தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 15, 2008

முகவை தமுமுக வின் கல்வி உதவி

Filed under: தமுமுக, முகவை, TMMK Ramnad — முஸ்லிம் @ 8:48 பிப
அல்லாஹ்வின் திருப்பெயரால்…

இராமநாதபுரத்தில் தமுமுக வின் கல்வி உதவி


இராமநாதபுரத்தில் நகர் தமுமுக வழங்கிய கல்வி உதவி நிகழ்சியில் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப தங்கவேலன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ரவி சந்திர ராமவன்னி மற்றும் இராமநாதபுர (மத்திய) மாவட்ட தமுமுக தலைவர் சலிமுல்லாஹ் கான் உட்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(இன்ஷாஅல்லாஹ்) கல்லாமை என்பதை இல்லாமையாக்குவோம்!

இரத்த தானம் செய்தீடுவீர்! மனித உயிர் காக்க உதவிடுவீர்!!

வரதட்சணைக் கொடுமைகளை ஒழிப்போம்! மஹர் கொடுத்து மணம் முடிப்போம்!!!

திசெம்பர் 6, 2007

பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம்

Filed under: தமுமுக, பாபரி மஸ்ஜித், முகவை — முஸ்லிம் @ 10:40 முப

திரன்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

இன்று தமிழகமெங்கும் முஸ்லிம்களால் பர்பரி மஸ்ஜித் மீட்பு நாள் அனுசரிக்கப்பட்டது. சங்பரிவார தீவஜரவாதிகளால் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை மீண்டுமு் கட்டித்தர கோரியும் முஸ்லிம்களின் உரிமைகளை கோரியும் தமிழகமெங்கும் முஸ்லிம்கள் த.மு.மு.க வினரோடு போரட்டங்களில் ஈடுபட்டார்கள்.

மாவட்ட தலைவர் சலிமுல்லா கான்

முகவையிலும் பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. த.மு.மு.க மாவட்ட தலைவர் திரு. சலிமுல்லா கான் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டடெங்கும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு எழுச்சியுடன் கோசமிட்டனர்.

திரன்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

முகவை மூன்றாக பிரிக்கப்பட்டு அம்மாவட்டத்தில் மூன்று இடங்களில் த.மு.மு.க வினர் போராட்டங்களை இதே தினத்தில் நடத்தினாலும் மூன்று இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர்.

பதாகை தாங்கி கோசமிடும் முஸ்லிம் ஒருவர்

நூற்றுக் கணக்கான வாகனங்களில் வந்திருந்த முஸ்லிம்கள் த.மு.மு.க வினர் முகவை மாவட்ட நீதிமன்றமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் அமைந்துள்ள வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்கு வந்த மக்கள் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்களின் ஒரு பகுதி

சித்தார்கோட்டையில் நடைபெற்ற கொலையில் அப்பாவி முஸ்லிம்கள் மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெறவேண்டுமெனவும் பாபரி மஸ்ஜிதை மீளக் கட்டித்தர வேண்டும் எனவும், குஜராததில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கு காரனமான மோடி அரசை கலைத்து அவனை கைது செய்ய வேண்டும் எனவும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்திற்கு வந்த மக்கள் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்களின் மற்றொரு பகுதி

நவம்பர் 11, 2007

முகவையில் மோடியை கைது செய்யக்கோரி போராட்டம்

Filed under: தமுமுக, முகவை — முஸ்லிம் @ 8:40 முப


நவம்பர் 09,2007, குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் படுகொலைக்கு காரணமான ஃபாசிச தீவிரவாதி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பதவி நீக்கம் செய்து கைது செய்யக் கோரி முகவை மாவட்ட த.மு.மு.க சார்பில் கடந்த நவம்பர் 9ம் தேதி அன்று இராமநாதபுரம் அரசு பணிமன முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட த.மு.மு.க தலைவர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி, துனைசெயலாளர் அஜ்மல்,துனைத் தலைவர் ஹீமாயுன் கபீர், ஒன்றியச் செயலாளர் பாக்கர் அகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழகசசெயலாளர் பாளையங்கோட்டை ரஃபீக் அவர்கள் கோரிக்கையை வலியுருத்தி பேசினார். த.மு.மு.க வின் பரமக்குடி நிர்வாகி அப்பாஸ் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய பதிவுகள் :

வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் (PART-I)

வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் (PART-II)

வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் (PART-III)

பாரத் மாதா கீ…….அடத்தூ! போடாங்……….!

