தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 25, 2008

துபாயில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டலில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி 24 ஏப்ரல் 2008 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

முன்னாள் மாணவரின் இறைவசனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. துணை முதல்வர் ஹுமாயுன் கபீர் வரவேற்புரை நிகழ்த்தினார். வாழ்த்துரை வழங்கிய ‘சிராஜுல் உம்மத்’ மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்கள் தனது உரையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்வித்தந்தை அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களது சீரிய சிந்தனையில் உதித்த பிறைப்பள்ளி இன்று தரமான கல்வியினை வழங்கி வருவது குறித்து பெருமிதம் கொண்டார். மார்க்கக் கல்வி மற்றும் உலகக் கல்வி உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து வரும் சீதக்காதி டிரஸ்ட்டுக்கு பாராட்டு தெரிவித்தார். இத்தகைய நல்வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார்.

பள்ளி முதல்வர் முனைவர் தாவூத் ஷா பள்ளியின் சிறப்பியல்புகளை எடுத்தியம்பினார். சர்வதேசப் பள்ளிக்கான பிரிட்டிஷ் விருது பெற்றதையும் விவரித்தார். மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளதையும் தெரிவித்தார். விரைவில் சர்வதேசப் பள்ளி ஒன்று துவங்கப்பட இருப்பதாகவும், கூடுவாஞ்சேரியில் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அதிக அளவில் இருக்கும் ஒரு நாடு. முன்னாள் மாணவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வருவது பெரும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொடர்ந்து துணை முதல்வர் ஹுமாயுன் கபீர் பள்ளி குறித்த விளக்கப்படங்களையும், பள்ளியில் செய்யப்பட்டு வரும் மாற்றங்களயும், கல்விக்கட்டணம், விடுதி வசதி உள்ளிட்டவற்றை கணினி வழியே விவரித்தார். கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக்கல்லூரி முதல்வர் செய்யத் மஸ்ஊத் ஜமாலி அரபிக்கலூரியில் வழங்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து விவரித்தார்.

கூட்டத்தில் ஈடிஏ அஸ்கான் நிறுவன இயக்குநர்கள் அல்ஹாஜ் ஆரிஃப் ரஹ்மான், தைக்கா நாஸர் சுஐப் ஆலிம், ஹமீது கான், எஸ்.எம். புகாரி, ஹபிபுல்லாஹ், ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, கல்விக்குழு செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, யு. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஏ. ஹமீது யாசின், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் அஹ்மத் இம்தாதுல்லாஹ், இஸ்மத்துல்லஹ், சேக் முஹம்மது, ஹபிப் திவான்,ஜமால் முஹம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் புகைப்படங்களுக்கு

http://www.muduvaihidayath.blogspot.com
http://www.muduvaibasheersaitalim.blogspot.com

ஏப்ரல் 22, 2008

துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளி தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது


துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளி தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது

துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீக்கு 17.04.2008 வியாழன் மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ‘சிராஜுல் உம்மத்’ எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விழாவிற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் அல்ஹாஜ் ஹெச். ஹஸன் அஹ்மத் தலைமை தாங்கினார். இறைவசனங்களை மௌலவி என். சாதிக்குல் அமீன் மன்பயீ ஓதினார்.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை கே. எம். ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். மௌலவி பஷீர் சேட் குறித்த அறிமுகவுரையினை மௌலவி ஹாஜி. ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர் மௌலவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி சமுதாயப் பணியின் அவசியத்தை எடுத்தியம்பினார். தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான், அபுதாபி ஜமாஅத் பொறுப்பாளர் எஸ். அமீனுதீன், ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஏ. ஹமீது யாசின், ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர், எம். காஜா நஜுமுதீன், ஏ.ஜே.கல்வி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன், பார்த்திபனூர் ஹமீது, மௌலவி அலி பாதுஷா மன்பயீ, இளங்கோவன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் முதுவைக் கவிஞர் எழுதி இயற்றிய வாழ்த்துக்கவிதையினை வாசித்தார்.

