தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 4, 2007

இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் எனில்…..

Filed under: முபாஹலா இஸ்லாத்தில் — முஸ்லிம் @ 12:11 பிப

அனைவருக்கும் வணக்கம்.

நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன். மதங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் மக்களிடையே பகைமையையும், மூட நம்பிக்கைகளையும் வளர்க்கின்றன என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன்.

இஸ்லாம் மதத்தை வளர்க்க பி.ஜெய்னுலாபிதீன் என்ற இஸ்லாமிய பெரியவர் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நான் தவறாமல் பார்ப்பேன்.

சமீபத்தில் அவர் நடத்திய முக்காபுலா என்ற சாபம் இடும் நிகழ்ச்சியை பார்த்தேன். அதில் எழுந்த சந்தேகமே இக்கேள்வி.

கிறிஸ்த்தவத்தில் ஆதி மனிதன் செய்த பாவம் எல்லா மனிதர்கள் மீதும் தொடர்ந்து இருந்து வந்ததை தன் இரத்தத்தால் களையவே இயேசு சிலுவையில் உயிர் நீத்தார் என்ற கிறிஸ்த்தவ சித்தாந்தத்தை, “ஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்க இயலாது” என அறிவுக்கு இணங்கும் வகையில் அது தா நியாயமும் என இதே பி. ஜெயினுலாபித்தீன் பெரியவர் அறிவுப்பூர்வமாக வாதிட்டுள்ளது எனக்கு தெரியும்.

அவ்வாறிருக்க, இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் எனில், ஆண்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை நியாயப்படுத்த தங்களின் மனைவி மற்றும் ஒன்றும் அறியா பச்சிளம் குழந்தைகளின் மீது கடவுளின் சாபம் உண்டாகட்டுமாக என சாபமிடுவது எந்த வகையில் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறது என விளக்க இயலுமா?

இவ்வாறு சாபம் கோர இஸ்லாம் தான் வழிகாட்டுகிறது எனில், இஸ்லாம் எந்த வகையில் அறிவுப்பூர்வமான மார்க்கமாகிறது என்பதையும் சற்று விளக்குங்களேன்.

நன்றி.

சுதர்ஸன்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதரர் சுதர்சனின் கேள்வி்க்கு நம்மவர்கள் யாராவது அல்லது சம்பந்தப்பட்ட பி.ஜே யோ பதில் அளிக்க இயலுமா?

சுய விஸயங்களுக்கும், சொந்த பிரச்சினைகளுக்கும் முபாஹலா செய்வது மார்க்கத்தில் கூடுமா? அல்லது இஸ்லாத்தில் முபாஹலா என்று ஒன்று உள்ளதா? அதை மார்க்கம் அனுமதிக்கின்றதா? அப்படியானால் அது எதற்காக எந்த சூழ்நிலையில் செய்ய வேண்டும்?

நமது சகோதரர்கள் யாராவது இது குறித்து விளக்க கட்டுரை எழுதி அனுப்பினால் இங்கு பிரசுரி்க்க்ப்படும் அத்துடன் அக்கட்டுரை சகோதரர் சுதர்ஸன் போன்றவர்களின் இஸ்லாத்தினை பற்றிய கேள்விகளுக்கும் பதிலாக அமையும்.

அன்புடன்
முகவைத்தமிழன்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.