தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 23, 2008

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் ”தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி”

Filed under: இஸ்லாம், குவைத், சங்கம், தமிழ், மீலாது — முஸ்லிம் @ 5:16 பிப

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் ”தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி” மற்றும் ”குவைத் மீலாது (ஹிஜ்ரி 1429) மாநாடு ஒலி / ஒளிப்பேழைகள் வெளியீடு”

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 24-04-2008 வியாழக்கிழமை மாலை 6:30 மணி இரவு 9:30 மணி வரை குவைத், சுர்ரா பகுதியில் உள்ள சங்கத்தின் துணைச்செயலாளர் அல்ஹாஜ் எம். முனீர் அஹ்மத் அவர்களின் இல்லத்தில் (கத்ஆ : 3, ஷாரா : 6, வீட்டு எண் : 23, தொலைபேசி : 6633054) குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-tic) ஏற்பாடு செய்யும் ‘தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி’ மற்றும் ‘குவைத் மீலாது (ஹிஜ்ரி 1429) மாநாடு ஒலி / ஒளிப்பேழைகள் வெளியீடு’ நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ ஹழ்ரத் அவர்களும், சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் ஏ. முஹம்மது அலீ ரஷாதி ஹழ்ரத் அவர்களும், சங்கத்தின் துணைச்செயலாளர் அல்ஹாஜ் எம். முனீர் அஹ்மத் M.A., அவர்களும் சிறப்புரையாற்றுகின்றனர்.
சங்கம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம், அதன் செயற்பாடுகள், கடந்து வந்த பாதை, எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., அவர்கள் எடுத்துரைக்கின்றார்.
கடந்த மார்ச் (2008) மாதம் சங்கம் செய்த மாபெரும் ஸீறத்(மீலா)துன் நபி சிறப்பு மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் மஜ்லிஸ் மதாரிஸுல் அரபிய்யா என்ற தமிழக அரபிக்கல்லூரிகளின் கூட்டமைப்பின் தலைவர், நீடுர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரியின் முனனாள் முதல்வர், சென்னை மந்தைவெளி பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைமை இமாம், வீரசோழன் கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் இன்னாள் முதல்வர், நாடறிந்த நாவலர், எழுத்தாளர், நூலாசிரியர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் ஓ.எம். அப்துல் காதிர் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் மீலாது மற்றும் குவைத் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளின் அடங்கிய ஒலி / ஒளிப்பேழைகள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளன.
இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் இந்திய, இலங்கையைச் சார்ந்த தமிழ் இஸ்லாமியர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளதாகவும் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.K-Tic.com என்ற இணையதளத்தை பார்வையி டுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http: //groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு அழைப்பு விடுக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி :
தகவல் தொடர்பு பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
இணையதளம் : http://www.K-Tic.com
மின்னஞ்சல் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹூ குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

குறிப்பு :
இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்… குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஏப்ரல் 11, 2008

பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் மீலாது விழா!

Filed under: சங்கம், தமிழ், பாங்காக், மீலாது, முஸ்லிம் — முஸ்லிம் @ 4:52 முப

பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் மீலாது விழா!

பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் சார்பில் கடந்த 23.03.2008 அன்று மீலாது விழா நடத்தப்பட்டது. முன்னதாக ரபீஉல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை தினமும் மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது.

23.03.2008 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் பாங்காக் மஸ்ஜிதில் மீலாது விழா நடத்தப்பட்டது. துவக்க நிகழ்ச்சியாக, காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் ஹாஜி அஹ்மத் சுலைமான் தலைமையில் மீலாது விழா நிகழ்ச்சிகள் துவங்கின. காயல்பட்டணம் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ முன்னிலை வகித்தார்.

காயல்பட்டணம் ஹாஃபிழ் ஓ.எ.சி. செய்யிது முஹம்மத் கிராஅத் ஓதினார். சங்கத்தின் செயலாளர் ஹாஜி ஹ{மாயூன் வரவேற்புரையாற்றினார். ஹாஜி கத்தீப் மீராஸாஹிப், ரைட் ஜெம்ஸ் – ஹாஜி அஷ்ரஃப் ஆகியோர் பைத் பாடினர்.

ஹாஃபிழ் ஐதுரூஸ் ஆலிம் மற்றும் பாங்காக் மஸ்ஜித் இமாம் மவ்லவீ முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.

தொடர்ந்து சென்னை – மந்தைவெளி மஸ்ஜித் இமாம் மவ்லவீ இல்யாஸ் மீலாது சிறப்புரையாற்றினார். பின்னர் அனைவராலும் ஸலாம் பைத் பாடப்பட்டது. நன்றியுரைக்குப் பின், மவ்லவீ ஓ.எ.சி.ஷாதுலீ ஆலிம் துஆவுடன் விழா நிறைவுற்றது.

விழாவில் கலந்துகொண்ட சுமார் 300 பேருக்கு லுஹ்ர் தொழுகைக்குப் பின் மதிய உணவு விருந்துபசாரம் செய்யப்பட்டது.

விழாவில் பாங்காக் மஸ்ஜித் மக்தப் பிரிவு மாணவ-மாணவியரின் சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன. விழாவில் பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டனர்.

விழா நிகழ்ச்சிகளை சங்கத்தின் துணைத்தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தொகுத்து வழங்கினார்.

http://www.kayalpatnam.com/shownews.asp?id=1698

Create a free website or blog at WordPress.com.