தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 26, 2008

இயற்கை வைத்தியம்

Filed under: இயற்கை வைத்தியம், மருத்துவம் — முஸ்லிம் @ 10:44 முப

அஸ்ஸலாமு அலைக்கும்.

source: http://www.tamilmuslimmedia.com/darulsafa/www/Health/hlth_tips.htm

ஏப்ரல் 21, 2008

ரஷியாவில் படித்து டாக்டர் பட்டம் பெறுபவர்களுக்காக

Filed under: சென்னை, டாக்டர், பட்டம், மருத்துவம், ரஷியா — முஸ்லிம் @ 7:35 பிப

ரஷியாவில் படித்து டாக்டர் பட்டம் பெறுபவர்களுக்காக

தமிழகத்தில் இந்தோ – ரஷிய மருத்துவமனை தொடங்க வேண்டும்

டாக்டர் மீர் முஸ்தபா உசேன் வலியுறுத்தல்

ரஷியாவில் மருத்துவம் படித்து விட்டு தமிழகம் திரும்பும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக இந்தோ – ரஷிய மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்று டாக்டர் மீர் முஸ்தபா உசேன் கூறினார்.

கருத்தரங்கு

ஏ.ஜே. அறக்கட்டளை கல்வி நிறுவனம் மற்றும் ரஷியாவில் உள்ள ஸ்டவராபோல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே ரஷியாவில் மருத்துவம் படிக்க மாணவர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிலையில் ஏ.ஜே. அறக்கட்டளை சார்பில் ரஷிய மருத்துவ பல்கலைக்கழகங்களில் மருத்துவ கல்வி படிப்பது குறித்து கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி அபுபேலஸ் ஓட்டலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஏ.ஜே. அறக்கட்டளை கல்வி நிறுவன தலைவர் ஏ. அமீர்ஜஹான் தலைமை தாங்கினார். ரஷிய நாட்டின் ஸ்டவரோபோல் அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தின் டீன் பேராசிரியர் ஸ்டோயனா வி சமன்ஸ்கயா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது :

அங்கீகாரம்

உயர்கல்வி, வேலைவாய்ப்புக்காக மேற்கத்திய நாடுகளையே சார்ந்திருந்த இளைஞர்களின் பார்வை தற்போது ரஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற கிழக்கத்திய நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் சார்பில் ரஷியாவில் உள்ள 3 பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற 10 பல்கலைக்கழகங்கள் தற்போது ரஷியாவில் உள்ளன.

வெளிநாட்டில் சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், அந்த பல்கலைக்கழகம் இந்திய மருத்துவ கவுன்சில், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்றுள்ளதா ? என்பதையும், ஆங்கில வழிக்கல்வியில் கற்றுக்கொடுக்கப்படுகிறதா ? என்பதையும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு வருபவர்களுக்கு இங்கு சரியான மரியாதை தரப்படுவதில்லை.

முன் வர வேண்டும்

அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்படுகிறார்கள். இதற்கு ஒரு தீர்வாக இந்தோ – ரஷிய மருத்துவமனையை தொடங்க வேண்டும். அங்கு படிப்பு முடித்து விட்டு வரும் மாணவர்களுக்கு வேலை கொடுப்பதற்கும், பயிற்சி அளிக்கவும் அந்த மருத்துவமனை உபயோகமாக இருக்கும். இதற்கு ரஷியாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்கள் முன் வரவேண்டும்.