பாரத் மாதா கி………. ஆதார வீடியோ!

மே 22, 2007

மே 26 – முகவையில் தமுமுக அணிவகுப்பு

Filed under: சச்சர் கமிட்டி அறிக, தமுமுக, முகவை — முஸ்லிம் @ 8:29 முப

ஏக இறைவனின் திருப்பெயரால்

இச்சமூகம் ஒரு போர்க்களம் !! இதில் அறிவுதான் நமக்கு ஆயுதம்!!

நீதிபதி இராஜேந்திர சச்சார் அறிக்கையை அமுல்படுத்தக் கோரி

தமுமுக தொண்டரணி அணிவகுப்பு

முகவை மாநகரில்

நாள் : மே 26, 2007
நேரம் : மாலை 4.15 (இன்சா அல்லாஹ்)
புறப்படும் இடம் :
சின்னக்கடை

தலைமை : எஸ். சலிமுல்லாஹ் கான் (மாவட்ட தலைவர்)


தொடங்கி வைப்பவர் : எஸ். ஹைதர் அலி (மாநில பொதுச் செயலாளர்)

மற்றும் கீழ்க்கானும் நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றார்கள்:

எம்.தமிமுன் அன்சாரி (மாநில செயலாளர்)

கோவை செய்யது (மாநில பேச்சாளர்)
முகம்மது ரஃபீக் (மாநில தொண்டரணி செயலாளர்)
ஹாரூன் ரஷீத் (மாநில துனைச் செயலாளர்)

அன்புடன் அழைக்கின்றது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தொண்டரணி
முகவை

ஏப்ரல் 12, 2007

முஸ்லிம்களுக்கு தனி உள் ஒதுக்கீடு தேவை – Hasan Ali M.L.A

Filed under: இட ஒதுக்கீடு, முகவை, ஹசன் அலி — முஸ்லிம் @ 7:35 முப
முகவை சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி அவர்கள்

முஸ்லிம்களுக்கு தனி உள்ஒதுக்கீடு வேண்டும்!
சட்டமன்றத்தில் உறுப்பினர் ஹசன் அலி உரை

(தமிழக சட்டமன்றத்தில் சிறுபான்மையினர் நலன் தொடர்பான மானியக் கோரிக் கையின்போது. கடந்த ஏப்ரல் 5 அன்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் அலி, முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு ஏன் தேவை என்பதை எடுத்துரைத்து 30 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து சி.பி.எம். உறுப்பினர் பால பாரதி மற்றும் திமுக உறுப்பினர் கலீலுர்ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினர். இந்த உரைகளைத் தொடர்ந்து முதல்வர் இடஒதுக்கீடு அறிவிப்பை செய்தார் இங்கே சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் அலி அவர்களின் உரையிலிருந்து சில முக்கியப் பகுதிகளை அளிக்கிறோம்.)

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே… உங்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

”தேர்தல் சமயத்திலே அன்னை சோனியாவினுடைய தொண்டனாக நான் தேர்தலிலே நின்றபோது கலைஞர் அவர்களுடைய வாக்குறுதியான சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு என்பதை சொல்லித்தான் நான் சிறுபான்மையினரிடம் வாக்களிக்குமாறு கேட்டேன்.

