தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 16, 2008

சிறப்பு புலனாய்வு பிரிவின் துவேஷ சிந்தனை நாட்டுக்கு நல்லது அல்ல -MNP அறிக்கை

Filed under: மனித நீதிப் பாசறை, MNP, sit — முஸ்லிம் @ 10:35 முப

கடந்த 13.04.2008 அன்று தினமனி நாளிதழில் “படை திரட்டும் மனித நீதிப் பாசறை போலிசார் கவலை” என்ற தலைப்பில் இசக்கி என்ற பாசிஸ்ட் எழுதிய ஒரு கட்டுரையை வெளியிட்டு தமிழகத்தில் கலவர விதையை விதைக்க தினமனி முயன்றது. இதைப்பற்றிய ஒரு கட்டுரை நமது தளத்திலும் இடம்பெற்றிருந்தது. தற்போது தினமனியின் அந்த பாசிச செயலுக்கு மறுப்பு தெறிவித்து மனித நீதிப் பாசறை அமைப்பினர் அறிக்கை ஒன்ற வெளியிட்டுள்ளனர் அந்த அறிக்கையில் கீழக்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

துவேஷ சிந்தனையில் சிறப்பு புலனாய்வு போலிஸார் – மனித நீதிப் பாசறை கவலை

“படை திரட்டும் மனித நீதிப் பாசறை போலிசார் கவலை” என்ற தலைப்பில் கடந்த 13.04.2008 அன்று தினமனி நாளிதழில் பக்கம் 6ல் வந்துள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது. மனித நீதிப் பாசறை தமிழகத்தில் கடந்த 2001 ம் ஆண்டு துவங்கப்பட்டது 2004ல் அல்ல. நீதிக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும், தேச நலனுக்காகவும் போராடுவதே மனித நீதிப் பாசறை. கடந்த பல வருடங்களாக சாதி, மத பாகுபாடு இன்றி பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு தனி முத்திரை பதித்து வருகிறது மனித நீதிப் பாசறை.

ராணுவ பயிற்சி அல்ல

நாங்கள் வழங்குவது ராணுவ பயிற்சி அல்ல. சுதந்திர தின அணிவகுப்பிற்கான பயிற்சி ஆகும். நாட்டை காக்க ராணுவம் இருக்கும்போது அந்த வேலையை நாம் எடுத்துக் கொள்ள தேவையில்லை. சுதந்திர தின அணிவகுப்பு என்பது முஸ்லிம்களின் சுதந்திர உணர்வின் வெளிப்பாடு ஆகும்.

கோவை மாநாட்டில் மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீருடை அணிவகுப்பு நடத்தியது, நெல்லையில் இளைஞரனி மாநாட்டில் தி.மு.க தொண்டரனி சீருடை அணைிவகுப்பு நடத்தியது. அதே போல்தான் மனித நீதிப் பாசறை ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அணிவகுப்பு நடத்த இருக்கிறது.

சிறப்பு புலனாய்வு பிரிவின் துவேஷ சிந்தனை நாட்டுக்கு நல்லது அல்ல

கடந்த 60 ஆன்டுகளாக சுதந்திர இந்தியாவிலும் அதற்கு முன்பு 20 ஆன்டுகளாக பிரிட்டிஷ் இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ் என்ற ஃபாசிச பயங்கரவாத அமைப்பு சீருடை அணிவகுப்பு நடத்தி வருகிறது. திரிசூலம் வழங்குவது, சூலாயுதம் வழங்குவது, மதுரை விவேகானந்தா கல்லூரி உட்பட பல இடங்களில் துப்பாக்கி பயிற்சி வழங்கியது, அதன் மூலம் திட்டமிட்டு முஸ்லிம்களை கொன்றொழித்தது இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த அரசுக்கு வேண்டுகோள் விடுக்காத சிறப்பு புலனாய்வு துறை மனித நீதிப் பாசறையின் சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது சிறப்பு புலனாய்வு துறையின் துவேஷ சிந்தனையை தெளிவாக காட்டுகின்றது.

துவேஷ சிந்தனையுடன் செயல்பட்டு வரும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளை களையெடுக்க தி.மு.க அரசுக்கு எம்.என்.பி வேண்டுகோள்

தாங்கள் நடுநிலையுடன் செயல்படக் கூடிய அரசு ஊழியர் என்பதை மறந்து சிறுபான்மை முஸ்லிம்கள் நடத்த போகும் சுதந்திர தின அணிவகுப்பையே நாட்டுக்கு ஆபத்து என்று சித்தரிக்கும் வகையில் துவேஷ சிந்தனையோடு சிறப்பு புலனாய்வு துறை பிரிவு போலிஸார் செயல்பட்டுக் கொண்டிருப்பது நாட்டுக்கு நல்லது அல்ல.

சிறுபான்மை நலனில் அக்கரை காட்டும் அரசு என்று பெயர் பெற்ற கலைஞர் அரசுக்கு எதிராக முஸ்லிம்களின் சிந்தனையை திருப்பும் வேலையில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலிஸார் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே துவேஷ எண்ணத்தோடு உள்நோக்கம் கொண்டு செயல்பட்டு வரும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி மீது தி.மு.க அரசு உடனே நடவடிக்கை மேற்க் கொள்ள வேண்டும் என மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கின்றது.

என்பதாக மனித நீதிப் பாசறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவிக்கப்பட்டள்ளது.

Advertisements

ஏப்ரல் 23, 2007

MNP யின் தெஹ்லான் பாக்கவி அவர்கள் உரை (March-11 Video)

கருத்தரங்கில் தெஹ்லான் பாக்கவி அவர்கள் உரையாற்றுகையில்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த மார்ச் 11 அன்று கோவையில் நமது சமுதாயத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று முஸ்லிம் சிறைவாசிகளின் உரிமைகளையும் அவர்களின் விடுதலையும் வலியுருத்திய நீதியைத் தேடி கருத்தரங்கில் “மனித நீதிப் பாசறை” நிர்வாக குழு உறுப்பினர் ஜனாப் தெஹ்லான் பாக்கவி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ வெளியிடப் பட்டுள்ளது.

இதைக் காண்பதற்கோ அல்லது டவுன்லோட் செய்வதற்கோ இங்கு சொடுக்கவும்.

தமிழ் முஸ்லிம் மீடியா
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்> tpbay; nts;sp> kdpj ePjp ghriw> tpbay;>nj`;yhd; ghf;ftp

Create a free website or blog at WordPress.com.