இவ்வாறு டாக்டர் மீர் முஸ்தபா உசேன் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏ.ஜே. அறக்கட்டளை கல்வி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் ரஷிய மருத்துவ கல்லூரிகளில் பயிலும் தமிழக மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
A J TRUST EDUCATIONAL CONSULTANCY
Crescent Court Building
No 963 Poonamallee High Road
Chennai 600 084
Tel / Fax : 044 2661 4485 / 3295 9991
Mobile : 93 828 62393 / 98 406 52729 / 93800 05652
ajtrustchennai@yahoo.com
najeerul2003@yahoo.co.in
http://www.medicaleducationindiarussia.org

ஏப்ரல் 19, 2008

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பு மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி ஒன்றினை எதிர்வரும் 25 ஏப்ரல் 2008 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப்பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடத்த இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்
காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT)
அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

மேலும் ‘சிராஜுல் உம்மத்’ முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்களும் ‘இஸ்லாத்தில் மருத்துவம்’ எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.

எனவே, பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

விபரங்களுக்கு:

ஹமீது யாசீன் – 050 2533712
யஹ்யா முஹிய்யத்தீன் – 050 5853888

நிகழ்ச்சியின் நிறைவில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 13, 2008

உயிரை குடிக்கும் உணவுக்கலப்படம். மஞ்சள் கூட விசமாகும். பகீர் ரிப்போர்ட்.

Filed under: சிந்திக்க, மருத்துவம் — முஸ்லிம் @ 1:14 முப
உயிரை குடிக்கும் உணவுக்கலப்படம். மஞ்சள் கூட விசமாகும். பகீர் ரிப்போர்ட்.

அண்ணாச்சி ஒரு ரூபாய்க்கு மிளகு சீரகம் கொடுங்க! உள்ளங்கை வியர்வையுடன் அந்த ஒரு ரூபாய் நாணயத்தைக் கடைக்காரரிடம் நீட்டினாள் சிறுமி.

கூலி வேலை பார்க்கும் வீட்டுப் பெண்ணாக இருக்க வேண்டும். வறுமை, சோகம், சோர்வு என அனைத்தையும் தோற்றத்தில் அப்பிக் கொண்டு நின்ற அந்தச் சிறுமியை அண்ணாச்சியோ திரும்பிக்கூடப் பார்க்கவில்லை!

‘‘லூஸ்ல இல்லம்மா!’’ என்று கட்டையாய் சொல்லிவிட்டு, ‘‘கிலோ மிளகு இருநூறு ரூபாய் விக்குது! இதுல ஒரு ரூபாய்க்கு எண்ணியா குடுக்க முடியும்!’’ என்று தன் இயலாமையை சம்பந்தமே இல்லாமல் நம்மிடம் வெளிப்படுத்தியவர், ‘‘இத மாதிரி ஏழ பாளைங்களெல்லாம் எதையாவது கலப்படத்தத் தின்னுகிட்டு காய்ச்சல், வாந்தி பேதின்னு கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டியதுதான்!’’ என்று தன் ஆதங்கத்தையும் நம்மிடம் கொட்டினார்…

‘‘இது உண்மைதான்… இன்று ஃபுட் பாய்ஸனால் உடனடி வியாதிகள் மட்டுமின்றி நீண்டகால நோய்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்தக் கொடுமையின் உச்சம் மங்களகரமான மஞ்சளில்தான் ஆரம்பமாகிறது என்பது நமது சென்டிமெண்ட்டை மட்டுமல்ல இந்த சமூகத்தின் மீதான நம்பிக்கையையே தகர்க்கிற விஷயம்…

நல்லது கெட்டது எதுவென்றாலும் மளிகை லிஸ்ட் எழுதும் பொழுது மஞ்சளில்தான் ஆரம்பிப்போம். கலப்படமும் அதுபோல் மஞ்சளில்தான் ஆரம்பிக்கிறது… மஞ்சள் பொடியுடன் கலப்படம் செய்ய லெட் க்ரோமேட் என்கிற கெமிக்கலைப் பயன்படுத்துகிறார்கள்… இது என்றாவது ஒரு நாள் கிட்னியை செயலிழக்கச் செய்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை…