திருச்சியிலே நடந்த மாநாட்டிலே, சேது சமுத்திரத் திட்டம் எப்படி தமிழர்களின் நீண்டநாள் கனவாக இருக்கின்றதோ, அதேபோல் சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்திற்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் இந்த இடஒதுக்கீடு நீண்ட கால கனவாக இருக்கிறது. நான் ஆட்சிப் பொறுப்பேற்றால் உடனடியாக அதை நிறைவேற்றுவேன் என்று சொன்ன கலைஞர், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆளுநர் உரையிலும், நிதிநிலை அறிக்கையிலும் அரசு கொள்கை விளக்கக் குறிப்பிலும் இடம்பெறச் செய்தார்கள்.

இந்த இடஒதுக்கீடு என்பது இன்றைக்கு இங்கே சட்டமன்றத்திலே நான் உங்களிடம் கேட்க வேண்டுமா அல்லது நீதிமன்றத்திலே போய் எனக்கு இடஒதுக்கீடு கேட்க வேண்டுமா என்கின்ற ஒரு நிலை இருக்கிறது. ஏனென்றால் Judiciary யிலே போய்க் கேள் என்றுதான் இன்றைக்குச் சொல்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்கள் யார் என்பதை எப்படி அறிய வேண்டும் என்று சொல்லுகின்ற தகுதி நீதிமன்றங்களுக்கு இல்லை. அதற்கு நீதிமன்றங்கள் ஏற்புடை யவும் அல்ல. ஏனென்றால் சமுதாயத்தில் யார் யார் எவ்வளவு பின்தங்கிய நிலையில் உள்ளார்கள் என்பதை அளவிடக்கூடிய அளவுகோல் எதுவும் நீதிமன்றங்களிடம் இல்லை. இதற்கு நீதிமன்றங்கள் சமுதாயத்திலுள்ள மக்களுடைய ஏற்றத்தாழ்வுகளிலிருந்து ஒதுங்கியிருப்பதுவே காரணம். இதை நான் சொல்லவில்லை. நீதியரசர் சின்னப்ப ரெட்டி அவர்கள், வசந்தகுமாருடைய வழக்கிலே சொல்லியிருக்கிறார்.

இதே போல நீதிபதி தேசாயும் சொல்லியிருக்கிறார். நீதி தேவதையினுடைய கண்களிலே கட்டியிருக்கி றார்களே கறுப்புத் துணி, அதை யார் என்று பார்க்காமல் சம நீதி
செய்வதற்கு. ஆனால் இன்றைக்கு கட்டியிருக்கும் கறுப்புத் துணியோ இந்த மக்களிடமிருந்து விலக்கி வைப்பதற்கு, இந்த மக்களைப் பார்க்கக் கூடாது என்பதற்காக கட்டி வைப்பது என்று. இப்படி எத்தனையோ இருக்கின்றன. இவைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் இன்று இவைகளையெல்லாம் மீறி முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு செய்வதில் தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் எந்தவித சட்டசிக்கலும் இல்லை. ஏற்கனவே தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதம் இடஒதுக்கீடு உள்ளது. மண்டல் ஆணையம் தொடர்பான வழக்கில் தமிழக முஸ்லிம்கள் 94.61 சதவிகிதம், கிறிஸ்தவர்கள் 79.83 சதவிகிதமும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்கள் என்று உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு NSSO தேசிய மாதிரி ஆய்வு நிறுவனங்களை மேற்கோள் காட்டி தமிழக முஸ்லிம்கள் 93.3 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று சச்சார் குழு அட்டவணை 10ல் 3ஆம் பாகத்தில் 204வது பக்கத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவிலே உள் ஒதுக்கீடு வழங்குவதிலே எந்த இடர்ப்பாடும் எழவில்லை. கர்நாடகாவிலே சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதிலே எந்த இடர்ப்பாடும் எழவில்லை. அதுபோல இந்த இடஒதுக்கீட்டுக்கு அரசியல் சாசன சட்டத்திருத்தமோ தேவையில்லை. 2007லி2008ஆம் ஆண்டு பிரதமரின் 15 அம்ச திட்டத்தின் அடிப்படையில் வளர்ச்சிப் பணிகளுக்காக தமிழக அரசு செலவிடும் மொத்த தொகையில் 15 சதவிகிதத்தை மத ரீதியான சிறுபான்மையினருக்கு மேற்கு வங்காளம் ஒதுக்கியிருப்பது போல இந்த தமிழக அரசும் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்களுடைய குறிப்பிலே மிக அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது. 25 சதவிகிதம் இந்த பிற்படுத்தப்பட்ட நலிவுற்ற முஸ்லிம் சமுதாயக் குழந்தைகள் பள்ளிக்கே செல்வதில்லை. அப்படியே சென்றாலும் பாதியிலேயே அந்தப் பள்ளிப் படிப்பை விட்டு விடுகிறார்கள். இதைக் களைவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலாவதாக முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலே மானியங்களும், ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் நடத்துகின்ற பள்ளிகளை தரமான பள்ளிகளை முன்வந்து தமிழக அரசே நடத்த வேண்டும். அதிலும் குறிப்பாக மாணவிகளுக்கு என்று தனியாக பள்ளிகள் அமையப்பட வேண்டும். அவர்கள் தங்கும் விடுதிகளும் அமையப்பட வேண்டும். தமிழ் வழியில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளிலே அவர்கள் தொடங்கும் புதிய வகுப்புகளுக்கு மானியம் அளிப்பதில்லை என்ற முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல் முஸ்லிம் கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்படும் பாடங்களுக்கு மானியம் அளிப்பதில்லை என்பதை மறுபரிசீலனை செய்து முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியிலே தொழிற் பயிற்சி நிறுவனங்கள் அமைப்பீர்களேயானால் இந்த தொழில் பயிற்சி நிலையங் களில் சேர்வதற்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது. அதாவது 8வது படித்தால் அவர்களுக்கு சேர முடியும் என்ற நிலையை உருவாக்கினால்தான் அங்கே இந்த பிற்படுத்தப்பட்ட, நலிவுற்ற மாணவர்கள் சேர்வதற்கு வகை செய்யப்படும்.

