எவ்வித ஒத்துழைப்பை இதன் நிர்வாகிகள் எதிர் பார்க்கின்றார்கள் என்பது குறித்தும் விளக்கினார்.

இறுதியில் மதுரையை சேர்ந்த சகோ. சையது அப்துல் காதிர் அவர்கள் நன்றியுரை நல்க நிகழச்சி இனிதே நிறைவடைந்தது. இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு – மதுரை (ISLAM) என்ற இந்த அமைப்பிற்கான நிர்வாகிகள் இனி வரக்கூடிய அமர்வுகளில் தோந்தெடுக்கப்படுவார்கள் என்றும் இவ்வமைப்பில் இணைய விருப்பம் உள்ள மதுரையை சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் கீழக்கண்ட தொலை பேசி என்களை தொடாபு கொள்ளுமாறும் கெட்டுக் கொள்ளப்பட்டது.

சகோ. மு.ம. சுபுஹான் – 0561516778
சகோ. அப்துல் ரஷித் – 03 – 5864838
சகோ.சையது கஃபூர் – 0502743448
சகோ. முகம்மது நிஸாருத்தீன் – 0508234583
சகோ. அப்துல் காதர் – 0507912379

இந்நிகழச்சியில் கலந்து கொள்ள மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த சகோதரர்கள் திறளான அளவில் தம்மாம், அல்கோபர், அல் ஹஸ்ஸா, ஜீபைல், அப்கைக் போன்ற பகுதிகளில் இருந்து ஆர்வத்துடன் வந்திருந்தனர். இவர்கள் அணைவருக்கும் தங்களுக்கென ஓர் அமைப்பு இறுதியில் உறுவான திருப்தியுடன் திரும்பி சென்றனர்.

மதுரை, காரைக்குடி, இஸ்லாம்

Create a free website or blog at WordPress.com.