‘சிராஜுல் உம்மத்’ விருதை முதுகுளத்தூரில் மூன்றாம் தலைமுறை இமாமாக மார்க்கப் பணியாற்றிவரும் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிமுக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் ஹெச். ஹஸன் அஹ்மத் மற்றும் தலைவர் என்.எஸ்.ஏ.நிஜாமுதீன் ஆகியோர் வழங்கினர்.

மௌலவி பஷீர் சேட் ஆலிம் ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உணர்ச்சிப்பூர்வ உரையில் தனக்கு இத்தகைய சிறப்பைப் பெற காரணாமான வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். அமீரக ஜமாஅத்தார்களின் சமுதாயப் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தினார்.

பொருளாளர் ஏ. அஹ்மத் இம்தாதுல்லாஹ் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

செய்தி : மௌலவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி

ஏப்ரல் 19, 2008

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பு மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி ஒன்றினை எதிர்வரும் 25 ஏப்ரல் 2008 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப்பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடத்த இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்
காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT)
அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

மேலும் ‘சிராஜுல் உம்மத்’ முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்களும் ‘இஸ்லாத்தில் மருத்துவம்’ எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.

எனவே, பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

விபரங்களுக்கு:

ஹமீது யாசீன் – 050 2533712
யஹ்யா முஹிய்யத்தீன் – 050 5853888

நிகழ்ச்சியின் நிறைவில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒக்ரோபர் 19, 2007

இடஒதுக்கீடு-முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பாராட்டு(MNA)

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பாராட்டு


ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 13.10.2007 சனிக்கிழமை துபாய் மம்சார் பூங்காவில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

துவக்கமாக ஏ.பக்ருதீன் அலி அஹமது இறைவசனங்களை ஓதினார்.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் N.S.A . நிஜாமுதீன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் ஜமாஅத் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு அனைவரும் தங்களது ஒத்துழைப்பை நல்கிட கேட்டுக் கொண்டார். A.H. ஜாஹிர் ஹ ¤ சைன் முன்னிலை வகித்தார்.

M. காஜா நஜுமுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத்தலைவர் S. சம்சுதீன் தனது துவக்கவுரையில் எண்ணிக்கை முக்கியமல்ல எண்ணங்கள் தான் முக்கியம் என்றார்.

www.mudukulathur.com இணையத்தளத்தை ஆடிட்டர் H. அமீர்சுல்தான் துவக்கி வைத்தார். அமீரகத்தில் ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்ட சூழலையும், அதற்கு அடிகோலியவர்களையும் நினைவு கூர்ந்தார்.


ஆவூர் மெளலவி இஸ்மாயில் ஹஸனி தனது சிறப்புரையில் மருத்துவம் , விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னோடியாக விளங்கிய முஸ்லிம் சமுதாயத்தின் வரலாறு மறைக்கப்பட்டு வருவது குறித்து கவலை தெரிவித்தார். கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் முதுகுளத்தூர் ஜமாஅத்தின் சேவை சிறப்புற வாழ்த்தினார். இதுபோன்ற சேவைகளுக்கு உதவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பொதுச்செயலாளர் K முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் ( முதுவை ஹிதாயத் ) ஆண்டறிக்கையும், ஒருங்கிணைப்பாளர் H. இப்னு சிக்கந்தர் எதிர்கால திட்டத்தையும் விவரித்தனர்.

S. அமீனுதீன் , A. ஜஹாங்கீர், A. சிக்கந்தர் ஹ ¤ சைன், A. பக்ருதீன் அலி அஹ்மது, N. ஜெஹ்பர் சாதிக் , S.N. பக்ருதீன், M. ஹபிப் திவான் , M. ஜாஹிர் ஹ¤ சைன், N.J. சீனி முஹம்மது, முஹம்மது ஜாபர், A. அஹ்மது இஸ்மத்துல்லா , S. தாஹா முஹம்மது உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொருளாளர் A. அஹ்மது இம்தாதுல்லாஹ் நன்றி கூறினார்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ )

Create a free website or blog at WordPress.com.