நவீன உயர்கல்வி, சிறுபான்மையினரால் நடத்தப்படும் பொறியியல் மற்றும் உயர் தொழிற்கல்வி நிறுவனங்களில் நலிவுற்ற சிறுபான்மை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கவும், முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிறுபான்மை யினர் தொடங்கும் பள்ளிகளுக்கு மானியம் வழங்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத ரீதியாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் கல்வி உதவித் தொகை மிகமிகக் குறைவு. உதவித் தொகையையும், பயனாளிகள் தொகையையும் பெருக்கிட இந்த அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களில் 4.1 விழுக்காடு முஸ்லிம்கள். இதைச் சொல்லும்போது, மொத்தத் தமிழக மக்கள் தொகையிலே 5.66 விழுக்காடு முஸ்லிம்கள் என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்தக் கொடுமை உங்களுக்கு விளங்கும்.


சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்கான நிதியை பன்மடங்கு உயர்த்த வேண்டும். இதற்கு நீங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டி வசூல் செய்கின்றீர்கள். வட்டி வசூல் செய்வது ஒரு சிறிய தொகையே ஆனாலும் கூட, முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் வட்டி கொடுப்பதும், வாங்குவதும் மத ரீதியாக தடை செய்யப்பட்ட ஒன்று. ஆகவே நீங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியிலிருந்து விலக்களித்து மேற்கு வங்கத்திலே செய்திருக்கிறார்கள் இதற்கு சேவை வரி ஒன்றைச் செய்யலாம். சேவை வரி என்று சொன்னால் தயங்காமல் அதை வாங்க முடியும். ஆகவே அதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

முஸ்லிம்களுடைய அவல நிலையை நீங்கள் அறிய வேண்டுமென்றால், 1.1.2006, அதாவது சென்ற வருட தமிழக அரசின் விவரக் குறிப்பைப் பார்த்தாலே உங்களுக்கு விளங்கும். 1.1.2006 அன்று தமிழகத்தில் உள்ள 296 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் வெறும் 10 பேர்தான் முஸ்லிம்கள். 231 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் வெறும் 10 பேர்தான் முஸ்லிம்கள். அதிலும் இருவர் ஓய்வு பெற்றுவிட்டனர். 2007ல் குடிமைப் பணியில் 540 அலுவலர்களில் வெறும் 17 பேர்தான் முஸ்லிம்கள். அவர்களில் 3 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர்.

