தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 15, 2008

ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவி – மஸ்கட் அமைப்பு வழங்குகின்றது

Filed under: கல்வி உதவி, மஸ்கட் — முஸ்லிம் @ 7:30 பிப
அல்லாஹ்வின் திருப்பெயரால்…

முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டு தோறும் தாய்த்தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகின்றார்கள்.

பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலைப் பள்ளிப்படிப்பு (+2), பட்டயப்படிப்பு (Diploma), பட்டப் படிப்பு (Degree), தொழில் கல்வி, மார்க்க கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ – மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.

கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பென் சான்றிதழின் (Mark Sheet) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்த படிப்பு படிகக இருக்கிறார்கள், அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு ஆகியவைகளை இணைத்து அனுப்புதல் வேண்டும். இந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.

தகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதிக் குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்த படிவத்தை முடிந்த வரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக் கூடங்கள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கொடுத்து பயன்பெறச் செய்யுங்கள்!! இறையருள் பெருங்கள்!!.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

TAMAM
P.O BOX 1263
MUTTRAH – 114
SULTANATE OF OMAN

விண்ணப்பங்கள் மஸ்கட் வந்து சேர வுண்டிய கடைசி தேதி : 30-05-2008

Create a free website or blog at WordPress.com.