தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 3, 2008

ஃபுஜைராவில் இஸ்லாமிய மார்க்க பயான்

Filed under: அபூ ஆஃப்ரின், மார்க்க பயான் — முஸ்லிம் @ 3:46 முப
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

ஃபுஜைராவில் இஸ்லாமிய எழுச்சி மையம்
நடத்திய மாதாந்திர மார்க்க பயான்

ஐக்கிய அமீரகத்தின் வட மாகாணங்களில் ஒன்றான ஃபுஜைராவில், மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமையன்று இஸ்லாமிய எழுச்சி மையம் (Islamic Awakening Centre (IAC – Fujairah) நடத்தும் மார்க்க பயான் நிகழ்ச்சியானது, 2.5.08 வெள்ளியன்று மஃரிப் முதல் இஷா வரை ஃபுஜைரா ஆயிஷா பள்ளி அருகில் உள்ள இஸ்லாஹி சென்டரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில், சகோதரர். திருச்சி. முஹம்மது அவர்கள் கிராஅத் ஓதினார், சிறப்புரையினை சகோதரர். வடக்கு மாங்குடி. முஹம்மது அஸ்வத் அவர்கள் “அநீதமிழைப்பவர்கள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அவதூறு, புறம் பேசுதல், குறை கூறுதல் போன்றவற்றினை நம் சமுதாய மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நல்லெண்ணங்களை மனதில் நிலை நிறுத்த வேண்டும் ஏனெனில் எண்ணங்களில் சில பாவமாகும், இணைவைப்போர் காபிர், நிராகரிப்போர் போன்றவர்களுக்கு இஸ்லாம் ஒரு சுமையாகத்தான் இருக்கும். அல்லாஹ்வின் சந்திப்பில் நம்பிக்கைக்கொண்டு நாம் எல்லோரும் நல்லவற்றை எண்ணுவோம் என்பது போன்ற பல கருத்துக்களை சகோதரர்களிடம் எடுத்துரைத்தார்.

மாதந்தோறும் நடைபெறும் இந்த அமர்வில், குர்ஆன் ஆயத்துகளிலிருந்து வினாக்கள் தரப்படும். சரியான விடையினை எழுதும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. சென்ற மாதத்திற்காக பரிசினை இலங்கையினை சார்ந்த சகோதரர். மக்பூல் அவர்களுக்கும், மற்றும் சகோதரி ஒருவருக்கும் வழங்கப்பட்டது. அதுபோல், இந்த மாதம் நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சூரா அல்மாயிதா 1 முதல் 50 வரை நிகழச்சியில் கேள்விகள் கலந்துக்கொண்டவர்களிடம் கொடுக்கப்பட்டது. சரியான விடையினை எழுதும் நபருக்கு அடுத்த மாத அமர்வில் பரிசுகள் வழங்கப்படும்.

பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டு இருந்ததால் ஃபுஜைராவில் உள்ள தமிழ் பேசக்கூடிய சகோதரிகள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். நிகழச்சியினை ஃபுஜைரா இஸ்லாமிய எழுச்சி மையத்தினை சார்ந்த சகோதரர்கள் மிகச்சிறப்பாக செய்து இருந்தனர்.

தகவல் : முத்துப்பேட்டை – அபூ ஆஃப்ரின்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.