சச்சார் குழுவின் அறிக்கையை நடைமுறைப் படுத்துவோம் என்ற கலைஞர் அரசின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். அவர்கள் நிறைய சொல்லியிருக்கிறார்கள்; செய்வார்கள். இதில் சுட்டிக்காட்டியுள்ள கேரள இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும். நான் இதையெல்லாம் இங்கே கலைஞரிடம் சொல்லி, ‘கலைஞர் அவர்களே, இதையெல்லாம் எனக்கு நீங்கள் செய்ய வேண்டும்’ என்று நான் கேட்கும்போது, ஒரு கல்லூரிப் பேராசிரியரிடம் ஒரு எல்.கே.ஜி மாணவன் ஐயா இப்படி, இப்படி நடக்க வேண்டுமென்று சொல்வது போல் இருக்கலாம் ஏனென்றால், கலைஞர் நான் சொன்ன எல்லாவற்றையும் விட கூடுதலாகச் செய்பவர். நான் சொல்வதே சிறிது. இதைவிடச் சிறப்பானத் திட்டங் களை வைத்திருக்கிறார்கள்.

நன்றி : தமுமுக இணையத்தளம்

காரைக்கடி, இஸ்லாம், முஸ்லிம்

பிப்ரவரி 11, 2007

சவுதியில் வேலை வாய்ப்பு (AL-SUWAIDI LTD)

சவுதியில் வேலை வாய்ப்பு

அன்பின் சகோதரர்களே,

அல் சுவைதி நிறுவனத்தில் பணிபுறியும் ஒரு தமிழ் முஸ்லிம் சகோதரர் எமக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலில் அவரின் நிறுவனத்தில் பல முக்கிய பதவிகளுக்கு ஆட்கள் எடுப்பதாக தெறிவித்துள்ளதுடன் அந்த பணிகளுக்கான பட்டியலையும் அனுப்பியுள்ளார்.

AL-SUWAIDI SERVICES CO. LTD. (SSC)
AL-SUWAIDI EQUIPMENT AND TRANSPORT CO. LTD (SET)
AL-SUWAIDI SCAFFOLDING SERVICES AND ACCESS SOLUTIONS (SSSAS)
AL-SUWAIDI REAL ESTATE ENTERPRISES CO. LTD. (SRE)
INFORMATION MANAGEMENT TECHNOLOGY (IMT)
PRECISION FORGING FACTORY (PFF)

போன்ற அல் சுவைதி குழுமத்தின் சகோதர நிறுவனங்களுக்கு மேனேஜர் முதல் ஹெல்ப்பர் வரை பல்வேறுபட்ட நூற்றுக்கணக்கான பதவிகளுக்கு ஆட்கள் எடுக்கின்றார்கள். தகுதி வாய்ந்த நமது சகோதரர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளவும். எந்த எந்த பதவிகளுக்கும் வேலைகளுக்கும் ஆட்கள் எடுக்கின்றார்கள் என்பதை கீழக்கண்ட தொடுப்பை சொடுக்கி டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Al SUWAIDI VACANCIES

AL SUWAIDI MEMO


தங்களுக்கு தேவையான பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் சகோதரர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது தொலைநகல் (ஃபேக்ஸ்) நம்பருக்கோ தங்களது RESUME (BIODATA) வை அனுப்பவும்.

Mr. ShafaQattullah Khan
Recruitement Manager
E.Mail : shcrecruitment@alsuwaidi.com.sa
Fax : 00966 3 6670304 Ext. 252

இராமநாதபுரம்,காரைக்குடி,இஸ்லாம்,முஸ்லிம்

Create a free website or blog at WordPress.com.