எந்த மஞ்சள் பொடியில் இது கலந்துள்ளது என்பதெல்லாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒன்று… முழு மஞ்சளைவிட, மஞ்சள் பொடிதான் சமையலுக்கு எளிது என்று நாமும் எளிதாக ஆபத்தில் சிக்கிக்கொள்கிறோம்.’’ _ கலப்படத்தின் அபாயத்திற்கான அலாரத்தை அடித்தார் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஃபேகல்டி, ஃபுட் கன்சல்டண்ட் எஸ்.சந்தர்…

மரணத்தின் பிள்ளையார்சுழி மஞ்சள்தூளிலேயே ஆரம்பிக்கிறதென்றால் மற்ற பொருட்களின் நிலை எப்படி? மாநிலம் முழுக்க நம் ஆராய்ச்சியைத் தொடர்ந்தபோது அடுத்தடுத்து பல பகீர் தகவல்கள்… ‘‘பெட்ரோல், டீசல் போன்றவற்றின் தயாரிப்பில் கடைசியாகக் கிடைக்கக் கூடிய தாது எண்ணெய்தான் மினரல் ஆயில். இந்த மினரல் ஆயிலுக்கு நிறமும் கிடையாது. மணமும் கிடையாது. இதை அனைத்து வகையான எண்ணெயிலும் கலக்கலாம்.

ஒரு மாற்றத்தையும் காட்டாது. ஆனால் சாப்பிட்டபின் முழுவதும் ஜீரணம் ஆகாமல் அப்படியே நம் குடல்களில் தங்கி குறிப்பிட்ட காலத்திற்குப்பின் புற்றுநோயை உண்டாக்கிவிடும்… இதற்கு முக்கியக் காரணம், அந்த எண்ணெயின் அதிகப்படியான அடர்த்தி…. காசுக்காக கலப்படம் செய்பவர்கள் அதன் இரசாயன குணம் தெரியாது கலந்துவிடுகிறார்கள்.

ஆனால், ஐந்து ரூபாய்க்கும் பத்துரூபாய்க்கும் எண்ணெய் வாங்கும் ஏழைகள் இந்த அபாயத்தை அறியாமல் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்!’’ என்கிறார் நெல்லை மாநகராட்சியின் சுகாதார உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம்.

கொஞ்சம் மிளகுத் தண்ணீரில் நிறைய பப்பாளி விதைகளை ஊறவைத்து, பின் அதை நன்றாகக் காயவைத்து மிளகுடன் கலந்து மிளகு ரசத்தை பப்பாளி விதை ரசமாக மாற்றிவிடுகிறார்கள்.

இலவம் பிஞ்சு, மஞ்சநத்தி இலையைக் காயவைத்து வறுத்து அரைத்து டீத்தூளுடன் கலக்கிறார்கள். ஏதோ உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, உணவு என்ற பெயரில் ஏழைகள் உதட்டில் வைக்கும் ஒவ்வொன்றையும் இப்படி விஷமாக மாற்றிவிடுகின்றனர் கலப்படக்காரர்கள்.

கொஞ்சம் மனசாட்சியுள்ளவர்கள் மிளகுத் தூளுடன் பொட்டுக்கடலைத் தூளைக் கலப்பது; சர்க்கரையையும் வெள்ளை ரவையையும் கலப்பது; கடலைப் பருப்புடன் வடைபருப்பைக் கலப்பது என எடையை மட்டும் கூட்ட, விலை கூடுதலான பொருட்களுடன் விலை குறைந்த ஆபத்தில்லாத பொருட்களை கலக்கின்றனர்.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகளில் இரண்டு அயிட்டம் உண்டு. ஒன்றுக்குப் பெயர் ‘சில்கி’, இன்னொன்று ‘செகண்ட்ஸ்’. இந்த ‘சில்கி’ தான் ஒரிஜினல். எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் கெடாது.

ஆனால் இந்த செகண்ட்ஸ் பதப்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருக்கும் குடோன்களில் இருந்து வெளியே எடுத்துவிட்டால் பத்துப் பதினைந்து நாட்களில் பூச்சியரித்து, புழுபூத்து, பவுடராகக் கொட்டும்.

கல்யாணவீட்டுச் சமையல், ஓட்டல் என உடனடி பயன்பாட்டுக்கு இந்த ‘செகண்ட்ஸை’தான் விலை குறைவு என்பதால் சரக்கு மாஸ்டர்கள், சமையல்காரர்கள் வாங்குவதுண்டு… காசு கொடுத்து ஓட்டலுக்குச் சென்றாலும், அழைப்புக்காக கல்யாண விருந்துக்குச் சென்றாலும் கலப்பட ஆபத்து இப்படியரு ரூபத்தில் அங்கே காத்துக் கொண்டிருக்கும்!

சரி, இந்தக் கலப்படங்களையெல்லாம் கட்டுப்படுத்த சரியான சட்டமில்லையா?

‘‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006_ல் இயற்றியுள்ளது. இதில் சில முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்தச் சட்டமெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாமல் கிடப்பில் கிடக்கிறது!

வெளிநாடுகளில் அப்படியல்ல. லண்டனில் உள்ள ‘நுகர்வோர் அகிலம்’ என்கிற அமைப்பு உலகெங்கும் மக்கள் சாப்பிடக் கூடிய மோசமான ஐந்து உணவு வகைகளைக் கண்டுபிடித்து ‘மோசமான உணவுக்கான விருது!’ என்ற ஒன்றையே வழங்கி மக்களை எச்சரிக்கிறது… அந்த வகையில் அண்மையில் அப்படி ஒரு விருது பெற்ற உணவு இந்தியாவில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது… அதிலும் குறிப்பாக, ‘பாலில் அப்படியே ஊறவைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்’ என சிபாரிசு வேறு! கலப்படத்தால் ஏழைகள் மட்டும்தான் சாக வேண்டுமா? வசதிபடைத்தவர்களும் கொஞ்சம் பாதிக்கட்டும் என்ற தார்மீக நியாயமோ என்னவோ?’’ என்று அரசின் மெத்தனப் போக்கை மெலிதாகச் சாடுகிறார், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், வழக்கறிஞர் மார்ட்டின்.

பொதுவாகவே இந்தக் கலப்படக் குற்றங்கள் அதிகம் நடைபெறுவது சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களில்தானாம். சென்னை மாநகராட்சி இது தொடர்பாக என்ன செய்து கொண்டிருக்கிறது?

‘‘சென்னையைப் பொறுத்தவரை பத்து மண்டலங்களிலும் கண்காணிப்பும் ஆய்வும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வட சென்னை பகுதிகளில்தான் கலப்படம் அதிகம் என்றாலும், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தரமான பொருட்களைப் பார்த்து வாங்குவது, எல்லா இடத்திலும் பாதுகாப்பானது. உணவுப் பொருட்களின் தயாரிப்புத் தேதிகளைப் பார்த்து வாங்குவது போன்ற விழிப்புணர்வுப் பிரசாரங்களை தொடர்ந்து செய்து வருகிறோம். தவிர, கலப்படக்காரர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும் செய்கிறோம்.

அண்மைக்காலமாக கலப்படக் குற்றங்கள் குறைந்துவருவதுதான் உண்மை.

2005_ல் நாங்கள் சோதனை யிட்ட 1169 இடங்களில் குற்றம் செய்தவர்கள் 34 பேர். 2007ல் 1083 இடங்களில் சோதனை செய்யப்பட்டதில் 27 பேர்மீதுதான் தவறு இருந்தது…’’ என்று சென்னை மாநகராட்சியின் கூடுதல் நல அதிகாரியான டாக்டர் தங்கராஜன் புள்ளி விவரங்களைத் தருகிறார். குற்றங்கள் குறைவாகத் தெரிவதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத பல புதுப்புது யுக்திகளைக் கலப்படக்காரர்கள் கையாள்வதும் காரணம் எனலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ‘ஏறிவிட்ட விலைவாசியினால் எந்தப் பொருளிலும் பத்து முதல் இருபது சதவிகிதம் கலப்படம் செய்தாலே பல லட்சங்கள் பார்த்துவிடக்கூடிய வாய்ப்பு, கலப்படத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது’ என்பது பொதுமக்களின் அபிப்பிராயம். இதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் அரசு மெத்தனம் காட்டினால் ஏழைகளின் ரசமும் விஷமாகும் என்பது தவிர்க்க முடியாதது!

NANDRI TO : KUMUDAM.
———————————————–
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

ஏப்ரல் 11, 2008

சரியாக தூங்காத பெண்களுக்கு இருதய நோய் தாக்கும்!

Filed under: மருத்துவம் — முஸ்லிம் @ 8:41 முப

லண்டன், மார்ச் 27- பெண்கள் போதுமான அளவுக்கு தூங்காவிட்டால் இருதய நோய் தாக்கும் என ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் எரிச்சல்படும் மனநிலையில் இருந்தால் அதற்கு காரணம் அவர்கள் சரியாக தூங்காததுதான் காரணமாக இருக்கும். ஆண்களை விட பெண்களுக்கு தான் தூக்கம் அதிகம் தேவைப்படுகிறது.

அவர்கள் போதுமான அளவுக்கு தூங்காவிட்டால், அவர்களுக்கு இருதய நோய், மனநோய் ஏற்படும். மன அழுத்தம் ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஆண்களுக்கு தூக்கம் இல்லாவிட்டால் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால் பெண்களுக்கு தூக்கம் இல்லாவிட்டால் நோய் தாக்குதல் ஏற்படுகிறது.

இந்த தகவலை டியூக் பல்கலைக் கழகத்தில் உள்ள உளவியல் துறை தலைவர் டாக்டர் எட்வர் சவாரெஸ் தெரிவித்தார். அவர்தான் இந்த ஆராய்ச்சியை நடத்தினார். SOURCE: INTERNET.
படிக்க:>> மருத்துவம்
—————————————————
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

ஏப்ரல் 3, 2008

துபாய் கல்விக் கண்காட்சியில் தமிழக கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு

துபாய் கல்விக் கண்காட்சியில் தமிழக கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு

துபாய் கல்விக்கண்காட்சி ஏப்ரல் 2 முதல் 5 வரை துபாய் உலக வர்த்தக மையம்
அருகேயுள்ள கண்காட்சி அரங்கில் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில்
தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மற்றும் திருச்சி,
ஸ்ரீஇராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மையம்,
சென்னை ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி மையங்கள் உட்பட
இந்தியா, வளைகுடா, அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மையம் குறைந்த செலவில் மருத்துவப் படிப்புகளை
ரஷ்ய பல்கலைக்கழகம் மூலம் வழங்கி வருகிறது. ரஷ்ய் பல்கலைக்கழகம் குறித்த
விபரங்களை தொலைபேசி வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம். தொடர்பு எண் சுபாஷ்
: 050 354 1775

இக்கல்வி கண்காட்சியில் வேலைவாய்ப்பு வழங்கும் பல்வேறு வங்கிகள், வளைகுடா
வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவையும்
பங்கேற்றுள்ளன. வேலை தேடும் வளைகுடா பயணம் மேற்கொண்டுள்ள தமிழக
இளைஞர்களுக்கு மிகுந்த பயனுடையதாய் இருக்கும் என கண்காட்சிக்கு
வருகைபுரிந்துள்ள வேலை தேடும் தமிழக இளைஞர் நபீஸ் அஹமது தெரிவித்தார்.

இக்கண்காட்சியில் இந்திய மற்றும் வளைகுடா இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து
கொண்டு உயர்கல்வி குறித்த விபரங்களைச் சேகரித்து செல்வதாக சென்னை ஏ.ஜே.
கல்வி ஆலோசனை மைய பிரதிநிதி சுபாஷ் தெரிவித்தார்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.